Sunday, April 15, 2012

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.க. தயங்குகிறதா?''குஷ்பூ பேட்டி






1.  ''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


சி.பி - சினிமால நடிக்க மேக்கப் போடனும், வெய்யில்ல நிக்கனும், ரிகர்சல் பார்க்கனும், டைரக்டர் ஓக்கே சொல்லனும்.. இத்தனை தடை இருக்கு.. அதனால அரசியல்ல நடிக்கறது தான் ஈசி.. 

 ''அரசியலை நடிப்புன்னு சொன்னா, அது முட்டாள்தனம். அரசியல்ல நடிப்பே கிடையாது

 சி.பி - என்ன மேடம் நீங்க இவ்ளவ் அப்பாவியா இருக்கீங்க? ஈழத்தமிழரைக்காப்பாத்த உண்ணா விரத நாடகம் போட்ட கலைஞர், ஜெ, சசி பிரிவு நாடகம், திராவிடக்கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லைன்னு காமெடி டிராமா போட்ட ராம்தாஸ்னு திரும்புன பக்கம் எல்லாம் நாடகம் தான்..

  அப்படி நடிச்சா, அவங்க உண்மையான அரசியல்வாதி கிடையாது. சினிமாவில் தினம்தினம் வேற வேற கேரக்டர்ல வாழ வேண்டி வரும். காலையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் கேரக்டர்னா, சாயங்காலமே ஒரு ஏழைப் பெண்ணா நடிக்கணும். தினம்தினம் வேற அனுபவங்கள். ஆனா, அரசியலைப் பொறுத்தவரை நடிப்பு கிடையாது. நீங்க எப்படி இருக்கீங்களோ, உங்க மனசுல என்ன இருக்கோ... அந்த உண்மையை மட்டும்தான் பேசணும்!''
2. ''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இது தான் தமிழ்ப் பண்பாடா?''


சி.பி - கேள்வியே தப்பு.. என்னமோ நாட்டுல நமீதா மட்டும் தான்  அப்படி வர்ற மாதிரியும் , மத்தவங்க எல்லாம்  இழுத்துப்போர்த்திட்டு வர்ற மாதிரியும் கேட்கறீங்களே. கலைஞர் டி வி மானாட மயிலாட பார்க்கவும்..

 ''இதை ஏன் தமிழ்ப் பண்பாட்டோட குழப்பிக்கிறீங்க. அது அவங்க சொந்த விஷயம்... அவ்வளவுதான். அவங்க எப்படி டிரெஸ் பண்ணணும், எப்படி வரணும்கிறது அவங்க சுதந்திரம். அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல நாம தலையிடுறது தப்பு. அதைப் பத்திப் பேச நாம யாரு? நமக்கு என்ன உரிமை இருக்கு?
நமீதாவைப் பொறுத்த அளவில் அப்படி டிரெஸ் பண்றதுதான் அவளோட இயல்பே. வேணும்னே கவர்ச்சியா வரணும்கிற எண்ணம் எல்லாம் அவளுக்குக் கிடையாது. 'நான் சினிமாவுல இருக்கேன். அதனால இப்படித்தான் இருப்பேன்கிற எண்ணம் அவளுக்குக் கிடையாது. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மும்பையில் அவளைச் சந்திச்சிருக்கேன். அப்பவும் அப்படித்தான் இருப்பா. அதனால அவளைப் பத்திக் கவலைப்பட்டு உங்க நேரத்தை வீணாக்கிக்காதீங்க .


சி.பி - நமீதா எந்த டிரஸ் போட்டாலும் அவருக்கு அது பத்தாது.. ஏன்னா அவர் யானை மாதிரி இருக்கார்... அவர் போடற டிரஸ் பூனை அளவு தான் இருக்கு.. இதுக்கெல்லாம் கண்டனம்  தெரிவிச்சுட்டு இருக்காம ரசிச்சுட்டு போவதே நல்லது.. 
3. ''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


சி.பி - தமிழ் இனத்தலைவரை பற்றி என்ன நினைச்சீங்க? மனைவிக்கு மரியாதை,  மகளிர் அணிக்கு தனி மரியாதை தர்றவர் ஆச்சே.. 
 ''அப்படி மரியாதை இருக்கிறதாலதான் ஒவ்வொரு மேடையிலும் சற்குணப் பாண்டியன் அம்மாவைத்தலைவருக்குப் பக்கத்து இருக்கையில் உக்காரவைக்கிறாங்க. அந்த மரியாதை இல்லைன்னா, ஒவ்வொரு அரங்கிலும் முன் இருக்கைகள் மகளிர் அணிக்காக ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை


 இருக்கை முன்னுரிமை மட்டும் இல்லை, மனதில் தோன்றிய கருத்துக்களைத் தைரியமாகப் பேச மகளிர் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகளில் ஆண்களுக்கேகூட அந்த வாய்ப்பு வழங்கப்படுமாங்கிறது சந்தேகம்தான். எங்கள் மகளிர் அணியின் தலைவி சற்குணப் பாண்டியன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர். இதைவிட வேறு என்ன மரியாதை வேண்டும்?''





சி.பி - ஆஃபீஸ், வீடு, கட்சி எல்லா இடங்களிலும் லேடீஸுக்குத்தாங்க மரியாதை.. ஆம்பளைங்களை எவன் மதிக்கறான்? பொண்ணுங்களைத்தான் மதிக்கறான்.. அவ்லவ் ஏன்? நம்ம தமிழ் நாட்டின் சி எம் , இந்தியாவின் ரியல் பி எம்  , கவர்னர் எல்லாம் ஒரு பெண் தானே?

4. ''இன்றைய தமிழகப் பெண் அரசியல் தலைவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்... ஏன்?''


சி.பி - - என்னைக்கவர்ந்தவங்க ஜனாதிபதி  பிரதீபா பாட்டில் தான். அநாயமா கவர்மெண்ட் காசுல சாரி பணத்துல உலகத்தை ரவுண்ட் அடிச்சுட்டு வந்துட்டாங்களே?
 ''இங்க ஜெயலலிதாம்மா, ஜெயந்தி நடராஜன்னு ஒரு சிலர்தான் இருக்காங்க. ஜெயலலிதாபற்றி இங்க நான் எதுவும் சொல்ல விரும்பலை. ஜெயந்தி நடராஜன் மேடம்பற்றிச் சொல்லலாம். அவங்க ரொம்பவே போல்டான லேடி. மத்திய அமைச்சரா தங்களோட பணிகளை ரொம்பவே சிறப்பா செய்றாங்க. சமீபத்தில்கூட சுற்றுச்சூழல் பற்றிய கருத்தரங்கில் அவங்களுடைய பேச்சு, பலத்த கைதட்டல் வாங்கிச்சு.அவங் களோட உழைப்பு எனக்குப் பிடிக்கும்!''

5. ''உங்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உண்டா?''



சி.பி - எதிர் காலத்துல குஷ்பூ சி எம் ஆனா அவருக்கு வாரிசா ஒரு ஆண் குழந்தை  இல்லையேன்னு வருத்தம் இருக்கும் தான்.. 

 ''ச்சே... சான்ஸே இல்லை. ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கணும் என்பதுதான் என் கனவே. மூணு அண்ணனுங்ககூட வளர்ந்தவள் நான். அப்புறம் எப்படி நான் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவேன். எப்பவும் பெண் குழந்தைகள் மீதுதான் எனக்கு ரொம்ப ஆசை. என் பொண்ணுங்களைப் பற்றியும் சொல்லிடுறேன். பெரியவள் ஆறாம் கிளாஸ் படிக்கிறா. ரொம்பக் குள்ளமா இருக்கா(?!). ஆமாங்க, இந்த 11 வயசுல ஆறடிக்கு இருக்கா. சின்னப் பொண்ணு 9 வயசுல என்னைவிட ஒரு இஞ்ச் உயரமா இருக்கா. நான் 5.4. அவள் 5.5. உயரத்தில் ரெண்டு பேருமே அவங்க அப்பா மாதிரி.


 பெரியவ பாக்குறதுக்கு பாதி நான், பாதி அவர். குணத்துல அவங்க அப்பா மாதிரி. அதிகமாப் பேச மாட்டா. அவ உண்டு, அவளோட புக்ஸ் உண்டுனு இருப்பா. நிறையப் படிப்பா. சைலன்ட். அவளோட எல்லா விஷயங்களையும் என்கிட்ட மட்டும்தான் ஷேர் பண்ணிப்பா. யார்கிட்டேயும் அவளோட ஃபீலிங்ஸை சொல்ல மாட்டாள். அவளுக்கு நான் மட்டும்தான்



 சின்னவள், சுந்தரை ஜெராக்ஸ் மெஷின்ல போட்டு வெளியில எடுத்த மாதிரி இருப்பா. எதுவா இருந்தாலும், அந்த நேரத்தில் பேசி சண்டை போட்டு முடிச்சிடணும். அடுத்த நாளெல்லாம் அவளால தள்ளிவைக்க முடியாது. அதுக்கு அவளுக்கு டைம் இல்லை. ஆனால், ரெண்டு பேரும் அப்பா செல்லம். பாதித் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும், அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.


 எங்கயோவது ஷாப்பிங், வெளியூர், வெளிநாடு போனாக்கூட அவங்க மூணு பேரும் ஒரு கேங்கா கைப்பிடிச்சு நடந்து போயிட்டு இருப்பாங்க. நான் பாவமாத் தனியா வருவேன். அவங்க அப்பா பக்கத்துலயே என்னை நெருங்கவிட மாட்டாங்க. வீட்லயும் அப்படித்தான். அவங்களுக்கு அப்பா பக்கத்துல யாரும் உட்கார்ந் துடக் கூடாது. அவர் நடுவுல உட்கார்ந்துஇருப்பார். ஒருத்தி இந்தப் பக்கம் இன்னொருத்தி அந்தப் பக்கம் உட்கார்ந்துஇருப்பாங்க. ஏன்னா, வீட்ல நான் ஹிட்லர்!''

 சி.பி - காலத்தின் கோலம் பார்த்தீங்களா? பட்லர் மாதிரி இருக்கேன்னு உங்களை வருஷம் 16 படத்துல கார்த்திக் நக்கல் அடிச்சாரு. இப்போ ஹிட்லர் ஆகிட்டீங்க.
6.''தி.மு.-வின் அடுத்த தலைவர் போட்டிக்கான களத்தில் நிற்பவர்களில், இந்த இயக்கத்தை வழிநடத்தும் தகுதி யாருக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?''


சி.பி - சீனியாரிட்டி பிரகாரம் அன்பழகன் தான் தலைவர் ஆகனும், ஆனா கலைஞர் ஸ்டாலினை ஆக்கப்பார்க்கறாரு.
 ''இப்போ தலைவருக்கு மட்டும்தான் அந்தத் தகுதி இருக்கு! அவருக்கு அடுத்து யாருன்னு தலைவரே யோசிச்சுவெச்சிருப்பாரு. நேரம் வரும்போது அவரே சொல்வாரு!''

7. ''ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.. தயங்குகிறதா?''


சி.பி - தயங்கலை, பம்முது.. காங்கிரஸ் கூட்டணி வேணும், அவங்களை எதிர்த்துக்க முடியாது. வேற என்ன பண்ண  முடியும்?
  ''இளகிய மனம்கொண்ட எங்க தலைவர் தயங்குவாரா என்ன? தூக்குத் தண்டனைக்கு எதிரா தலைவரே நிறையப் பேசியிருக்காங்க. அவங்க மூணு பேரையும் தூக்கில் போடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி இருக்கும்போது, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை. பாண்டுரங்கன் தவறான அரசியல் புரிதலோடு இருக்கார்னு தெரியுது


 இதை இன்னொரு கண்ணோட்டத்துலயும் பார்க்கணும். அவங்களுக்கு தண்டனைன்னா, 1991-லயே அவங்களைத் தூக்கில் போட்டிருக்கணும். 21 வருஷம் - அதாவது, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் - தங்களின் வாழ்க்கையை சிறையிலேயே கழிச்சிருக்காங்க. ஒரு தாய் தன் குழந்தையைப் பிரிஞ்சு வாழ்றாங்க. தாய், தந்தை அரவணைப்பு இல்லாம ஒரு குழந்தை வளர்ந்திருக்கா.


 இதைவிட அவங்களுக்கு வேற என்ன தண்டனையைத் தந்து விட முடியும்? 21 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தூக்குத் தண்டனைன்னா... அது எவ்வளவு பெரிய கொடுமை? தமிழக மக்களின் இந்த மன உணர்வை மத்திய அரசு கருத்துல எடுத்துக்கணும்!''


8. ''சினிமா பிரபலங்களின் காதல்அதிக காலம் நீடிக்காதது ஏன்?''

சி.பி - சினிமா இண்டஸ்ட்ரில இருக்கறவங்களூக்கு கைக்கு எட்டுனது வாய்க்கும் எட்டிடுது..  தப்பு பண்ண மத்தவங்களை விட அதிக சான்ஸ் கிடைக்குது.. ஃபாரீன் ஷூட்டிங்க் போறப்ப ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம்.. யார்க்கு தெரியப்போகுது? அதனால தப்பு அடிக்கடி நடக்குது.. அது தம்பதிகளுக்குள் தெரிய வரும்போது சண்டை வருது
 ''உங்களை மாதிரி பலர் கண்ணு வைக்கிறதுதான் காரணம். பொதுவா, இங்கே நிறையப் பேர் காதலிக்கிறாங்க; கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. அதில் பலர் காதலிக்கும்போதே பிரியுறதும்... கல்யாணத்துக்கு அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்குறதும் பெருசா வெளியில தெரியுறது இல்லை. அவங்களை நம்ம மீடியாவும் கண்டுக்கிறதும் இல்லை.


 ஆனா, சினிமாவில் இருக்கிறவங்களோட காதலையும் அவங்களுக்குள் ஏற்படுற ஊடலையும் நம்ம மீடியா ஊதிப் பெரிசாக் குது. இப்படி வரும் செய்திகள் அவங்களுக்குள் ஏற்படுற கருத்துவேறுபாட்டை இன்னும் அதிகமாக்குது. அதேபோல் நம்ம மக்களும் பேப்பர், டி.வி-யில் வர்ற செய்திகளை எந்தவித விசாரிப்புகளும் இல்லாம அப்படியே நம்பிடுறாங்க. ஒரு வதந்தியைக்கூட, 'இருக்கும்பா. இல்லாமலா இப்படி எழுதுறாங்கனு பேசுவாங்க. பிறகு, 'குறிப்பிட்ட அந்தச் செய்தி தவறுனு சம்பந்தப்பட்ட பத்திரிகையே மறுப்பு வெளியிட்டாக்கூட, 'அதெல்லாம் சும்மா... மறைக்கிறாங்கப்பா... சம்பந்தப்பட்டவங்க கூப்பிட்டுப் பேசியிருப்பாங்க. அதனால இப்ப சும்மா ஃபார்மாலிட்டிக்கு மறுக்கிறாங்கனு பேசிக்குறாங்க. நடிகர், நடிகைகளை தியேட்டரில் கொண்டாடுறீங்க .கே! ஆனா, அவங்க தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் கொஞ்சம் மரியாதை தரணும். இதெல்லாம்விட, யார் மேலயும் யாரும் வெச்சிருக்கிற அன்பு, காதல் உண்மையா இருந்தா... அது எவ்வளவு பிரச்னை வந்தாலும் கடைசி வரை நீடிக்கும். இது சினிமாவுல இருக்கிறவங்களுக்கு மட்டுல்லை.... எல்லாருக்கும் பொருந்தும்!''

9. ''ஸ்டாலின் - அழகிரி இவர்களில் யார் தி.மு.-வுக்குத் தலைமை ஏற்கப் பொருத்தமானவர்?''

சி.பி - அண்ணன் அழகிரி மொழி அறிவு இல்லாத நிதானம்னா என்னன்னு தெரியாத லோக்கல் ரவுடி.. தம்பி ஸ்டாலின் அண்ணன்  கமுக்கமான, அமுக்கமான ஆள்... 2 கொள்ளீல  எது பெஸ்ட் கொள்ளின்னு பார்த்தா ஸ்டாலின் தான்.. ஆனா அப்படி எந்த அசம்பாவிதமும் வராம ஏதாவது புது தலைவர்கள் வந்தா தேவலை
 ''அதுபற்றி எல்லாம் தலைவர்தான் முடிவு பண்ணணும்!''


10. ''இந்த கேரக்டரை நாம செய்திருக்கலாமேனு உங்களை யோசிக்கவைத்த கேரக்டர் எது?''  
 ''கிட்டத்தட்ட 200 படங்களில் நடிச்சாச்சு. இப்பவும் 'சின்னத் தம்பிகேரக்டர்ல நாம நடிச்சிருக்கலாமேனு யோசிச்சவங்க, யோசிக்கிறவங்கதான் நிறையப் பேர் இருக் காங்க. சமீபத்தில் மலையாளத்தில் நான் நடிச்ச 'கையப்புபட கேரக்டர்ல நடிச் சிருக்கலாமேனுகூட நிறையப் பேர் நினைச் சதா என்கிட்ட சொல்லியிருக்காங்க.
நான் தொடர்ந்து கதாநாயகியா நடிச்சிட்டு இருந்தப்ப இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா, பாலசந்தர் சாரின் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்க ஆசைப்பட்டேன்னு சொல்லிஇருப்பேன். அப்புறம் நிச்சயமா 'மௌன ராகம்ரேவதி மேடம் கேரக்டர்ல நடிச்சிருக்கணும்னு சொல்லியிருப்பேன். அமிதாப் பச்சன் நடிச்ச 'சீனி கம்படத்தில் தபு கேரக்டர் மேல எனக்குப் பொறாமையே உண்டு. அந்தப் படம் பார்த்துட்டு, திட்டித் திட்டி தபுவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன்!''       


சி.பி -  உங்களூக்கு மேட்டர் தெரியுமா? தபுவுக்கு செல் ஃபோன்ல மெசேஜ் படிக்கற பழக்கமே கிடையாதாம்.. ஸ்டார் டஸ்ட் இதழ் 1.6.2009 இதழ்ல   பேட்டி குடுத்திருக்காரு.. ஹய்யோ அய்யோ
11. ஒரு நடிகையாக நீங்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன?''


சி.பி - பெற்றது பல பாய் ஃபிரண்ட்ஸ்களை.. இழந்ததும் கழட்டி விடப்பட்ட பாய் ஃபிரண்ட்ஸ்களே ஹி ஹி 
 ''பெற்றது பேர், புகழ், பணம், குடும்பம், மரியாதை, எல்லாருடைய அன்பு. இழந்தது என்று எதுவும் இல்லை. 'நடிகையானதால் இதை இழந்துட்டேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்கும். சில நேரங்களில் பிரைவசி பாதிக்கப்படும். என் பெரிய பொண்ணு ரொம்பவே கூச்சப்படுற டைப். போட்டோவுக்கு முகம் காட்டக்கூடத் தயங்குவா. வெளியூர், வெளிநாடுகளுக்கு டூர் போனோம்னா, வளைச்சு வளைச்சு போட்டோ எடுப்பாங்க. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

 என் குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. அவங்க போட்டோக்கள் வெளியில வரக் கூடாதுனு நினைக்கிறேன். அதை இழப்புன்னு சொல்ல முடியாது. மக்களின் அதீத அன்புன்னு வேணும்னா சொல்லலாம்.''





டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது , 4வது பாகம் படிக்க 

முற்றும்

1 comments:

Yoga.S. said...

ரொம்ப நன்றி சார்!இன்னிக்கு வரைக்கும் கொண்டாந்து பேட்டிய முடிச்சுட்டீங்களே?சபாஷ்!(ச்சும்மா,நல்லாருந்திச்சு.சி.பி கமென்ட் கூட!)