Wednesday, April 25, 2012

நாளைய இயக்குநர் 22.4.2012 - விமர்சனம்

கே பாக்யராஜ் நடுவரா  அல்லது ஜட்ஜா இருந்த டைம்ல அவர் டி எம் கே ல இருந்தாரு.. அவர் அம்மா கட்சிக்கு வரப்போறார்னு பேச்சு அடிப்பட்ட அடுத்த நாளே விக்ரமன் , வெற்றி மாறன் கூட்டணி.. இப்போ மறுபடி சுந்தர் சி உள்ளே வந்துட்டாரு.. சுந்தர் சி எப்பவும் சிரிச்ச முகம், வெற்றி மாறன் கடு கடு முகம்.. ஹூம்.. 


1. குறும்பட இயக்குநர் பெயர் - அஸ்வத்  - குறும்படத்தின் பெயர் - குழந்தையின் வயது 75

டைட்டிலை பார்த்ததுமே செண்ட்டிமெண்ட்ல பிழியப்போறாங்கனு நினைச்சேன்.. 100% சரி.. ஒரு அப்பா, பையன் நடுவில் உள்ள தவமாய் தவமிருந்த உறவு பற்றிய கதை.. படம் ஃபுல்லா 2 பேர் உரையாடல்லயே முடிஞ்சுடுது.. 

அப்பாவும், பையனும் லொட லொடனு பேசிட்டே இருக்காங்க.. அப்பா பேச்சு வாக்குல அது என்ன?னு கேட்கறார்.. பையன் சொல்றான் - அது அணில்ப்பா.. 
மறுபடி அதே கேள்வி.. மகன் அதே பதில். இந்த மாதிரி 4 டைம் ரிப்பீட் ஆனதும் பையன் கடுப்பாகி ஏன்பா திருப்பு திருப்பி கேட்கறீங்க?ங்கறார்.. அப்பா உடனே ஃபிளாஸ் பேக் சொல்றார்.. பழைய டைரி எடுத்து அதுல ஒரு பேஜ் படிக்க சொல்றார்.. அதுல பையன் 20 டைம் மாடு இருக்கறதை காட்டி அது என்னப்பா? என கேட்பதும், அப்பா அதற்கு சலிக்காமல் பதில் சொல்வதும் அதுல பதிவு பண்ணப்பட்டிருக்கு.. 

 மகன் அதை கேட்டு கண் கலங்கறான்.. அதாவது நம் பெற்றோர்கள் நாம குழந்தைகளா இருந்தப்போ காட்டுன அக்கறையை, பொறுமையை நாம் நம் பெற்றோர்களிடம் காட்டுவதில்லை என்ற கரு.. க்ளைமாக்ஸ்ல அந்த பையனின் மகள் அதே போல் லவ் பேர்ட்ஸ் கூண்டை காட்டி அது என்ன ? என 2 முறை கேட்க அவன் பொறுமையா  பறவை என்கிறான்..


இயக்குநரிடம் சில கேள்விகள்

1. அப்பா அந்த டைரியை எடுத்து டிசம்பர் 31 ஆம் பக்கம் எடுத்து படி என்கிறார்.. ஆனால் பையன் டைரியின் கடைசி பக்கம் பார்க்காமல் முதல் 25 வது பக்கம் பார்க்கிறான்

2. அப்பா 1985 ஆம் வருஷ டைரியை எடுன்னு சொன்னதும் பையன் உள்ளே போய் தேடி எடுக்காமல் ரெடியாக டக் என்று அவர் தலை மாட்டில் இருந்து எடுக்கிறான்

3.  அப்பாவின் நடிப்பு இயல்பாக இருந்தாலும் மகன் கேரக்டர் செயற்கையான நடிப்பு + சிரிப்பு. நாடகம் பார்ப்பது போல்.. இருக்கு

 இப்படி சில குறைகள் இருந்தாலும் இது ஒரு நல்ல படமே.. ஆனா ஜட்ஜ்ங்க  2 பேரும் இந்த படத்தை குறை தான் சொன்னாங்க..


2.குறும்பட இயக்குநர் பெயர் - ஸ்ரீ கணேஷ் - குறும்படத்தின் பெயர் - டைம் அவுட்.


அசோகமித்திரன் எழுதுன சிறுகதையான காலமும் 5 குழந்தைகளும் தான் இந்த கதைக்கு இன்ஸ்பிரேஷன்.. எதைத்தொட்டாலும் துலங்காத ஒரு அதிர்ஷ்டம் இல்லாதவனைப்பற்றிய ஜாலியான நகைச்சுவைக்கதை.. 

கதையை சொல்றதுக்குப்பதிலா மனம் கவர்ந்த வசனங்கள் சொன்னாலே ஓரளவு கதை புரிஞ்சுடும்1. ஆட்டோ.. அடையாறு போகனும்.. வர்றீயா? நான் மவுண்ட்ரோடு தான் போறேன்.. அங்கே வேணா வர்றியா?


2.  தலைவரே.. எப்படியாவது எனக்கு இந்த வேலையை வாங்கிக்கொடுத்துடுங்க.. 

 போலி எம் எல் ஏ - கவலையே படாதே. பணம் கொடுத்தாச்சு இல்ல? நீ தான் அடுத்த வி ஏ ஓ.. ஆமா ஏய்யா பி ஏ.. வி ஏ ஓ அப்படின்னா என்ன?


3. ஒரு 5 நிமிஷம் இந்த உலகம் சுத்தறதை நிறுத்திட்டு ரெஸ்ட் எடுத்தா என்ன?எப்போ பாரு பரப்பாவே இருக்கே..?ரெஸ்ட் எடுக்கவே மாட்டாங்களா?

4.  எங்கே ஓடறோம்? ஏன் ஓடறோம்? எவ்ளவ் தூரம் ஓடறோம்..? எதுவும் தெரியலை. திரும்பிப்பார்த்தா டோட்டல் வோர்ல்டும் ஓடிட்டே இருக்கு.. 


5. யோவ்.. ஆட்டோ சீக்கிரம் போய்யா. 

 இருங்க.. ஒரு சவ ஊர்வலம்..

 அடடா.. யோவ்.. ஒரு 5 நிமிஷம் லேட்டா செத்திருக்கக்கூடாதா?


6.  ஜோசியரே. என் எதிர்காலம் எப்படி இருக்கும்?

 10 வருஷம் நாய் படாத பாடு படுவீங்க.. 

 அதுக்குப்பிறகு என் நேரம் நல்லாருக்குமா?

 ம்ஹூம், அதுக்குப்பிறகு அது பழகிப்போயிடும்


படத்தோட ஹீரோ கடவுளையே ஒரு டைம் நேர்ல சந்திச்சும் அவனுக்கு அது யூஸ் இல்லாம போயிடுது அப்டிங்கற மாதிரி கொண்டு போனாங்க..

 இந்தப்படத்துக்கு இயக்குநர் எடுத்துக்கிட்ட முயற்சிகள், உழைப்பு பிரம்மிக்க வைத்தது.. 89 கட் ஷாட்ஸ்..  120 கேமிரா ஆங்கிள்ஸ்

உழைப்பு வீண்போகலை.. இந்த வாரத்துக்கான பெஸ்ட் ஃபிலிம், பெஸ்ட் ஆக்டிங்க், பெஸ்ட் கேமரா மேன் என 3 விருதும் ஒரே படமே வாங்குனது 10 மாதங்களூக்குப்பின் இதுவே முதல் முறை


3. குறும்பட இயக்குநர் பெயர் - ஷபி   குறும்படத்தின் பெயர் - இருட்டு


எனக்கு பேய், பிசாசுல நம்பிக்கை இல்லைன்னாலும் அந்த மாதிரி ஹாரர் ஃபிலிம்ஸை ரொம்ப ரசிப்பேன்.. த்ரில்லர் ஃபிலிம், ஹாரர் ஃபிலிம், காமெடி ஃபிலிம் இந்த 3 ம் தான் என் சாய்ஸ்.. ( கில்மா ஃபிலிம்? பப்ளிக் பப்ளிக்)

ஒரு கிராமம்.. அதுல ஆவி இருக்கறதா சொல்லப்படும்  வலையல் காரி வீட்டில் தங்குனா பரிசுன்னு ஒரு பந்தயம்.. 4 ஃபிரண்ட்ஸ் போய் தங்கறாங்க.. நைட் ஃபுல்லா எதுவும் ஆகலை.. விடிஞ்சதும்  அந்த 4 பேர்ல ஒருத்தன் ஒரு இடத்துல விழுந்து கிடக்கறான்.. அவனை விசாரிச்சா அவன் நைட்ல இருந்து அங்கே தான் மயங்கி இருக்கான்னு சொல்றான்.. அப்போ நைட் பூரா அவங்க கூட இருந்தது, பேசுனது எல்லாம் அந்த பெண் பேய் தான் அதுவும் அந்த நண்பன் ரூபத்துல.. உடனே பயந்து போய் அவனை அம்போன்னு அங்கேயே விட்டுட்டு ஓடிடறாங்க..


இயக்குநரிடம் சில கேள்விகள்


1.  பேய் தான் வெளில போயிடுச்சு././ இப்போ இவங்க பார்த்தது அவங்க நண்பனைத்தானே..? ஏன் பயந்து ஓடறாங்க?

2. நைட் பூரா நண்பர்களுடன் ஆண் வேடத்தில் இருந்த பெண் பேய் சாதிச்சது என்ன? ஒரு கொலை இல்லை, ஒரு ரேப் இல்லை.. சும்மா கடலை ஒன்லி??


3. இந்தக்கதையின் மூலம் நீங்க என்ன சொல்ல வர்றீங்க? பேய்கள் யாரையும் கொல்லாதுன்னா?

 மனம் கவர்ந்த வசனங்கள்


1.  இந்தக்காலத்துலயும் பேய், பிசாசு எல்லாம் இருக்கா?

 ஏன்? சாவு நடந்துட்டுத்தானே இருக்கு?


2. செயினைக்காணோம்டா..

 இங்கே எங்கேயும் இருக்காதுடா.. நாம முதல்ல இங்கே இருந்து கிளம்பலாம்.. அங்கே போய் தேடிக்கலாம்..6 comments:

Unknown said...

send it to concerned persons via the channel. it will be much useful. good work

Anonymous said...

ஒன்னையும் விடாம விமர்சிக்கிறீங்க...சோ-2 -:)

Kannan Devadass said...

Muthal la sonna kurumpadam (kuzhanthaiyin vayathu 75) actual-a oru piramozhi (italy-o spanosh-o theriyala) padathin climax nnu recent-a oru blog la padichatha gnabakam.
(vada poche....!)

தர்ஷன் said...

பாஸ் வர வர குறும்படத்தையும் காப்பி பண்ண ஆரம்பிச்சிட்டாங்க போல இருக்கு, நீங்க சொன்ன முத படத்தின் ஒரிஜினல் லிங்க் கீழே

http://www.youtube.com/watch?v=mNK6h1dfy2o

MANO நாஞ்சில் மனோ said...

டேய் மூதேவி இன்னைக்கு என் கூடதானேடா இருந்தே ராஸ்கல் அதுக்குள்ளே எப்பிடிடா பதிவை போட்டே கொய்யால...

”தளிர் சுரேஷ்” said...

அழகான விமரிசனங்கள்! பாராட்டுக்கள்!