Monday, March 19, 2018

அட்லீ துணை,தேவா துணை

நடுராத்திரியில் நகைகளுடன் பெண்கள் நடமாட வேண்டும் என்கிற காந்தி கனவை நிறைவேற்றும் அளவில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் ஜெயக்குமார் # நகை இல்லாம வெறும் கழுத்தோடவே பெண்கள் நடமாட முடில,செகண்ட்ஷோ விட்டு போக முடில

=================


2 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை # ஒவ்வொரு எக்சாம் ஹால்லயும் 10% பேராவது அட்லீ துணை,தேவா துணை கேசுங்க இருக்கும்


================


3 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் தங்கை ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம், ஸ்ரீதளாதேவி கணவர் பாஸ்கருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.20 லட்சம் அபராதம் விதிப்பு "ஜெயில்,புதுசா"கட்டனும் போல,ஆல் பேமிலி மெம்பர்ஸ் இன்


=================


4 மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக் கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு # அதே மாதிரி அவர் அவரோட ஆசிரமத்துக்குள்ளயும் போகக்கூடாதுனு உத்தரவு போடுங்க எஜமான்.பொண்ணுங்களோட அடிக்கற கூத்து பாத்தா காண்டாகுது==================5 கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும் - நடிகை வரலட்சுமி

# அதாவது ஆம்பள மாதிரி ஆகிடனும் பொண்ணுங்க வீரத்துல?==============6 ஆளுநர், முதல்வர், தலைமை நீதிபதி, உள்ளிட்டோரின் வாகனங்கள் செல்லும்போது இனி 5 - 10 நிமிடங்கள் மட்டுமே போக்குவரத்து நிறுத்தப்படும்..,போக்குவரத்தை நிறுத்திட்டா அவங்க"எப்டி போவாங்க?அனுப்பி விட்ரலாமில்ல?================7 வேலையில்லாமல் அலைவதற்கு ஸ்கூட்டர் எதற்கு? - மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல் பேச்சு. # இண்ட்டர்வயூவூக்குப்போக வர யூஸ் ஆகுமில்ல?என்ன தலைவரே?


===============8 அமைச்சர்களின் பிள்ளைகள் அரசு பள்ளியில்தான் படிக்க வேண்டும் என்று சட்டம் கொண்டு வர வேண்டும்- கமல்ஹாசன்
அப்பறம்.முதல்ல அமைச்சர்கள் அஞ்சாங்கிளாஸ் வரையாவது படிச்சு கம்பராமாயணத்தை எழுதுனது கம்பர் னு தெரிஞ்சுக்கனும்================9 என்னால் எம்ஜிஆராக முடியாது எம்ஜிஆர் கொடுத்த அதே ஆட்சியை என்னாலும் கொடுக்க முடியும் - ரஜினி # நான் ஒரு தடவை சம்பளம் தந்தா 100 தடவை தந்த மாதிரினு 8 1/4 வருசம் சம்பளமே தராம விட்டா?


=============10 கருணாநிதி போன்ற சிறந்த அரசியல்வாதி நாட்டில் கிடையாது - ரஜினி # இந்த விஷயம் கலைஞருக்கே இன்னைக்குதான்"தெரிஞ்சிருக்கும்


===========11 டாஸ்மாக்குக்கு

(TASMAC) கமல் ஆதரவு என்ற செய்தி தவறு. திருத்திக்கொள்க.
இல்லையேல் பொய் சொல்கிறீர் என்ற குற்றச்சாட்டிற்கு ஆளாவீர்−கமல் பாம் வைப்பாராம்",இவரே தூ தூ மாறாட்டம் தொட்ட கை நட்டம் பாராம்===============


12 இந்திய அளவில் திராவிடம் காத்த அம்மாவின் வாரிசு நான் வெறுமனே பார்த்து கொண்டு இருக்க மாட்டேன் - ஜெ தீபா # தூங்கிடுவேன்?===============13 ஆண்களுக்கு குவார்ட்டரும், பெண்களுக்கு ஸ்கூட்டரும் வழங்குவது தான் அதிமுக அரசின் சாதனை” - குஷ்பு
"ஆட்சிக்கு"வந்தால் பெண்களுக்கும் குவாட்டர்"வழங்கப்படும்னு"எந்தக்கட்சியும் இன்னும்"கிளம்பலையா?=================14 எச் ராஜாவின் நாக்கில் சனி உள்ளது... டிடிவி தினகரன் காட்டம்! # கெடுதல்"தரும் சனியை அகற்றிடலாம்கறாரா?


===============15 திருப்பத்தூரில் தந்தை பெரியார் சிலை உடைப்பு- பாஜக பிரமுகரை கட்டி வைத்து உதைத்த பொதுமக்கள்! கலவரத்தை தூண்டியதற்காக ஹெச் ராஜா வை கைது,செய்யலாம்.ஆனா"ஓனர்,மோடி"கோவிச்சுக்குவாரே?


================
16 கணவனுடன் ஹெல்மெட் போடாமல் சென்ற கர்ப்பிணி பெண்ணை வாகனத்துடன் உதைத்து தள்ளிய காவல் ஆய்வாளர்

* கீழே விழுந்த கர்ப்பிணி பெண் வேன் மோதி பலி.
* திருவெரும்பூரில் கொடூரச் செயல் -ஆயிரக்கணக்கானோர் சாலை மறியல்#இந்த டிராபிக் போலீஸ்களுக்கு பிச்சை எடுப்பதே பொழப்பா இருக்கு==============17 திமுகவினர் யாரென்று காட்டும் தருணம் வரும் - ஸ்டாலின்

# எப்போ?
வரும்னா விடுங்களேன்பா,எப்போ ?னு"நச்சரிச்சுட்டு
===============18 ரஜினி, கமல் நினைப்பது போல தமிழக அரசியலில் இருக்கும் வெற்றிடத்தை எளிதாக நிரப்ப முடியாது: நடிகை கவுதமி ,கஷ்டப்பட்டு நிரப்பட்டுமே?நோகாம நோம்பி கும்பிட முடியுமா?=================19
கிரிக்கெட் வீரர் முகமது ஷமி மீது அவர் மனைவி போலீசில் புகார்
வேறு பெண்களுடன் தொடர்புள்ளதாகவும், தன்னை கொடுமைப்படுத்தியதாகவும் புகார் தின சிறப்பு புகார்
===============20 பெரியார் சிலையை சேதப்படுத்த வேண்டும் என்ற ஹெச்.ராஜாவின் கருத்து காட்டுமிராண்டித்தனமாது - ரஜினி

# சபாஷ் தலைவா!என்ன?கொஞ்சம் லேட்.வழக்கமா தூக்கத்துல இருக்கும் பேபி தீபாம்மா கூட கருத்து சொல்லிட்டாங்க

=============

0 comments: