Friday, March 09, 2018

பேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு

டாஸ்மாக்' கடைகளை மூடிவிட்டால், கள்ளச்சாராய விற்பனை அதிகரித்து விடும். உயிரிழப்புகளை தடுக்கவே, அரசு டாஸ்மாக் கடைகள் செயல்படுகின்றன -  தமிழக வனத்துறை அமைச்சர் சீனிவாசன்:'  # அப்டியே அபின் , கஞ்சா  வையும் சட்டப்பூர்வமா விக்காம விட்டீங்களே , சந்தோஷம், எல்லாம் எங்க தோஷம்


 அப்போ படிப்படியா பூரண மதுவிலக்கு  அப்டினு அம்மா சொன்னதெல்லாம் சும்மாவா?

==========


===================
2   காவிரி விவகாரம் தொடர்பாக, அனைத்துக் கட்சி தலைவர்கள் மற்றும் விவசாய அமைப்பு தலைவர்கள் கூடி எடுத்த முடிவிற்குப் பின், எதிர்க்கட்சி தலைவர், ஸ்டாலினை மட்டும், முதல்வர் அழைத்து பேசுவது எந்த வகையில் நாகரிகம் என, தெரியவில்லை-ராமதாஸ்  # ஓஹோ , உங்களை பந்திலயே உக்கார வேNஆம்னு சொல்லீட்டாங்களா? அப்புறம் ஏன் இன்னும்  இலை ஓட்டைனு புலம்பிட்டே இருக்கீங்க? 


===================


3  ரஜினியோ, கமலோ யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர், ஜெயலலிதா பெயரை சொல்லித்தான் அரசியல் செய்ய வேண்டும் - அமைச்சர் ஜெயக்குமார்.. # அப்டி அரசியல் செஞ்சா நெட்டிசன்கள் வெச்சு செஞ்சிடுவாங்க, மீம்ஸ் போட்டுத்தள்ளிடுவாங்கனு அவங்களுக்கு தெரியாதா என்ன?

====================4
மாணிக்சர்க்கார் எளிமையாக வாழ்வதால் மக்களை ஏழ்மையாகவே வைத்திருப்பார் -எச்.ராஜா
# இவருக்கு யாராவது எளிமை க்கும் ஏழ்மைக்கும் வித்யாசம் சொல்லிக்குடுங்கஅப்போ மோடி ஆட்சில இருக்கற மாநிலங்களில் எல்லாம் குபேரன்களா ஜனங்க இருக்காங்களா?


==============
5
கண்ணை இமை காப்பது போல் தமிழக மக்களை அரசு காத்து வருகிறது- முதலமைச்சர் பழனிசாமி
# அமைச்சர்கள் அவரவர் பதவியை வேணா அப்படி காப்பாத்திக்கறாங்க, ஜனங்களை யாரு சார் காப்பாத்தறா? அவங்கவங்களெ காப்பாத்திக்கிட்டா உண்டு


=======================


6 தினகரனின் தம்பி பாஸ்(எ) பாஸ்கரனின் மன்றம் உடைந்தது.. கமலின் மக்கள் நீதி மய்யத்தில் ஐக்கியம்!   # தமிழக அரசியல்ல அண்ணன் - தம்பி க்கு ராசியே இல்ல போல அழகிரி ஸ்டாலினுக்குக்கூட ஒத்து வர்ல 


===================

7 பக்குவமில்லாத தலைவராக இருக்கிறார் ஸ்டாலின்: அமைச்சர் ஜெயக்குமார்  # பகுத்தறிவுத்தலைவரின் மகனை இப்படி பொசுக்குன்னு பக்குவம் இல்லா தலைவர்னு சொல்லீட்டீங்களே?


===============


8 திரிபுராவில் ஏற்பட்ட நிலை தமிழகத்திலும் ஏற்படும் தமிழிசை    # மேகாலயாவில் ஏற்பட்ட நிலைமை ஏற்படும்னு ஜனங்க சொல்றாங்க


=============


9 தமிழகத்தில் ரவுடிகளுக்கு இடமில்லை, காவல்துறையின் நடவடிக்கைக்கு பயந்து தானாகவே சரணடைந்து வருகின்றனர் - அமைச்சர் உதயகுமார்  #  ஓவரா லஞ்சம் கேட்டிருப்பாங்க போல , அவ்ளோ லஞ்சம் தர்றதுக்கு உள்ளேயே இருந்துக்கலாம்னு சரண் அடைவாங்க போல 


=================

10 ஷங்கர் இயக்கத்தில் நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள "2.0" திரைப்படத்தின் டீசர் வெளியானதால் படக்குழு அதிர்ச்சி.    # அடப்பாவமே , சிஸ்டம் சரி இல்லைன்னாரு. அவர் சிஸ்டத்துல இருந்தே உருவீட்டாங்களா? இவர் நடிச்ச பட டீசரையே காப்பாத்த முடியல , இவர் எப்படி தமிழ் நாட்டு மக்களைக்காப்பாத்தப்போறாரு?னு கேப்பாங்களே?


===========================


11 நடுராத்திரியில் நகைகளுடன் பெண்கள் நடமாட வேண்டும் என்கிற காந்தி கனவை நிறைவேற்றும் அளவில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் ஜெயக்குமார் # நகை இல்லாம வெறும் கழுத்தோடவே பெண்கள் நடமாட முடில,செகண்ட்ஷோ விட்டு போக முடில

===================

12 நடுராத்திரியில் நகைகளுடன் பெண்கள் நடமாட வேண்டும் என்கிற காந்தி கனவை நிறைவேற்றும் அளவில் உள்ள ஒரே மாநிலம் தமிழ்நாடு - அமைச்சர் ஜெயக்குமார் # நாங்க ஏங்க நடு ராத்திரில நடமாடனும்,?னு அவங்க கேட்டுடப்போறாங்கசும்மா புன்னகையுடன் கூட நடமாட முடியல, நகையுடன் எப்படி நடமாட? பட்டப்பகல்லயே பைக்ல வந்து செயின் பறிக்கறாங்க


================13 வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் தங்கை ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம், ஸ்ரீதளாதேவி கணவர் பாஸ்கருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.20 லட்சம் அபராதம் விதிப்பு  # ஒரே ஃபேமில பல்க்கா உள்ளே போறதால கன்செஷன் கிடையாதா?னு அவங்க கேட்கலையா?முதல்ல அவங்களூக்கு வருமானம் ஏது? எந்த சோர்ஸ்னு விசாரிக்கனும்.


கடைசில காலா பன்ச் டயலாக் தினக்ரனுக்கு தான் பொருந்தும் போல . வேங்கை மகன் ஒத்தை ல நிக்கேன், என் ஃபேமில எல்லாரையும் கைதியா  பாக்கேன்

=====================
14 பேஸ்புக் கருத்து மோதலில் ஒருவருக்கு அரிவாள் வெட்டு-செய்தி 


# மாடர்னா நெட் க்கு மாறுனாலும் வெட்டு குத்து அடிதடின்னா இன்னும் அரிவாள் , கத்தினு பழம் பஞ்சாங்கமாவே இருக்காங்க


இனிமே ஃபேஸ்புக் படிச்சமா லைக் போட்டமானு இருந்துடனும், கருத்து சொன்னா ஆளையே போட்ருவாங்க போல


ஜாதிச்சண்டையை விட இந்த சண்டை கொடுமையா இருக்கே ?

========================15 பொதுத்தேர்வில் மாணவர்கள் காப்பி அடிக்க உதவி செய்யும் ஆசிரியர்கள்,பள்ளிகள் மீது கடும் நடவடிக்கை # ஒவ்வொரு எக்சாம் ஹால்லயும் 10% பேராவது அட்லீ துணை,தேவா துணை கேசுங்க இருக்கும்


==================


வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக தொடரப்பட்ட வழக்கில் தினகரன் தங்கை ஸ்ரீதளாதேவிக்கு 3 ஆண்டு சிறை, ரூ.10 லட்சம், ஸ்ரீதளாதேவி கணவர் பாஸ்கருக்கு 5 ஆண்டு சிறை, ரூ.20 லட்சம் அபராதம் விதிப்பு "ஜெயில்,புதுசா"கட்டனும் போல,ஆல் பேமிலி மெம்பர்ஸ் இன்


-------------------


மதுரை ஆதீன மடத்துக்குள் நித்தியானந்தா நுழையக் கூடாது - உயர் நீதிமன்றம் அதிரடி உத்தரவு # அதே மாதிரி அவர் அவரோட ஆசிரமத்துக்குள்ளயும் போகக்கூடாதுனு உத்தரவு போடுங்க எஜமான்.பொண்ணுங்களோட அடிக்கற கூத்து பாத்தா காண்டாகுது


=============

கணவன் அடித்தால் மனைவி திருப்பி அடிக்க வேண்டும் - நடிகை வரலட்சுமி
# அதாவது ஆம்பள மாதிரி ஆகிடனும் பொண்ணுங்க வீரத்துல?===============
0 comments: