Thursday, March 22, 2018

,ரஜினி நடிச்ச "கழுகு"ரீமேக் ல விஜய்

தலைவரே!நம்ம சன் டிவி ல இந்துக்கள் பண்டிகை தின சிறப்பு நிகழ்ச்சிக்கு எப்டி விளம்பரம் போடுவோம்?

விடுமுறை தின சிறப்பு கொண்டாட்டம் னு
ஏன்? பகுத்தறிவு
சரி,பகுத்தறிவுக்கு ஒத்து வராத விநாயகர் சீரியல் ஏன் வருது?
ஆங்,இப்ப தன்மானம் முக்கியமா?வருமானம் முக்கியமா?

=============


2 கமல் ஒரு வேளை ஜெயிச்சா கௌதமி திரும்ப வந்து ஒட்டி கொள்ளுமா🚶🚶🚶🚶?

நிச்சயம்.மகளுக்கு அதுக்குள் நிச்சயம் ஆகிடும்.பாதுகாப்பு பத்தி பயம் இல்ல
ஒட்டிக்கோ கட்டிக்கோ தான்


================3 சவுண்ட கூட வச்சா வீட்ல திட்டுறாங்களே..சவுண்ட் கம்மி பண்ணினா ஒன்னும் கேட்குதில்லையே..

ஓஹோ!அப்போ திட்றவங்களையும்"அதே"சவுண்ட்ல திட்டச்சொல்லுங்க.காது கேட்காது


================4 கல்யாணம் முடிஞ்ச பிறகு மனைவிக்கு சமைக்க தெரியாது என்பது தெரிய வந்தா என்ன பன்னுவிங்க.?

சமையல் தான் செய்வேன்,ஊர்ல கல்யாணம் ஆன 60% ஆம்பளைங்க அதானே செய்யறாங்க?30% பேரு சமையலுக்கு ஆள் வெச்சுக்கறாங்க


==================5 மேடம் ,உங்க உடம்பு பூரா"நக காயமா இருக்கே?எப்டி ஆச்சு?

எதாவது ஆச்சரியமான விஷயம்"நடந்தா இது"கனவா?நனவா?னு தெரிஞ்சுக்க என்னை நானே கிள்ளிப்பாத்துக்குவேன் டாக்டர்


==============6 தலைவரே!வனத்துறையின் அனுமதி இல்லாம"ட்ரெக்கிங் போனாங்கனு"சொன்னீங்க?

ஆமா
ஆனா,ஒரு ஆளுக்கு"தலா ரூ200 தந்தாங்களாமே?
ஆமா,அது"பத்தாது.500 ரூபா லஞ்சம் வேணும்னு,கேட்டிருக்காங்க,அதை மீறி இவங்க உள்ளே"பூந்துட்டாங்க


==============7 டியர்,டெய்லி"நம்ம வீட்டுக்கு"பக்கத்துல இருக்கற"ஹோட்டலுக்கு போற,ஆனா"சாப்பிடாம வர்ற ,அது"ஏன்?

நான்"போறதே"எதுனா"ரோஸ்ட்"போட்டோ Fb ல,அப்டேட்"பண்ணத்தான்


===============8 பொதுவாகவே,
நாம சுமாராதான் இருக்கோம்னு புரிஞ்சி வெச்சிருக்குற பொண்ணுங்க அவ்ளோ ஈஸியா பசங்களால ஏமாந்து போறதில்ல!
ஓஹோ!அப்போ"அப்பேர்ப்பட்ட"தன்னடக்க தளிர்கள் எந்த ஊர்ல இருப்பாங்கனு"சொல்லுங்க பார்ப்போம்.நான்"பார்த்தவரை மொக்க பிகருங்க கூட"சக்க பிகராதான் சீன் போடுது


===========


9 டாக்டர்,என் மனைவி"கண்ல"பூ விழுந்துடுச்சு

புடவை விழுந்தாதான் தண்டச்செலவு,பூ தானே 2 முழம் வாங்கிக்குடுங்க


============10 குருவே!இணையத்துல காதல் பண்றதெல்லாம் புயல்காத்துல பொரி சாப்டுற மாதிரிதான்.
எப்பவேணாலும் பறந்துபோகலாம் னு சொல்றாங்களே,அது"நிஜமா?
;ஆமா ,அதனாலதான்"டிபன் சாப்பிடறதா இருந்தாலும் ,புல் மீல்ஸ் சாப்பிடறதா இருந்தாலும்" ஆசிரமக்கதவை சாத்திக்கறது


===============11 டாக்டர் ,3 மாசத்துல 15 கிலோ வெயிட் குறைக்கனும்.அதுக்கு என்ன செய்யனும்

ஏம்மா,இந்த சின்னக்கணக்கு கூட தெரியலையா?மாசா"மாசம் 5 கிலோ சராசரியா குறைக்கனும்


===============

12 யுவர் ஆனர் ,கர்ப்பமா இருந்ததா சொல்லப்பட்ட பொண்ணு கர்ப்பமா இல்லை,வயித்துல கட்டி

ஓஹோ
அப்பறம் ,போலீஸ் உதைச்சதால அவங்க இறக்கலை,அந்த"கட்டி வெடிச்சு"தான் இறந்திருக்காங்க
திரைக்கதை பிரமாதமா இருக்கே?


===============


13 அழகான வாழ்க்கை இருக்கவங்களாம் ஏன்யா ட்விட்டர் /FB வர்றீங்க?

அழகான வாழ்க்கை வாழறதா எல்லாருக்கும் காட்டத்தான்==============14 16 வயசுல இருந்து 30 வயசு வரை என் மகன் எந்த வேலைக்கும் போகாம வீணா போய்ட்டான்

ஓஹோ,31 வயசுல?
எதிர் வீட் பிகர் வீணா கூட"போய்ட்டான்


==============15 டாக்டர்,
பத்து நாள் சாப்பிடாமல் இருந்தால் போதும், தொப்பை ஈஸியாக குறைந்து விடும்னு சொல்றாங்களே?அது நிஜமா?
ஆரோக்யமும் குறைஞ்சிடும்.அசிடிட்டி பார்ம்"ஆகி அல்சர்"வரும்===============16 Residential sales னு"கடை"ல"போர்டு"போட்டிருக்கீங்க?ஆனா"வெறும்"சினிமா"டிவிடியா இருக்கு?

ஆமா,Redident evil part 1,2,3,4,5 DVD மட்டும் விற்கறோம்


===============17 இந்தியாவில் தற்போது உள்ள முதல்வர்களில் நமது முதல்வர் தான் சிறந்த முதல்வர்-கடம்பூர் ராஜீ# யார் சொன்னது?இந்தியா டுடே கருத்துக்கணிப்பா?

இல்ல ,இப்டி சொல்லு னு !CM தான் சொல்லச்சொன்னார்


============18 ஆதார் வழக்கில் தீர்ப்பு வரும்வரை ஆதார் எண்ணை இணைக்க கட்டாயமில்லை: உச்சநீதிமன்றம் எப்ப வரும்.

எல்லா பக்கமும் எல்லாரும்,ஆதார்"எண்ணை இணைச்சதும்
ஆஹா!அபாரம் பரிமளா,மேல சொல்லு==============


19 அரசியலில் நுழைந்ததும் அனைத்து கேள்விகளுக்கும் பதில் தருவேன்- ரஜினி
# ஓஹோ,எப்போ நுழைவீங்க?
எல்லா கேள்விக்கும் பதில்"ரெடி பண்ணதும்==============20 டீச்சர் ,ரஜினி நடிச்ச "கழுகு"ரீமேக் ல விஜய் நடிச்சா நீங்க சொன்னது"நடக்கும்

நான் என்ன சொன்னேன்?
உயர உயர பறந்தாலும் ஊர்க்"குருவி" பருந்து ஆகுமா? ன்னீங்களே?


=====================

0 comments: