Saturday, March 31, 2012

ஜெயா டி வி ஜாக்பாட் ஜாக்கெட்ஸ் ஒரு தரம் 2 தரம் 3 தரம் - குஷ்பூ பேட்டி காமெடி கும்மி
 1. ''சினிமாவில் மார்க்கெட் போன பின்னர்தான், நடிகர் - நடிகைகள் அரசியலில் அடி எடுத்துவைக்கிறார்கள் என்கிற பொதுவான குற்றச்சாட்டு குறித்து?''


சி.பி - விஜயசாந்தி, ரோஜா இவங்க வேணா அப்படி இருக்கலாம், ஆனா குஷ்புக்கு இன்னும் மார்க்கெட் இருக்கே?  ''புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். மார்க்கெட் போன பிறகா அரசியலுக்கு வந்தாங்க? இல்லையே! அரசியல்ல பொறுப்புகளும் பதவியும் என்ன சும்மாவா கிடைக்குது இப்படி ஒரு தப்பான கண்ணோட்டம் உடைய எல்லாரும் அந்த எண்ணத்தை மாத்திக்கணும்!''

 சி.பி - கலைஞர் கட்சில இருந்துகிட்டே எம் ஜி ஆர் பற்றி பேசறீங்களே? உங்க கட்சில இருக்கற எத்தனையோ நடிக நடிகைகள் பற்றி சொல்லி இருக்கலாம். ஒரு முன் உதாரணத்துக்கும் சரி.. ஓட்டுக்கும் சரி, எம் ஜிஆர் எல்லாருக்கும் தேவைப்படுது


2. ''தி.மு.-வில் ஸ்டாலின் ஆசியோடுதான் நீங்கள் விறுவிறு வளர்ச்சி அடைந்துவருகிறீர்கள்என்று கொதிக்கும் எங்களைப் போன்ற அடிமட்டத் தொண்டர்களின் வேதனை உங்களுக்குப் புரியவாவது செய்கிறதா திருமதி குஷ்பு அவர்களே?''


சி.பி - குஷ்பூவோட வளர்ச்சிக்கும், ஸ்டாலினுக்கும் என்னய்யா சம்பந்தம்? ஹி ஹி 

 
 ''தளபதி என்னை எப்ப ஆசீர்வாதம் பண்ணினார், அவர்கிட்ட நான் எப்ப ஆசீர் வாதம் வாங்கப் போனேன்? நீங்க தி.மு.. தொண்டர்னு வேற சொல்றீங்க? ஒரு தி.மு.-காரரா இப்படிப் பேச நீங்கவெட்கப் படணும் . சரி, கட்சியில் நான் என்ன வளர்ச்சி அடைஞ்சிருக்கேன்னு கொஞ்சம் விளக்கமா சொல்லுங்களேன். அடிப்படைத் தொண்டரா இருக்கேன். அவ்வளவுதானே? மேடையில் பேசுறதுக்கு நான் பொருத்தமான ஆள்னு தலைவர் நினைக்கிறார்.


 ஒரு நடிகை என்ற முறையில் கூட்டம் வரும். அப்படி வரும் தொண்டர்களிடம் கட்சியின் கொள்கை, அரசின் மக்கள் விரோதப்போக்கு, சர்வாதிகாரம்னு நிறைய விஷயங்கள் போய்ச் சேரும்னு கட்சியில் நினைக்கிறாங்க. அவ்வளவுதான். நான் கட்சியில் சேர்ந்ததுமே பெரிய பதவி யைத் தூக்கிக் கொடுத்திருந்தா, நீங்க சொல்றதை ஏத்துட்டு இருக்கலாம். அப்படி எதுவும் நடந்ததா என்ன?''


சி.பி - அப்படி எதுவும் நடக்காதா?ங்கற நப்பாசைல தான்  மேடம் பிட்டை போட்டு பார்த்தாங்க.. இதுவரை நடக்கலை.. ஹி ஹி 

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families/Kushboo_Sundar%20C_Family.jpg

3. ''சினிமா, அரசியலில் பேர், புகழ் எல்லாம் சம்பாதித்துவிட்டீர்கள். ஆனாலும், இந்நாள் வரை உங்கள் நிறைவேறாத ஆசை என்ன?''

 ''நம்புவீங்களா? சென்னையில் மின்சார டிரெயின்ல வாசல்ல நின்னுக்கிட்டு காத்துல முடி பறக்க டிராவல் பண்ணணும்னு ஆசை. ஆனா, அது நிறைவேறுவதற்கான சந்தர்ப்பம் வரவே இல்லை. 'நகரம்படத்தின் ஷூட்டிங் பறக்கும் டிரெயின்ல நடந்தப்ப 'அட... நம்ம ஆசை நிறைவேறப்போகுதுனு சந்தோஷமா ஸ்பாட்டுக்குப் போயிட்டேன்


 ராத்திரி முழுக்க ஷூட்டிங். டிரெயின்ல ஏறி ஜன்னல் சீட்ல உக்காந்துக்கிட்டேன். டிரெயின் ஸ்டேஷனைத் தாண்டி அரை கிலோ மீட்டர் போகும். மறுபடி திரும்ப ஸ்டேஷனுக்கே ஓட்டிட்டு வந்திருவாங்க. இப்படியே ரெண்டு மூணு மணி நேரம் பண்ணிட்டு இருந்தாங்க. 'யப்பா... ரெண்டு மூணு ஸ்டேஷனைத் தாண்டியாச்சும் டிரெயினை ஓட்டிட்டுப் போங்கனு சுந்தர்கிட்ட சொன்னேன்


 ம்ஹும்... சார் மசியலை. 'ஷூட் பண்ண வந்திருக்கோமா... உனக்கு ஊர் சுத்திக்காட்ட வந்திருக்கோமா?’னு சிரிச்சுக்கிட்டே கேட்டார். நான் வெறுத்துப்போய் வீட்டுக்கு வந்து தூங்கிட்டேன். அன்னைக்கு ராத்திரி பறக்கும் டிரெயினை நானே ஓட்டிட்டுப் போற மாதிரி கனவு வந்தது. 'ம்க்கும்... டிரெயின்ல உக்காந்துகூடப் போக முடியலையாம்... இதுல இது ஒண்ணுதான் குறைச்சல்னு மறு நாள் எனக்கு நானே சிரிச்சுக்கிட்டேன்!''
4. ''உங்களுக்கும் நடிகர் கார்த்திக்குக் குமான ரிலேஷன்ஷிப் ரொம்ப ஸ்பெஷல்னு சொல்றாங்களே... அப்படி என்ன ஸ்பெஷல்?''  


சி.பி - தமிழனோட ஸ்பெஷாலிட்டி என்னன்னா  படத்தை முதல்லியே தனியா போய் பார்த்திருப்பான்.. ஆனாலும் படம் பார்த்தவன் கிட்டே கதை கேப்பான்.. ஹி ஹி 

 ''தமிழ் சினிமாவில் அறிமுகமாகறதுக்கு முன்னாடி இருந்தே கார்த்திக்கை எனக்குத் தெரியும். நான் சோழா ஷெரட்டன் ஹெல்த் கிளப்புக்குப் போவேன். கார்த்திக்கும் அங்க வருவார். அப்ப இருந்தே அவர் எனக்குப் பழக்கம். 'வருஷம் 16’ சேர்ந்து நடிச்சப்ப எங்க ஃப்ரெண்ட்ஷிப் இன்னும் இறுக்கமாச்சு


சி.பி - ஹி ஹி ஹி நெருக்கம் ஆச்சு.. இறுக்கம் ஆச்சு.. 


 அந்தப் படத்துக்கு அப்புறம் ரெண்டு வருஷம் நாங்க சேர்ந்து நடிக்கலை. அப்புறம் 'கிழக்கு வாசல்பண்ணும்போது எனக்கும் அவருக்கும் முட்டிக்கிச்சு. பெரிய சண்டை. 'இனி, உன்கூடப் படமே பண்ண மாட்டேன்னு அவரும், 'நீ நடிக்கிறேன்னா, நான் அந்தப் பட வாய்ப்பையே வேண்டாம்னு சொல்லிடுவேன்னு நானும் சொல்லிட்டுப் பிரிஞ்சிட் டோம்.  


அப்புறம் முழுசா மூணு வருஷம் நாங்க ஒரு வார்த்தைகூடப் பேசிக்கலை. மூணு வருஷ இடைவேளைக்கு அப்புறம் சேர்ந்து நடிச்ச படம்தான் 'விக்னேஷ்வர்’. அப்புறம் திரும்பவும் திக் ஃப்ரெண்ட்ஸ் ஆகிட்டோம். அப்போதிருந்து ஏதாவது ஒரு பிரச்னைன்னா, ரெண்டு பேரும்தான் ஒருத்தருக்கு ஒருத்தர் சப்போர்ட் பண்ணிக்குவோம்.


கார்த்திக், சுந்தர்கூட 'உள்ளத்தை அள்ளித் தாபடம் பண்ணிட்டு இருந்த சமயம். அப்போதான் நான் சுந்தர்கூட லவ்ல இருந்தேன். ஊட்டியில் அந்தப் பட ஷூட்டிங் நடந்துட்டு இருந்தப்ப, நானும்  ஊட்டியில் ஒரு மலையாளப் பட ஷூட்டிங்கில் இருந்தேன். அப்ப சுந்தர்கிட்ட, 'இந்தப்பொண்ணை நீ கல்யாணம் பண்ணிக்கிட்டா, உன் வாழ்க்கை அவ்வளவு அருமையா இருக்கும். நல்ல பொண்ணு. இவளை ஏமாத்தணும்னு நினைச்சா, நீதான் ஏமாந்து போவன்னார் கார்த்திக்.


சி.பி - அது வாழ்த்தா? சாபமா?


 சுந்தர், கார்த்திக்கை 'பாஸ்னுதான் கூப்பிடுவார். கார்த்திக்கைப் பத்தி யாராவது தப்பாப் பேசுனா, சுந்தருக்கு சட்டுனு கோபம் வந்திரும். எங்க குடும்பத்தில் கார்த்திக் ஒரு முக்கியமான மனிதர்!''

http://i271.photobucket.com/albums/jj121/jacktkp/JACKPOT%20PICS/1-11.jpg

5. ''ஜெ. ஆட்சியில் மக்களுக்கு நடந்த நல்லது என்ன?''


சி.பி - கரண்ட் பில் கட்ற வேலை மிச்சம், மக்கள் தொகை பெருகும் பிராசஸ் நடக்குது,கூடன் குளம் பிரச்சனையால எதிர் கால சந்ததிகளுக்கு புற்று நோய் பரிசு


 ''நானும் தமிழ்நாட்டுலதான் வாழ்ந்துட்டு இருக்கேன். எனக்கு எந்த நல்லதும் இதுவரை நடக்கலையே. எட்டு, பத்து மணி நேர பவர் கட், குழந்தைகளின் படிப்பு பாதிப்பு, போக்குவரத்து நெரிசல், விலைவாசி உயர்வு, கொலை, கொள்ளை, கடத்தல் அதிகரிப்பு. இது எல்லாம்தான் நல்லதுன்னா, தமிழகம்தான் இந்தியாவின் 'நல்லமாநிலம்!''  


6. ''அரசியல், குடும்பம், சீரியல் மூணையும் எப்படி சரிசமமா பேலன்ஸ் பண்றீங்க?''


 ''எந்த நேரத்தில் எதுக்கு முன்னுரிமை தரணும் என்பதில் தெளிவா இருக்கணும். அப்படி இருந்துட்டா, எல்லாமே ஈஸியா நடக்கும். நான் எப்பவும் குடும்பத்துக்குத்தான் முன்னுரிமை கொடுப்பேன். ஆறு மணிக்கு மேல ஷூட்டிங் வெச்சுக்க மாட்டேன். சண்டே கண்டிப்பா லீவு. சென்னையில் இருந்தால் ஒரு நாள்கூட மிஸ் பண்ணாம, பசங்களை நான்தான் ஸ்கூலில் கொண்டுபோய் விடுவேன், கூட்டிட்டு வருவேன்.


 பொதுத் தேர்தல் பிரசாரம் சமயம்தான் என் பசங்க ளுக்கு ஃபைனல் எக்ஸாம். தலைவர், தளபதிகிட்ட அனுமதி வாங்கி, எக்ஸாம் இருந்தப்போ, பிரசார தேதிகளை அட்ஜஸ்ட் பண்ணி சென்னைக்கே வந்துட்டேன். ஏன்னா, என் பசங்களுக்கு இந்தி, சயின்ஸ் சொல்லித்தர நான் இருந்தே ஆகணும். உங்க குடும்ப, அலுவலகவேலைகளை இதே மாதிரி முன்னுரிமை கொடுத்துப் பிரிச்சுக்கிட்டு, ஷெட்யூல் போட்டு வேலை பார்த்தா, எவ்வளவு வேலை இருந்தாலும் ரிலாக்ஸா இருக்கலாம்!''7. ''உங்க ஜாக்பாட் ஜாக்கெட்டுகளைப் பத்திலாம் கவிதையே எழுதியிருக்கேன். அதை எல்லாம் என்ன செஞ்சீங்க?''


சி.பி - உலகத்துலயே ஜாக்கெட் பற்றி கவிதை எழுதுன ஆள் இவர் ஒருத்தர் தான். உன் டார்கெட் என்னய்யா?

 ''டு பீ ஃப்ராங்க்... பல ஜாக்பாட் ஜாக்கெட்டுகளைப் பொது இடங்களில் அணியவே முடியாது

சி.பி - அப்போ நீங்க அணீஞ்ச இடம் பிரைவேட் இடமா? ஜெயா டி வி கூட பொது இடம் தானே?  ஷூட் முடிஞ்சதும் வீட்டு அலமாரியில சும்மாதான் இருக்கும். அதைத் தூக்கிப் போடவும் மனசு வரலை. ஒவ்வொண்ணும் கிட்டத்தட்ட 20 ஆயிரம் ரூபாய்க்கு மேல செலவழிச்சுத் தைச்சது.

சி.பி - என்னமோ சொந்தக்காசுல செலவு பண்ண மாதிரி சலிச்சுக்கறீங்க?ஊரான் ஊட்டுக்காசு தானே?

 250 எபிசோடுகளுக்கு மேல ஜாக்பாட் பண்ணியிருக்கேன். அப்போ எவ்வளவு மதிப்புக்கு ஜாக்கெட்டுகள் இருக்கும்னு நீங்களே கணக்குப் போட்டுக்கங்க.

சி.பி - 250* 2*20,000 = 10,000,000  அடேங்கப்பா , ஒரு எப்பிசோடுக்கு 2 ஜாக்கெட்ட்னாலே 500 ஜாக்கெட்க்கு  ஒரு கோடி ஆகுதே அந்த ஜாக்கெட்டுகளுக்கு நல்ல டிமாண்ட் இருக்கும்னு எல்லாத்தையும் ஏலம் விட்டோம். வந்த பணத்தை கேன்சர் இன்ஸ்டிட்யூட், அநாதை இல்லங்கள், என்.ஜி.-க்களுக்குனு நல்ல காரியங்களுக்காகப் பிரிச்சுக் கொடுத்தோம்!''

சி.பி - பரவால்ல.. ஏதோ நல்ல காரியத்துக்கு உங்க ஜாக்கெட் பயன்பட்டதே.. அந்த வகையில் சந்தோஷம் தான்.. ஆனா எனக்கென்ன டவுட்னா அதை ஏலத்துல எடுத்தவங்க அதை அணீஞ்சு பெருமைப்பட்டுக்குவாங்களா? அல்லது மியூசியம் மாதிரி வெச்சு வாங்க வாங்க குஷ்பு ஜாக்கெட் பாருங்க அண்ணே.. இதுதான் அது.. அப்டினு அவங்க தனியா சம்பாதிப்பாங்களா?

http://www.pkp.in/images/Tamil%20Star%20Families1/Kushboo%20family.jpg


8. ''கோயில் கட்டிய தமிழர்கள், உங்களை முதலமைச்சராகவும் ஆக்குவார்கள் என்ற நம்பிக்கையில்தான் அரசியலுக்கு வந்தீர்களா?''


சி.பி - அப்பாடா.. இதான்யா கேள்வி..  ஒரு படம் ஓடிட்டாலே அவனவன் நாற்காலி ஆசை ஆட்டி வெச்சு சி எம் கனவு காண்கறான். பல சூப்பர் ஹிட் படம் குடுத்தவங்களூக்கு அடுத்த ஜெ ஆகனும்னு ஆசை இருக்காதா? 


 ''சினிமாவுக்கு வரும்போது தமிழ்நாட்டு மக்கள் நமக்குக் கோயில் கட்டுவாங்கன்னு எதிர்பார்த்தா வந்தேன்? அரசியலுக்கும் அதேபோல எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல்தான் வந்திருக்கேன். என்ன நடக்கணுமோ அது நடக்கும்!''


9. ''இலங்கையில் நடந்த போர்க் குற்றங்கள், ஸ்பெக்ட்ரம் ஊழல்பற்றி என்ன நினைக்கிறீர்கள்? (போல்டாக உண்மையைச் சொல்லுங்கள்... பார்ப்போம்!)''


 ''ஸ்பெக்ட்ரம் வழக்கு இப்ப உச்ச நீதிமன்ற விசாரணையில் இருக்கு. அதைப் பத்தி நான் பேசக் கூடாது. அந்தக் குற்றச்சாட்டு எந்த அளவுக்கு உண்மை, பொய்னு உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்குப் பிறகுதான் தெரியும். அப்போதான் அதைப் பத்தி விவாதிக்க முடியும். இலங்கைப் போர்க் குற்றங்கள் கடும் கண்டனத்துக்கு உரிய விஷயம். இலங்கைக்கு எதிரா .நா. மனித உரிமை ஆணையத்தில் அமெரிக்கா கொண்டுவந்த தீர்மானத்தை இந்திய அரசு ஆதரிக்க தி.மு.. கொடுத்த பிரஷர்தான் காரணம். இலங்கைப் போர் தொடர்பான செய்திகளைப் பார்க்கும்போதோ, படிக்கும்போதோ மனசு பதறுது. அந்தக் கொடூர கொலைகளுக்கு ராஜபக்ஷே பதில் சொல்லியே ஆகணும்!''- அடுத்த வாரம்


''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இதுதான் தமிழ்ப் பண்பாடா?''


''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


தொடரும் 

http://1.bp.blogspot.com/_YGYEDdXG3mo/SatJ9tmtgJI/AAAAAAAAAqs/GMcFAbnDSf8/s1600/kushboo04.jpg


டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது பாகம் படிக்க 


6 comments:

முத்தரசு said...

வணக்கம்

குஷ்பு.............ம்

Yoga.S. said...

மனசாட்சி™ said...

வணக்கம்

குஷ்பு.............ம்!////என்ன மனசாட்சிய்யா இது?குஷ்பு....ம்!..........

ஆர்வா said...

கும் கும் கும்ன்னு கும்மி இருக்கீங்க குஷ்பூவை...

ராஜி said...

என்னாது தொடருமா?

ADAM said...

SUPER

Yoga.S. said...

கவிதை காதலன் - மணிகண்டவேல் said...

கும் கும் கும்ன்னு கும்மி இருக்கீங்க குஷ்பூவை...///சுந்தர்.சி கோச்சுக்கப் போறாரு!