Friday, April 20, 2012

சைக்கோ டைரக்டர் செல்வராகவன் பேட்டி - கெடாவெட்டு

 http://img1.dinamalar.com/cini/CineGallery/VM_120018000000.jpg
 
செல்ல மகள் லீலாவதியைத் தன் மடியில் போட்டுத் தாலாட்டிக்கொண்டு இருந்தார் அப்பா செல்வராகவன். ''இது வரைக்கும் வேலைனு கிளம்பி, வெளியூரோ, வெளிநாடோ எங்கே போனாலும் மனசு எப்பவும் வீட்டைத் தேடாது. ஆனா, இப்போ ஒருநாள்கூட இவளை விட்டுட்டு இருக்க முடியலை. எப்படா ஷூட்டிங் முடியும்னு காத்திருந்து, நிஜமாவே பிரேசில்ல இருந்து பறந்து வந்திருக்கேன்!'' - 'இரண்டாம் உலகம்டென்ஷன் மறந்து சிரிக்கிறார் செல்வராகவன்.விகடன் பேட்டி இது
1.  '' 'மயக்கம் என்ன’ - அந்த அளவுக்குத் திருப்தி கொடுக்கலையே...''


சி.பி - படம் நல்லாலைன்னு சொல்றீங்களா? துள்ளுவதோ இளமை, 7G ரெயின்போ காலனி அளவு கில்மா இல்லைன்னு சொல்றீங்களா?
''அது இயற்கைதான். எனக்கே எதிலும் திருப்திப்பட்டுப் பழக்கம் இல்லை. அதுவும் என்னை மாதிரி ஆளெல்லாம் திருப்தி அடைஞ்சுட்டா... அவ்வளவுதான்.

சி.பி - நீங்க சோனியா அகர்வாலை டைவர்ஸ் பண்ணுனப்பவே அது தெரிஞ்சிடுச்சுங்க.. அவங்களை லவ் பண்றப்ப என்ன பேட்டி குடுத்தீங்க? -” என்னதான் கருத்து வேற்றுமை வந்தாலும் எங்களை யாராலும் பிரிக்க முடியாது”

 அதான், வெற்றி தோல்வி இரண்டில் இருந்தும் விலகியே இருக்கேன். இப்போ மனசு முழுக்க 'இரண்டாம் உலகம்தான். அந்தப் பட ஸ்க்ரிப்ட் எழுதுறது பெரிய ரோதனை.

 சி.பி - எழுதறதே ரோதனைன்னா அதை படிக்கற, பார்க்கற எங்களுக்கு எவ்ளவ் வேதனை?

 அதைப் படமாக எடுக்கிறது பெரிய சோதனை. இதை இந்தியில் செய்யப் பிரியப்படுறவங்க, 'ஸ்க்ரிப்ட்டைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கே... எப்படி இதை ஸ்க்ரீன்ல கொண்டுவருவீங்கனு பார்க்க ஆசையா இருக்குனு சொல்றாங்க!''

சி.பி -  என்னது? ஸ்க்ரிப்ட்டைப் படிக்கவே ஒரு மாதிரியா இருக்கா? செம கில்மா கதையா?இந்தப்படத்துல  ஹீரோ தன் ஃபிரண்ட்டோட தம்பியோட லவ்வரை கரெக்ட் பண்றானா? வசனம் சாரு நிவேதிதாவா?

http://123tamilcinema.com/images/2011/09/anu-350x416.jpg
2. ''அப்படி என்ன பெரிய துணிச்சலான முயற்சியில் இறங்கி இருக்கீங்க?''

சி.பி - என்ன அப்படி கேட்டுட்டீங்க? அண்ணன் ஜூனியர் கே பாலச்சந்தர், சீனியர் உயிர் புகழ் சாமி.. ஓடிப்போகும் 10 ந்கிளாஸ் ஸ்டூடண்ட்ஸ்க்கு முன்னோடி
''துணிச்சல்னு சொன்னா, உடனே இங்கே றெக்கைகளை வெட்டிர்றாங்களே. எந்தப் படம் எடுத்தாலும் அதை என் சொந்த வாழ்க்கையோடு சம்பந்தப்படுத்திப் பார்க்கிறாங்க. கொஞ்சம்கூட நியாயமே இல்லாத செயல் இது.

சி.பி - உங்க கதை எல்லாமே அப்படித்தானே இருக்கு? சிம்பு - ஐஸ்வர்யா தனுஷ்- தனுஷ் கதைதானே மயக்கம் என்ன? 

ஒரு ரேடியோல செய்தி கேட்கும்போது, அதோட நாம சம்பந்தப்படுத்திக்கிறது இல்லை. .பி.எல். பார்க்கும்போது அதை தீவிரமா எடுத்துக்கிறது இல்லை. ஆனா, சினிமானு வந்துட்டா மட்டும் உடனே,

'இவன் வாழ்க்கை யில் இது நடந்திருக்கும்டானு பேச ஆரம்பிச்சுடுறாங்க. படத்தைப் படமா மட்டும் பாருங்கனு சொல்லத் தோணுது. இங்கே தேவதாசிகளைப் பத்தி வெளிப் படையா ஒரு படம் பண்ண முடியாது. பயந்து பயந்து படம் எடுக்க வேண்டியிருக்கு. இதெல்லாம் என் காலத்துக்குள்ளேயாவது மாறுமானு பார்க்க ஆசையா இருக்கு. ஆனாலும், 'இரண்டாம் உலகம்நிச்சயம் வழக்கமான என் பாணியில் இருக்காது.''


சி.பி - என்னது? படம் உங்க பாணீல  இல்லையா? அப்போ ஹீரோ சைக்கோ கிடையாதா? ஸ்கூட்டரோ வா? அவ்வ்வ்வ்  

 
3. ''நீங்க சொல்றதைவெச்சுப் பார்த்தா, படத்துக்கு ஆர்யா பொருத்தமா இருக்காரா? இன்னமும் அவரோட ப்ளேபாய் இமேஜ்தானே பிரபலம்?''

சி.பி - ஆர்யா பொருத்தமா இருக்காரோ இல்லையோ, எடுத்த வரை படத்தை போட்டுப்பார்த்து வருத்தமா இருக்காராம்
''சரி... அப்படியே எத்தனை நாள் இருக்கிறது? ஆர்யா ரொம்ப சென்சிபிள். எப்படி வேணுமோ அப்படி மாறுறார். ஆர்யா, அனுஷ்கா ரெண்டு பேரும் இந்தப் படத்துக்குக் கொடுத்திருக்கிற பெர்ஃபார்மென்ஸ் ரொம்பப் பெருசு. ஆர்யா நிச்சயம் அடுத்த லெவலுக்குப் போக வேண்டிய நேரம் இது. இந்தப் படம் நிச்சயம் ஆர்யாவை எலிவேட் பண்ணும். நான் அவரைப் பத்தி இவ்வளவு திருப்தியா பேசும்போதே, அவர் சரியான சாய்ஸ்தான்னு உங்களுக்குப் புரிஞ்சிருக்குமே!''

சி.பி - இந்த பேட்டியை படிச்சு அனுஷ்கா ரசிகர்கள் கோவிச்சுக்க மாட்டாங்களா? ஹி ஹி 

 http://img1.dinamalar.com/cini/ShootingImages/11562843223.jpg
4. ''உங்க படங்களை நீங்களே திருப்பி எடுக்கிற மாதிரி இருக்கு. ஏன் இந்தத் தப்பைப் பண்றீங்க?''

சி.பி - கண்டவன் எல்லாம் என் படத்தை ரீ மேக் பண்ணிடக்கூடாது, அதான் நானே என் படத்தை ரீமேக்கிங்க் ஹி ஹி 
''சமயங்கள்ல அப்படி நடந்துடுது. ஆனாலும், முழுக்கவே அப்படிச் சொல்லிடவும் முடியாது. 'மயக்கம் என்னவிமர்சனங்களில் தனுஷ் கேரக்டரை 'சைக்கோனு ஒரு வார்த்தையில் சொல்லிட்டாங்க. ஆனா, அது அப்படி இல்லை. ஒரு கிரியேட் டர் குடிக்கு அடிமையானா, எப்படி

நடந்துக்குவான்னு டீடெய்ல் பண்ணியிருந்தோம். நாம எப்பவும் ரெண்டு மூணு வார்த்தை வெச்சிருக்கோம்... லூஸு, பெர்வெர்ட், சைக்கோனு. ஒரு குடிகாரனை சைக்கோனு சொல்லிட்டா, அப்புறம் நான் என்ன பண்ண முடியும்? ஒண்ணு... ஹீரோ, காமெடி நடிகர்னு வெச்சுக்கிட்டு மசாலாப் படம் பண்ணலாம்

 இல்லேன்னா, ஏதோ ரகசியம் இருக்குனு யோசிக்கிற மாதிரி வித்தியாசமா எடுக்கலாம். எனக்கு முதல் விஷயம் சுட்டுப்போட்டாலும் வராது. இரண்டாவது சொன்னதுதான் வரும். அதுலயே இன்னும் தொடாம நிறைய விஷயங்கள் அப்படியே இருக்கு. அதை அழகாச் செய்ய ஆசை. என் லிமிட் எனக்குத் தெரியும்.''

சி.பி - அண்ணனுக்கு ஏன் காமெடி வராதுன்னா அண்ணன் சிந்தனை எப்பவும் காம நெடியாவே இருக்கு.. அதான் 
5. ''ரொம்ப சாஃப்ட் ஆயிட்டீங்களே... இந்த நேரம் வீட்ல இருக்கீங்க. முகத்திலும் வார்த்தைகளிலும் அவ்வளவு சாந்தம் வந்திடுச்சு. ஒரு குழந்தை இவ்வளவு மாற்றங்களைக் கொண்டுவருமா?''


சி.பி - அண்ணன் செம ஹார்டுங்க, அசிஸ்டெண்ட் டைரக்டர்ஸ் கிட்டே எல்லாம் வள் வள். ஆனா உடன் இருக்கும் ஹீரோயின் கிட்டே மட்டும் ஜொள் ஜொள் ( ஆண்ட்ரியா, ரீமா சென் எக்செட்ரா.. )
''கொண்டுவந்திருக்கே! பாப்பாவோட சின்ன அசைவுகள்கூடப் பேரானந்தம் தருது. ஸ்கூலுக்குப் போன பிறகு, 'எனக்கு ஏன் லீலாவதினு பேர் வெச்சீங்க. மாடர்னாவே இல்லைனு பாப்பா திட்டும். அதுக்காக வாய்ல நுழைய முடியாத விநோதமான பேரை வைக்க முடியாது. அடுத்து பெண் குழந்தை பிறந்தால், என்ன பேர் வைக்கலாம்னும் முடிவு பண்ணிட்டேன்... சகுந்தலா!''



http://www.tamilkurinji.in/images_/Anuska-twine_1330610993.jpg
6. ''மீடியாவில் எங்கே பார்த்தாலும் தனுஷ் பத்திதான் பேச்சு... பாராட்டியும் கிசுகிசு ரகசியமாகவும்... ஒரு அண்ணனா நீங்கஅவருக்கு அட்வைஸ் பண்ணுவீங்களா?''

சி.பி -அண்ணனுக்கே   ஆயிரம் பேரு அட்வைஸ் பண்ணனும்.. இந்தக்காலத்துல அட்வைஸ் பண்ணா எவன் கேட்கறான்.. 4 படம் மரண அடி வாங்குனா தானா திருந்துதுங்க 
''எங்க எல்லாருக்கும் தனித்தனி அடையாளம் இருக்கு. யாரும் யாரோட பெர்சனல் லைஃப்க்கு உள்ளேயும் போகக் கூடாது. தனுஷ் ஒரு தனி ஆள். என் தம்பிங்கிறது எல்லாம் அடுத்துதான். நாங்க ஜஸ்ட் ஃப்ரெண்ட்ஸ். அட்வைஸ் எல்லாம் பண்ணிக்கிறது இல்லை.''

7. ''என்ன திடீர்னு ஹாரிஸ் ஜெயராஜ்கூடக் கூட்டணி?''
''அதுவும் ஒரு அனுபவம். யாரும் வேண்டாம்னு அவர்கிட்ட போகலை. அவருடைய மியூஸிக் எனக்குப் பிடிக்கும். இந்தக் கதைக்கு அவர் பொருத்தமா இருப்பார்னு தோணுச்சு. வைரமுத்து, ஹாரிஸ்னு புது டீம் இன்னும் உற்சாகம் கொடுத்திருக்கு.''

http://123tamilcinema.com/images/2012/03/74d7c40df34349fd9f84f9d8b39474cd1.jpg

5 comments:

Senthil said...

no cinema review today?

thanks
Senthil,Doha

Chandru said...

காமெடி, காம நெடி அருமையான வார்த்தை பயன்பாடு & காமெடி

மனித புத்திரன் said...

மெண்டல் ராகவனை சைக்கோ என உண்மையாக விளித்த சி பி அண்ணனே நீ வாழ்க பல்லாண்டு!ஆளாளுக்கு இவனை புகழ்ஞ்து கொல்றாங்க சாமி!நீங்களாவது தில்லா பேசுறீங்களே!நன்றி

ADMIN said...
This comment has been removed by the author.
ADMIN said...

சினிமா விமர்சனம் இல்லாமல் சினிமாக்கரங்களை விமர்சனம் பண்ணியிருக்கீங்க.. காமெடி கலந்து கலக்குறதில உங்களை விட்டா வேற யார் இருக்க முடியும்>>!!!