Saturday, April 21, 2012

அடுத்தது - படுத்துது - திகில் பட விமர்சனம்

http://media.getcinemas.com.s3.amazonaws.com/posters/aduthathu/poster.jpg

பழசை என்னைக்கும் மறக்கக்கூடாது என்பதே டைரக்டர் தக்காளி சீனிவாசனின் கொள்கை.. அதனால அண்ணன் என்ன பண்ணுனாரு 21 வருடங்களுக்கு முன் கேப்டன் நடிச்ச த்ரில்லர் படமான நாளை உனது நாள் படத்தை கொஞ்சம் டிங்கரிங்க் பண்ணி ஒரு படத்தை ரெடி பண்ணிட்டார். 


ஓப்பனிங் ஷாட்ல அங்காடித்தெரு பட ஓப்பனிங்க் சீன் மாதிரி ஒரு சாலை விபத்து. ஒரு கார் சாலையோரம் படுத்திருக்கும் பலரது உடம்பு மேல் வண்டி ஏத்தி ஆக்சிடெண்ட் பண்ணிடுது.. அடுத்த க்ளீப்பிங்க்ல ஒரு 15 வயசுப்பெண் ரேப்  அண்ட் மர்டர்.. இந்த 2 சீனை முடிச்சதும் கதைக்கு போறாரு. 


ஒரு தனியார் டி வி சேனல் 10 பேரை செலக்ட் பண்ணுது.. அவங்க தனியா ஒரு தீவுல தங்கனும். ( 10 பேரு தங்குனா அது ஒரு கூட்டம் ஆச்சே?).. யார் பயப்படாம இருக்காங்களோ அவங்களுக்கு கையில் ஒரு லேடி பையில் பத்து கோடி பரிசு.. தீவுக்கு 10 பேரும் போனதும் பக்கத்து சீட் பாப்பா சொல்லுது.. 10 பேரும் சாகப்போறாங்க.. அதுக்கு ரீசன் தான் ஓப்பனிங்க்ல காட்டுன 2 சாவு..

அதே மாதிரி ஒவ்வொருத்தரா சாகறாங்க. 3 பேர் செத்ததும்  எதேச்சையா டி வி போட்டா அப்போதான் உண்மை தெரியுது..எல்லாம் செட்டப். அந்த தனியார் சேனல் ரெடி பண்ணுன ஆள்ங்க, இடம் வேற.. நாம எல்லாம் மாட்டிக்கிட்டோம்னு. இடைவேளை..


http://chennai365.com/wp-content/uploads/Press-Meet/Aduthathu-Press-Meet/Aduthathu-Press-Meet-Stills-044.jpg

இடைவேளைக்குப்பிறகு அவங்க என்ன செஞ்சாங்க. எப்படி தப்பிச்சாங்க என்பதே கதை. 

படத்துல தெரிஞ்ச முகங்கள் ஸ்ரீமன், வையாபுரி, ஆர்த்தி,இளவரசு .. மற்ரவர்கள் எல்லாம் புதுசு போல.. எல்லார்க்கும் வாய்ப்பு கம்மி நடிக்க.. ஒப்பேற்றும் நடிப்பு.

அது போக  4 ஃபிகருங்க. எல்லாம் 35 மார்க் வாங்கி ஜஸ்ட் பாஸ் கேஸ்ங்க.. ( கேஸ் = வகை).. எதுவும் தேறலை.

நாசர் தான்  எல்லாம் பிளான் பண்ணி பண்ர ஆள்.. ஆனா அவரை இன்னும் நல்லா யூஸ் பண்ணி இருக்கலாம். நாலை உனது நாள் படத்துல அந்த தாடிக்காரரா வர்ற சிவச்சந்திரன் கொலை செய்யப்பட்ட ஆளா வந்து இடைவேளைக்குப்பின் எழுந்து வருவது போல இதுல ஒரு ஃபிகரு.. உல்டான்னா என்ன? ஆணை பெண் ஆக்கனும் , பெண்ணை ஆண் ஆக்கனும்.. அதானே. அதை கரெக்ட்டா ஃபாலோ பண்ணி இருக்காங்க. 

 திகில் படம்னா ஒரு பயம் வரனும். எதுவும் வர்லை.. பின்னணீ இசை ரொம்பவே சுமார். தக்காளி சீனிவாசன் இளையராஜா இசை அமைச்ச நூறாவது நாள் படத்துல மொட்டை சத்யராஜ்க்கு எப்படி மியூசிக்லயே டெரர் கொடுத்தார் என்பதை பார்க்கவும்.


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgZuX25qMtZsAE3GKITSTf4kQA40N9KpzvawY-mJolQSJmkIrrBJhpOA3ZWvr6o8wm8Pd_DKYfmx3v5O8XVKUlRAquKxbbIXiS8b8yxnrtQqsZgAPui_wyLwLwxn9sp6I5sDxH89WrcBhw/s320/aduthathu-press-meet+%25287%2529.jpg
ரப்பர் பேண்டோ, க்ளிப்போ வாங்கி கூந்தலை சரி செய்யக்கூட வசதி இல்லாத அசதி ஃபிகர்ஸ்


படத்தில் மனம் கவர்ந்த வசனங்கள்


1. டியர். நான் பத்துக்குப்போறேன். 

பத்துக்குப்பத்து புரோகிராம்க்கு போறேன்னு சொல்லுங்க. ஏன் அபசகுனமா பேசறீங்க?

2.  இங்கே 10 வது டிக்கெட் நான் தான். 

 அடடே. 10 வது டிக்கெட் ஒரு டிக்கெட்டா? ஹி ஹி 


3. எதுக்குத்தேவையே இல்லாம இப்போ உளறிட்டு இருக்கீங்க?

ஆர்த்தி - இப்படி பட படன்னு பேசுனாத்தான் டி வி ல காட்டுவாங்கன்னு சொன்னாங்க. 


4. ஹி ஹி எனது உங்களூக்கு 24 வயசு தானா? 24 வயசுக்கு இந்த வளர்ச்சி ஜாஸ்தி தான்.


5. இட்லி, தோசையே பார்த்து போர் அடிச்சுடுச்சு.

 உங்க ஆசைக்கு இதோ ஆப்பம் வருது பாருங்க. 


6. சமையல் ரெடியா?

 விசில் வரனும்.. 

 உய்ய் உய்ய் உய்ய் 

 ஹலோ.. குக்கர்ல இருந்து வரனும்.. 


7. உன்னை மாதிரி பாய்ஸ்க்கு வெட்கமே வராதா?


 பொண்ணுங்க தான் வெட்கப்படனும். நாங்க ஏன் வெட்கப்படனும்?

8. மிஸ்.. உங்க ரூம்க்கு உள்ளே நான் வரலாமா?

வெட்டிடுவேன்.. 

 அய்யய்யோ, இருக்கறதே ஒண்ணுதான்.. அதையும் வெட்டிட்டா நான் என்ன பண்றது?


9.  போருக்கு முடிவு உண்டு, போராட்டத்துக்கு முடிவு இல்லை10. நான் எதையும் தனியா தான் அனுபவிப்பேன். எதையும் ஷேர் பண்ணிக்க மாட்டேன்.. ( தனியாதான் அனுபவிப்பீங்களா? அப்போ ஹனிமூன் போனா தனிமூன் ஆக்கிடுவீங்களா?)

http://www.top10cinema.com/dataimages/12389/15-08-2011-12389-1-3.jpg


இயக்குநரிடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  ஓபனிங்க் ஷாட் கார் விபத்துல அந்தக்கார் எல்லாரோட கால் மேல தான் ஏறுது. அதுவும் கெண்டைக்கால்ல .. அது தெளிவா தெரியுது.. ஆனா எல்லாரும் இறக்கறதா வசனத்துல வருது.. எப்படி?


2. டி வி சேனல் செலக்‌ஷன் ஒரு டிராமா என்பது ரொம்ப ஈசியா தெரியுதே. எப்படின்னா அந்த புரோகிராம் பற்றி டி வி ல எதுவும் சொல்லலை. அந்த 10 பேர்ல யாருமே அது பற்றி கேட்கலையா?


3. ஆக்சிடெண்ட் பண்ண ஃபிகரு தெரியாம தான் அதை பண்ணுது. ஆனா அடுத்த சீன்ல யே 3 அடியாளூங்களை பக்கத்துல வெச்சிருக்கு.. அவங்க எல்லாம்  13 வருஷமா குளிக்காம, கட்டிங்க், ஷேவிங்க் பண்ணாம இருக்கானுங்க.. அவனுங்களை இந்த பாப்பா ஏன் வெச்சிருக்கு?( சிங்கிள் மீனிங்க் தான்)

4. ஆக்சிடெண்ட்டை பார்த்த 15  வயசுப்பெண்ணை மிரட்டி வைக்கலாம், அல்லது கொலை பண்ணலாம்.. எதுக்கு அடியளூங்களை விட்டு ரேப் பண்ணி கொலை பண்ணச்சொல்லுது?’ அதோட மட்டும் இல்லாம வேடிக்கை  வேற பார்க்குது அந்த பாப்பா.. அந்த அடியாளூங்க.. மேடம் உங்களை ஒரு டைம் ரேப் பண்ணிக்கவா?ன்னு சான்ஸ் கேட்க மாட்டாங்களா? ஹி ஹி 

5. அடியாளூங்க ரேப் பண்ற சீன்ல டைரக்‌ஷன் டச்சா அந்த பாப்பா ஆப்பிளை ஒரு கடி கடிக்குது.. அதாவது ஒரு கடி கடிச்சா ஒருத்தன் அந்த பெண்ணை ரேப்பிட்டானாம்.. ஓக்கே அப்போ லாஜிக் படி 3 கடிதானே கடிக்கனும்? பாப்பா 2 கடிதான் கடிக்குது.. ஹி ஹி


http://img.bollywoodsargam.com/albumsbolly/Aduthathu_Movie/Aduthathu_Movie_BollywoodSargam_hot_764562.jpg

6.கதைல ஒரு சுவராஸ்யம் வரனும்னா  அந்த  10 பேருல அட்லீஸ்ட் 2 லவ் ஜோடியையாவது காட்டனும்... அவங்க காட்டு காட்டுன்னு காட்டுவாங்க.. இத்தனைக்கும்  படத்துல 5 ஃபிகர்ஸ் இருந்தும் நோ யூஸ் டூ ஆடியன்ஸ்.. ஒன்லி யூஸ் டூ டைரக்டர்ஸ் அண்ட் புரொடியூசர்ஸ் ஹி ஹி

7. எப்பவும் இந்த மாதிரி கதைல ஒரு பிடிப்பு வரனும்னா அந்த 10 பேரை பற்றி அல்லது அவங்களூக்கு தனித்தனி சீன் வைக்கனும்.. மக்கள் மனசுல அவங்க கேரக்டரை பதிய வைக்க.. ( பயணம் படத்துல வந்த மாதிரி) அதெல்லாம் இல்லாம அவங்க பாட்டுக்கு வர்றாங்க, சாகறாங்கன்னு காடுனா நம்ம ஆளுங்க பதட்டமே படலை.. சாகட்டும்.. அடுத்து யாரு?ன்னு அசால்ட்டா கேட்கறான்..

8. ராவணன் சிலைல 10 தலை இருப்பதும்  ஒவ்வொரு  கொலை நடக்கறப்ப ஒரு தலை அதுல கட் ஆகறதும்  நல்ல ஐடியா தான்.. ஆனா எடுத்த விதம் சரி இல்லை.. இன்னும் டெம்ப்போ ஏத்தனும்.. அந்த லேடி கொலை பண்ணிட்டு இருக்கவே நேரம் சரியா இருக்கும்.. பொழப்பைக்கெடுத்துக்கிட்டு வந்து இந்த சிலையை வந்து தலையை கட் பண்ணிட்டு இருக்குமா?

9. கொலை செய்யப்பட்ட அந்த 15 வயசுப்பெண் ஆவியா ஒரு சீன்ல வர்ற மாதிரி காட்றாங்க.. ஆனா அது ரேப்பரோட ( ரேப் செய்த ஆள் ரேப்பர்) மனப்பிராந்தியாவோ மன விஸ்கியாவோ காட்ட டைரக்டர் நினைச்சிருக்கார் போல.. அது தெளீவா இல்லை./.


10. சன் டி வி மாதிரி ஒரு பிரபல தொலைக்காட்சி நிறுவனத்துல பணி புரியும்  காம்ப்பியர் லேடி மட்டும் நினைச்சா இவ்லவ் பெரிய தில்லு முல்லு எல்லாம் பண்ணவே முடியாது.. அதுக்கு பெரிய டீம் ஒர்க் வேணும்.. ஆனா சிம்ப்பிளா அந்த ஒரே ஒரு பெண் மட்டும் மோசடி செய்யறதா காட்டறது நம்பறமாதிரி இல்லை


https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEg1-mok-uEpocOyXAv8HYCOCqA3oxDUo5TrouUDcdzFSsgC1MHZfFl4o_y2ccimjj_OEkKg98AE6YJu5noGDvRtCFk-yu-hhjQYTz9TEzEc9f5880PebWSwBKbyvkoyPWMKS-zy7Pa1Smg6/s1600/aduthathu+_31_.jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 37

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் - நாளை உனது நாள் பார்க்காத திகில் பட ரசிகர்கள்  டி வி ல இந்தப்படத்தை போட்டா பார்க்கலாம் 
 
 
 ஈரோடு ஸ்ரீ லட்சுமியில் பயந்துக்கிட்டே படம் பார்த்தேன்.. ஏன்னா என் கூட தியேட்டர்ல 7 பேர்தான் இருந்தாங்க அவ்வ்வ்வ்


4 comments:

Prem S said...

ஏழு பேருடன் திகில் ? படத்தை பார்த்த உங்கள் தில்லுக்கு வாழ்த்துக்கள்

Unknown said...

சித்தப்பு...! வெட்டிடுவேன் இருக்கிறதே ஒன்னுதான் வசனம் இங்க சென்சார் கட்..ஈரோட்டுல மட்டும் எப்படி.....?

Yoga.S. said...

வீடு சுரேஸ்குமார் said...

சித்தப்பு...! வெட்டிடுவேன் இருக்கிறதே ஒன்னுதான் வசனம் இங்க சென்சார் கட்..ஈரோட்டுல மட்டும் எப்படி.....?///இத்தப் பார்றா!!!!அதான் ஏழு பேரோட பாத்தேன்னு சொல்லுறாரில்ல????

ராஜி said...

டிவில போட்டாலாவது படம் பார்க்கலாமா?!