Wednesday, April 04, 2012

வாராய் என் தோழி வாராயோ!நாட்டைக்குட்டிச்சுவர் பண்ண ஐடியா தாராயோ!‎''இந்த பொழப்பு பொழைக்கறதுக்கு இவரு கேரளாவுல அடி மாடா போகலாம்''

1.ஊருக்கே பிக் ஷாட்டா இருக்கற மிஸ்டர் ராஜா ( ஆ ராசா அல்ல)வை ஏன் பெரும்”புள்ளி ராஜா”-ன்னு கூப்பிடக்கூடாது?


----------------------------------


2. டியர், நாளைக்கு காலேஜ் கட் அடிக்கலாமா? 

சீரியஸாவா சொல்றீங்க? 

இல்லை, சிரிச்சுக்கிட்டேதான் சொல்றேன் :) 


---------------------------------


3. லவ் பண்ற ஃபிகருங்க செல்போன்ல பேசி நடக்க தொடங்கிட்டா எதிர்ல அவளோட எந்தக் காதலன் வந்தாலும் கண்ணுக்கு தெரியாது போல ! # எ கீ


--------------------------------------


4. மனைவி ஊருக்குப் போயிருக்கையில் அவள் நியமித்த கண்காணிப்பு ஏஜெண்ட்கள் என்னை நல்லவனாய் வைத்திருக்கிறார்கள் # எ கீ--------------------------------

5. புதிதாய் பணியில் சேரும் ஊழியர்கள் நிறுவனத்தில் முதல் ஒரு வருடமும், புதிதாக மணம் ஆனவர்கள் முதல் 3 மாதங்கள் நன்கு உழைப்பார்கள்


------------------------------
 
சுவர் புகைப்படங்கள்

வறுமை காரணமாக , வில்வித்தை வீராங்கனை நிஷா ராணி தத்தா, உலகத்தரம் வாய்ந்த தனது "வில்லை' விற்ற சம்பவம் அதிர்ச்சியை

ஏற்படுத்தியுள்ளது. இது துரதிருஷ்டவசமானது என, விளையாட்டு அமைச்சர் அஜய் மேகன் தெரிவித்தார்.

6.ஜெ சீரியல்களில் நடித்திருந்தால் பெண்களை மட்டும் அழ வைத்திருப்பார், இப்போ அரசியலில் இருப்பதால் தான் மொத்த தமிழ்நாட்டையே அழ வைக்கிறார்


-----------------------------------

7.துடை என்பது வினைச்சொல்லா? பெயர்ச்சொல்லா? 


 அது சரியா தெரிலைங்க.. ஆனா தொடை என்பது வினையை ஏற்படுத்தும் சொல் பை ரம்பா ரசிகன்

------------------------------------

8.ஆஞ்சநேயனை விரட்டியடித்த அனன்யா குடும்பத்தினர்...! # அடடா.. வடை போச்சே!! ஆஞ்சநேயர் புலம்பல்.


--------------------------------

9. முருகா! வள்ளி உன் 2 வது சம்சாரம் தானே? ஏன் வள்ளி தெய்வானைன்னு எல்லாரும் சொல்றாங்க? 


பக்தா! லேட்டஸ்ட்டா யாரை செட் பண்றமோ அந்த பேரு முதல்ல 


---------------------------------

10. டாக்டர், போதைல இருந்து மீள நான் என்ன பண்ணனும்? 


தம்பி.. இது டாஸ்மாக்.. சரக்கு அடிக்கறப்ப மூடு அவுட் பண்ணாதே, கிளினிக் வா, பேசிக்கலாம் 


--------------------------------------11 நையாண்டி -பஸ்ஸில் ஜன்னலோர பயணம்;பல பிரச்சனைகளை வீசிவிடுகிறேன்! # அட , நல்ல ஐடியாவா இருக்கே,சங்கட சம்சாரத்துடன் பயணம் செய்வோர்.கவனத்துக்கு


-----------------------------------


12. ஒல்லியா இருக்கிறவங்க எதுக்கு வாக்கிங் போவணும்? 


உடல் ஆரோக்கியத்தில் இன்னும் கில்லியா ஆக.

---------------------------

13. ஒசாமாவின் மனைவிகளை நாடு கடத்துவதுபோல் நயன் தாராவின் காதலர்களையும் நாடு கடத்த ஆலோசனை - ஜெ அறிவிப்பு


--------------------------


14. நான் எப்போதும் விசுவாசமாய்த்தான் இருப்பேன், ஆனா வருஷா வருஷம் வாடகை வீட்டை மட்டும் மாத்திக்குவேன் ஹி ஹி - 9 தாரா


---------------------------------

15. எண்ட்ரி என பில்டப் கொடுத்து உள்ளே வருபவர்கள் ( ஹீரோக்கள்) போறப்ப டிஸ் எண்ட்ரி என்பார்களா? நோ எண்ட்ரி என்பார்களா? ஹி ஹி


------------------------------------


Low hip jeans! Fashion freak donkey! ;)


16. சில ஜிகிடிங்களுக்கு லிப்ஸ்டிக்தான் பியூட்டி.ஆனா பசங்களுக்கு அதை அழிக்கறதுதான் டியூட்டி, சோ (so) கிஸ் அடிப்போம், கிளுகிளுப்பாய் இருப்போம்


------------------------------------

17. வாராய் என் தோழி வாராயோ!நாட்டைக்குட்டிச்சுவர் பண்ண ஐடியா தாராயோ!என்னைத்தவிர வேறு யார் கூடவும் நீ சேராயோ -ஜெ

--------------------------

18. காதலி -வாழ்ந்தா ஒண்னா வாழ்வோம், இல்லைன்னா சேர்ந்தே சாவோம்


 வாங்க


 காதலன் - நீ முன்னால போனா நான் பின்னால ( 20 வருஷம் கழிச்சு) வாரேன்


--------------------------------------

19. அரட்டை -சாஃப்ட்வேர் துறை ஃபிகர்ஸ் செமயா இருக்காங்களே?


பரட்டை - திருப்பூர் பனியன் கம்பெனில ஆல் @டு ஃபிகர்ஸ்

-----------------------------------

20. அத்தான், என்னை ஆஃபீஸ்ல டிராப் பண்றேன்னு சொல்லிட்டு s ஆகிட்டீங்களே? ஏன்?


 நீ வெச்ச ரசம் சாப்பிட்டு என் எண்ணத்தை டிராப் பண்ணிட்டேன்


-----------------------------------------


10 comments:

Nirosh said...

கலக்கல் பாஸ்..!
ஹீ ஹீ நாங்கதான் ஒண்ணு அடிப்பதில...!
ஐயோ சாரி ஒன்னுக்கு அடிப்பதில இல்லை.. ஒண்ணாவது காமண்ட் அடிப்பதில் என சொல்ல வந்தேன்...:)

குரங்குபெடல் said...

வில் வித்தை . .

IPL ஒப்பீடு தகவல் அதிர்ச்சியை

உண்டு பண்ணிடுச்சு தம்பி

பகிர்வுக்கு நன்றி

Unknown said...

என்ன கொடுமைய்யா..ஒரு பக்கம் கோடி கோடி கோடியா கொட்டுறாங்க..இன்னொரு பக்கம் இப்படி!

ராஜி said...

இன்னிக்கு ட்வீட்லாம் செம கலக்கல்.

ராஜி said...

ஜெ சீரியல்களில் நடித்திருந்தால் பெண்களை மட்டும் அழ வைத்திருப்பார், இப்போ அரசியலில் இருப்பதால் தான் மொத்த தமிழ்நாட்டையே அழ வைக்கிறார்
>>
நல்லா சொன்னீங்க

R. Jagannathan said...

உங்கள் sharp and quick-witted comments க்கு நான் பெரிய விசிறி! பல கம்மெண்ட்டுகள் ரொம்ப இண்டெலிஜெண்ட்டாகவும் இருக்கின்றன.

இந்த தொகுப்பில்,

நம்பர் 8ம் 18ம் சுபர்ப்!

நம்.13:- 9 தாராவை நாடுகடத்தினால், பல குடும்பங்கள் வாழ்த்தும். அடுத்து யார் ‘முதல் மனைவி’ ஆகப்போகிறாரோ?

-ஜெ.

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!(3)மூணு,(4)நாலு,(5)ஐஞ்சு ஏலவே உங்க போஸ்ட்டுல வந்தது தான்,ஹ!ஹ!ஹா!:!!!!

Unknown said...

நிஷா ராணி தத்தாவின் நிலை உண்மையிலேயே வருத்தம் தருவதாக இருக்கிறது. இப்போதைய ஐபிஎல் பகட்டு ஒளியில் இன்னும் எத்தனைப் பேர் தொலையப்போகிறார்களோ?

Unknown said...

வேதனை அளிக்கிறது

மன்மதகுஞ்சு said...

ஜிகிடி ,கிஸ் மேட்டர் செம கலக்கல், இப்பொவெல்லாம் கருத்துள்ள படங்கள் போடுரீங்கலே ஏன் ? உங்கள் பிராண்டை இழந்துவிடாதீர்கள்,நெக்ஸ்ட் டைம் ஜபில் சியர்ச் லீடர்ஸ் போட்டோக்களை எதிர்பாத்து அண்னனின் விழுது