Friday, April 20, 2012

ஊ ல ல லா - ( OH LA LA LAA ) -ஊத்திக்குச்சுய்யா ங்க்கொய்யால -சினிமா விமர்சனம்

http://4.bp.blogspot.com/__aUS9TU5yHg/TExtS54_GLI/AAAAAAAABOI/RXOs9XqGxq4/s1600/Ooh+La+La+Tamil+Movie+Posters+Stills+Images+Photos+Gallery+(2).jpgத்ரிஷாவை வெச்சு “ எனக்கு 20 உனக்கு 18, உங்கம்மாவுக்கு 38, உன் தங்கச்சிக்கு 16” அப்டின்னு ஒரு படம் எடுத்தாரே அதே டைரக்டர் யாரோ கப் ஐஸ் சாப்பிட நாம ஏன் வெய்யில்ல கஷ்டப்படனும்? தக்காளி.. எல்லா லட்டையும் நாமளே சாப்பிடுவோம்னு நினச்சு ஹீரோ கம் டைரக்டர் ஆகிட்டார்..

டைட்டிலை பார்த்ததும் ஊர்வசி, லதா , லலிதா, லாவண்யா ஆகிய 4 ஃபிகரை  ராமன் தேடிய சீதை படத்துல சேரன் பொண்ணு பார்த்த மாதிரி கதைன்னும், துள்ளல் படத்துல பல ஃபிகரை  மடக்குன கதைய்யோன்னு நினைச்சேன்..

ஹீரோ ஒரு ஸ்ட்ரீட் கலெக்ட்டர் .... அதாவது தெருப்பொறுக்கி... சின்ன வயசுல இருந்து பக்கத்து வீட்டுல ஒரு ஃபிகர் குடி வந்தாலும் விடறதில்லை.. ஃபிரண்ட்டா பழகலாம்னு ரூட் விடறான்.. ஆனா பாருங்க அவருக்கு ஸ்டாலின் ஜாதகம்.. அதாவது வசதி இருக்கு, திறமை இருக்கு, ஆனாலும் வாய்ப்[பு இல்லை ... வளர்ந்து பெரிய ஆள் ஆன பின்னும் இதே கதைதான்,..

 ஊர்ல ஒரு ஃபிகர் கண்டுக்கறதில்லை... அப்போத்தான் அவர் ஹீரோயினை பார்க்கறாரு.. ஹீரோயின் யாரு தெரியுமா? டீக்கடைல  பந்தி பரிமாறும் பாவை.. அதாவது டீசண்ட்டா சொல்லனும்னா காஃபி சாப்ல  சர்வர்.. ஹீரோ நாய் மாதிரி அவ பின்னாலயா அலைஞ்சு ஃபிரண்ட்ஷிப் பிடிக்கறான்..http://www.images.behindwoods.com/photo-galleries-q1-09/tamil-photo-gallery/ooh-la-la-la-1/ooh-la-la-la-10.jpg

ஆரம்பத்துல கன்  ஃபைட் காஞ்சனா மாதிரி முறைச்ச ஃபிகரா இருந்தாலும்.. போகப்போக அரட்டை கேர்ள் அஞ்சலி மாதிரி சிரிச்ச ஃபிகரா ஹீரோயின் மாறிடுது.. ஃபிரண்ட்ஷிப்க்கு 3 கண்டிஷன் போடுது.. அந்த கேவலமான கண்டிஷன் இன்னான்னா

1. கையை பிடிக்கக்கூடாது ( நல்ல வேளை.. )

 2 . கட்டிப்பிடிக்கக்கூடாது ( கேன்சரே வந்தாலும் அந்த கட்டியை கூட பிடிக்கக்கூடாதுங்களா? மேடம் டம் டம் .. )

3.  லிப் டூ லிப் கிஸ் அடிக்கக்கூடாது ( அப்போ லிப் டூ கன்னம் அண் ட் ஆல் அதர் பார்ட்ஸ் அடிக்களாங்க்ளா? அவ்வ்வ்

 இந்த கண்டிஷன்க்கு ஒத்துக்கிட்டு ஹீரோ ஹீரோயின் கூட ஃபிரண்ட்ஷிப் வைக்கறான்.. ( பெரிய சீன இந்திய ஒப்பந்தம்) பைக்ல போறப்ப ஸ்பீடு பிரேக்கர்ல டம் டம் ஆனதால ஹீரோயின் ஹீரோ முதுகுல போய் இடிச்சுக்கறா,... உடனே அந்த கிரகம் அதாங்க லவ் வந்துடுது..

 இங்கே தான் படத்துல பெரிய டர்னிங்க் பாயிண்ட்.. அதாவது ஹீரோயின் ஹீரோவுக்கு கிஸ் அடிக்குது.. அதை செல் ஃபோன்ல படம் பிடிச்சுக்கறான்..

இது வரை அவனை நிராகரிச்ச ஃபிகர்ங்க கிட்டே எல்லாம் இந்த ஹீரோயினை கூட்டிட்டு போய்.. ஹேய் எனக்கும் ஒரு ஃபிகர் செட் ஆகிடுச்சுன்னு பெருமையா சொல்லிக்கறான்... அதை பார்த்ததும் ஊர்ல இருக்கற 1789 ஃபிகரும் அவன் பின்னால வர்றாங்க.. அடங்கோ ..  கேட்கற வன் கேனயன்னா கே டி வில மட்டும் தான்  கேரளா  ஃபிகர்ஸ் ஃபேஷன் ஷோ பரேடு போவாங்கன்னு சொல்வாங்க போல..
http://g.ahan.in/tamil/Ooh%20La%20La%20La%20Movie%20Press%20Meet/Ooh%20La%20La%20La%20Movie%20Press%20Meet%20(39).jpg

இப்போ ஹீரோ மனசு மாறிடறான்.. பொம்பள பொறுக்கி ஆகி ஊரெல்லாம் சுத்தறான்.. ஹீரோயின் பசலை நோய்.. வந்து அழறா.. இருக்கறது பத்தாதுன்னு அந்த செல் ஃபோன் கிஸ் சீன் ஊரெல்லாம் பரவுது.. அது ஹீரோயினுக்கு பிடிக்கலை.. சண்டை போட்டு பிரியறாங்க..

 இந்த 2 பேக்குகளும் சேர்ந்தாங்களா? நாசமாப்போனாங்களா? என்பதுதான் மிச்ச மீதிக்கதை ஹி ஹி

 ஹீரோ தான் டைரக்டர்.. சார்,.. ஓப்பனா சொல்றேனேன்னு தப்பா நினைக்காதீங்க,.,. உங்க  ஹேர் ஸ்டைல் படு கேவலமா இருக்கு.. கவுண்ட மணி  பாஷைல சொல்லனும்னா  சட்டித்தலையன், தகர டப்பா தலையன் போல இருக்கு.. நடிப்பு சுத்தமா வரலை./.. பெட்டர் ரிட்டர்ன் டூ டைரக்‌ஷன் ஹி ஹி

 ஹீரோயின் யாரோ  பிரீத்தி பண்டாரி யாம்.. இலியானா முக ஜாடை.. வசனம் பேசறப்ப ஓங்கி முகத்துல அப்பனும் போல இருக்கு.. அது ஏம்மா உதட்டையும், கண்ணையும் ஒரு மாதிரி சுளிச்சு சுளிச்சு பேசறீங்க.. ஒரு வேளை ஸ்டைலோ? என்ன  கண்றாவியோ..? சகிக்கலை.. ஒரே ஆறுதல் படம் பூரா ஹீரோயின் ஸ்லீவ் லெஸ் பனியன்.. நோ துப்பட்டா. ஹி ஹி

கஞ்சா கறுப்பு கொலையா கொல்றார்.. அவருக்கு காமெடி வர்லைன்னா விட்ற வேண்டியதுதானே.. ஏன் வடிவேல் மாதிரி அடி வாங்கி வலியனா  அழுது கஷ்டப்படறாரு?

ஹீரோவுக்கு அப்பாவா தலைவாசல் விஜய் நல்ல நடிப்பு.. அவர் சம்சாரமா அதாவது ஹீரோவுக்கு அம்மாவா வர்றது யாருங்கோ? செம  கட்டை.. இதுல என்ன காமெடின்னா  ஹீரோ 5 வயசு இருக்கறப்ப எப்படி கும்முன்னு இருந்தாரோ  அதே மாதிரி தான் ஹீரோவுக்கு 30 வயசு ஆகறப்பவும், ஒரு சுருக்கம், நரை முடி.. மூச்.. அவ்வ்வ்வ்

ஹீரோயினுக்கு அப்பாவா சன் டி வி பட்டி மன்ற புகழ் ராஜா.. சுமார் நடிப்பு..


http://i.imgur.com/tiv4P.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்

1.  என்னை பிடிச்சிருந்தா ஒயிட் டிரஸ்;ல வா-ன்னு ஹீரோ சொன்னதும் செஸ் போர்டுல இருக்கற பிளாக் காயின்ஸ் எல்லாம் பறப்பது,டிராஃபிக் போர்டில் உள்ள எல்லா பிளாக் கலர்-ம் மரைவது கலக்கல் ( நல்ல வேளை அவர் தலைக்கு சுண்ணாம்பு அடிச்சுக்கலை)


2.  படம் பூரா கிரேசி மோகன் பட டயலாக்ஸ் மாதிரி ஏகப்பட்ட மொக்கை ஜோக்குகள் ( இவன் என்னமோ நல்ல ஜோக்ஸ் எழுதற மாதிரி அடுத்தவனை குறை சொல்றான்  பாரு)


3.  மணீ ஆச்சு  ஹேமாவதி, ஏதேதோ ஆனேன் நானே, ஓஹோஹோ தோழியே, சந்திப்பாயா? நேசிப்பாயா? என 4 பாடல்கள் கேட்கற மாதிரி இருக்கு.. படம் ஆக்கப்பட்ட விதமும் சுமார்..


இயக்குநருக்கு சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்

1. ரோட்ல இருக்கற குப்பைத்தொட்டில  காமெடியன் ஒளீவது அதில் எச்சில் இலை போடுவது, அதை எடுத்து சாப்பிடுவது - இது காமெடியா? எனக்கு வாமிட் வர்ற மாதிரி இருக்கு சார்..


2.  ஒரு சீன்ல ரோட்ல கார்ப்பரேஷன் லேடீஸ் 23 பேர் 10 அடி ரோட்டை கூட்டிட்டு இருக்காங்க? எந்த ஊர்ல சார் அப்படி இருக்கு? அதிக பட்சம் 3 பேருதான் அலோடு

3.  ஹீரோ ஃபோன் பண்ணி “ அர்ஜெண்ட் மேட்டர், 5 நிமிஷத்துல வா-ன்னு பதட்டமா கூப்பிடறான்.. அப்போ  ஒரு கலர் டிரஸ்.. அவன் கூப்பிட்ட இடத்துக்கு ஹீரோயின் வர்றப்ப வேற செட் கலர் டிரஸ்.. காதுல ஸ்டெட், நெக்லஸ் இட்பட.. அதை எல்லாம் மாத்தவே 2 மணீ நேரம் ஆகுமே?


http://i.imgur.com/JZwTR.jpg

4.  டி சர்ட் சூப்பர்னு ஹீரோயின் சொல்றா.. அப்போ ஹீரோ போட்டிருப்பது பனியன் அவ்வ்வ்வ்

5. ஹீரோவோட அப்பா ஹீரோ கிட்டே வீட்டுக்கு சுண்ணாம்பு அடின்னு ஒரு டயலாக்கை 13 தடவை சொல்றார்/ ஒய் திஸ் கொலை வெறி?

6. ஹீரோ ஹீரோயின் கூட பழகி கிஸ் எல்லாம் அடிச்சு 8 மாசம் கழிச்சு ஒரு டைம் “ நாளைக்கு எனக்கு பர்த்டே”ங்கறார்.. ஹீரோயின் பேக்கு போல “ அப்படியா?” ந்க்கறார்.. அது கூட அந்த 8 மாசத்துல தெரியாதா? இந்தக்காலத்து பொண்ணுங்க சும்மா ஃபிரண்ட்ஷிப் பிடிக்கறப்பவே வீட்டு அட்ரஸ், பேங்க் அக்கவுண்ட் நெம்பர் உட்பட எல்லாம் கேட்டு வெச்சுக்கறாங்க ( என் நண்பன் சொன்னது.. மீ அப்பாவி )

7.  ஹீரோயின் ஏரியா பசங்க கூட ஹீரோ அடிக்கடி தகறாரு பண்றாரு.. கிட்டத்தட்ட அவங்க வில்லன் மாதிரி.. அவங்க எப்படி ஹீரோவோட பர்த்டே பார்ட்டிக்கு வர்றாங்க.. அவங்க கூட சிரிச்சு பேசறாரு.. அடுத்த ஷாட்ல சண்டை போட்டுக்கறாங்க.. எடிட்டிங்க் ஃபால்ட்டா?

8. இந்தக்காலத்துல ஃபுல் நேக்கட்டா த்ரிஷா நடிச்ச பிட் படம் ரிலீஸ் ஆகியும் யாருக்கும் எந்த பாதிப்பும் இல்லை, அதுக்குப்பின் தான் மார்க்கெட் ஏறுச்சு,, ஆனா சாதா லிப் கிஸ் செல் ஃபோன்ல பரவுச்சுன்னு அமெரிக்கா மாப்ளை கூட வேணாம்னு அமெரிக்கால இருந்து ஃபோன் பண்ணீ சொல்ரது செம காமெடி..

 9. அதைக்கூட பொறுத்துக்கலாம்.. காபி ஷாப் வேலை என்ன கவர்மெண்ட் வேலையா? லிப் கிஸ் வெளீல தெரிஞ்சதால அந்த வேலை போயிடுச்சுன்னு ஹீரோயின் பொலம்புது.. அவ்வ்வ்


10. ஹீரோயின் கையை வில்லன்க பிடிக்கறாங்க.. ஹீரோ 12 பேரையும் 1 கிமீ தூரம் இழுத்துட்டு போய் 10 நிமிஷம் வரை அவ கையை விட்றா.. அப்டினு சொல்லிட்டு இருக்கார்.. ரீ ரெக்கார்டிங்க்ல இதெல்லாம் செக் பண்ண மாட்டீங்களா?


http://3.bp.blogspot.com/-VRblamwwzaI/T4JZV5ojHyI/AAAAAAAAmyo/TqW2hzst1qU/s1600/Ooh+La+La+La+Movie+Stills+Mycineworld+Com+(13).jpg

எதிர்பார்க்கும் ஆனந்த விகடன் மார்க் - 36

எதிர்பார்க்கும் குமுதம் ரேங்க் - சுமார்


சி.பி கமெண்ட் - அய்யய்யோ
 
ஈரோடு ஸ்ரீ கிருஷ்ணாவில் படம் பார்த்தேன்
http://3.bp.blogspot.com/_ZmRar3zwXQY/TFHAKeLS_DI/AAAAAAAAArQ/ep7v83uXOnk/s1600/urvasi+latha+lalitha+lavanya+movie+tamil+mp3+songs.jpg

10 comments:

Unknown said...

ஏ.எம் ரத்னம் பாவம்ல?

Unknown said...

பாஸ்...வாசிக்கும்போதே வலிக்குது பார்த்த உங்களுக்கு...

Senthil said...

Escape!!!!
thanks
Senthil,Doha

Anonymous said...

புட்டுக்குச்சா...?

ஊத்திக்குற படங்களுக்கு ஒரு வாரம் கழிச்சு விமர்சனம் எழுதுங்க...

அவங்களுக்கு ஒரு வார கலக்சனாவது தேறும்...

மனித புத்திரன் said...

தல சிபி வாழ்க!எம்புட்டு டென்சனா இருந்தாலும் தல ப்ளாகை பார்த்தா மனசு லேசாகிடுது!நன்றி

தமிழ்வாசி பிரகாஷ் said...

அய்யய்யோ.... ஒரே ஹீரோயின் படமா போட்டு சிபி வழியறாரே....

கிளாமர் படமா இருக்குமோன்னு டவுட் அண்ணே டவுட்....

Anonymous said...

படமே பாக்கல்ல

Yoga.S. said...

வணக்கம் சி.பி சார்!விமர்சனம் படம் ஊத்திக்கிச்சுன்னு சொன்னாலும்,ஸ்டில்லுங்க போட்டு குஷிப்படுத்தினதுக்கு தேங்க்ஸ்!

Yoga.S. said...

manazeer masoon said...

படமே பாக்கல்ல.///பீல் பண்ணாதீங்க.அதான் ஊத்திக்கிச்சுன்னு அண்ணன் சொல்லுறாரில்ல?

Unknown said...

சங்க ஊதிட்டாங்களா.....? நான் கூட என்னமோன்னு நினைச்சேன்!