Monday, March 19, 2018

ஒரு ஊர்ல ஒரு"ராஜா இருந்தாரு...

டாக்டர், வெற்றிலை பாக்கு போட்டா வாய் பொக்கையாகிடும் னு சொன்னாங்க. அது உண்மையா?


ஹான்ஸ் போட்டாதான் ஹன்சிகா இருந்தாலும் பொக்கை ஆகும், வெற்றிலை பாக்குக்கு பொக்கே கொடுத்து வரவேற்கலாம்============


2 பஸ் ஆக்சிடெண்ட் ஆனதுக்கு எதுக்கு இளையராஜாவைக்கைது செய்யனும்னு ஜனங்க ஆர்ப்பாட்டம்"பண்றாங்க?


அவர் பாட்டைக்கேட்டு சொக்கிப்போய்"டிரைவர் தூங்கிட்டாராம்============


3 வைஷ்ணவத்துக்கு எதிரானவர்னு"நடிகை க்கு"எதிரா ஏன் போராட்டம் பண்றாங்க?


பேரு ரம்யா நம்பீசன் ஆச்சே?ஈசனை"மட்டும் நம்புனா போதுமா?பெருமாளையும் நம்ப வேணாமா?னு கேட்கறாங்க==================


4 உங்க படத்துக்கு ஏன் "தி ஷேப் ஆப் குவாட்டர் " னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


படத்துக்கு 4 ஆஸ்கர் அவார்டு கிடைக்காட்டியும் ,குடிமக்கள் ஆதரவாவது கிடைக்கும்னுதான்=================


5 தலைவரே!கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லை அப்டினு அவங்க உங்களை நக்கல் அடிக்கறாங்க

ஓஹோ, தலைக்கு கொஞ்சம் ஐ டெக்ஸ் மை வெச்சுப்பார்ப்பமா? தலை மை பண்பு அப்டினு சொல்லிக்கலாம்


===============


6 தேசிய அளவிலான பொது அறிவை வளர்க்கற மாதிரி என் படம் இருக்கும்.

ஓஹோ!NGK னு டைட்டில்"வெச்சதுக்கு இதுதான் அர்த்தமா?national general knowledge


===============


7 யுவர் ஆனர்.ஜாதியை வெளிப்படுத்தற மாதிரி டைட்டில் இருப்பதால் தடை வேணும்.

எப்டி"சொல்றீங்க?
NGK = நான் கவுண்டர் கூட்டம் அப்டினு அர்த்தம் வருது


===================


8 இந்தப்படம் ஒரு கேங்ஸ்டர்"கதைனு யூகிக்கறேன்

எப்டி?
NGK = new gangster king


===============9 சார்.NGK பட டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?

அது சஸ்பென்ஸ்
சும்மா சொல்லுங்க
அதாவது அவுட்டோர் ஷூட்டிங்க் போன இடங்கள் தான் க்ளூ
ஓஹோ! நியூயார்க், கோவா , கிளிமாஞ்சாரோ?=================10 சார்,டீசர் வெளியிடும் முன் டைட்டிலை இனிஷியலா வெளியிடுங்க

;சரி,இனிஷியலையே டைட்டிலா வெச்சிடுவோம்===============11 தலைவரே!ரஜினி அரசியலுக்கு வர்றது உங்களுக்கு பிடிக்கலைதானே?

ஆமா
அப்போ நீங்க நம்பியார் படத்தை திறந்து வைங்க
எதுக்கு?
ரஜினி மட்டும் MGR படத்தை திறந்து வைக்கலையா?தானிக்கு தீனி


==================12 சார்,எனக்கு உங்க போட்டோகிராபி பிடிக்கும்,ஆனா மொக்கை ஜோக்ஸ் பிடிக்காது

அப்டியா?அப்போ ஒரு பேப்பர்ல ஜோக் எழுதி அதை போட்டோ எடுத்து போட்ரவா?


===============


13 அந்த வாடகை விசயத்துக்கும் எதுனா விளக்கம் கொடுத்தாரா? நான் பாதில இருந்துதான் பாத்தேன் ://

ஆதி"ல இருந்து பாத்த எங்களுக்கே புரியல,மீதி பேட்டி தொடருமாம்


=============


14
தலைவரே!நாம எல்லாரும் நல்லா டெய்லி 3 வேளை"சாப்பிட்டா தமிழ் வளருமா?எப்டி?
தமிழ் வளரனும்னா தமிழன் வளரனும்.தமிழன் வளரனும்னா அவன் நல்லா சாப்பிடனும்,இது எப்படி இருக்கு?
================
15 தலைவரே!எம்ஜியார் ,கலைஞர் ,ஜெ 3 பேரையுமே பாராட்றீங்களே?எதுக்கு?

தம்பி"ஒரு கட்சியோட வாக்கு வங்கியை இழுக்கனும்னா அதுக்கு அந்தக்கட்சித்தலைவரை முதல்ல பாராட்டனும்.ஜனங்க ஏமாந்துடுவாங்க


=============16 குருவே!அரசியல்லயும் ரஜினி கமர்ஷியலை தேர்ந்தெடுக்கறார். கமல் புதுமையை .யார் ஜெயிக்கப்போறாங்க?

2 பேருமே ஜெயிக்க மாட்டாங்க.ஆனா 2 பேர்க்குள்ள ரஜினி முந்துவார்


===============


17 தலைவரே!பெரியார்"பற்றி"அவர்"கொள்கைகள்"பற்றி உங்களுக்கு,என்னென்ன தெரியும்?

எதுவும் தெரியாது
;பின்ன ஏன் அவர்"சிலையை"உடைக்கனும்னீங்க?
அப்ப தான் மீடியா"ல"பரபரப்பா"பேசப்படுவோம்


==================


18 தலைவரே!பெரியார் சிலையை"அகற்றுவோம்னு உங்க பேஸ்புக்ல ஸ்டேட்டஸ்"போட்டிருந்தீங்களாமே?

ஆமா,அகற்றிட்டோம்
அதுக்குள்ளயா?சிலையையா?
இல்லை,அந்த"ஸ்டேட்டசை.ஹிஹி===============19 ஒரு ஊர்ல ஒரு"ராஜா இருந்தாரு...

பாட்டி,வேற"கத"சொல்லுங்க,இது"தான்"தெரியுமே?அவரு"ஊர்ல"எல்லார்கிட்டயும்"திட்டு"வாங்கிட்டே இருந்தாரு,அதானே?


================20 என்னடா பேஸ்புக்ல 2 வீடியோ போட்டதுக்கே நிறைய பேர் டிஎம் வராக !ட்விட்டர்ல என் எனர்ஜி எல்லாம் வேஸ்ட் பண்ணிட்டனே

பாத்து,கோகிலாஹனியோட"தம்பிங்களா இருக்கப்போகுது,ஏன்னா தேடி"தானா வர்றது பேக் ஐடியாத்தான் இருக்கும்


===============

0 comments: