Wednesday, March 07, 2018

நான் கவுண்டர் கூட்டம்

டோல்கேட் ல ஊழல் நடக்குதா?


ஆமா,அந்த ஏரியா"ரயில்களை எல்லாம்"நிறுத்தி வசூல் பண்ணிட்டு இருக்காங்க============


2 காலா ல ரஜினி கேரக்டர் பேரு V கரிகாலன்


அடேங்கப்பா,எப்டி கண்டுபிடிச்சே?
வேங்கை மகன் னா v தானே இன்ஷியல்?==============


3 இந்தியாவிலேயே"துணிச்சலான முதல்வர் யாரு?


தெரீலயே?
கேரள முதல்வர் தான்
எப்டி?
அப்போலோ பத்தி தெரிஞ்சும் அங்கே அட்மிட் ஆகி இருக்காரே?==============4 ஆஃபாயில் ஆண்களாக இருக்கக் கூடாது னு விதி இருக்கா என்ன?


மேடம் ,இந்த விஷயத்தில ஆண்கள் மைனாரிட்டி,எங்காவது 1,2 இருக்கும்,பெண்கள் தான் மெஜாரிட்டி,திரும்புன பக்கம் எல்லாம்...


==============


5 வீடு இல்லன்னு இரண்டு பொண்ணுங்க வேண்டாம் சொல்லிட்டாங்க...


கவலைப்படாதீங்க,அந்த மாதிரி பொண்ணுங்களுக்கெல்லாம் 2,3 சின்ன வீடு வெச்சிருக்கற பணக்கார குடிகாரன்தான் மாப்ளையா வருவான்=============6 ஏன் என்கிட்ட யாருமே பேச மாட்றாங்க?


அண்ணா னு"கூப்டற பொண்ணு,கிட்டயே ஐ லவ் யு சிஸ்டர் னு சொன்னா எப்டீ பேசுவாங்க?============


7 சார் , கேரளாவில் வெர்ஜின் கோக்கனட் ஆயில் ரொம்ப ஃபேமஸ்,வாங்கிட்டுப்போங்க , ஒரு லிட்டர் 750 ரூபா தான்
சாரி சார், எனக்கு மேரேஜ் ஆகிடுச்சு , மேரீடு கோக்கனெட் ஆயில் இருந்தா குடுங்க======================

7 மேடம்,எதுக்காக மேடை ஏறுனதும்"மைக்கை உடைச்ட்டீங்க?


உடைத்துப்பேசுவோம்"நிகழ்ச்சி"தானே இது?எதையாவது"உடைக்க"வேணாமா?


==============8 டாக்டர், வெற்றிலை பாக்கு போட்டா வாய் பொக்கையாகிடும் னு சொன்னாங்க. அது உண்மையா?


ஹான்ஸ் போட்டாதான் ஹன்சிகா இருந்தாலும் பொக்கை ஆகும், வெற்றிலை பாக்குக்கு பொக்கே கொடுத்து வரவேற்கலாம்


============


9 பஸ் ஆக்சிடெண்ட் ஆனதுக்கு எதுக்கு இளையராஜாவைக்கைது செய்யனும்னு ஜனங்க ஆர்ப்பாட்டம்"பண்றாங்க?


அவர் பாட்டைக்கேட்டு சொக்கிப்போய்"டிரைவர் தூங்கிட்டாராம்


===================10 வைஷ்ணவத்துக்கு எதிரானவர்னு"நடிகை க்கு"எதிரா ஏன் போராட்டம் பண்றாங்க?


பேரு ரம்யா நம்பீசன் ஆச்சே?ஈசனை"மட்டும் நம்புனா போதுமா?பெருமாளையும் நம்ப வேணாமா?னு கேட்கறாங்க===============


11 உங்க படத்துக்கு ஏன் "தி ஷேப் ஆப் குவாட்டர் " னு டைட்டில் வெச்சிருக்கீங்க?


படத்துக்கு 4 ஆஸ்கர் அவார்டு கிடைக்காட்டியும் ,குடிமக்கள் ஆதரவாவது கிடைக்கும்னுதான்


================


12 தலைவரே!கொஞ்சம்கூட தலைமைப்பண்பு இல்லை அப்டினு அவங்க உங்களை நக்கல் அடிக்கறாங்க


ஓஹோ, தலைக்கு கொஞ்சம் ஐ டெக்ஸ் மை வெச்சுப்பார்ப்பமா? தலை மை பண்பு அப்டினு சொல்லிக்கலாம்------------------


13 தேசிய அளவிலான பொது அறிவை வளர்க்கற மாதிரி என் படம் இருக்கும்.


ஓஹோ!NGK னு டைட்டில்"வெச்சதுக்கு இதுதான் அர்த்தமா?national general knowledge
==================14 யுவர் ஆனர்.ஜாதியை வெளிப்படுத்தற மாதிரி டைட்டில் இருப்பதால் தடை வேணும்.


எப்டி"சொல்றீங்க?
NGK = நான் கவுண்டர் கூட்டம் அப்டினு அர்த்தம் வருது
===============15 இந்தப்படம் ஒரு கேங்ஸ்டர்"கதைனு யூகிக்கறேன்


எப்டி?
NGK = new gangster king====================


16 சார்.NGK பட டைட்டிலுக்கு என்ன அர்த்தம்?


அது சஸ்பென்ஸ்
சும்மா சொல்லுங்க
அதாவது அவுட்டோர் ஷூட்டிங்க் போன இடங்கள் தான் க்ளூ
ஓஹோ! நியூயார்க், கோவா , கிளிமாஞ்சாரோ?
================


0 comments: