Monday, March 12, 2018

டாக்டர்,குறட்டை வருது, வராம இருக்க என்ன பண்ணும் ?!

குருவே!கார்த்திக் சிதம்பரம் ஒரு கொலை குற்றவாளி போல் மீடியா சித்திரிக்கிறது


என்ன தப்பு அதுல?ஒரு பணக்காரன் மக்கள்"சொத்தை கூச்சப்படாம திருடுனா ஜனநாயகப்படுகொலைகாரன்தானே?சாப்பாட்டுக்கு"திருடுனா கொல்றாங்க.அடுத்தவன் சொத்தை திருடற பணக்காரனை கேவலப்படுத்தினா என்ன தப்பு?


===============


2 நானே ஸ்ரீதேவி மாதிரி தான் இருக்கேனாம் சொல்ராங்க


சரக்கடிக்கறீங்கனு பூடகமா சொல்லி இருக்காப்டி,இது புரியாம..============3 தலைவரே!உங்க பையனுக்கு"நெஞ்சு வலி னு நியூஸ் வருது,பதறாம இருக்கீங்க?


ஜெயில்ல/லாக்கப்ல விசாரணை ல இருந்து தப்ப அப்டி நடிக்கச்சொல்லி ஐடியா குடுத்ததே நான்தான்===============4 குருவைப்பாக்கப்போறவங்க சட்டையைக்கழட்டிட்டுப்போகனும்.மரியாத மரியாத


ஓஹோ,அவரு மட்டும் சட்டை போட்டிருக்காரு?அவருக்கு"மரியாதை"காட்டி பழக்கமில்ல போல?================5 முகத்தைப் பார்த்தாலே தப்பா பட்றது, என்னமோ சரியில்லையேன்னு உள்ளுணர்வு உஷாராகறது.. இந்த பொது குணங்கள் சாமியார் பின்னாடி போற மக்களுக்கு இருக்காதா?


இருக்காது,ஏன்னா அவங்க,சாமியார்"பின்னாலதானே,போறாங்க,முன்னால,முகத்தைப்பாக்கலையே?=================


6 டியர்,என்னை,வர்ணிக்கும்போது"கூட துண்டு சீட்டு பாத்து பிட்"அடிக்கறீங்களே?வெக்கமா இல்ல?


பெரிய பெரிய அரசியல்"தலைவருங்க",அட்லீ"ங்க பேமஸ் ஆனதே"காபி அடிச்சுதான்,கண்டுக்காத==================7 கார்த்திக் சுப்புராஜ்"+ரஜினி"காம்போ பட பஞ்ச் டயலாக் என்னவா இருக்கும்னு யூகிச்ட்டேன்


எப்டி?
சிங்கம் சிங்கிளாத்தான் வரும்"(சிவாஜி)
வேங்கை ஒத்தைல வரும் (காலா)
சங்கம் எப்பவும் சோலோவாத்தான்"வரும்================8 குருவே!அந்த குருவுக்கும் உங்களுக்கும் என்ன வித்யாசம்?


பீடாதிபதி உயிரோட இருக்கும்போதே தன்னை அடுத்த,தலைவரா அறிவிச்சு கோர்ட் கண்டனம் பெற்று வாபஸ் வாங்கிட்டாரு.நான் புத்திசாலித்தனமா முறைப்படி என்ன செய்யனுமோ அதை செஞ்சேன்==============9 கிடைச்ச பேப்பர்ல எல்லாம் நம்ம பேர் எழுதுற பழக்கம் ஒரு வயசுக்கு மேல தன்னால நின்னுடுது....


ஓஹோ,ஆனா எனக்கு எழுதற பழக்கமே 5 வயசுக்கு மேல தான்"வந்தது===============10 ரைட்டர் சார்!பேஸ்புக்ல நீங்க"போட்டிருக்கற பதிவு ஆல்ரெடி ஒரு வெப்சைட்ல பலர் எழுதுனதா இருக்கே?


இருந்துட்டுப்போகட்டும்.பேஸ்புக்ல நான்தானே எழுதுனேன்?எப்டி என் சாமார்த்தியம்?


=================11 டைரக்டர் சார்,படத்துல ஹீரோ "சிங்கிளாதான் சிங்கம் வரும்"

வேங்கை ஒத்தைல இருக்கேன்" னு பஞ்ச் டயலாக் பேசறாரு
ஆமா
ஆனா எல்லாப்படத்துலயும்"மினிமம் ஒரு ஜோடி மட்டும் இருக்கே ,அது எப்டி?===============


12 தலைவரே!நமக்கு வாங்கித்தானே பழக்கம்?இணையத்துல நமக்கு சொம்படிக்கறவங்களுக்கு 200 ரூபா தர்றதா ஒரு பேச்சு உலா வருதே?எப்டி?


அதெல்லாம் வதந்திதான்.
கிளப்பி விட்டதும் வசதிதான்=================13 தலைவரே!நீங்க மேடைல பேச வேண்டிய டயலாக்கை ரஜினி சினிமா ல பேசி கைதட்டல் வாங்கறாரு


அப்டி என்ன பேசுனாரு?
என்னோட முழு ரௌடித்தனத்த நீங்க பார்த்ததில்லல, பார்ப்பீங்க"==================14 டாக்டர்,குறட்டை வருது, வராம இருக்க என்ன பண்ணும் ?!


தூங்கும்போது மன்மோகன்சிங் ஆகிடனும்
புரியல
வாயைத்திறக்கக்கூடாது=================


15 சார்.நீங்க எந்த ட்வீட் போட்டாலும் 140 எழுத்து அல்லது 280 எழுத்து கவர் ஆகற மாதிரி போடறீங்களே?ஏன்?


கம்மியான எழுத்துக்கள்ல ட்வீட்னா இது "அரைகுறை" ட்வீட்னு சொல்லீட்டா?================16 டாக்டர்,என் புருசன் வாய்ல இருக்கற 32 பல்லையும் பிடுங்கனும்


ஏன் மா?
பல் இருக்கறவன் பக்கோடா சாப்பிடறான்னு பஞ்ச் பேசி ரோட்ல போற வர்ற பொண்ணுங்க உதட்டை கடிச்சு வெச்சிடறாரு=================17 சார்.உங்க கடைல வாங்கற போன் சார்ஜ் எவ்ளோ நேரம் நிக்கும்?


சார்ஜ் எல்லாம் நெட் ஆன் பண்ணலைனா 1 நாள் முழுக்க இருக்கும்..
ஓஹோ,போனையே ஆன் பண்ணலைன்னா 365 நாள் கூடத்தான் நிக்கும்==============18 பீடா பேக்டரி ஓனரா நீங்க?


;இல்லையே?
ஊர்ல உங்களை "பீடா"திபதி னு கூப்பிடறாங்க?===============19 ஜட்ஜ் = இந்தக்கொலையை நீயா செஞ்சே?


கைதி= நான்
இந்தக்
செய்ய
கொலையை வில்லை
ஜட்ஜ்"= ஏன்?ஒரே"வரில சொல்லமாட்டியா?
ஐயா
கைதி =பேசிக்கலா நான் ஒரு கவிஞனுங்க==============20 டாக்டர் ,வேளா வேளைக்கு

காஃபி /டீ குடிக்கிற மனுஷங்களைக் கண்டா
ரொம்ப பொறாமையா இருக்கு
எதுக்கு பொறாமைப்படறீங்க?அனுதாபப்படுங்க.பாவம்.2 மே கெடுதல் தானே?உடல்நலனுக்கு==================

0 comments: