Monday, April 16, 2012

சந்தானம் காமெடி டயலாக்ஸ் இன் OK OK ( ஒரு கல் ஒரு கண்ணாடி )

.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEgWz1beR74dCLhFUhI8pcl_ujJqOE3dIT0TmdciQ1bnAw5dUaf7sy33w9qecusmnMKl9LU5v9JjxKSu6OLtwYrce2e4jPlmNhJMrsckSshQEH3HQUi09m3VJDTmjHV4kz1b70BZGeUazxA/s1600/oru_kal_oru_kannadi_movie_posters_stills_01.jpg 1.  ஏம்மா... ஏதாவது டிஸ்கவுண்ட் குடும்மா..  50 முழம் பூ வாங்கி இருக்கேனில்லை?

 இந்தாப்பா ஒருபூ  ( செவ்வந்திப்பூ)

 இது எதுக்கு? நான் காதுல வெச்சுக்கவா?

-------------------------------------

2. என்னமோ சிக்சர் அடிக்கற மாதிரி பேட்டை தூக்குனே? கமுக்கமா இறக்கிட்டே. போடா போ அது எடைக்கு போடு.


------------------------------


3.  டேய்.. ஃபிரண்டை சமயம் பார்த்து கழட்டி விடறே.. நீ எல்லாம் நல்லா வருவேடா..


----------------------

4.  ரோட்ல ஒரு பொண்ணு துப்பட்டா போட்டுக்கிட்டு போயிடக்கூடாதே,.. உடனே பைக்கை ஸ்டார்ட் பண்ணிடுவீங்களே.. ஃபாலோ பண்ணி அட்ரஸ் கண்டு பிடிக்க .. 


-------------------------------------------

5.  ஹாய்.. மிஸ்.... வர்றீங்களா? ஒரு காஃபி சாப்பிட்டுக்கிட்டே பேசலாம்?


டேய்,.. வேணாண்டா பீர் சாப்பிடக்கூப்பிடலாம்.. மிஸ்.. பீர் ஓக்கே? 


ஒன்லி ஸ்ட்ராங்க் பீர் தான் சாதா வேணாம்.. 


----------------------------------

6.  மிஸ்.. தயவு செஞ்சு நல்லா மூடுங்க.. தேமல், படை, சொறி, சிரங்கு உட்பட அனைத்து  தோல் வியாதிகளும் வந்த ஆள் மாதிரியே இருக்கு.. இந்த மூஞ்சியை கலாய்ச்சுட்டோம்னு கோபம் வேற .. 


-------------------------------------------

7.வாய் மட்டும் தான்டா அப்படியில்ல.ஆனா ஆஞ்சநேயர் மாதிரிதான்டா வாழ்ந்துகிட்டு இருக்கேன்



-----------------------------------

8.  ஃபிகர் தேறாதுடா மச்சான்.. 

 நைட்டில பாரு நல்லாருப்பா. 


---------------------------------

9.  சார்.. என்ன சார்.  நீங்க..? பேப்பர் எல்லாம் சரி இல்லைன்னாத்தான் அவன் பெரிய வீட்டுப்பையன்.. 



-------------------------------------


10. அங்கே என்னடா.. குசு குசு?


அங்க்கிள் அது நாங்க இல்ல.. இவன் தான்  விட்டான் ஹி ஹி




------------------------------


11. நீ எது வரை படிச்சிருக்கே. ?


 அதை விடுங்க சார்.. எக்ஸ்ட்ரா கரிகுலர் ஆக்டிவிட்டீஸ்ல இவன் கிங்க்,....


 அப்டின்னா..


 சுத்தம். அதே தெரியாதா? உங்களூக்கெல்லாம் எவன் போலீஸ் வேலை குடுத்தான்? ஓவியம், இசை, மிமிக்ரி இந்த மாதிரி..




---------------------------------------


12.  சரி.. அது போகட்டும்.. ஏதோ ஒரு வார்த்தை என்னை சொல்ல வெச்சுடாதேன்னு சொன்னியே.. அது என்ன  கெட்ட வார்த்தை?


 தா


 புரியற மாதிரி சொல்லப்பா


 போங்க சார்..




------------------------------------




13.  இன்னைக்கு 25 வது திருமண நாள்..


 டிகிரி முடிச்சாச்சுன்னு பொய் சொல்லி மேரேஜ் பண்ணிக்கிட்டா..




 அதுக்காக 20 வருஷம் பேசாம இருக்கறது ரொம்ப ஓவர்..




-------------------------------------




14.  ஏன் எல்லா ஃபிகர்களும் டெரரிஸ்ட்ஸ் மாதிரி முக்காடு போட்டு முகத்தை மூடிட்டு போறாங்க?


ஓப்பன் பண்ணா உவ்வே..




-------------------------------------


15.  டேய்.. இந்த மாதிரி பொண்ணூ வேணூம்னு தான் சொன்னேன்.. இதே பொண்ணு தான் வேணும்னு சொல்லலை..




 போம்மா.. இந்த மாதிரி பொண்ணு எங்கேயும் கிடைக்காது




--------------------------------




16. ஏண்டா அவ வீட்டுக்கு எதிர்த்த மாதிரியே எப்படி டீக்கடை வந்தது? ஏதாவது லோன் போட்டு நீயே அவனுக்கு வெச்சுக்குடுத்தியா?




----------------------------------


17.  என்னடா, உன் சிஸ்டரை இப்படி பார்க்கறே?


 அடப்பாவி.. இவளும் எனக்கு சிஸ்டரா? நடத்துடா.




-------------------------------


18. டீக்கடையில நின்னுட்டிருக்கற என்னைப்பார்த்து என்ன பண்றே?ன்னு கேட்கறியே.. டீக்கடைல நின்னு இளனியாடா குடிப்பாங்க?




----------------------------




19.   மிஸ்.. இவன் யாருன்னே எனக்குத்தெரியாது.. அவன் சொல்றதை நம்பாதீங்க.  நான் மலையாளம் கத்துக்கலாம்னு அப்படியே நாயரை பார்க்க வந்தேன்




-------------------------------




20.  எனக்கு ரொம்ப பயமா இருக்குடா..


 நீ ஹீரோ.. எதுக்கு பயப்படறே. போதாததுக்கு புரொடியூசர் வெற




----------------------


21. மோர் சாப்பிடனும்னா தயிரை கடைஞ்சு தாண்டா ஆகனும்.


 அது சரி.. நீ மோர் சாப்பிட நான் ஏண்டா அந்த வேலையை செய்யனும்?




-------------------------------




22. இவங்க வாசிச்சு நீ பார்க்கலையே? அப்படியே சரோஜா தேவி மாதிரியே வாசிப்பாங்க.


 டேய். அது சரஸ்வதிடா..




-------------------------------




23. இன்னைக்கு டிராஃபிக் ரொம்ப ஜாஸ்தியா இருக்கே?




 வாட் யூ மீன்..


 இல்லை. வெட்டிப்பசங்க நடமாட்டம் ஜாஸ்தின்னு சொல்ல வந்தேன்




---------------------------------




24. டேய். அவங்க ஆண்ட்டி டா. விட்டுடா..


 ஆண்ட்டியா.? அவங்க ஹிப் பார்த்தியா?




----------------




25. இந்தாங்க , ஒண்ணும் பயப்பட வேண்டாம். விமானம் ஆக்சிடெண்ட் ஆகிட்டா பாரசூட் இருக்கு..




.. "சாக போற நேரத்துல தேங்கா எண்ணெய் கொடுத்தா நாங்க என்னா பண்றது, தலைக்கா தேச்சிக்கறது?"




------------------------------------


http://mimg.sulekha.com/tamil/oru-kal-oru-kannadi/stills/oru-kal-oru-kannadi-cinema-036.jpg


26. மனிதனாகப பிறந்தால் ஏதாவது ஒரு தீயப் பழக்கம் இருக்க வேண்டும்.அப்போதுதான் அவனது வாழ்க்கை முழுமையடையும் 


 இந்த கேவலமான தத்துவத்தை காலண்டர்ல தானே படிச்சே? ஹூம், டெயிலி ஷீட் காலண்டர் வீட்ல வெச்சிருக்கறவனெல்லாம் தத்துவம் சொல்ல ஆரம்பிச்சுடறான்.


-----------------------------


27. பயத்துல எல்லாருக்கும் ஒண்ணுக்கு தான் வரும்.. நீ ஏன் தண்ணி அடிக்கக்கூட பயப்படறே.. 




-------------------------


28. தமிழ் நாட்ல சரக்குப்பஞ்சம் வந்தப்ப பாண்டிச்சேரிக்கு முத பஸ் ஏறுனது நம்ம தமிழன் தாண்டா./. 




---------------------




29.  அவனவனுக்கு சரக்கு அடிச்சாலே போதை ஏறுவது இல்லை.. இவன் சும்மா மோந்து பார்த்தே போதை ஏத்திக்கறானே?




--------------------------


30. பசங்க பாக்கனுன்னே பால்கனியில சுத்துராளுகளே  


வாவ்...

டேய் என்னடா உன் சிஸ்டர இப்படி பாக்கிற? 

???????? .. இட்ஸ் ஓகே மச்சான்..  யூ கேரி ஆன் அவ்வ்வ்
-------------------------------------- 

31. XQS மீ மிஸ் .ஒரு கப் காபி சாப்டலாமா?.ஏன்னா.எந்த நல்லக் காரியம் பண்றதுக்கு முன்னாடியும் காபி சாப்பிடனும்னு எங்க அம்மாசொல்லியிருக்காங்க.

  காபி சாப்டற பழக்கம் இல்லீங்க..
வாங்க அப்ப பீர் சாப்டலாம். ஏனா எந்த நல்ல காரியம் செய்யுறதுக்கு முன்னாடியும் பீர் சாப்டனும்னு எங்க ஆயா சொல்லியிருக்காங்க...  
----------------------------------------
32.  நான்சென்ஸ் ஆஃப் த ஸ்டுப்பிட் ஆஃப் த இடியட் ஆஃப் த கண்ட்ரிஒ ஃப்ரூட் ஆஃப் த  டெபுடி கமிஷனர் ஆஃப் த...........


  ஏண்டா, சரக்குல ஆ.'.ப் போட முடியலைனு பேசுறதுல ஆ.'.ப் போட்டு பேசுறியா..
-------------------------------------------------------
33.  டேய்.. நீ பேசாம ஒண்ணு பண்ணு.. கர்ச்சீஃப்ல சரக்கை நனைச்சு அதை மூக்கை சுத்தி முக மூடி மாதிரி கட்டிக்கோ.. 


-------------------------------

34.  ஏண்டி.. உங்களுக்கு எல்லாம் பாய் ஃபிரண்ட்ஸ் ஸே கிடையாதா? எப்போ பாரு என் ஆள் பின்னாலயே சுத்தறீங்க.. போங்கடி போங்க.. 


--------------------------------


35. டேய்.. திட்டுறதுக்கு வார்த்தையில்லாம திட்டுற வார்த்தையையே திருப்பி திருப்பித் திட்டிகிட்டு இருக்கிற.. ராஸ்கல்.. 


-------------------------------


36. மச்சான்...செட்டாகாத பிகரு பின்னால டெயிலி சேவிங் பண்ணிட்டு பிரண்டு ஒருத்தன் சுத்துறானா எல்லாம் எதுக்கு ? ,கூட இருக்கிற பிரண்டு  தாண்டா உள்ள போயி கெடுக்கணும்.இதெல்லாம் பெருமையில்ல..கடமை..!.
---------------------------------

37.  இந்த அடர்த்தியான காட்டுக்குள்ள புரோகிராம் பண்ற டிஸ்கவரி சேனல்ஸ் கூட இப்போ எல்லாம் தமிழ்ல தான் பேசறாங்க.. நீங்க ஏண்டா இங்கிலீஷ்ல பேசறீங்க..  


--------------------------


38.  அந்தப்பொண்ணு பேரென்ன சொன்னே? சுறாவோ, எறாவோ? 


அய்யோ.. மீரா.. 


---------------------------------


39. ஹலோ .. எக்ஸ்க்யூஸ் மீ மிஸ்டர் .. அஞ்சு ஈ (5E) பஸ் வருமா..?.

  அழுகிப்போன பழம் மாதிரி மூஞ்ச வச்சிருந்தா,அஞ்சி ஈ இல்ல பத்து ஈ ,பதினஞ்சு கொசு, இருபது வண்டு கூட வரும்.
----------------------------------

40.  நீ குழந்தையா இருக்கறச்சே உனக்கு விரலு சூப்புற பழக்கம் இருக்குனு உங்க அம்மா உன் விரலுல வேப்பெண்ணையை தடவி விடுவாங்க ,அப்ப நீ என் விரலதான சப்பின..
 நல்ல வேளை.........
----------------------------------


41. விட்றா விட்றா ... வாத்தின்னாலே அப்படித்தான்.. இத்தனூண்டு திருக்குறளை நீட்டி முழக்கி  சொல்லுவானுங்க.. இப்போ பாரு..
----------------------------------


42.  மிஸ்.. இனிமே நாம நல்ல ஃபிரண்ட்ஸா இருப்போம் டீல்?
 ம்க்கும்.. ஃபிரண்ட்ஸ்னு சொல்லி எங்கே போய்  நிறுத்துவாங்கன்னு எனக்குத்தெரியாதா? எத்தனை பசங்களை நான் பார்த்திருக்கேன் ( சொன்னாத்தானே தெரியும்? ஹி ஹி )
------------------------------

43.  ஒரு நல்ல பொண்ணை கரெக்ட் பண்ண நாங்களெல்லாம் எவ்ளவ் கஷ்டப்படறோம் தெரியுமா?
-----------------------------




44. ஏன் இந்த காவி டிரஸ்?


காதல்ல தோத்தவன் காவி டிரஸ் போடாம, பின்ன நேவி டிரஸ்ஸா  போடுவான்?
------------------------------



45. பொண்ணுங்களோட ரத்தமும் சிவப்பு.பையன்களோட ரத்தமும் சிவப்பு.அப்பறம் ஏன் பொண்ணுங்களோட எண்ணம் மட்டும் கருப்பா இருக்கு.?
-------------------------------------




46.  நீங்க ரொம்ப மோசம்.. 100 கிஸ் தர்றேன்னு சொல்லிட்டு 43 கிஸ் தான் குடுத்தீங்க.. 
 சாரி.. 44 வது கிஸ் தர்றப்போ எச்சில் ஓவ்ராகி ஃபோன் ரிசீவர் அடைச்சுக்கிச்சு ஹி ஹி 
--------------------------------------

47.  எனக்கு  செட் ஆகற ஃபிகரை ஃபிரண்ட்னு சொல்லி ஒருத்தன் கரெக்ட் பண்ணிட்டு போறானே.. இனி நான் என்ன செய்வேன் அய்யகோ..  
---------------------------


48.  எல்லாருக்கும் ஒண்ணு சொல்றேன், நல்லா கேட்டுக்கோங்க.. நீ கரெக்ட் பண்ற பொண்ண விட,உன்ன கரெக்ட் பண்ணுற பொண்ணுதான் ஒர்க் அவுட் ஆகும் . 
--------------------------------- 


49.  என்ன மச்சான்  சிவாஜி சார் வாய்ஸ் எடுக்கிறியா 

  டேய்...ராத்திரி பூரா மிமிக்கிரி பண்ணி பண்ணி அந்த ஆளு வாய்ஸ் மாறி ஆயிடுச்சிடா ..
-----------------------------------
50. உனக்கு 24 மணி நேரம் டைம் தர்றேன்.. யோசிச்சு நல்ல முடிவா சொல்லு.. ஃபிரண்ட் பார்த்தியா? இல்லை ஃபிகர் மீராவா?
 மீரா தான்.. 
 அடப்பாவி.. !!!
--------------------------------
http://www.filmglitz.com/tamil/wp-content/gallery/oru-kal-oru-kannadi/oru-kal-oru-kannadi_movie_stills-32_01.jpg
51.  மிஸ்.. நீங்க 2 நாளா என் கிட்டே பேசலை... நாடு எவ்ளவ் பெரிய பொருளாதார இழப்பை சந்திச்சிருக்கு தெரியுமா?
-----------------------
52. டேய் ..கல்யாணத்த நிப்பாட்ட கார் கேட்டா. இதப்போயி எடுத்துட்டு வந்திருக்க.


ஏன் மச்சான் கல்யாணத்த நிறுத்திறதுக்குன்னே ஏதாவது புது மாடல் கார் விட்டிருக்காங்களா? 
----------------------------------
53. டேய்... நான் மொடாக் குடிகாரனுங்க  கூட சேர்ந்து கூட  குடிப்பேன். ஆனா மோந்துப் பாக்குறவன் கூடெல்லாம் குடிக்க மாட்டேன்.
-------------------------
54. டேய் ஆணவத்தில ஆடாதடா. ராணுவத்தில அழிஞ்சவங்களை விட ஆணவத்தில அழிஞ்சவங்கதான்  இந்த உலகத்துல அதிகம்.  
-----------------------------------------
55.  எத்தனை தொழில் உன்னால பாதிக்கப்பட்டிருக்கு தெரியுமா? இப்படியே விட்டா இந்தியா எப்படி வல்லரசு ஆகும்? டல்லரசு தான் ஆகும்.. 
-----------------------------------
56.  விடு விடு .. அயர்ன் பண்றவங்க அழக் கூடாது.

 
-----------------------------------
57. இந்தப் பொண்ணுங்க ஒருநாளைக்கு பத்து பேருக்கு ஓகே சொன்னா.. பத்தாயிரம் பேரை கழட்டி விடுறாங்க. 
ஃபேக்டு ஃபேக்டு ஃபேக்ட்டு
-------------------------------
58. கேக்கறவன் கேனையனா இருந்தா  கேரம்போர்ட கண்டு பிடிச்சது கே.எஸ்.ரவிக்குமாரு சொல்வியா?  
-----------------------------
59.  ஒரு பொண்ணு சொன்னதை நம்பித்தானே என்னை அடிக்க வந்தே?உண்மைல என்ன நடந்தது தெரியுமா? 
 ம்ஹூம்.. 
 ஹி ஹி அவ சொன்ன மாதிரி தான் நடந்தது .. எஸ்கேப்.. ஓடு..
-----------------------------
60. நான் தற்கொலை செஞ்சுக்கப்போறேன்.. 
 மச்சி,... ஓப்பனா ஒண்ணு சொல்றேன்.. தப்பா நினைக்காதே.. நீ எல்லாம் வாழ்ந்து என்ன சாதிக்கப்போறே?
------------------------------
61. ஏரி உடைஞ்சா மீனு ஏரியாவுக்கு வந்துதானே ஆகணும்.
--------------------------------------
62. தண்ணியடிக்கிற  பழக்கம்கறது  தலையில வர்ற வெள்ள முடி மாதிரி.. ஒண்ணு வந்துட்டா போதும். ஜாஸ்தியா ஆகுமேத் தவிர கம்மி ஆகவே ஆகாது. 
------------------------------
63. மீரா வேணாண்டா
 அப்போ மீரா ஷாம்பூ ஓக்கேவா?
----------------------------
64.  புயல் காத்துல எவனாவது பொரி சாப்பிட்டுட்டு இருப்பான்.. அவன் கிட்டே போய் இந்தக்கதை எல்லாம் அவுத்து விடு.. 
---------------------
65.. மச்சான்.. நீ நினைக்கற மாதிரி நான் அவ்வளவு நல்லவன் இல்லைடா..  சமயத்துல சபாவுக்கு போறேன்னு சொல்லிட்டு ஷகீலா படத்துக்கு போன பாவிடா நான்.. 
--------------------
66. பீச்ல எல்லாத்துக்கும் சிலை வைக்கறாங்க.. நட்புக்கு ஏன் சிலை வைக்கறது இல்லை..? வெச்சா உனக்கு தாண்டா வைக்கனும்.. நண்பேண்டா.. 
 ஃபேக்ட்டு ஃபேக்ட்டு FACTட்டு
-------------------------
67.   பாத்தா பாவமா இருக்குடா.. 
 இல்லையே பச்சை மைதா மாவு மாதிரி தானே இருக்கா.. 
 டேய் .. அவ உன் தங்கச்சிடா..
 ஆன்னா ஊன்னா இதை சொல்லி ஆஃப் பண்ணிடிவியே
----------------------------
68. மனுஷன் சாகறப்பக்கூட நம்மளை மாட்டி விட்டுட்டுதான் சாவான் போல.. அவ்வ்வ்வ்
-----------------------------------
69.  பார்த்தா எங்கே டா..?
 அவன் போய்ட்டான்மா.. 
 இதோ வந்துட்டானே..?
 இருக்காதே அவன் ,மானஸ்தன் ஆச்சே....
 இங்கே பாரு.. வந்துட்டான்.. 
---------------------------------- 

 
70.  பாண்டிச்சேரி போறோம். கல்யாணத்த நிப்பாட்டுறோம். பொண்ணத் தூக்குறோம். இதான் மச்சான் பிளான்.

  என்னது பொண்ணத் தூக்குறதா?...டேய்,அவங்க சீர்வரிசையா குடுக்கிற கட்டில் பீரோவக் கூட என்னாலத்  தூக்கமுடியாது. மீசை வளந்தா பெரிய பசங்களெல்லாம் சண்டைக்கு கூப்பிடுவானுவோனு பயந்துதான்  மீசையே வைக்காம இருக்கிறேன்.

  டேய் என்னடா பன்னுவானுவோ..ஆளு வச்சி அடிப்பாங்களா? இல்ல போலீசுகிட்ட  போவாங்களா.??..என்ன ஆனாலும் சரி..எவன் குறுக்க வந்தாலும் சரி.மச்சான் நீ பாத்துக்கோ.
 அடங்கோ
--------------------------


71.  சிரிடா.. 


 டேய் சிரிச்சுடுடா.. அம்மா அசைப்படராங்க இல்லை..


 ஜி ஜி ஜி ஹி ஹி ஹி 


 கோட்டா சீனிவாசன் மாதிரியே சிரிக்கறானே.. 






--------------------------


72.  உனக்கு நேரம் நல்லாருக்கு.. 


 ஆமா ஜோசியரே.. சேர்க்கை தான் சரி இல்லை.. 




------------------------


73.  நீ சொல்ற தத்துவம் எல்லாம் லாரிக்குப்பின்னால வேணா எழுதலாம்.. ஆட்டோ பின்னால எழுதலாம்.. ஆனா வாழ்க்கைக்கு ஒத்து வராது




------------------------------


74.  எங்களுக்குள்ளே விரிசல் விழுந்துடுச்சு.. 




எனக்கென்னமோ விரிசலுக்குள்ளே நீ விழப்பார்க்கிறேன்னு தோணுது ( சென்சார் கட் )




------------------------------------


75.  ஒயிஃப் ஃபோன் நெம்பர் கூட உங்க கிட்டே இல்லைன்னா நீங்க எல்லாம் என்ன புருஷன்//?




----------------------------------


http://g.ahan.in/tamil/Oru%20Kal%20Oru%20Kannadi%20Movie/Oru%20Kal%20Oru%20Kannadi%20Movie%20(35).jpg


76. சீடா..

இருடா... ஐயோ குருஜி !!!

  மீண்டும்  லவ்கீக வாழ்க்கை என்னும் குழியில் விழத்தான் போகிறீர்களா... ?

  ஆமாம் குருஜி.

  முதலில் அவள் உன்னை மெட்டி போட வைப்பாள் ..பிறகு முட்டி போட வைப்பாள் 

அவ என்னை  ஜட்டி போட வச்சாலும் பரவா இல்ல குருஜி! 
----------------------------- 

77. அந்த குருஜி ஒரிஜினல் இல்ல...
 
:அவரு ஒரிஜினலு இல்லாம அசெம்பிள்  செட்டா?
--------------------------------
78.  பொண்டாட்டி பேச்சை  கேட்டு நடக்கற குடும்பம் தாண்டா உருப்படும்


------------------------------


79.  ஆல்ரெடி உன் ஆளு ஆண்ட்டி மாதிரி தாண்டா இருக்கா.. 


-----------------------

80.  கோயம்பேடு மார்க்கெட்ல பூசணிக்காய் வாங்க வந்தவ மாதிரி இருக்கா.. டா


----------------------------------

81.  நீ எவ்ளவ் ஒல்லி.. உன்னைப்போய் அவன் குண்டுன்னு சொல்றானே ராஸ்க;ல்


--------------------


82.  நான் ஒரு மிஸ்டு கால் தர்றேன். அல்லது எஸ் எம் எஸ் அனுப்பறேன். கால் பண்ணு.. 

 அதானே.. நீயா காசு செலவு பண்ணி பேசிடாதே.. 


-------------------------------------

83. என் ஆளு மீரா ஏர் ஹோஸ்டஸ் டிரைனிங்க்காக சென்னை டு மும்பை போறா 

  அதுக்கு..முதல் முதல்ல பிளைட்ல போறதால பிளைட் டயருல எலுமிச்சப்பழம் வைக்கச் சொல்றீங்களா.. இல்ல மொட்ட மாடியிலிருந்து டாட்டா காட்ட சொல்றீயா?
-------------------------------------
84.  என்னடா டிரஸ் இது?
 உன்னை மாதிரி டி டி ஆர் கோட்டு போடறதுக்கு இது எவ்வள்வோ பெட்டர்டா. 
------------------------
85. டேய்...  சினேகாடா... புன்னகை அரசிடா...!

நான் என்ன... புழுங்கல் அரிசின்னா சொன்னேன்.
----------------------------
86. DC சார் எதுக்கு..  அந்த ஃபிகரை நாட்டு கோழி முட்டையை நல்ல பாம்பு பாக்கிற மாதிரி அப்படி பாக்குறீங்க..??
--------------------------------
87. XQS  மீ மிஸ்... நீங்க கிங் ஃபிசர்ல ஒர்க் பண்ணுறீங்களா..?

                  எஸ்.......  

 எந்த ஒயின் ஷாப்பிலும்  உங்க கம்பெனி பீர் கூலிங்காகவே  கிடைக்க மாட்டேங்குது.இது விசயமா உங்க எம் டி கிட்ட நான் கொஞ்சம் பேசமுடியுமா?
-----------------------------------------
88.  ஹலோ.. கொஞ்சம் சிரிச்ச முகமா இருந்தா என்ன? எப்பவும் ரேஷன் கடைல வேலை செய்யற ஆயா மாதிரி மூஞ்சியை ஏன் உம்முனு வெச்சிருக்கே?
--------------------------------------
89.  ஹலோ இங்க என்ன பிரச்சனை.?

  வாழ்க்கையே பிரச்சனைதாங்க.நான் நினைச்சது எதுவுமே கிடைக்க  மாட்டேங்குது.லவ்வும் செட்டாகுல..அட்லீஸ்ட் இந்த ஜன்னல் சீட்டாவது எனக்கு குடுங்க. 

நீங்களாவது கொஞ்சம் விட்டுக் கொடுக்கலாமே.

  என்னது.. டிபன் சாப்றது ஒருத்தன்?.டிப்ஸ் வக்கிறது ஒருத்தனா.? அதுல்லாம் முடியாது.  

அப்ப.. இதெல்லாம் ஒத்துவராது. நான் .'.புட்போர்ட் அடிச்சசிகிறேன்.

: என்னது  பிளைட்ல புட் போர்டா ? அது மாதிரி எல்லாம் பண்ண முடியாது.

என்னங்க நீங்க..ஜன்னல் சீட்டும் இல்லங்கிறீங்க..'.புட்போர்டும் முடியாதுங்குறீங்க.பின்ன என்ன டிரைவர் சீட்லயா உக்காருறது?

: என்னது டிரைவர் சீட்டா?

  அப்ப.. உங்க சீட்ல ஒக்கார வச்சுகிங்க... 



எப்படியும் சாப்டறதுக்கு வழியில கேண்டீன்ல நிப்பாட்டுவீங்களே....  அப்ப மாறி ஒக்காந்துக்கலாம்.

  என்னது கேண்டீனா?  சார்.. நாங்க கேண்டீன்ல எல்லாம்  நிப்பாட்டுரதில்ல.

  ஓ..அப்ப பாய்ன்ட் டு  பாய்ண்டா  ?
 
: இல்ல சார் எல்லாமே இங்கேயே கிடைக்கும். 
 
 
--------------------------------------




90. இவ கிட்டே நான் பேசக்கூடாதா? பேசாம எனக்கு ஒரு ஒயிட் கோட் வாங்கிக்கொடுத்துடு.. நான் சர்ச் ஃபாதர் ஆகிடறேன்.. 




--------------------------------




91. டேய்... மொட்டையப்பாத்து இது வெய்யிலுக்கு அடிச்ச மொட்டையா வேளாங்கண்ணிக்கு அடிச்ச மொட்டையானு சொல்ற ஆளு நானு.உன் முழிய பாத்தாலே தெரியுது நல்ல மூடுல இருக்க.பிரண்ட்சிப் பத்தியெல்லாம் பேசி ரியாக்ஸனை கெடுத்துக்காத.


-------------------------------

92. சார்.. இட்ஸ் டைம் டு  டேக் ஆ.'.ப் .கேன் யு பிளீஸ் பாஸ்டன் யுவர் பெல்ட் .

பெல்ட்டா... நான் ஆல்ரெடி வீட்லே  போட்டுட்டு வந்துட்டேனே.

  நான் அந்த பெல்ட்ட சொல்லல ..சீட் பெல்ட்ட சொன்னேன். 

அய்யய்யோ நான் சீட் பெல்ட் எல்லாம் எடுத்துட்டு வரலியே 
--------------------------------
93.  சும்மா இருந்தாக்கூட ஏதாவது சீன் போட்டு நம்மளை வெறுப்பேத்துறானே.. என்ன பண்னலாம் இவனை .. 


-------------------------------------

94. ஹலோ மேடம். என் பெல்ட்ட அவுத்து விடுங்க.நான் டிரைவர பார்க்கணும்.எனக்கு அவரு மேல டவுட்டா இருக்கு.

என்னது டிரைவரா ?

அப்ப கிளீனரை வர சொல்லுங்க.
 அய்யோ.. இங்கே பைலட் தான்
-----------------------------------
95.  இந்த ஃபிளைட்ல டிரிங்க்ஸ் கிடைக்காதா? என்ன நீங்க.. அட்லீஸ்ட் அரண்மனைக்கிளி படமாவது போடச்சொல்லுங்க.. 
-----------------------------------
96.  டேய் டேய்.. அந்தபொண்ணை கொஞ்சம் வேலை செய்ய விடுடா.. சும்மா முறைப்பொண்ணை கூப்பிடற மாதிரி கூப்பிட்டு வெச்சு கடலை போட்டுட்டே இருக்கே?
----------------------------------
97. ஒரு பொண்ணை கரெக்ட் பண்ணி, லவ் பண்ணி மேரேஜ் பண்ரது எல்லாம் மேனேஜ்மெண்ட் கெபாசிட்டில வராதா? ஹி ஹி 
----------------------
98.  நான் முதன் முதலா எட்டாவது படிச்சப்ப ஒரு பொண்ணை டாவட்ச்சேன்./ அதுதான் ஒரிஜினல் லவ் இதெல்லாம் சும்மா பிராஜட் மாதிரிடா மச்சான்.. 
-------------------------
99. பிள்ளையார் பால் குடிச்சார்னு சொல்லு அதைக்கூட நம்ப த்தயாரா இருக்கேன்.. ஆனா நீ சரக்கடிச்சேன்னு மட்டும் சொல்லிடாதே.. 
---------------------------
100.  பேசிக்கா நான் நல்லவன்.. தான்.. ஆனா சரக்கு அடிச்சா மட்டும் ரொம்ப ரொம்ப நல்லவன் ஹி ஹி .. 
--------------------------
101.  அந்த டிரிங்க்ஸ் எல்லாம் இண்ட்டர்நேஷனல் ஃபிளைட்ல தான் கிடைக்கும். சாரி. 
 அய்யய்யோ.. அப்போ இது லோக்கல் ஃபிளைட் டா?
--------------------------------
102.  அன்பார்ந்த கல்யாண மண்டபத்து மக்களே! நெக்லசை பக்கத்து வீட்டு ஆண்டி கிட்டே கடன் வாங்கிட்டு வந்திருக்கும் ஃபிகர்களே..   அஞ்சு ரூபாயோ பத்து ரூபாயோ மொய் வைக்க வந்திருக்கும் ஆண்களே..   செருப்பு திருட வந்திருக்கும் கனவான்களே.. 


---------------------------------------------

103.  ம்க்கும்.. ஒண்ணை உஷார் பண்றதுக்கே நாக்கு தள்ளுது.. இதுல 2 வேறயா? விளங்கிடும்


---------------------------------------

104.  நீ ஓவரா டென்ஷன் ஆகாதே டியர்.. அப்புறம் உன் முகம் சிவந்திடும்.. எனக்கு லவ் மூடு வந்துடும் ஹி ஹி 


---------------------------

105 .ஏன் இன்னும்  தயங்கறே?  அதான் படம் முடியப்போகுதில்ல? லிப் டு லிப் அடிச்சுடு


-----------------------------------


106. நீ ஏன்ப்பா ICU வார்டு சிஸ்டர் மாதிரி இப்புடி இவ்ளோ கறாரா பேசுற...?



----------------------------------


107. மத்த இடத்துலல்லாம் ஃபிளைட் டிக்கெட் 20000 ரூபாயாம். இங்க மட்டும்தான் 19,999 ரூபாய்.


----------------------------


108. ஓடிப்போய் கடல்ல தற்கொலை பண்ணிக்காதடா..

ஒண்ணுக்கடிக்கப் போறேன் மச்சான்..



---------------------------------


 டிஸ்கி -இந்தப்பதிவை ரெடி பண்ண 3 மணீ நேரம் ஆச்சு.. படமே ரெண்டரை மணீ நேரம் தான் ஹி ஹி .. இந்தப்படத்துல டோட்டல் 112 ஜோக்ஸ்... ஆனா எனக்கு 8 ஜோக்ஸ் மறந்துடுச்சு.. விடு பட்ட ஜோக்குகள் யாராவது ஞாபகபடுத்தி கமெண்ட் போட்டா பதிவில் சேர்த்துக்கொள்ளப்படும்.. அவர்களுக்கு கைம்மாறா ஹன்சிகாவின் முழு உருவப்படம் ( சேலையில்) மெயிலில் அனுப்பப்படும் ஹி ஹி 


படத்தின் விமர்சனம் படிக்க http://www.adrasaka.com/2012/04/blog-post_228.html

23 comments:

Shibly said...

கலக்கல் ஐயா....எப்படி உங்களால மட்டும் இப்படியெல்லாம் முடியுதோ??வாழ்த்துக்கள்

குரங்குபெடல் said...

"6. மிஸ்.. தயவு செஞ்சு நல்லா மூடுங்க.. தேமல், படை, சொறி, சிரங்கு உட்பட அனைத்து தோல் வியாதிகளும் வந்த ஆள் மாதிரியே இருக்கு.. இந்த மூஞ்சியை கலாய்ச்சுட்டோம்னு கோபம் வேற .. "


இதெல்லாம் ஜோக் இல்ல தம்பி . . .

vattajileppi said...

லிப் டு லிப் அடிச்சுடு அதான் படம் முடிஞ்சுதுள்ள (கிளைமாக்ஸ் )

vattajileppi said...

மறக்காம போட்டோ அனுபிடுங்கோவே

நம்பள்கி said...

மச்சான்! இம்புட்டு நேரம் எடுத்து எழுதரீக! தங்கச்சி பாவம் மச்சான்! அவிகளையும் கூட கொஞ்சம் பார்த்துகக!

sikkal.blogspot.com said...

சூப்பர்ணே......படம் பாத்ததை விட இதை படிக்கும்போது செம காமெடியா இருக்கு

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்! நான் கூட நேத்துத் தான் நெட்டுல படம் பார்த்தேன்.அந்த மீதி எட்டு ஜோக்கு ஞாபகம் வர மாட்டேங்குது.இன்னிக்கும் பாத்துட்டு சொல்லட்டா?ஹி!ஹி!ஹி!!!!!

Yoga.S. said...

sikkal.blogspot.com said...

சூப்பர்ணே......படம் பாத்ததை விட இதை படிக்கும்போது செம காமெடியா இருக்கு.///நீங்க படிச்சது அது(காமெடி/ஜோக் )தாங்க,ஹி!ஹி!ஹி!!!!!

Manimaran said...

சி.பி... 49 ல்...சந்தானம் அந்த ஆளுன்னு சொல்வது ஆக்சுவலா சிவாஜிய இல்லை .மகாநதி சங்கரை.ஆனால் படத்தில சிவாஜிய சொல்ற மாதிரி இருக்கும்.இத நான் நேத்து என் ப்ளாக்குல எழுதினப்போ நண்பர் ஒருவர் குட்டு வைத்துவிட்டு போனார்.

http://www.manathiluruthivendumm.blogspot.com/2012/04/blog-post_16.html

Unknown said...

Super Boss! :-)

அனுஷ்யா said...

விடுப்பட்டவை அண்ணே...

1.நீ ஏன்ப்பா ICU வார்டு சிஸ்டர் மாதிரி இப்புடி இவ்ளோ கறாரா பேசுற...?

2.இராணுவத்துல அழிஞ்சவன விட ஆணவத்துல அழிஞ்சவன்தான் டா அதிகம்...

அந்த ஹன்சிகா...ஹ்ம்ம்.... :))

R. Jagannathan said...

படிக்கும்போது ஒன்றும் சிரிப்பு பொத்துக்கொண்டு வரவில்லை, நிறைய கடி. ஒருவேளை படம் பார்க்கும்போது சிரிப்பு வருமோ என்னவோ! - ஜெ.

Unknown said...

தலை,நீங்க ஒரு Joke Grand Master....

enjoy......

ஹாலிவுட்ரசிகன் said...

விமர்சனத்தை விட உங்ககிட்ட இருந்து இதுக்கு தான் வெயிட்டிங். இனி கொஞ்ச நாளைக்கு படம் பார்த்த மாதிரி பசங்க கிட்ட பீலா விட்டுக்கலாம்.

முஹம்மது யூசுப் said...

மத்த இடத்துலல்லாம் ஃபிளைட் டிக்கெட் 20000 ரூபாயாம். இங்க மட்டும்தான் 19,999 ரூபாய்.

முஹம்மது யூசுப் said...

ஓடிப்போய் கடல்ல தற்கொலை பண்ணிக்காதடா..

ஒண்ணுக்கடிக்கப் போறேன் மச்சான்..

ராஜி said...

மயிலன் said... Best Blogger Tips [Reply To This Comment]

விடுப்பட்டவை அண்ணே...

1.நீ ஏன்ப்பா ICU வார்டு சிஸ்டர் மாதிரி இப்புடி இவ்ளோ கறாரா பேசுற...?

2.இராணுவத்துல அழிஞ்சவன விட ஆணவத்துல அழிஞ்சவன்தான் டா அதிகம்...

அந்த ஹன்சிகா...ஹ்ம்ம்.... :))

>>>
மயிலா நீயுமா?!

ராஜி said...

விடுபட்டவையை அடுத்த போஸ்ட்ல போட்டுடுங்க

Anonymous said...

பாஸ் ஒன்னு சொன்னா கோவிச்சிக்கபடாது.. முக்காவாசி டயலாக்ஸ்க்கு மேல் பிழை.. படத்துல இருந்த டயலாக்ஸ்ல இருந்த ஒன்னு ரெண்டு வார்தைகள வச்சிகிட்டு உங்க இஷ்டத்துக்கு எழுதி இருக்கீங்க.. அனிவேஸ் ஐ அப்ரிசியேட் யுவர் அட்டெம்ட்.. வே டு கோ (ஒரு சந்தானம் ரசிகனா படத்த நாலு வாட்டி பார்த்ததன் விளைவு) :-)

அனுஷ்யா said...

@ராஜி

ஹி ஹி.. ஆனா இன்னும் ஹன்சிகா போஸ்டர இந்த பெரிய மனுசன் அனுப்பல அக்கா... நம்பிக்க துரோகம்...

chinnapiyan said...

நன்றாக ரசித்து சிரித்து அனுபவித்தேன். நன்றி நன்றி

Unknown said...

ஆகா சந்தானத்த றொம்ப ரசிச்சு பாத்திருப்பிங்க போல.....ஒன்னும் விடயிலயே எல்லா டயலாக்கும் வந்தாச்சா????

விஸ்வநாத் said...

ராணுவத்துல செத்தவங்கள விட ஆணவத்துல செத்தவங்க தா ஜாஸ்தி.

அதா அம்மா இறங்கிட்டே இல்லே, சாவி போட்டு ஸ்டார்ட் பண்ணு


CP, 2 வசனம் சொல்லிருக்கே, 2 படம் அனுப்புங்க;