Tuesday, March 06, 2018

11 ஆண்டுகளுக்கு பின் 2 வது கள்ளக்காதலனுடன்

இந்து கோவில்களை அவமதிக்கும் வகையிலுள்ள வசனத்தை நாச்சியார் படத்திலிருந்து நீக்க வேண்டும்"−
இந்து மக்கள் கட்சி # 10 நாள் ஓடற படத்தை 100 நாள் ஓட்ட வைக்காம விட மாட்டானுங்க போல


===============


2 காவிரி தீர்ப்பு குறித்து படித்து பார்த்து விட்டே தமிழக அரசு கருத்து சொல்லும் - ஜெயக்குமார்

# படிக்கத்தெரியாதே?
அது எனக்கும் தெரியும்,அதனாலதான் படிச்சுப்பார்த்தா கருத்து சொல்வார்னேன்==============3 முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்தபிறகு, பிரதமரின் வேண்டுகோளை ஏற்றே, அதிமுகவில் இணைந்து அமைச்சர் பொறுப்பை ஏற்றேன் - OPS # கடைசிவரை நமக்கு"சொந்தமா முடிவு எடுத்து பழக்கமே இல்ல போல ,ஜெ,சசி,மோடி னு எடுப்பார் கைப்பிள்ளைதான்


=============


4 சமஸ்கிருதத்தைவிடவும் தமிழ் பழமையான மொழி. அழகானதும் கூட; தமிழ் கற்க முடியாததற்கு நான் வருத்தப்படுகிறேன் - மோடி
# ஐஸ்வர்யாராய் வந்து ஐஸ் வெச்சாலும் தமிழன் ஏமாறமாட்டான்,வார்த்தைகள் உள்ளத்துல இருந்து வரனும் ,உதட்ல இருந்து அல்ல


============


5 ஜெ இறந்தவுடன் என்னை முதலமைச்சராக்கி இருக்க வேண்டும்... -ஜெ.தீபா.# அதுக்கு கவர்னர் கூட வேணாம் அட்லீஸ்ட் கணவர் மாதவன் ஆவது ஒத்துக்கனுமே?====================
6 தற்கொலை செய்துகொள்ளும் அளவுக்கு சசிகலா குடும்பத்தினர் நெருக்கடி கொடுத்தனர்.. ஓபிஎஸ் # ஏன் அவங்க மேல தற்கொலைக்கு தூண்டிய வழக்கு பதிவு பண்ணல?ஆட்சி அதிகாரம்,நம்ம கிட்ட தானே?
=================
7 உ.பியில் ஆண் போல வேடமிட்டு 2 பெண்களை மணந்த இளம்பெண்-செய்தி # ஏற்கனவே"பொண்ணுங்களுக்கு பற்றாக்குறை.1000 ஆண்களுக்கு 900 பெண்கள் தானாம்.அதுல இப்டி 2 போய்ட்டா ஷார்ட்டேஜ் ஜாஸ்தி ஆகாது?
================

8 தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு சரியாக உள்ளது என கூறுபவர்கள் புத்தி சுவாதீனம் அற்றவர்கள் -எச்.ராஜா#

தமிழகத்தில் தாமரை மலரும் னு சொல்றவங்களையே நாங்க சகிச்சுக்கறோம்


==============


9 கைத்தறி நெசவாளர்களுக்கு 30 சதவீத கூலி உயர்வு வழங்காதது ஏன்?- வாசன் கண்டனம் # அதுவா முக்கியம்? MLA ,ஜட்ஜ் ,ஆளுநர் இவங்கதான் பாவம்,வேகாத வெய்யில்ல கஷ்டப்படறாங்க ,டபுள் மடங்கு சம்பளம் தந்தாச்சு .================10 பொதுத்துறை வங்கிகளை தனியார்மயமாக்க இதுவே சரியான தருணம்: மத்திய அரசின் பொருளாதார ஆலோசகர் # பொதுத்துறைனு நம்பி பணம் போட்ட ஜனங்களுக்கு இது நம்பிக்கை துரோகம் இல்லையா?


================


11 ஒரு லட்சம் துப்பாக்கிகளைத் தாண்டி பிரபாகரனைச் சந்தித்தேன்-சீமான்.# எதிர்காலத்தைப்பத்தி எண்ணிப்பார்க்காம துப்பாக்கியை எண்ணீட்டு இருந்திருக்காரு===============


12 ஜெயலலிதா இறந்தவுடன் என்னை முதலமைச்சராக்கி இருக்க வேண்டும் - ஜெ. தீபா #
இதை கவர்னர்ட்ட சொல்லி இருக்க வேண்டும் ,ரிசைன் பண்ணிட்டு ஊருக்கு போய் இருப்பார்


=================


13 பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக ஸ்டாலின் இருக்கிறார் - ஆ.ராசா # கடைசி வரை அவர் தமிழக முதல்வரா மட்டும் இருக்க மாட்டார் போல


================


14 6 மாதத்தில் திமுக ஆட்சிக்கு வரும்,அடுத்த 25 ஆண்டுகளுக்கு திமுக வே ஆட்சியில் இருக்கும் - ஸ்டாலின் # அண்ணா வோட வழித்தோன்றல் னு சொல்லிட்டு இப்டி அப்துல் கலாம் சொன்ன "கனவு காணுங்கள்" கான்செப்ட் பிடிச்ட்டீங்களே?================15 பெரியாராக, அண்ணாவாக, கருணாநிதியாக ஸ்டாலின் இருக்கிறார் - ஆ.ராசா # நல்ல கண் டாக்டரை முதல்ல பாருங்க,அப்புறமா ஸ்டாலினை பாருங்க,ஸ்டாலினாவே தெரிவார்


=================16 முதலாவது கள்ளக்காதலனுடன் சேர்ந்து கணவரை கொன்ற பெண் 11 ஆண்டுகளுக்கு பின் 2 வது கள்ளக்காதலனுடன் சிக்கினார் # பாகம் 1 பாகம்"2 னு இப்போ சினிமாக்காரங்க மாதிரி பொண்ணுங்களும் கிளம்பிட்டாங்க போல


================


17 அடுத்த ஆளும் எஸ்கேப்... ரூ.800 கோடி லோன் வாங்கிவிட்டு வெளிநாடு பறந்த விக்ரம் கோதாரி..# இந்த நாதாரிங்க எல்லாம் ஓடிடுவாங்க.நம்ம தலைல தான் விடியும் வட்டி விகிதம் ,மினிமம் பேலன்ஸ் அபராதம்னு


===================18 தூங்கி எழுந்தாலே ஆட்சி
நீடிக்காது என்றுதான்
ஸ்டாலின் கூறுவார் -
# ஆட்சி கலையறவரை அவருக்கு நிம்மதியான தூக்கமே இருக்காது
அமைச்சர் ஜெயக்குமார்


================


19 பாஜகவிற்கும், அதிமுகவிற்கும் இடையேயான உறவு அரசாங்க ரீதியான உறவு" - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி..# அரசாங்கத்தை வழி நடத்தறதே அவங்கதான்னு பேசிக்கறாங்களே?


================


20 ஆவின் பாலில் கலப்படம் கிடையாது, தாய்ப்பாலுக்கு நிகரானது - ராஜேந்திர பாலாஜி
# பேமண்ட் கரெக்டா வந்துடுச்சு போல.


================

0 comments: