Sunday, March 04, 2018

ஊழல் நடப்பதெல்லாம் நன்மைக்கே

நாங்கள் ஆட்சிக்கு வந்தால் தமிழ்தாய் வாழ்த்தை மாற்றுவோம் - அர்ஜுன் சம்பத்
போய் கூப்புல உக்காருங்க,தமிழ்ப்புத்தாண்டை மாத்தறேன்னு சொல்றவங்களே லைன்ல நிக்கறாங்க,உங்களுக்கென்ன அவசரம்?


========


2 தமிழை கடுகளவு ் கூட அவமதிக்காதவர் விஜயேந்திரர்!” : பொன்.ராதா # சசிகலாதான் தப்பு வெளில தெரிஞ்சுடக்கூடாதுனு மவுனவிரதம் இருக்கறாப்டி ,இவருக்கு என்ன ?வாயைத்திறந்து பேச மாட்டாராமா?


===========


3 எனது உடலில் ஓடுவது சுயமரியாதை ரத்தம்” - உதயநிதி ஸ்டாலின்

# மத்தவங்க உடம்புல"மட்டும்"மானங்கெட்ட ரத்தமா ஓடிட்டு இருக்கு?இந்த டயலாக்கெல்லாம் 1980 லயே பாத்துட்டம் ,வேற வேற


============4 நல்ல பண்புகளைக் கொண்ட விஜயேந்திரரை விமர்சிக்க விரும்பவில்லை!” : செல்லூர் ராஜூ

# சபை நாகரீகமே தெரியாத ஆளுக்கு நல்ல பண்பு எப்படி இருக்கும்?==============5 நாட்டை சங்கடப்படுத்தாதீர்கள் மோடி': மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கண்டனம் # சங்கடப் என்பது வார்த்தை விரயம்

படுத்தாதீர்கள் என்பதே சரி


============
6 பெங்களூரு சிறையிலுள்ள சசிகலாவிடம் நேரில் சென்று விசாரிக்க நீதிபதி ஆறுமுகசாமி ஆணையம் திட்டம் # கொடாக்கண்டன் Vs விடாக்கண்டன்


============7 விஜயேந்திரர் தவறு ஏதும் செய்யவில்லை தியானம்தான் செய்தார். செல்லூர்ராஜூ

# தியானம் செஞ்சேன்னு பொய் சொல்றதும் இன்னொரு தவறுதான்============8 குடும்பத்தில் ஒருவர் வரி செலுத்தினாலும் ரேஷன் கிடையாது- தமிழகஅரசு.

# நேர்மையா வரி கட்றவனையும் வரி ஏய்ப்புல ஈடுபடத்தூண்டுவாங்க"போல


==============


9 ஊழல் நடக்கும்போது மக்கள் தியானத்தில்தானே இருந்தார்கள் -கமலஹாசன்.

# ஊழல் நடப்பதெல்லாம் நன்மைக்கே னு நினைச்ட்டாங்க போல


=============10 ஜெ வின் பணம் முழுவதும் சசிகலாவிடம் இருந்ததால் தான், அவரை பொதுச்செயலாளராக தேர்ந்தெடுத்தோம் - மதுசூதனன் # அப்போ எல்லா பணத்தையும் பேங்க்ல போட்டு வெச்சிருந்தா பேங்க்மேனேஜரை பொதுச்செயலாளர் ஆக்கி பின் முதல்வர் ஆக்கி இருப்பீங்க?


============


11 பத்ம விபூஷண் விருதுபெற்ற இளையராஜாவுக்கு தமிழக பாஜக தலைவர் தமிழிசை வாழ்த்து

# பாஜக வில் சேர்ந்த கங்கை அமரனுக்கு இளையராஜா நன்றி சொல்லியாச்சா?


=============12 கமல் ஒரு கிராமத்தை தத்தெடுக்கப்போவதாக கூறுவது ஏமாற்று வேலை - அமைச்சர் ராஜேந்திர பாலாஜி

# சிட்டிங்க் எம்எல்ஏ எம் பி ங்க தான் சீட்டிங்க் வேலை பார்க்கறாங்கனு அவர் சொல்றாரே?


=============13 தமிழ்த்தாய் வாழ்த்துக்கு முஸ்லீம்கள் எழுந்து நிற்பார்களா?- பத்திரிக்கையாளர் மாலன் # இதுதான் பிரச்சனையை திசை திருப்பறது?குறைந்தபட்ச சபை நாகரீகம் கூட ஒரு இந்து சாமியார்னு சொல்லிக்கறவர்ட்ட கிடையாதா?னு அதுக்கு பதில் சொல்லாம...


==============14 தேசிய அரசியலை விட தமிழக அரசியலுக்குத்தான் முக்கியத்துவம் தருவேன் - கமல் # தேசிய அரசியல் தமிழக அரசியலை ஆக்ரமிச்சு இருக்கறது பிக்பாஸ்க்கு தெரியுமா?தெரியாதா?தெரியலையே?


=============15 கருணாநிதி நலமுடன் இருந்தபோதே தமிழ்த்தாய் வாழ்த்துக்கு எழவில்லை: துக்ளக் குருமூர்த்தி +H ராஜா # தேசியகீதத்துக்கு மரியாதை செலுத்திய விஜயேந்திரன் எ"சங்கரநாராயணன் தமிழ்த்தாய் வாழ்த்துக்கு ஏன் எழுந்து நிற்கலை?என்பதுதான் கேள்வி!அதுக்கு பதில் இது இல்லையே?


============16 தேசிய கீதமும் தமிழ்த்தாய் வாழ்த்தும் ஒன்றா?' சங்கரமடம் கேள்வி # செஞ்சது தப்புதான்னு ஒத்துக்க மனசு வர்லை,சப்பைக்கட்டு கட்டிட்டே இருந்தா பொதுஜனங்க கேலிக்கும் ,கிண்டலுக்கும் ஆளாக வேண்டியதுதான்


============


17 ஹெச் ராஜா இருக்கும் வரை தமிழகத்தில் பாஜக வளராது - கனிமொழி

# ஹெச் ராஜா இருக்கும்வரை என்பது வார்த்தை விரயம்


==============18 ஆர்வம் இருந்தால், உதயநிதி ஸ்டாலின் அரசியலுக்கு வருவதில் தவறில்லை - கனிமொழி.

# திமுக ஒன்றும் சங்கரமடம் அல்ல னு தானைத்தலைவர் சொன்னதுக்கு என்ன அர்த்தம் மேடம்?


=====================19 கல் எறியவும், சோடா பாட்டில் வீசவும் எங்களுக்கும் தெரியும் ஆனால், அதை செய்யமாட்டோம் - சடகோப ராமானுஜ ஜீயர்# எங்களுக்கு அதெல்லாம் தெரியாது"ஆனா தமிழ்த்தாய் வாழ்த்துப்பாடல் ஒலிக்கும்போது எழுந்து நிற்கனும்கற சபை நாகரிகமும் ,அடிப்படை அறிவும் யாரும் சொல்லித்தராம இயற்கையாவே அமைஞ்சிருக்கு

=============
20 சட்டசபையில் உட்கார முடியவில்லை- துரைமுருகன் #
அடிச்ட்டு வெளிநடப்புனு மீடியா கிட்டே பந்தாவா சொல்லிட்டு பத்மாவதியோ ,பாகுமதியோ பாக்கலாம் வாங்க


============

0 comments: