Showing posts with label குஷ்பூ. Show all posts
Showing posts with label குஷ்பூ. Show all posts

Sunday, December 07, 2014

குஷ்பூ அங்கன இருந்தா இங்கன நமீதா?!! - ஜி கே வாசன் திடுக் பேட்டி @ த தமிழ் இந்து

திமுக, அதிமுக ஆட்சியில் நன்மை இருந்த அளவு தீமையும் இருந்தது: தமாகா தலைவர் ஜி.கே.வாசன் சிறப்புப் பேட்டி

 

திமுக, அதிமுக ஆட்சியில் எந்த அளவு நன்மை நடந்ததோ அதே அள வுக்கு தீமைகளும் நடந்துள்ளன என்று தமாகா தலைவர் ஜி.கே. வாசன் கூறினார். தமிழகத்தில் அடுத்த சட்டப்பேரவை தேர்தலை மனதில் கொண்டு தமாகாவை மீண் டும் தொடங்கியுள்ளார் முன்னாள் மத்திய அமைச்சர் ஜி.கே.வாசன். திருச்சியில் கட்சியின் தொடக்கவிழா மாநாட்டை நடத்தி முடித்துள்ள நிலையில், ‘தி இந்து’வுக்கு அவர் அளித்த சிறப்புப் பேட்டி: நீங்கள் புதுக்கட்சி தொடங்க முக்கிய காரணம் என்ன? 


 
கடந்த 2002-ல் தமாகாவை காங்கிரஸுடன் இணைத்தபோது, அக்கட்சியை வலுப்படுத்த வேண் டும் என்ற நோக்கம்தான் இருந்தது. ஆனால், தகுதியானவர்கள் கட்சி யில் ஓரங்கட்டப்பட்டதால், கட்சி வலுவிழந்தது. என்னுடன் இருந் தவர்கள் கடுமையாக பாதிக்கப் பட்டனர். இதே நிலை நீடித்தால் நம் நிலை என்ன என்ற கேள்வி கட்சி யினர் மத்தியில் எழுந்ததே புதுக் கட்சி தொடங்க காரணமாக அமைந்தது. முன்னாள் முதல்வர் ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனை, நீங்கள் புதுக் கட்சி தொடங்க ஒரு தூண்டுகோலாக அமைந்ததா? 


 
தொண்டர்களின் உணர்வை அடிப்படையாக வைத்துதான் இந்த முடிவு எடுக்கப்பட்டது. ஜெயலலிதா வுக்கு கிடைத்த தண்டனையை இதனுடன் முடிச்சுப் போட முடி யாது. அதெல்லாம் தலைவர்கள் போடும் கணக்கு. தலைவர்கள் நினைத்தால் எதுவும் நடந்து விடாது. தொண்டர்கள் நினைத்தால்தான் நடக்கும். மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது அவருடன் சென்ற அனைவரும் இப்போது உங்களுடன் வந்திருக் கிறார்களா? 


 
என் தந்தையுடன் என்னை ஒப்பிட விரும்பவில்லை. ஒரு சிலர் எங்க ளுடன் இல்லை. பெரும்பான்மை யினர் என்னுடன்தான் உள்ளனர். தேசியப் பார்வை கொண்ட மாநில கட்சியாக தமாகா இருக்கும் என்று கூறியிருக்கிறீர்கள். காவிரி, முல்லை பெரியாறு உள்ளிட்ட விவகாரங்களில் உங்கள் நிலை? 


 
இரு தரப்பு இடையே சண்டை நடக்கும்போது, சட்டம் என்ன சொல் கிறதோ அதை ஏற்க வேண்டும். கர்நாடகம், கேரளம் தங்கள் தவறை திருத்திக் கொண்டு தமிழகத்தின் நியாயமான நிலையை தலை வணங்கி ஏற்றுக்கொள்ள வேண்டும். 


முதல் இயக்கமாக வளர்வதற்கு உங்க ளுக்கு உள்ள வாய்ப்புகள் என்ன? 


 
திமுக, அதிமுக கட்சியினர் ஆண்டவர்கள், ஆண்டு கொண் டிருப்பவர்கள். அவர்களது பலத்தை குறைத்து மதிப்பிட முடியாது. அவர்களது ஆட்சியில் எந்த அளவு நன்மை செய்தார்களோ, அந்த அளவு அவர்களால் தீமையும் உண்டு. அதற்கு மாற்றாக ஏன் நாங்கள் வரக் கூடாது? மத்திய ஆட்சியில் பதவி வகித்து விட்டு, ஆட்சி போனதும் வெளியேறி யது துரோகம் என்கிறார்களே? 


 
கடந்த 2002-ம் ஆண்டில் 23 எம்எல்ஏக்கள், ஒரு எம்.பி.யுடன் தமிழகத்தில் தமாகா மூன்றாவது பெரிய கட்சியாக இருந்தது. காங் கிரஸ் எந்த வரிசையில் இருந்தது என்பதை எண்ணிப் பார்க்க வேண் டும். என் தந்தை இறந்த ஒரு வருடத் தில் தமாகாவை காங்கிரஸுடன் இணைந்தோம். அப்போது மத்தி யில் பாஜக ஆட்சிதான் இருந்தது. 
காமராஜர் போன்ற தலைவர்களின் பெயரை குறிப்பிடுவதில் ஏற்பட் டுள்ள சர்ச்சை பற்றி? 


 
காங்கிரஸ் வளர்ச்சிக்கு வித்திட் டது காமராஜர், கக்கன், மரகதம் சந்திரசேகர், வாழப்பாடி ராம மூர்த்தி, மூப்பனார் போன்றோரின் உழைப்புதான். அவர்களது புகழை போற்றாமல் இருக்க முடியாது. 
நீங்கள் அமைச்சரவையில் இருந்த போதுதான் 2ஜி, நிலக்கரி ஊழல் போன்ற பெரிய ஊழல்கள் நடந்துள் ளன. இப்போது அதற்கு வக்காலத்து வாங்க விரும்புகிறீர்களா? ஒதுங்கிக் கொள்ள விரும்புகிறீர்களா? 


 
இந்தியா ஜனநாயக நாடு. ஒருவர் மீது ஒருவர் குற்றச்சாட்டு சுமத்து வது பல மாநிலங்களில் நடந்து கொண்டுதான் இருக்கிறது. இந்த விஷயத்தில் நீதிமன்றத்தின் தீர்ப்பை தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். நீங்கள் பதவியில் இருந்தபோது, யாருக்கும் பதவி வாங்கித் தர வில்லை என்ற மனக்குறை கட்சி யினர் மத்தியில் உள்ளதே?  
மத்திய அமைச்சர், அகில இந்திய காங்கிரஸ் செயலர், தமிழ் மாநில காங்கிரஸ் தலைவர் என 13 ஆண்டுகள் பதவியில் இருந்தேன். அப்போது மனசாட்சிப்படி நியாய மாக நடந்து கொண்டேனா என்ப தற்கு புதிய கட்சியின் தோற்றம், திருச்சி கூட்டமே சாட்சி. பதவியில் இருந்தபோது சிலருக்கு என்னால் பதவிகளை பெற்றுத் தர முடியாமல் போயிருக்கலாம். அது என் கையில் இல்லை. நடிகை குஷ்பு, காங்கிரஸில் இணைந் தது அக்கட்சியை பலப்படுத்துமா? 


 
ஜனநாயக நாட்டில் எந்த துறை யைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், அவர்கள் எந்தக் கட்சியிலும் சேர லாம். அவர்களது செயல்பாடுகளை நீங்கள்தான் கணிக்க வேண்டும். தமிழகத்தில் மதுவிலக்கு அவசியம் என்று நினைக்கிறீர்களா? 


 
பூரண மதுவிலக்குதான் எங்கள் கொள்கை. அந்த நிலை ஏற்பட வேண்டும் என்று விரும்புகிறோம். ஸ்ரீரங்கம் இடைத்தேர்தலில் நீங்கள் போட்டியிடப் போவதாக ஒரு தகவல் வெளிவருகிறதே? 


 
அது தவறான தகவல். 


நிர்வாகிகள் நியமனம் எப்போது? 

 
கொடி அறிமுகம் செய்துள் ளோம், கட்சிப் பெயர் அறிவித் துள்ளோம். உறுப்பினர் சேர்க்கை இன்னும் 2 நாட்களில் அறிவிக்க உள்ளேன். படிப்படியாக நிர்வாகி களை நியமனம் செய்து கட்சிக்கு முழு வடிவம் கொடுப்பேன். அதிமுக-வுடன் உங்கள் உறவு எப்படி இருக்கும்?
எல்லா கட்சிகளுடனும் நல் லுறவே வைத்துள்ளேன். யாருட னும் தனிப்பட்ட விருப்பு, வெறுப்பு இல்லை. யாரையும் தனித் தராசில் வைத்து பார்க்க விரும்பவில்லை. மூப்பனார் கட்சி ஆரம்பித்தபோது, திமுக-வுடன் கூட்டணி வைத்து பெரும் வெற்றி பெற்றார். அதே கூட்டணி மீண்டும் ஏற்படுமா? 


 
தற்போது என் எண்ணமெல்லாம் தமாகா-வை சிறந்த இயக்கமாக உருவாக்க வேண்டும் என்பது தான். ஆனால், எங்கள் உயரம் என்ன என்பதை உணர்ந்து, தொண்டர்கள், மக்களின் எண்ணங் களைப் பொறுத்து முடிவெடுப்பேன். கூட்டணியே வைக்க மாட்டேன் என்று சவால்விட விரும்பவில்லை. தேர்தல் நேரத்தில் நியாயமான முடிவை எடுப்போம்


நன்றி - த இந்து

Saturday, February 09, 2013

குஷ்பூ தான் அடுத்த சி எம்மா? என்ன கொடுமை சுந்தர் சி சார் இது?

 
 
தி மு.க-வைப் பொறுத்தவரை திருச்சியை 'திருப்புமுனை' என்பார்கள். அப்படி ஒரு திருப்புமுனைக்கான விவாதங்களை இன்று திருச்சி தொடங்கி வைத்துவிட்டது. 'கருத்​துக்குப் பதில் சொல்ல செருப்பா?' என்று தி.மு.க-வுக்குள்ளேயே முகச்​சுளிப்புகளும் உடனே தொடங்கி​விட்டது!'' - சிறியதொரு வருத்தம் கலந்த முகபாவத்தோடு கழுகார் சொன்னார்.  
 
 
 
கடந்த வியாழன் அன்று வெளியான 'ஆனந்த​விகட’னில் நடிகை குஷ்பு ஒரு பேட்டி கொடுத்திருந்தார். 'தி.மு.க-வின் அடுத்தத் தலைவர் யார்?’ என்பது தொடர்​பான கேள்விகளுக்கு பதில் அளித்த குஷ்பு, 'தலைவர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப்பாங்க. தலைவர் மட்டும் முடிவு எடுத்துட்டதால, அடுத்தத் தலைவர் தளபதியா​தான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். கட்சியின் பொதுக்குழு கூடித்தான் அதை முடிவு எடுக்க வேண்டும்’ என்று சொல்லி இருந்தார். பேட்டியைத் தொடர்ந்து எழுந்துவிட்ட கலாட்டாக்களைப் பற்றித்தான் விரிவான தகவல்களோடு வந்திருந்தார் கழுகார்.


''இந்தப் பேட்டி இடம்பெற்ற 'ஆனந்த விகடன்' இதழ் கடைகளில் வெளியானது வியாழக்கிழமை காலை... கட்சியின் கொள்கை பரப்புச் செயலாளர் திருச்சி சிவாவின் மகள் திருமணம் அன்றுதான்! கருணாநிதி, ஸ்டாலின், கனிமொழி உள்ளிட்ட அனைத்து தி.மு.க. பிரமுகர்களும் திருச்சியில் இருந்தார்கள். கட்சியின் இன்னும் பல முக்கியஸ்தர்களும் கோட்டை மாநகரில் குவிந்​திருந்தனர்.
 குஷ்பு பேட்டியைப் படித்ததுமே கே.என்.நேரு, டி.ஆர்.பாலு ஆகியோருக்கு ஏக டென்ஷன் ஏறிவிட்டது. உடனடியாக இது ஸ்டாலினுக்கும் கருணாநிதிக்கும் போனது. 'தலைவர் பதவி பற்றி கருத்து சொல்ல இவர் யார்? குஷ்புவுக்கு யார் இப்படி எல்லாம் பேட்டி கொடுக்கும் அதிகாரத்தைக் கொடுத்தது?’ என்று  கொந்தளித்தனராம். பல்வேறு ஊர்களில் இருந்தும் ஸ்டாலினுக்கு கலவையான கருத்துக்கள் போனில் வர ஆரம்பித்தன. 'தேவை இல்லாமல் குஷ்புவை வளர்த்துவிட்டு இப்போ அவஸ்தைப்படுறோம்’ என்று முன்னாள் அமைச்சர்கள் தங்களுக்குள் கூடிப் பேசிக்கொண்டனர். குஷ்புவிடம் விளக்கம் கேட்கலாம் என்று சிலரும், அவரைக் கட்சியை விட்டு நீக்கிவிடலாம் என்று சிலருமாக கருத்து சொல்ல ஆரம்பித்தனர். 'உள்கட்சி விவகாரம் பற்றி அ.தி.மு.க-வில் இப்படி எல்லாம் பேச முடியுமா?’ என்று சிலர் ஒப்பீட்டு பட்டிமன்றம் நடத்தி​​னார்கள். 'கட்சிக்குள் வந்து மூணு வருஷம்கூட ஆகாதவர்... தலைமையைத் தீர்மானிக்கும் இடத்துக்கு வந்துவிட்டாரா?’ என்றும் கேள்விகள் எழும்பியது. அத்தனையுமே கருணாநிதி, ஸ்டாலின் காதுக்கும் போனது!''


''குஷ்பு ரியாக்ஷன்?''


''சிவா வீட்டுத் திருமணத்தில் பங்கேற்​பதற்காக அவரும் திருச்சிக்கு வந்திருந்தார். ஃபெமினா ஹோட்டலில் தங்கி இருந்தார். அதுதான் வில்லங்கம் ஆகிவிட்டது. நடக்கப் போகும் விபரீதத்தை உணராத குஷ்பு, சங்கம் ஹோட்டலில் இருந்த ஸ்டாலினை நேரில் சந்தித்து விளக்கம் தர எண்ணினாராம். ஆனால், 'ஸ்டாலின்தான் சந்திக்க மறுத்துவிட்டார்’ என்று தி.மு.க-வினர் சொல்கிறார்கள். இதைத் தொடர்ந்து திருமண விழா நடந்த தேசியக் கல்லூரி விளையாட்டு மைதானத்துக்கு ரொம்ப காஷ§வலாகவே வந்தார் குஷ்பு. எதுவுமே நடக்காத மாதிரி குஷ்புவை மேடையிலும் அனுமதித்தார்கள். கருணாநிதியின் அருகில் வந்து ஏதோ சிரித்துப் பேசிச் சென்றார். மேடையில் அவரை பேசச் சொன்னார்கள். 'குடும்பம் என்றால் சண்டைச் சச்சரவு இருக்கும். அதைச் சமாளித்து வாழ்க்கையை வாழ வேண்டும்’ என்று யதார்த்தமாக அறிவுரை சொல்லிச் சென்றார். ஃபெமினா ஹோட்டலுக்கு லாபியில் சற்றே ரிலாக்ஸாக அவர் உட்காரவும் சென்னையில் அவரது வீட்டின் மீது ஒரு கும்பல் கல் வீசித் தாக்கிய தகவல் வரவும் சரியாக இருந்தது. 'நான் அப்படி ஒன்றும் தவறாகச் சொல்லிவிடவில்லையே’ என்று அருகில் இருந்தவர்களிடம் சொன்னாராம்!''


''கருத்துச் சண்டைதான் அவருக்குப் புது​சில்லையே...!''''ஆனால், குஷ்புவை மேடை ஏற்றி வாழ்த்தச் சொன்​னது, மண அரங்கில் முதல் வரிசையில் இருந்த ஸ்டாலினின் மனைவியை கொந்தளிக்க வைத்துள்ளது. உடனடியாக அங்கிருந்து கிளம்பி ஹோட்டலுக்கு வந்துவிட்டாராம் அவர். 'குஷ்புவை யார் பேசச் சொன்னது?’ என்று பிறகு கருணாநிதியின் உதவியாளர் சண்முகநாதனிடம் அவர் சீறியதாகவும் சொல்லப்படுகிறது. திருமணம் முடிந்து ஹோட்டலுக்கு வந்த ஸ்டாலினும் டென்ஷனாகவே இருந்தாராம். 'உடனடியாக சென்னை திரும்ப வேண்டும். டிக்கெட் போடுங்கள்’ என்று சொல்லி இருக்கிறார். இந்தத் தகவல் கே.என்.நேருவுக்குப் போனதும் அவர் பதறிவிட்டார். 'கட்சிக்கு தேர்தல் நிதி கொடுக்கும் கூட்டம் மாலையில் இருக்கிறது. அதுல நீங்க இல்லைன்னா எப்படி?’ என்று கெஞ்சிக் கேட்டுக் கொண்டாராம். அதன் பிறகுதான் மாலைக் கூட்டத்​தில் கலந்துகொள்ள சம்மதித்தாராம் ஸ்டாலின்!''


''அந்த அளவுக்குப் போய்​விட்டதா?''''சென்னையில் குஷ்பு வீட்டை அடித்தார்கள் என்ற தகவல், திருச்சி விசுவாச தி.மு.க-வினரையும் உசுப்பி விட்டது. தங்கள் பங்குக்கு ஃபெமினா ஹோட்டலை நோக்கி ஒரு கும்பல் சென்றது.  வெளியே காத்திருந்தது. மதிய விமானத்தைப் பிடித்து சென்னை வருவதற்காக ஹோட்டலை விட்டு வெளியே வந்த குஷ்புவை நோக்கி ஒருவர், செருப்பை வீசி இருக்கிறார். அவருடன் வந்தவர்கள் அதனை தட்டி விட்டுவிட்டார்கள். 
அடுத்து பத்துப் பதினைந்து பேர் வந்து, செருப்பைக் கழற்றி வரிசையாக வீச வர... அதனை குஷ்புவுடன் வந்தவர்கள் தடுக்க... அதையும் தாண்டி குஷ்பு தலையில் ஒருவர் அடித்துவிட... 'நான் போலீஸைக் கூப்பிடுறேன்’ என்று இவர் சொல்ல... 'எங்க தளபதியைப் பத்திப் பேச நீ யாரு?’ என்று கூடடத்​துக்குள் இருந்து ஒரு கர்ஜனை புறப்பட... மறுபடியும் ஹோட்டலுக்குள் திரும்பிப் போனார் குஷ்பு.!''''ம்!''


''குஷ்புவை மையம் கொண்டு தி.மு.க-வுக்குள் கடந்த இரண்டு மாதங்களாகவே சுழல் இருக்கிறது. 'குஷ்பு அளவுக்கு அதிகமாக அட்வான்டேஜ் எடுத்துக்கொள்கிறார். பொதுமேடைகளில் அவர் தலைவரிடம் பேசுவது மீடியாக்களில் அதிகமாக வருகிறது. கட்சியிலும் தலைவரிடமும் தனக்கு அதிக செல்வாக்கு இருக்கிறது என்பதைக் காட்டிக்கொள்ள அடிக்கடி அவர் கோபாலபுரத்துக்கு வந்து செல்வது குடும்பத்துக்குள் பலரது முகத்தையும் சுளிக்க வைத்துள்ளது. அதனால் கோபாலபுரம் இல்லத்துக்கு அவர் வரக் கூடாது என்று எதிர்ப்பு கிளம்பி உள்ளது என்று நான் ஏற்கெனவே சொல்லி இருந்தேன். 'கோபாலபுரத்துக்கு வராதே... குஷ்புக்கு தடை போட்டதா குடும்பம்?’ என்று 25.11.12 தேதி ஜூ.வி-யில் அட்டைப் படம் போட்டிருந்தீர்! தென் சென்னை எம்.பி. தொகுதியை தனக்குத் தர​வேண்டும் என்று குஷ்பு கேட்டதாகவும் அதற்குத் தலைமை சம்மதிக்கவில்லை என்றும்கூட அப்போது கிளம்பியச் செய்தியைச் சொல்லி இருந்தேன். அதையெல்லாம் வைத்துத்தான் குஷ்பு இப்படி கருத்துச் சொல்லிவிட்டாரா என்றுகூட சீனியர்கள் சந்தேகப்பட ஆரம்பித்துள்ளனர்.''''அடுத்து அவர் என்ன செய்வார்?''''தான் சொன்னதை சிலர் மிஸ்அண்டர்​ஸ்டேண்டிங் செய்துகொண்டார்கள் என்று சொல்லி வருகிறாராம். ஆனால் குஷ்புவை கட்சியை விட்டு நீக்குவதில் சிலர் முடிவோடு இருக்கிறார்கள். அநேகமாக ஒரு வாரத்துக்குள் விவகாரம் வெடிக்கும்'' என்ற கழுகார், சிறிது இடைவெளிவிட்டு மறுபடியும் தொடங்கினார்.''திருச்சி சிவா மகள் திருமணத்தை நடத்தி வைத்துப் பேசிய கருணா​நிதி ஒரு ஸ்கூப் நியூஸ் கொடுத்தார். 'ஆறு மாதத்துக்கு முன்பு இந்த நிகழ்ச்சிக்கு தேதி வாங்கிய சிவா, அதன் பிறகு என்னை இன்று காலை வரை ஒரு முறைகூட நினைவுப்படுத்தி அழைக்கவே இல்லை. அப்படி இருந்தும் நான் இங்கே வரக் காரணம், எங்களுக்கு இடையே உள்ள குடும்பப் பாசம். தம்பி சிவாவுக்கு எதிர்காலம் பொற்காலமாக அமைய இருக்கிறது. 
அவரது பேச்சில் நானே மயங்கி​யவன். அவரது கொள்கை விளக்கப் பேச்சை நான் என்றும் மறக்கப் போவதில்லை’ என்று பொடி வைத்துப் பேசினார். சிவாவின் ராஜ்யசபா எம்.பி. பதவி காலம் இன்னும் சில மாதங்களில் நிறைவுபெற இருக்கிறது. தி.மு.க-வுக்கு இப்போது உள்ள எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையைக் கொண்டு ராஜ்யசபா எம்.பி-யைத் தேர்ந்தெடுக்கும் வாய்ப்பு இல்லை.அதனால் மக்களவை தேர்தலில் போட்டியிடுவதற்கான வாய்ப்பு சிவாவுக்கு வழங்கப்படலாம் என்பதைக் கருணாநிதி அப்படி சூசகமாக சொன்னதாகக் கழக முன்னோடிகள் சிலர் விளக்கம் அளிக்கின்றனர். பலரும் 'திருச்சி தொகுதி எம்.பி.' என்று சிவாவை இப்போதே சொல்ல ஆரம்பித்துவிட்டார்கள்.''
''ஆனால், அவருடைய லோக்கல் எதிரி கே.என்.நேருதானே வெற்றிக்குப் பாடுபட வேண்டும்?''


''அது அவர்கள் பாடு!'' என்ற கழுகார்,

''திருச்சி வந்தால் பெரும்பாலும் சங்கம் ஹோட்டலில் தங்குவதை வழக்கமாகக் கொண்ட கருணாநிதிக்கு இந்த முறையும் அங்கேதான் ஜாகை. காலை பத்திரிகையாளர் சந்திப்பின்போது மிகுந்த உற்சாகமாகக் காணப்பட்டார் பத்திரிகையாளர்கள் கேட்ட கேள்விகள் சரிவர அவர் காதில் விழாததால், தலைவருக்கு  அருகில் அமர்ந்தபடி உரக்கச் சொன்னார் ஸ்டாலின். என்ன தோன்றியதோ...  பத்திரிகையாளர்களுடன் ஒரு குரூப் போட்டோவும் எடுத்துக்கொண்டார். திருமண விழாவில் முன்னிலை என பெயர் குறிப்பிடப்பட்டு இருந்த தென் மண்டல அமைப்புச் செயலாளர் மு.க.அழகிரி வரவில்லை. அவர்தான் கால் வலி காரணமாக சிகிச்சை எடுக்​கிறாரே!. மதுரை மருத்துவமனைக்கு அழகிரி வீல் சேரில் வந்தது பலரையும் உன்னிப்பாக கவனிக்க வைத்தது.'''
அட்டைப் படம்: 'ப்ரீத்தி’ கார்த்திக்


படங்கள்: என்.ஜி.மணிகண்டன், பா.காளிமுத்து


 


 குஷ்புவுக்கு ஆதரவாக துரை தயாநிதி!  
திருச்சி சம்பவம் நடந்த சில மணி நேரங்களில் ட்விட்டர் சமூக வலைதளத்தில், ''நான் நலமாக இருக்கிறேன். ஒரு துரதிருஷ்டம் நேர்ந்துவிட்டது. விசாரணை முடியும் வரை இது​பற்றி கருத்து எதுவும் சொல்ல முடியாது'' என்று தட்டிவிட்டார் குஷ்பு. அவருக்கு உடனே ஆதரவு கமென்ட்கள் பறந்து வர ஆரம்பித்தன. எஸ்.வி.சேகர், பாடகி சின்மயி ஆகிய பிரபலங்கள் தைரியம் சொன்னார்கள். மீண்டும் குஷ்பு, ''இந்த இக்கட்டான சூழலில் பல தரப்புகளில் இருந்தும் வரும் ஆதரவுகளை கண்டு என் மனம் உணர்ச்சிவசப்படுகிறது. நான் எப்போதும் வெற்றிபெறும் பெண்ணாகவே இருந்து வருகிறேன். இப்போதும் அப்படியே'' என்று பதிவு போட... அழகிரியின் வாரிசான துரை தயாநிதி இதை  'ரீ-ட்விட்’ செய்ததை ஸ்டாலின் தரப்பு கவனிக்கத் தவறவில்லை.


சர்ச்சைக்குரிய பேட்டி


சின்ன தும்மல், களைப்பான கண்கள், சோர்வு ததும்பும் குரல்... குஷ்பு இஸ் நாட் ஃபீலிங் வெல்! ஆனால், ஒவ்வொரு கேள்விக்கும் பாய்ந்து வந்த பதில், அதிரடி!
ஸ்டாலினுக்குத் தலைவர் பதவி, கோபாலபுரத்துக்குள் நுழையத் தடை, விஜயகாந்துடனான கூட்டணி, நாடாளுமன்றத் தேர்தலில் போட்டி, தி.மு.க-வில் இருந்து ஒதுக்கப்படுகிறாரா என்ற எல்லாக் கேள்விகளுக்கும் பதில் அளித்தார் குஷ்பு.  ''தி.மு.க-வுக்கு ஸ்டாலின்தான் அடுத்த தலைவரா வரணும்னு கருணாநிதியே அறிவித்துவிட்டாரே?''  ''நாமளே அப்படி ஒரு முடிவுக்கு வந்துடக் கூடாது. தலைவர் என்ன சொல்லியிருக்கார்னா, எனக்கு அப்புறம் சமூகப் பணிகளைத் தளபதி செயல்படுத்துவார்னுதான். தி.மு.க. தலைவரைத் தேர்ந்தெடுக்க தனக்கு ஒரு வாய்ப்பு கிடைச்சா, தளபதிதான் அவரோட சாய்ஸ்னு சொல்லியிருக் கார். ஆனா, இறுதி முடிவைப் பொதுக்குழுதான் எடுக்கும். 'யார் கட்சித் தலைவர்’னு முடிவு பண்றப்போ, அதைப் பத்திப் பேசுவோம்.'' 


''ஆனா, அந்த அறிவிப்புக்கே அழகிரி பயங்கர எதிர்ப்புத் தெரிவிச்சாரே?''


'' 'நான் இதை ஏத்துக்க மாட்டேன்’னு அழகிரி அண்ணன் சொன்னாரா? தளபதியோ, அழகிரி அண்ணனோ, தலைவரோ... யாருமே அண்ணன், தம்பிக்குள் பிரச்னைனு சொல்லலையே. வெளியில சம்பந்தம் இல்லாதவங்க பேசிக்கிறதுக்குப் பதில் சொல்ல வேண்டியது இல்லை.''''சரி... நீங்க உங்க கருத்தைச் சொல்லுங்க... ஸ்டாலின், அழகிரி, கனிமொழி... தி.மு.க. தலைவர் பதவிக்குப் பொருத்தமானவங்க யார்?''''திரும்பவும் சொல்றேன்... அதை பொதுக் குழுதான் முடிவு பண்ணும்.  தலை வர், பேராசிரியர் எல்லாரும் இது சம்பந்தமா கலந்து பேசி முடிவு எடுப் பாங்க. தலைவர் மட்டுமே முடிவு எடுத்துட்டதால, அடுத்த தலைவர் தளபதியாதான் இருக்கணும்னு அவசியம் இல்லை. அது கட்சியில் யாராகவும் இருக்கலாம். உட்கட்சித் தேர்தல் நடக்கும். எல்லாரும் வாக்களிப்போம். எல்லாம் முறைப்படி நடக்கும். தி.மு.க - வில் சின்னச் சின்னப் பதவிகளுக்குக்கூட உட்கட்சித் தேர்தல் மூலம்தான் ஆட்களை நியமிப் பாங்க. ஆனா, என் வழி தலைவர் வழிதான்!''''அதான் 'எனக்குப் பிறகு ஸ்டாலின்’தான்னு தி.மு.க. தலைவர் கருணாநிதியே சொல்லிட்டாரே?''''எல்லார் விருப்பப்படிதான் தலைவர் தேர்ந்து எடுக்கப்படுவார்னு தலைவரே சொல்லியிருக்கார். கட்சியில அடிமட்டத் தொண்டனாஇருப்ப வங்களுக்குக்கூட தலைவரைத் தேர்ந்தெடுக்க உரிமை இருக்கு. தலைவர் முடிவு எடுத்துட்டா ரேனு யாரையும் தேர்ந்தெடுக்க முடியாது. கட்சியின் நலனுக்கு யார் பொருத்தமாஇருப்பாங் களோ, அவங்களை உட்கட்சித் தேர்தல் நடத் தித் தேர்ந்தெடுப்பாங்க.''''சமீப காலமா தி.மு.க-வில் இருந்து உங்களை ஒதுக்கிவெச்சிருக்காங்கன்னு சொல்றாங்களே?''''சம்பந்தம் இல்லாம யாரோ பேசுற பேச்சுக்குஎல்லாம் நான் ஏன் பதில் சொல்லணும்? இந்தப் பேச்சு எப்படி வந்திருக்கும்னு நான் சொல்லவா? தி.மு.க-வின் வீர வணக்க நாள் கூட்டத்தில் நான் கலந்துக்கலை. அன்னிக்கு எங்க வீட்ல முக்கிய மான விசேஷம் ஒண்ணு இருந்துச்சு. இந்த விஷயத்தைத் தலைவர்கிட்ட யும் தளபதிகிட்டயும் நேர்லயே சொல்லிட்டு வந்துட்டேன். உலகத் துக்கே தெரியும்... எனக்குக் கட்சி, சினிமாவைவிடக் குடும்பம்தான் முக்கியம்னு. அன்னிக்கு என் பொண்ணுக்கு ஒரு விசேஷம். அதனால, அந்தக் கூட்டத்தில்நான் கலந்துக்கலை. இதை மட்டுமே வெச்சு என்னைக் கட்சியில ஒதுக் கிட்டாங்கன்னு சொன்னா, அதை ஏத்துக்கவே முடியாது. முன்னாடி வள்ளுவர் கோட்டத்துல மின்வெட் டுக்கு எதிரா நடந்த கண்டனஆர்ப் பாட்டத்துல தலைவர் முன்னிலை யில் பேசினப்ப, சிறப்பு முக்கியத்து வம் கொடுக்குறாங்கன்னு பேசு னாங்க. இப்ப, ஒரே ஒரு கூட்டத்துக் குப் போகாததால், ஒதுக்கிவெச்சுட் டாங்கன்னு சொல்றாங்க. குட் ஜோக்!''''நீங்க கோபாலபுரத்துக்கே வரக் கூடாதுனு ஆர்டர் போட்டிருக்கறதா...''


(கேள்வி முடிவதற்குள்ளாகவே) ''இதுக்கெல்லாம் விளக்கம் கொடுக்க எனக்கு நேரம் இல்லை.''  '' 'விஸ்வரூபம்’ பட விவகாரத்தின் பின்னணியில் எந்த அரசியலும் இல்லைனு நம்புறீங்களா?'''' 'விஸ்வரூபம்’ பத்தி இனிமே நாம பேசினா, அது கமல் சாருக்குத்தான் பிரச்னையா முடியும். கமல் சாரைப் பாதிக்கும்கிறதால அதைப் பத்தி நான் எதுவும் பேச விரும் பலை. அதான் அரசாங்கம் சார்பிலேயே பேசி ஒரு முடிவுக்கு வந்துட்டாங்களே!''''அது தொடர்பான விவாதத்தில், 'ஜெயா டி.வி-க்கும் தனக்கும் சம்பந்தம் இல்லை’னு ஜெயலலிதா சொல்லியிருக்காங்களே?''


''அதை நீங்க நம்புறீங்களா? சம்பந்தம் இல்லைனு சொல்றாங்க. ஆனா, அந்தப் பேட்டி கொடுத்தப்ப, ஜெயா டி.வி. மைக் மட்டும்தான் அவங்க
முன்னாடி இருக்கு. எல்லா உண்மையும் புரியுற அளவுக்கு மக்கள் தெளிவா இருக்காங்க.''  ''நாடாளுமன்றத் தேர்தலுக்காக விஜயகாந்த் தி.மு.க. கூட்டணிக்கு வரப்போறதா பேச்சு அடிபடுதே?''''எதிர்காலத்துல நடக்கப்போறதைப் பத்தி இப்பவே ஏன் பேசணும்? வரட்டும். அப்புறம் பார்க்கலாம். தலைவரோ, விஜயகாந்தோ அதி காரப்பூர்வமா அறிவிக்கிற வரை பொறுமையா இருப்போம். விஜயகாந்துடனான கூட்டணிபத்தி தளபதி எதுவுமே பேசலை. ஜனநாயகரீதியாக எதிர்க் கட்சித் தலைவருக்குத் துணையா இருப்போம்னு மட்டும்தான் சொன்னார்.''''நாடாளுமன்றத் தேர்த லில் நீங்க போட்டியிடுவீங்களா?''


''தெரியலையே! இன் னும் ஒன்றரை வருஷம் இருக்கே. கட்சித் தலைமை தான் இதை முடிவு பண்ணணும். ஒருவேளை நான் போட்டியிடலைன்னா, 'குஷ்பு கேட்டாங்க... ஆனா, தலைமை மறுத்திடுச்சு’னு எழுதுவாங்க. போன சட்டமன்றத் தேர்தல் சமயமே எல்லாமே பார்த்துட்டேன். சேலம், ஆயிரம் விளக்குனு பல தொகுதிகளில் நான் போட்டியிடப் போறதாச் சொன்னாங்க. நான் தேர்தல்ல நிக்கணும்னு கட்சியில் சேரலை. யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தா சரியா இருக்கும்னு அவங்களுக்குத் தெரியும்.''''உட்கட்சிப் பூசல் பழிவாங்கும் கொலைகளில் முடியும் விபரீதப்போக்கு தி.மு.க.-வில் அதிகரிச்சுட்டே இருக்கே?''''சும்மா... பரபரப்புக்காக அப்படி வர்ற செய்திகள் உண்மை ஆகிடாது.  ஒன் ப்ளஸ் ஒன்... பதினொண்ணுனு எழுதுவாங்க. ஆனா, எனக்கு ஒன் ப்ளஸ் ஒன் ரெண்டுனு நல்லாவே தெரியும்.உட்கட்சிப் பிரச்னை ஏன் வருது? தி.மு.க. ஜனநாயகரீதியில் செயல்படும் கட்சி. மத்த இடங்களில் கட்சித் தலைமைக்குப் பயந்து கிட்டே செயல்பட வேண்டிய கட்டாயம். ஜன நாயக மரபுகளைக் கடைப் பிடிக்கிறதால, உங்களுக்கு அப்படித் தெரியுது. இதை விட அதிகமான உட்கட்சிப் பூசல்கள் மத்த கட்சிகளில் இருக்கும். ஆனா, அதெல் லாம் வெளியே தெரியாது. ஏன்னா பயம்!இன்னொரு விஷயம்,உட் கட்சிப் பூசல்கள் ஒரு கட்சி யின் வளர்ச்சிக்கு மைனஸ் கிடையாது. ஒரு குடும்பமா செயல்படும்போது, அதுல இருக்கிறவங்க தங்களோட வருத்தங்கள், கோபங்களை உள்ளேயே வெச்சுட்டு இருக் கிறது நல்லது இல்லையே. ஓப்பனாப் பேசினாத்தானே பிரச்னைக்கு ஒரு முடிவு வரும்.''''எப்பவும் ஏதாவது ஒரு சர்ச்சை உங்களை வட்டமிட்டுக்கொண்டே இருக்கே... சமீபத்தில், ராமர் படம் போட்ட புடவை. ஒருவேளை பரபரப்புக்காகவே இப்படிப் பண்றீங்களா?''''யாரை விமர்சிச்சா லாபம் கிடைக்குமோ, அவங்களைத்தானே தொடர்ந்து குறிவைப்பாங்க. ஆனா, ஒண்ணே ஒண்ணு மட்டும் அவங்களுக்குப் புரியவே மாட்டேங்குது. அது, குஷ்பு யாருக்கும்பயப்பட மாட்டா!என் டிக்ஷனரியில் பயம்கிறதே கிடையாது. அன்பு, பாசத்துக்கு மட்டும்தான் கட்டுப்படுவேன். அச்சுறுத்தல், மிரட்டலுக்கு அடிபணிய மாட்டேன். எனக்குப் பயம்னா என்னன்னே தெரியாது!''


 
மக்கள் கருத்து 


1. பத்த வெச்சுட்டியே பரட்ட2.சேலையில ஒரு டிசைனை வைத்துக்கொண்டு ஒரு கூட்டம் அரசியல் செய்த்து.... அந்த கேடுகெட்ட கூட்டம்தான் கருத்துச் சுதந்திரம் பற்றி எக்காளம்போட்டது...... அட ஒரு சேல தனக்குப் புடிச்சமாதிரி கட்டமுடியல.... கருத்தாம் சுதந்திரமாம்... கேடுகெட்டதுகள்... 


3. அப்பாடா இன்னுமொரு வருங்கால முதல்வர் பேட்டியை விகடன் தந்துள்ளது!. யார் கண்டது திமுக காரர்கள் இவரை முதல்வராக தேர்ந்தெடுக்கலாம். ஏனென்றால் இவர் ஒரு சினிமா ஹிரோயின். கனவு உலகத்தில் மயங்கும் தமிழர்கள் இப்படி செய்தாலும் செய்வார்கள். 4. விகடன் புண்ணியத்தால் குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர தலைவியாக போகிறார்... இந்த பேட்டியை படித்த ஸ்டாலினின் உண்மை தொண்டர்கள் தலைவி குசுப்பூவிற்கு பலவிதமான இன்னல்களை கொடுக்க துவங்கிவிட்டனர்... திருச்சியில் கார் மீது தாக்குதல், திருச்சி விமாண நிலையத்தில் செருப்பு வீச்சு, சென்னையில் குசுப்பூ வீட்டின் மீது கொடூர தாக்குதல்.... திமுகவில் இப்படியெல்லாம் செய்வார்கள் என்பதை அறியாதவரா குசுப்பூ??? இனி தான் குசுப்பூ தனது வீரியத்தை வீசுவார்... அப்பொழுது தான் ஸ்டாலினுக்கு பலவிதங்களிலும் போட்டியாக பல காரியங்களை செய்வார்... முடிவு குசுப்பூவின் பிடிக்கு திமுக போவதை எந்த கொம்பனாலும் தடுக்க முடியாது... அப்புறமென்ன கருணாநிதியின் காலத்திற்கு பிறகு குசுப்பூ தான் திமுகவின் நிரந்தர முதலாளி..5. அதிகப் பிரசங்கித்தனமான பேட்டி. தலைவரே ஸ்டாலின் அடுத்தவர் என்று சொல்லியும் இப்படி ஒரு பேட்டி கொடுப்பதற்கு குஷ்பூவுக்கு தைரியம் எப்படி வந்தது? பதில் சொல்லாமல் இருந்திருக்கலாம். ஏதோ திராவிடப் பாரம் பாரம்பர்யத்தில் பழம் தின்று கொட்டை போட்டவர் போல பேசுகிறார். சொல்ல முடியாது இவர் எம்.பி ஆகி அமைச்சராகவும் ஆகி விடலாம், எதுவும் நடக்கும். வாக்காளனும் இவருக்கு ஓட்டைப் போட்டு விட்டு, ஓட்டுப் போட்டதையே மறந்து விட்டு டாஸ்மாக்கில் விழுந்து கிடப்பான்.6. அன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் கோவில் கட்டினார்கள்.... இன்று இதே குசுப்பூவிற்கு இதே திருச்சியில் செருப்பை வீசி மரியாதை செய்திருக்கிறார்கள்... இதெல்லாம் செய்தது யார் தெரியுமா??? மாபெரும் ஜனநாயகம் இயக்கம் என்று தணக்கு தானே புகழாரம் சூட்டி கொள்ளும் கருணாநிதி திமுகவின் உடன்பிறப்புக்கள்.... இனியென்ன குசுப்பூவை கட்சியிலிருந்து ஓரங்கட்டுவார்கள்.... இதையறிந்தே குசுப்பூவும் அஞ்சாநெஞ்சரின் ஆசியை பெற்றிருக்கிறார்... அஞ்சாநெஞ்சரின் அருளாசியிருக்கும் போது இனி குசுப்பூவிற்கு பயமில்லை...


 
நன்றி - விகடன் 

Wednesday, July 04, 2012

கலைஞர் -குஷ்பூ இணைந்து வழங்கும் சிறை நிரப்பும் போராட்டம் - காமெடி கலாட்டா

http://1.bp.blogspot.com/_Aulhuuecnl8/SYWKWhvrz8I/AAAAAAAAB4Q/N6O6AGYmDBY/s400/DN_01-02-09_E1_05-06%2520CNI.jpg 

சென்னை: சிறை நிரப்பும் போராட்டத்தில் கைதாகி சிறைக்கு வரும் திமுகவினருக்கு பி கிளாஸ் உணவு வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. அதன்படி நல்ல சாப்பாடு அவர்களுக்குக் கிடைக்கும். சுடச் சுட உணவு வழங்க சிறப்பு ஏற்பாடுகளும் தயார் நிலையில் உள்ளன.


இன்று சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபடவுள்ள திமுகவினர் கைது செய்யப்பட்டு சிறைச்சாலைகளுக்குக் கொண்டு செல்லப்படுவார்கள். அங்கு அவர்களுக்கு மூன்று வேளையும் நல்ல சாப்பாடு தரப்படும். அதாவது அவர்களுக்கு பி கிளாஸ் சாப்பாடு தரப்படுமாம்.

பி கிளாஸாக இருந்தாலும் சாப்பாடு சூப்பராக இருக்குமாம். காலையில் சுடச் சுட உப்புமா, வெண் பொங்கல், கஞ்சி ஆகியவை தரப்படும். இதை ஒரு நாளைக்கு ஒரு ஐட்டம் என மாற்றி மாற்றித் தருவார்களாம்.

மத்தியான சாப்பாடாக சாம்பார், காய்கறி கூட்டு, ரசம், மோர் ஆகியவை கிடைக்கும். அப்பளம் தரப்பட மாட்டாது.

இரவுக்கு சாப்பாடும், சாம்பாரும் மட்டும்தானாம். அதேசமயம், சர்க்கரை வியாதி உள்ளவர்களாக இருந்தால் அவர்களுக்கு மட்டும் 2 சப்பாத்தி தருவார்களாம்.

ஞாயிற்றுக்கிழமை கோழிக்கறியைப் போட்டு அசத்துவார்களாம்.

'ஏ' கிளாஸ் சாப்பாடு வேண்டுமென்றால்...

சிலர் ஏ கிளாஸ் சாப்பாடு வேண்டும் என்று விரும்பினால் அதற்கு கோர்ட்டில் அனுமதி பெற வேண்டும். அப்படி அனுமதி பெற்றால், அவர்களுக்கு வாரத்தில் 3 நாட்களுக்கு கோழிக்கறி குழம்பு கொடுப்பார்கள். மாலையில் கூடுதலாக சுண்டல், டீ ஆகியவை தருவார்கள். சப்பாத்தியும் விசேஷமாக கிடைக்கும்.


தூங்க போர்வையும், பாயும்

இரவில் தூங்கும்போது ஒவ்வொருவருக்கும் போர்வையும், படுக்க பாயும் தருவார்களாம்.

மொத்தத்தில் எந்தவித குறையும் இல்லாமல் திமுகவினர் தங்களது காவல் நாட்களை சிறையில் கழிக்க முடியும்.


http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட நடிகை குஷ்பு உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் சேப்பாக்கம் பகுதியில் கைது செய்யப்பட்டு அப்புறப்படுத்தப்பட்டனர்.

திமுக சார்பில் சென்னை மாநகரில் 22 இடங்களில் சிறை நிரப்பும் போராட்டம் நடைபெற்றது. சேப்பாக்கம் பகுதியில், நடிகை குஷ்பு தலைமையில் திமுகவினர் போராட்டத்தில் கலந்து கொண்டனர்.

குஷ்பு தவிர தயாநிதி மாறன், ஜெ.அன்பழகன் உள்ளிட்ட ஆயிரக்கணக்கானோர் போராட்டத்தில் கலந்து கொண்டனர். கடந்த முறை திமுக பொதுக் கூட்டத்திற்கு வந்தபோது குஷ்புவிடம் திமுகவினர் சிலர் சில்மிஷம் செய்ததாக பரபரப்பு ஏற்பட்டதால் இந்த முறை குஷ்புவுக்கு பாதுகாப்பாக திமுகவினர் நிறுத்தப்பட்டிருந்தனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்கள் அதிமுக அரசை எதிர்த்துக் கோஷமிட்டனர். இதையடுத்து அவர்களைப் போலீஸார் கைது செய்து பஸ்கள், வேன்களில் ஏற்றி அப்புறப்படுத்தினர்.

தாம்பரத்தில் டி.ஆர்.பாலு கைது

இதேபோல தாம்பரம் தாலுகா அலுவலகம் அருகே போராட்டத்தில் ஈடுபட்ட முன்னாள் அமைச்சர் டி.ஆர்.பாலு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்தனர்.

திருச்சியில் கே.என்.நேரு கைது

திருச்சியில் மொத்தம் 8 இடங்களில் போராட்டம் நடைபெற்றது. திருச்சி நகரில் நடந்த போராட்டத்தில் கலந்து கொண்ட மாவட்டச் செயலாளரும், முன்னாள் அமைச்சருமான கே.என்.நேரு தலைமையில் ஆயிரக்கணக்கானோரை போலீஸார் கைது செய்து அப்புறப்படுத்தினர்.

சென்னை சைதாப்பேட்டையில் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் கலந்து கொண்ட திமுக ராஜ்யசபா உறுப்பினர் கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டார்.


http://moonramkonam.com/wp-content/uploads/2011/05/karunanidhi-rest-cartoon.jpg


திமுகவின் சிறை நிரப்பும் போராட்டத்தில், சென்னை சைதாப்பேட்டை பனகல் மாளிகை அருகே நடந்த போராட்டத்தில் கனிமொழி தலைமையில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டனர்.


காலை 10 மணிக்குப் போராட்டம் என்று அறிவிக்கப்பட்டிருந்தபோதும் காலை 8 மணியிலிருந்தே தொண்டர்கள் திரளத் தொடங்கி விட்டனர். காலை 10 மணியளவில் கனிமொழி சம்பவ இடத்திற்கு வந்தார். இதையடுத்து அதிமுக அரசைக் கண்டித்து தொண்டர்கள் கோஷமிட்டனர்.


இதையடுத்து அவர்கள் அனைவரும் கைது செய்யப்படுவதாக போலீஸார் அறிவித்தனர். இதைத் தொடர்ந்து கனிமொழி உள்ளிட்டோர் பேருந்துகளில் ஏற்றப்பட்டனர்.


கனிமொழி இன்று சிறையில் அடைக்கப்பட்டால், அவர் சிறை செல்வது இது 2வது முறையாக இருக்கும். இதற்கு முன்பு அவர் 2ஜி ஊழல் வழக்கில் சிக்கி கைதாகி பல மாதங்கள் சிறையில் இருந்தார் என்பது நினைவிருக்கலாம்.


இன்று காலை கனிமொழி கைது செய்யப்பட்டு போலீஸ் வாகனத்தில் ஏற்றப்பட்டபோது அங்கு கனிமொழியின் தாயார் ராசாத்தி அம்மாளும் வந்திருந்தார். அவர் போராட்டத்தில் கலந்து கொள்ளவில்லை என்று கூறப்பட்டது. இருப்பினும் கனிமொழியை வழியனுப்பி வைப்பதற்காக அவர் வந்திருந்தார். பஸ்சில் ஏறிய கனிமொழியை பத்திரமாக இருந்து கொள்ளுமாறு கூறி விட்டு அங்கிருந்து கிளம்பிச் சென்றார் ராசாத்தி அம்மாள்.


தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டு கைதானார் திமுக பொருளாளர் மு.க.ஸ்டாலின்.

திமுக சார்பில் இன்று தமிழகம் முழுவதும் நடந்த சிறை நிரப்பும் போராட்டத்தில் மு.க.ஸ்டாலினும் கலந்து கொண்டு கைதாகியுள்ளார். அவர் சென்னையில் உள்ள தனது தொகுதியான கொளத்தூரில் இன்று போராட்டத்தில் ஈடுபட்டார்.

இன்று காலை 8 மணியிலிருந்தே ஆயிரக்கணக்கான தொண்டர்கள் கொளத்தூர் முரசொலி மாறன் மேம்பாலம் அருகே திரண்டனர். இதனால் அந்தப் பகுதி முழுவதும் திமுகவினர் மயமாக காணப்பட்டது.

http://4.bp.blogspot.com/-zPDUnqfo9LU/TjaXK-DPXGI/AAAAAAAAFq0/Fu22e8aJVLY/s1600/kuspoo-95.jpg


காலையில் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்ற மு.க.ஸ்டாலின் போராட்ட இடத்திற்கு வந்தார்.அவருக்கு சமீபத்தில் கண் அறுவைச் சிகிச்சை நடந்தது. இதனால் அவர் ஓய்வில் இருந்து வந்தார். இருப்பினும் தனது உடல் நலனையும் பொருட்படுத்தாமல்,இன்றைய போராட்டத்தில் அவர் கலந்து கொண்டார்.


காலை 10 மணியளவில் போராட்டக் களத்திற்கு வந்த அவர் தானாகவே போலீஸ் வாகனத்தில் ஏறிக் கைதானார். அவரைத் தொடர்ந்து ஏராளமான தொண்டர்களும் அதே வாகனத்தில் ஏறிக் கொண்டனர். இதேபோல போராட்டத்திற்கு வந்திருந்த அத்தனை பேரும் கைது செய்யப்பட்டனர்.


முன்னதாக ஸ்டாலின் பங்கேற்பதை கட்சித் தலைவர் கருணாநிதி நேற்று உறுதி செய்தார். இதுகுறித்து அவர் நேற்று அளித்த பேட்டியின்போது,

மிகுந்த எழுச்சியோடு இந்த போராட்டம் நடைபெறும் என்ற நம்பிக்கை எங்களுக்கு இருக்கிறது, அரசுக்கும் இருக்கிறது. கிட்டத்தட்ட 50 ஆயிரத்திற்கு மேற்பட்டவர்கள் ஆங்காங்கு மாவட்ட கழக செயலாளர்கள் இடத்தில் தங்கள் பெயர்களைப் பதிவு செய்துள்ளார்கள்.


கனிமொழி போராட்டத்தில் கலந்து கொள்ள நீதிமன்றத்தில் அனுமதி கிடைத்துள்ளது. எந்த இடத்திலே கலந்துகொள்வார் என்று இன்னமும் தெரியவில்லை. காலையில் நீங்கள் தெரிந்துகொள்ளலாம் (சைதாப்பேட்டையில் பங்கேற்பதாக பின்னர் அறிவிப்பு வெளியானது).


அவர் சற்று உடல் நலம் இல்லாமல் இருக்கிறார். இருந்தாலும் கலந்துகொள்ளப்போவதாக அறிவித்திருக்கிறார் (கொளத்தூரில் பங்கேற்பதாக பின்னர் அறிவிக்கப்பட்டது).


போராட்டத்தில் பங்கேற்று கைதானாலும் கூட எம்.பிக்கள், எம்எல்ஏக்களுக்கு குடியரசுத் தலைவர் தேர்தலில் வாக்களிக்க நிச்சயமாக அனுமதி உண்டு. எனவே அவர்கள் வாக்களிப்பார்கள் என்று கூறியிருந்தார் கருணாநிதி.


http://athikalai.files.wordpress.com/2010/12/mathi_cartoon-1.jpg


 மதுரையில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் உள்பட மொத்தம் 5 இடங்களில் திமுகவினர் சிறை நிரப்பும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்தப் போராட்டத்தில் மத்திய அமைச்சரும், தென் மண்டல அமைப்பாளருமான மு.க.அழகிரி பங்கேற்கவில்லை.


மதுரை நகர்ப் பகுதியில் மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலகம் அருகே மட்டும் போராட்டம் திட்டமிடப்பட்டது. அதேபோல புறநகர்ப் பகுதிகளில் மொத்தம் 4 இடங்களில் போராட்டம் நடந்தது.


இந்த ஐந்து போராட்டங்களிலும் மு.க.அழகிரி கலந்து கொள்ளவில்லை. வாடிப்பட்டியில்நடந்த போராட்டத்திற்கு புறநகர் மாவட்ட செயலாளர் மூர்த்தி தலைமை தாங்கினார். மாவட்ட ஆட்சித் தலைவர் அலுவலக போராட்டத்திற்கு நகர செயலாளர் கோ.தளபதி தலைமை தாங்கினார்.


இந்தப் போராட்டங்களில் ஆயிரக்கணக்கான திமுகவினர் பங்கேற்றுள்ளனர். மத்திய அமைச்சர் மு.க.அழகிரி போராட்டத்திற்கு வராதது திமுகவினர் மத்தியி்ல பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதைக் காண முடிவதாக அங்கிருந்து வரும் தகவல்கள் தெரிவிக்கின்றன
http://rajkanss.files.wordpress.com/2008/10/cartoon_1991.jpg


1. சிறை நிரப்பும் போராட்டத்துக்கு ஏன் வர்லை?


 போங்க தலைவரே! சின்ன வயசுல ஃபில் இன் த பிலாங்க்ஸ் ( FILL IN THE BLANKS)-கோடிட்ட இடத்தை நிரப்புக -இந்தக்கேள்வியையே நாங்க நிரப்பாம எஸ் ஆன ஆளுங்க,, நீங்க ஜெயிலை நிரப்பக்கூப்பிட்டா எப்படி?

-----------------------------------------2. பதவி வேணும்னா ஜெயிலுக்கு போகனும்..

தலைவரே! ஆல்ரெடி பதவி வேணும்கறதுக்காக கட்சிக்குள்ளேயே போட்டிக்கு இருந்த 2 பேரை கொலை பண்ணிட்டு ஜெயிலுக்கு போனவன் தான் நான்.. இந்த தகுதி ஓக்கேவா?
----------------------------------------


3.மன்னர் ரொம்ப விபரமான ஆள்.. அப்டினு எப்படி சொல்றே?

கஜானாவை நிரப்பும்போது மட்டும் சத்தம் இல்லாம கமுக்கமா நிரப்பிக்கறாரு.. இப்போ சிறை நிரப்பும் போது மட்டும் நம்மளை கூப்பிடறாரு. ------------------------------------


4. தலைவரே! ஜெயிலுக்குப்போய்ட்டு வந்தா நீங்க பதவி கொடுப்பீங்க ஓக்கே? எங்களுக்கு பொண்ணு எவன் கொடுப்பான்? # பிரம்மச்சாரியின் கேள்வி


----------------------------


5. மணல் லோடு லாரி லாரியா போகுதே, எதுக்கு?

சிறையை சீக்கிரம் நிரப்பத்தான்.. எதிர்பார்த்த அளவு கூட்டம் வர்லையாம்./. -----------------------


6. ஜெயிலுக்குள்ளே போய் மறுபடி எதுக்கு போராட்டம் பண்றாங்க?


சிறை நிரப்பும் போராட்டத்துல கலந்துக்கிட்டவங்களுக்கு  சோறே போடலையாம்.. செம பசி.. இப்போ வயிறு நிரப்பும் போராட்டம்..--------------------------------


7. குடும்பத்துடன்  அவசியம் வந்துடுங்கன்னு சொல்லிட்டு போறாரே, மேரேஜ் இன்விடேஷனா?

 ம்ஹூம், சிறை நிரப்பும் போராட்டம்.. -----------------------------------


8.  தலைவரே! இன்னைக்கு ஜெயிலுக்குள்ளே  ஒரு அசம்பாவிதம் நடந்துடுச்சு.. 


 என்ன ஆச்சு?


ஜெயிலர் வேணும்னே சாவியை தொலைச்சுட்டு  லாங்க் லீவ்ல போய்ட்டாராம்.


------------------------------


9. ஓ! தமிழர்களே!தமிழர்களே!அம்மையார் என்னை ஜெயிலில் தூக்கிப்போட்டாலும் நான் பெயிலில் வந்து விடுவேன், அங்கே தங்கி விட மாட்டேன்--------------------------

10. குஷ்பூவின் இடுப்பைக்கிள்ளலாம், சைக்கிள் கேப்பில் கிடா வெட்டலாம் என யாரும் எதிர்பார்த்து வந்தால் ஏமாந்தே போவார்கள், தனி செல்லாம் -----------------------

 நன்றி - தட்ஸ் தமிழ்

Thursday, June 07, 2012

குஷ்பூவைக்கிள்ளிய குணகேடன் யார்? கோர்ட்டில் வழக்கு- கல கலப்பு, கை கலப்பு, கிளுகிளுப்பு

http://1.bp.blogspot.com/_TWFTNARrwjI/TCR0RuOg02I/AAAAAAAAD_o/i2o9rR9CbrA/s1600/semmoli3.JPG


சென்னை: திமுக தலைவர் கருணாநிதியின் 89 வது பிறந்த நாள் பொதுக் கூட்டத்தில் நடிகை குஷ்பு இடுப்பை மர்ம நபர் கிள்ளிய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.


சி.பி - அவர் சர்ட் பாக்கெட்ல மர்ம நபர்னு ஐ டி கார்டு குத்தி இருந்தாரா?

திமுக தலைவர் கருணாநிதிக்கு கடந்த ஜூன் 03 ந் தேதி 89 -வது பிறந்த நாள் ஆகும். அன்று காலை 7 மணிக்கு தி.மு.க. தலைவர் கருணாநிதி அண்ணா நினைவிடத்தில் மலர் வளையம் வைத்து மரியாதை செலுத்தினார்.


சி.பி - வாரிசு அரசியல் கூடாது என்ற அண்ணா கொள்கைக்கும் சேர்த்துத்தான் இந்த மலர் வளையமா ? தலைவரே?

 அடுத்து, வேப்பேரியில் உள்ள தந்தை பெரியார் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். பின்பு, காலை 9 மணி அளவில் அண்ணா அறிவாலயம் சென்று கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் வாழ்த்துகள் மற்றும் பரிசுகளைப் பெற்றுக் கொண்டார்.


சி.பி - எனக்குப்பரிசுகள் எதுவும் வேண்டாம், உங்கள் பாராட்டும் ,வாழ்த்தும் போதும்னு ஃபார்மாலிட்டிக்கு சொல்லிட்டே வாங்கிட்டு இருந்தாராம்.. 


இந்த நிலையில், திமுக தலைவர் கருணாநிதிக்கு எப்படியும் நேரில் சென்று வாழ்த்து தெரிவித்துவிட வேண்டும் என்ற ஆர்வத்தில் நடிகை குஷ்பு கோபாலபுரத்தில் உள்ள கருணாநிதி வீட்டிற்கு சென்றார். ஆனால் ஏற்கனவே , அங்கிருந்து கருணாநிதி புறப்பட்டு அறிவாலயம் சென்றதால், அறிவாலயம் நோக்கி குஷ்பு சென்றார். ஆனால் அங்கு இருந்து கருணாநிதி வேறு இடத்திற்கு சென்று விட்டதால், அவரால் அங்கும் சந்திக்க முடியவில்லை.


சி.பி -இதெல்லாம் சும்மா டுபாக்கூர்.. கலைஞரை பார்க்கனும்னு நினைச்சா அப்பாயிண்ட்மென்ட் கேட்டிருப்பார்.. அவங்க ஆஃபீஸ்ல அல்லது வீட்ல டைம் சொல்லி இருப்பாங்க.. மேடம் சும்மா சீன் போடறதுக்கும், ஒரு பர பரப்பை கிளப்பவும் மக்கள் மத்தில சந்திக்க முடிவு பண்ணி இருப்[பாங்கன்னு ஒரு பட்சி சொல்லுது.. 


இதனையடுத்து, மாலை 6 மணிக்கு கலைஞர் கருணாநிதி நகர் பேருந்து நிலையம் அருகே பிறந்த நாள் விழா பொதுக் கூட்டம் நடைபெற்றது. அதில் முதல் வரிசையில் நடிகை குஷ்பு வந்து அமர்ந்திருந்தார்.


கூட்டம் முடிந்து குஷ்பு வெளியேற முன்ற போது, அவரது இடுப்பை யாரோ மர்ம ஆசாமி கிள்ளிவிட்டதாக கூறப்படுகிறது. இதை சற்றும் எதிர்பாராத குஷ்பு கடும் அதிர்ச்சி அடைந்து அதே இடத்தில் சத்தம் போட்டதாக கூறப்படுகின்றது. இதைக் கேட்ட அதிர்ச்சி அடைந்த திமுக நிர்வாகிகள் குஷ்புவை பத்திரமாக அவரது காருக்கு அனுப்பி வைத்தனர்.


சி.பி - திமுக நிர்வாகிகளுக்கு என்ன அதிர்ச்சின்னா இத்தனை நாளா நாம பக்கத்துலயே இருக்கோம், ராஸ்கல்ஸ் முந்திக்கிட்டானே அப்டி கூட இருக்கலாம்./. 

மேலும், இந்த விவகாரத்தை பெரிதுபடுத்தினால் அது குஷ்புவுக்கும், கருணாநிதி பிறந்த நாள் பொது கூட்டத்திற்கும் தர்ம சங்கடத்தை ஏற்படுத்தும் என்றும் எடுத்துக் கூறியதால், குஷ்பு அமைதி காத்ததாக கூறப்படுகிறது.


சி.பி - திராவிடக்கட்சியின் நலனுக்காக அமைதி காத்த அரண்மனைக்காவலே! உங்களை பெரிய பதவியில் அமர்த்த ஆவலே!


இந்த தகவல் அறிந்து திமுக தலைமை கடும் கோபத்திலும், சங்கடத்திலும் உள்ளதாக கூறப்படுகின்றது. ஆனால், இந்த தகவல் முற்றிலும் தவறானது என குஷ்புக்கு நெருக்கமான வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. அப்படியெல்லாம் நடக்கவில்லை என்றும் அவர்கள் கூறுகிறார்கள்


சி.பி - ஆமா, நடக்கலை, கிள்ளுனதும் அவன் ஓடிட்டான்.. 
 -------------------------------
http://4.bp.blogspot.com/_m0JHW1sw5lI/TDgL52ISlRI/AAAAAAAAABs/74ZsIz8xOLE/s1600/Namitha_Kushbo.jpg
இதுவரை நீங்க படிச்சது செய்தி.. இனி சும்மா சில  கற்பனை ஜோக்ஸ்.. இது சும்மா சிரிக்க மட்டுமே.. யார் மனதையும் புண்படுத்த அல்ல. அப்படி யார் மனதையாவது புண் படுத்துனா இங்கேயே மன்னிப்பு கேட்டுக்கறேன்.. என்னால ஃபேஸ்புக், கூகுள் பஸ், பிளாக், ட்விட்டர் டைம் லைன், டி எம் என எல்லா இடங்களிலும் போய் மன்னிப்பு கேட்டுட்டு இருக்க முடியாது, ஏன்னா ஆல்ரெடி அப்படி கால்ல விழுந்து விழுந்து முதுகு கூன் போட்டுடுச்சு..  ஹி ஹி


1. ஜட்ஜ் - நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது நீதானா? உன் பேரென்ன?

கைதி - கிள்ளி வளவன் யுவர் ஆனர்.. 


-----------------------2. மேடம், நீங்க மேடைல பேசுன பெண்ணியப்பேச்சுதான் அப்படி ஒரு சம்பவம் நடக்கக்காரணமா?

 ஆமா யுவர் ஆனர், பெண்கள் எல்லாம் கிள்ளுக்கீரை அல்ல  அப்டினு ஆவேசமா பஞ்ச் டயலாக் பேசுனேன், கிள்ளிட்டுப்போயிட்டான்.. 


---------------------------------------


3. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதைப்பார்த்த சாட்சி இருக்கா?

நடிகை - நோ யுவர் ஆனர்.. அப்போ நான் பயத்துல கண்ணை மூடிக்கிட்டேன்.. அதனால யார் கிள்ளுனான்னும் தெரியாது, அதை யாரெல்லாம் பார்த்தாங்கன்னும் தெரியாது.. 


---------------------------------------4. இன்ஸ்பெக்டர், நடிகையோட இடுப்பைக்கிள்ளுனது இந்தாளுதான்னு எப்படி கண்டு பிடிச்சீங்க?

உள்ளுவதெல்லாம் சைடு உள்ளல், கிள்ளுவதெல்லாம் கில்மா அள்ளல்னு டைரில எழுதி வெச்சிருந்தான்


-----------------------------------


5. யுவர் ஆனர், என் ஆதர்ச நடிகையை நேர்ல பார்த்ததை என்னால  நம்ப முடியலை,நான் கண்டது கனவா? நனவா?ன்னு தெரிஞ்சுக்கத்தான் அவங்களைக்கிள்ளுனேன், சாரி..---------------------------------


6. ஜட்ஜ் - உங்க இடுப்பைக்கிள்ளுனதுக்கு வீடியோ ஆதாரம் இருக்கா? ஏது?


நடிகை - முதல் டைம் கிள்ளுனப்ப என் மொபைலை எடுத்தேன், 2 வது டைம் கிள்ளுனப்ப அதை வீடியோ எடுத்தேன்.. பெண் புத்தி முன் புத்தி.. 


-------------------------------

7. கட்சி உறுப்பினர்கள் 80,000 பேரும் ஏன் க்யூவில் நிற்கறாங்க?

 சிலம்பாட்டம் படத்துல வர்ற மாதிரி  யார் கிள்ளுனது?ன்னு கண்டு பிடிக்க  இப்படி ஏற்பாடு.. 


-------------------------------------


8. ஜட்ஜ் - ஏய்.. மிஸ்டர்.. பொது இடத்துல  ஒரு நடிகையை கிள்ளி இருக்கே. இது தப்பில்லையா?


கைதி - XQS மீ யுவர் ஆனர், நான் கிள்ளுனது பொது இடம் அல்ல, பிரைவேட் இடம்.. ----------------------------------


9. மேடம், இதுவரை 125  படங்கள்ல  நடிச்சிருக்கீங்க.. அதுக்கான ஆதாரம் http://en.wikipedia.org/wiki/Kushboo_Sundar.. அதுல 84 படங்கள்ல ஹீரோவோ, வில்லனோ கிள்ளி இருக்காங்க. பத்தோட 11, அத்தோட இதுவும் 1னு விட்டுடுங்க.. 


ஸாரி.. அது விட முடியாது.. அதுக்கு சம்பளம் குடுத்தாங்க.. ---------------------------


10. நடிகை - என் மன உளைச்சலுக்கு நஷ்ட ஈடா ரூ 2 லட்சம் வேணும். 


 அப்போ 2 லட்சம் குடுத்துட்டு யார் வேணும்னாலும் ஒருக்கா கிள்ளிக்கலமா?-------------------------------------------


11.  இன்ஸ்பெக்டர், டியூட்டி டைம்ல ஒரு நடிகையோட இடுப்புக்கு பவுடர் போட்டு விட்டிருக்கீங்க.. இது தப்பில்லையா?


அட , நீங்க வேற யுவர் ஆனர்.. கிள்ளுன ஆளோட கை ரேகையை எடுக்க வேணாமா? ஃபாரன்சிக் ஆளுங்க தயங்குனாங்க. 


--------------------------------------


12. ஜட்ஜ் - நடிகையை கிள்ளுன குற்றத்துக்காக உனக்கு  2 வருஷ தண்டனை.. 


கைதி -யுவர் ஆனர், வேணும்னா அவங்களையும் என்னை கிள்ளிக்க சொல்லுங்க, தானிக்கு தீனி சரியாப்போயிடும் :0


------------------------------


13. வக்கீல் - சம்பவம் நடந்தப்போ நீங்க என்ன செஞ்சுட்டு இருந்தீங்க?


நடிகை - சம்பவம் நடந்த பிறகு, நான் அதை சொன்ன பிறகு மீடியாக்கள் கேட்கப்போகும் கேனத்தனமான கேள்விகளுக்கெல்லாம் என்ன பதில் சொல்லனும்னு  மனசுக்குள்ளேயே ரிகர்சல் பார்த்துட்டு இருந்தேன்


--------------------------


14. தலைவரே... நம்ம கட்சி 2 கோஷ்டியா பிரிஞ்சுடுச்சாமே?


ஆமா, நடிகையை கிள்ளுனதை நேரில் பார்த்த கோஷ்டி, பார்க்காத கோஷ்டி.. 


----------------------------

15. மேடம், இது எல்லாமே டிராமா தான் அப்டினு சொல்றாங்களே?


 அட ராமா 


----------------------


16. ஜட்ஜ் - பிரபல நடிகையோட இடுப்பைக்கிள்ளுனியா? 


 கைதி - யாரோ ஒரு லேடியை கிள்ளுனேங்க,அவங்க பிரபலமா?ன்னு கேட்டுக்கலை :)--------------------------------

http://www.thenaali.com/cpanel/Editor/images/articles/kushboo-press-meet.jpg

Sunday, April 15, 2012

ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.க. தயங்குகிறதா?''குஷ்பூ பேட்டி


1.  ''சினிமா, அரசியல் - எதில் நடிப்பது சிரமம்?''


சி.பி - சினிமால நடிக்க மேக்கப் போடனும், வெய்யில்ல நிக்கனும், ரிகர்சல் பார்க்கனும், டைரக்டர் ஓக்கே சொல்லனும்.. இத்தனை தடை இருக்கு.. அதனால அரசியல்ல நடிக்கறது தான் ஈசி.. 

 ''அரசியலை நடிப்புன்னு சொன்னா, அது முட்டாள்தனம். அரசியல்ல நடிப்பே கிடையாது

 சி.பி - என்ன மேடம் நீங்க இவ்ளவ் அப்பாவியா இருக்கீங்க? ஈழத்தமிழரைக்காப்பாத்த உண்ணா விரத நாடகம் போட்ட கலைஞர், ஜெ, சசி பிரிவு நாடகம், திராவிடக்கட்சிகளுடன் இனி கூட்டணி இல்லைன்னு காமெடி டிராமா போட்ட ராம்தாஸ்னு திரும்புன பக்கம் எல்லாம் நாடகம் தான்..

  அப்படி நடிச்சா, அவங்க உண்மையான அரசியல்வாதி கிடையாது. சினிமாவில் தினம்தினம் வேற வேற கேரக்டர்ல வாழ வேண்டி வரும். காலையில் மனநிலை பாதிக்கப்பட்ட ஒரு பெண் கேரக்டர்னா, சாயங்காலமே ஒரு ஏழைப் பெண்ணா நடிக்கணும். தினம்தினம் வேற அனுபவங்கள். ஆனா, அரசியலைப் பொறுத்தவரை நடிப்பு கிடையாது. நீங்க எப்படி இருக்கீங்களோ, உங்க மனசுல என்ன இருக்கோ... அந்த உண்மையை மட்டும்தான் பேசணும்!''
2. ''நீங்கள் தமிழச்சியாகவே மாறிவிட்டேன் என்கிறீர்கள். ஆனால், கவர்ச்சி உடையுடன் நமீதா பொது நிகழ்ச்சிகளில் வலம் வருவதை, 'அது அவருடைய சொந்த விஷயம்!’ என்று ஆதரிக்கிறீர்கள். இது தான் தமிழ்ப் பண்பாடா?''


சி.பி - கேள்வியே தப்பு.. என்னமோ நாட்டுல நமீதா மட்டும் தான்  அப்படி வர்ற மாதிரியும் , மத்தவங்க எல்லாம்  இழுத்துப்போர்த்திட்டு வர்ற மாதிரியும் கேட்கறீங்களே. கலைஞர் டி வி மானாட மயிலாட பார்க்கவும்..

 ''இதை ஏன் தமிழ்ப் பண்பாட்டோட குழப்பிக்கிறீங்க. அது அவங்க சொந்த விஷயம்... அவ்வளவுதான். அவங்க எப்படி டிரெஸ் பண்ணணும், எப்படி வரணும்கிறது அவங்க சுதந்திரம். அவங்களோட தனிப்பட்ட விஷயம். அதுல நாம தலையிடுறது தப்பு. அதைப் பத்திப் பேச நாம யாரு? நமக்கு என்ன உரிமை இருக்கு?
நமீதாவைப் பொறுத்த அளவில் அப்படி டிரெஸ் பண்றதுதான் அவளோட இயல்பே. வேணும்னே கவர்ச்சியா வரணும்கிற எண்ணம் எல்லாம் அவளுக்குக் கிடையாது. 'நான் சினிமாவுல இருக்கேன். அதனால இப்படித்தான் இருப்பேன்கிற எண்ணம் அவளுக்குக் கிடையாது. ஷூட்டிங் இல்லாத நேரத்தில் மும்பையில் அவளைச் சந்திச்சிருக்கேன். அப்பவும் அப்படித்தான் இருப்பா. அதனால அவளைப் பத்திக் கவலைப்பட்டு உங்க நேரத்தை வீணாக்கிக்காதீங்க .


சி.பி - நமீதா எந்த டிரஸ் போட்டாலும் அவருக்கு அது பத்தாது.. ஏன்னா அவர் யானை மாதிரி இருக்கார்... அவர் போடற டிரஸ் பூனை அளவு தான் இருக்கு.. இதுக்கெல்லாம் கண்டனம்  தெரிவிச்சுட்டு இருக்காம ரசிச்சுட்டு போவதே நல்லது.. 
3. ''தி.மு.-வில் மகளிர் அணிக்கு உரிய மரியாதை இருக்கிறதா?''


சி.பி - தமிழ் இனத்தலைவரை பற்றி என்ன நினைச்சீங்க? மனைவிக்கு மரியாதை,  மகளிர் அணிக்கு தனி மரியாதை தர்றவர் ஆச்சே.. 
 ''அப்படி மரியாதை இருக்கிறதாலதான் ஒவ்வொரு மேடையிலும் சற்குணப் பாண்டியன் அம்மாவைத்தலைவருக்குப் பக்கத்து இருக்கையில் உக்காரவைக்கிறாங்க. அந்த மரியாதை இல்லைன்னா, ஒவ்வொரு அரங்கிலும் முன் இருக்கைகள் மகளிர் அணிக்காக ஒதுக்கப்பட வாய்ப்பே இல்லை


 இருக்கை முன்னுரிமை மட்டும் இல்லை, மனதில் தோன்றிய கருத்துக்களைத் தைரியமாகப் பேச மகளிர் அணிக்கு வாய்ப்பு வழங்கப்படுகிறது. மற்ற கட்சிகளில் ஆண்களுக்கேகூட அந்த வாய்ப்பு வழங்கப்படுமாங்கிறது சந்தேகம்தான். எங்கள் மகளிர் அணியின் தலைவி சற்குணப் பாண்டியன், கட்சியின் துணைப் பொதுச் செயலாளர்களில் ஒருவர். இதைவிட வேறு என்ன மரியாதை வேண்டும்?''

சி.பி - ஆஃபீஸ், வீடு, கட்சி எல்லா இடங்களிலும் லேடீஸுக்குத்தாங்க மரியாதை.. ஆம்பளைங்களை எவன் மதிக்கறான்? பொண்ணுங்களைத்தான் மதிக்கறான்.. அவ்லவ் ஏன்? நம்ம தமிழ் நாட்டின் சி எம் , இந்தியாவின் ரியல் பி எம்  , கவர்னர் எல்லாம் ஒரு பெண் தானே?

4. ''இன்றைய தமிழகப் பெண் அரசியல் தலைவர்களில் தங்களைக் கவர்ந்தவர் யார்... ஏன்?''


சி.பி - - என்னைக்கவர்ந்தவங்க ஜனாதிபதி  பிரதீபா பாட்டில் தான். அநாயமா கவர்மெண்ட் காசுல சாரி பணத்துல உலகத்தை ரவுண்ட் அடிச்சுட்டு வந்துட்டாங்களே?
 ''இங்க ஜெயலலிதாம்மா, ஜெயந்தி நடராஜன்னு ஒரு சிலர்தான் இருக்காங்க. ஜெயலலிதாபற்றி இங்க நான் எதுவும் சொல்ல விரும்பலை. ஜெயந்தி நடராஜன் மேடம்பற்றிச் சொல்லலாம். அவங்க ரொம்பவே போல்டான லேடி. மத்திய அமைச்சரா தங்களோட பணிகளை ரொம்பவே சிறப்பா செய்றாங்க. சமீபத்தில்கூட சுற்றுச்சூழல் பற்றிய கருத்தரங்கில் அவங்களுடைய பேச்சு, பலத்த கைதட்டல் வாங்கிச்சு.அவங் களோட உழைப்பு எனக்குப் பிடிக்கும்!''

5. ''உங்களுக்கு ஆண் குழந்தை இல்லையே என்ற வருத்தம் உண்டா?''சி.பி - எதிர் காலத்துல குஷ்பூ சி எம் ஆனா அவருக்கு வாரிசா ஒரு ஆண் குழந்தை  இல்லையேன்னு வருத்தம் இருக்கும் தான்.. 

 ''ச்சே... சான்ஸே இல்லை. ரெண்டு பெண் குழந்தைகள் இருக்கணும் என்பதுதான் என் கனவே. மூணு அண்ணனுங்ககூட வளர்ந்தவள் நான். அப்புறம் எப்படி நான் ஆண் குழந்தைக்கு ஆசைப்படுவேன். எப்பவும் பெண் குழந்தைகள் மீதுதான் எனக்கு ரொம்ப ஆசை. என் பொண்ணுங்களைப் பற்றியும் சொல்லிடுறேன். பெரியவள் ஆறாம் கிளாஸ் படிக்கிறா. ரொம்பக் குள்ளமா இருக்கா(?!). ஆமாங்க, இந்த 11 வயசுல ஆறடிக்கு இருக்கா. சின்னப் பொண்ணு 9 வயசுல என்னைவிட ஒரு இஞ்ச் உயரமா இருக்கா. நான் 5.4. அவள் 5.5. உயரத்தில் ரெண்டு பேருமே அவங்க அப்பா மாதிரி.


 பெரியவ பாக்குறதுக்கு பாதி நான், பாதி அவர். குணத்துல அவங்க அப்பா மாதிரி. அதிகமாப் பேச மாட்டா. அவ உண்டு, அவளோட புக்ஸ் உண்டுனு இருப்பா. நிறையப் படிப்பா. சைலன்ட். அவளோட எல்லா விஷயங்களையும் என்கிட்ட மட்டும்தான் ஷேர் பண்ணிப்பா. யார்கிட்டேயும் அவளோட ஃபீலிங்ஸை சொல்ல மாட்டாள். அவளுக்கு நான் மட்டும்தான் சின்னவள், சுந்தரை ஜெராக்ஸ் மெஷின்ல போட்டு வெளியில எடுத்த மாதிரி இருப்பா. எதுவா இருந்தாலும், அந்த நேரத்தில் பேசி சண்டை போட்டு முடிச்சிடணும். அடுத்த நாளெல்லாம் அவளால தள்ளிவைக்க முடியாது. அதுக்கு அவளுக்கு டைம் இல்லை. ஆனால், ரெண்டு பேரும் அப்பா செல்லம். பாதித் தூக்கத்தில் எழுப்பிக் கேட்டாலும், அப்பாவைத்தான் பிடிக்கும்னு சொல்லுவாங்க.


 எங்கயோவது ஷாப்பிங், வெளியூர், வெளிநாடு போனாக்கூட அவங்க மூணு பேரும் ஒரு கேங்கா கைப்பிடிச்சு நடந்து போயிட்டு இருப்பாங்க. நான் பாவமாத் தனியா வருவேன். அவங்க அப்பா பக்கத்துலயே என்னை நெருங்கவிட மாட்டாங்க. வீட்லயும் அப்படித்தான். அவங்களுக்கு அப்பா பக்கத்துல யாரும் உட்கார்ந் துடக் கூடாது. அவர் நடுவுல உட்கார்ந்துஇருப்பார். ஒருத்தி இந்தப் பக்கம் இன்னொருத்தி அந்தப் பக்கம் உட்கார்ந்துஇருப்பாங்க. ஏன்னா, வீட்ல நான் ஹிட்லர்!''

 சி.பி - காலத்தின் கோலம் பார்த்தீங்களா? பட்லர் மாதிரி இருக்கேன்னு உங்களை வருஷம் 16 படத்துல கார்த்திக் நக்கல் அடிச்சாரு. இப்போ ஹிட்லர் ஆகிட்டீங்க.
6.''தி.மு.-வின் அடுத்த தலைவர் போட்டிக்கான களத்தில் நிற்பவர்களில், இந்த இயக்கத்தை வழிநடத்தும் தகுதி யாருக்கு இருப்பதாக நினைக்கிறீர்கள்?''


சி.பி - சீனியாரிட்டி பிரகாரம் அன்பழகன் தான் தலைவர் ஆகனும், ஆனா கலைஞர் ஸ்டாலினை ஆக்கப்பார்க்கறாரு.
 ''இப்போ தலைவருக்கு மட்டும்தான் அந்தத் தகுதி இருக்கு! அவருக்கு அடுத்து யாருன்னு தலைவரே யோசிச்சுவெச்சிருப்பாரு. நேரம் வரும்போது அவரே சொல்வாரு!''

7. ''ராஜீவ் காந்தி கொலை வழக்கு சம்பந்தப்பட்ட மூவருடைய தூக்குத் தண்டனையை எதிர்த்துக் குரல் கொடுக்க தி.மு.. தயங்குகிறதா?''


சி.பி - தயங்கலை, பம்முது.. காங்கிரஸ் கூட்டணி வேணும், அவங்களை எதிர்த்துக்க முடியாது. வேற என்ன பண்ண  முடியும்?
  ''இளகிய மனம்கொண்ட எங்க தலைவர் தயங்குவாரா என்ன? தூக்குத் தண்டனைக்கு எதிரா தலைவரே நிறையப் பேசியிருக்காங்க. அவங்க மூணு பேரையும் தூக்கில் போடக் கூடாதுன்னும் சொல்லியிருக்காங்க. அப்படி இருக்கும்போது, இந்தக் கேள்விக்கே இடம் இல்லை. பாண்டுரங்கன் தவறான அரசியல் புரிதலோடு இருக்கார்னு தெரியுது


 இதை இன்னொரு கண்ணோட்டத்துலயும் பார்க்கணும். அவங்களுக்கு தண்டனைன்னா, 1991-லயே அவங்களைத் தூக்கில் போட்டிருக்கணும். 21 வருஷம் - அதாவது, கிட்டத்தட்ட கால் நூற்றாண்டுக் காலம் - தங்களின் வாழ்க்கையை சிறையிலேயே கழிச்சிருக்காங்க. ஒரு தாய் தன் குழந்தையைப் பிரிஞ்சு வாழ்றாங்க. தாய், தந்தை அரவணைப்பு இல்லாம ஒரு குழந்தை வளர்ந்திருக்கா.


 இதைவிட அவங்களுக்கு வேற என்ன தண்டனையைத் தந்து விட முடியும்? 21 வருஷத்துக்குப் பிறகு மறுபடியும் தூக்குத் தண்டனைன்னா... அது எவ்வளவு பெரிய கொடுமை? தமிழக மக்களின் இந்த மன உணர்வை மத்திய அரசு கருத்துல எடுத்துக்கணும்!''


8. ''சினிமா பிரபலங்களின் காதல்அதிக காலம் நீடிக்காதது ஏன்?''

சி.பி - சினிமா இண்டஸ்ட்ரில இருக்கறவங்களூக்கு கைக்கு எட்டுனது வாய்க்கும் எட்டிடுது..  தப்பு பண்ண மத்தவங்களை விட அதிக சான்ஸ் கிடைக்குது.. ஃபாரீன் ஷூட்டிங்க் போறப்ப ஒரே ஹோட்டல்ல பக்கத்து பக்கத்து ரூம்.. யார்க்கு தெரியப்போகுது? அதனால தப்பு அடிக்கடி நடக்குது.. அது தம்பதிகளுக்குள் தெரிய வரும்போது சண்டை வருது
 ''உங்களை மாதிரி பலர் கண்ணு வைக்கிறதுதான் காரணம். பொதுவா, இங்கே நிறையப் பேர் காதலிக்கிறாங்க; கல்யாணமும் பண்ணிக்கிறாங்க. அதில் பலர் காதலிக்கும்போதே பிரியுறதும்... கல்யாணத்துக்கு அப்புறம் டைவர்ஸ் பண்ணிக்குறதும் பெருசா வெளியில தெரியுறது இல்லை. அவங்களை நம்ம மீடியாவும் கண்டுக்கிறதும் இல்லை.


 ஆனா, சினிமாவில் இருக்கிறவங்களோட காதலையும் அவங்களுக்குள் ஏற்படுற ஊடலையும் நம்ம மீடியா ஊதிப் பெரிசாக் குது. இப்படி வரும் செய்திகள் அவங்களுக்குள் ஏற்படுற கருத்துவேறுபாட்டை இன்னும் அதிகமாக்குது. அதேபோல் நம்ம மக்களும் பேப்பர், டி.வி-யில் வர்ற செய்திகளை எந்தவித விசாரிப்புகளும் இல்லாம அப்படியே நம்பிடுறாங்க. ஒரு வதந்தியைக்கூட, 'இருக்கும்பா. இல்லாமலா இப்படி எழுதுறாங்கனு பேசுவாங்க. பிறகு, 'குறிப்பிட்ட அந்தச் செய்தி தவறுனு சம்பந்தப்பட்ட பத்திரிகையே மறுப்பு வெளியிட்டாக்கூட, 'அதெல்லாம் சும்மா... மறைக்கிறாங்கப்பா... சம்பந்தப்பட்டவங்க கூப்பிட்டுப் பேசியிருப்பாங்க. அதனால இப்ப சும்மா ஃபார்மாலிட்டிக்கு மறுக்கிறாங்கனு பேசிக்குறாங்க. நடிகர், நடிகைகளை தியேட்டரில் கொண்டாடுறீங்க .கே! ஆனா, அவங்க தனிப்பட்ட சுதந்திரத்துக்கும் கொஞ்சம் மரியாதை தரணும். இதெல்லாம்விட, யார் மேலயும் யாரும் வெச்சிருக்கிற அன்பு, காதல் உண்மையா இருந்தா... அது எவ்வளவு பிரச்னை வந்தாலும் கடைசி வரை நீடிக்கும். இது சினிமாவுல இருக்கிறவங்களுக்கு மட்டுல்லை.... எல்லாருக்கும் பொருந்தும்!''

9. ''ஸ்டாலின் - அழகிரி இவர்களில் யார் தி.மு.-வுக்குத் தலைமை ஏற்கப் பொருத்தமானவர்?''

சி.பி - அண்ணன் அழகிரி மொழி அறிவு இல்லாத நிதானம்னா என்னன்னு தெரியாத லோக்கல் ரவுடி.. தம்பி ஸ்டாலின் அண்ணன்  கமுக்கமான, அமுக்கமான ஆள்... 2 கொள்ளீல  எது பெஸ்ட் கொள்ளின்னு பார்த்தா ஸ்டாலின் தான்.. ஆனா அப்படி எந்த அசம்பாவிதமும் வராம ஏதாவது புது தலைவர்கள் வந்தா தேவலை
 ''அதுபற்றி எல்லாம் தலைவர்தான் முடிவு பண்ணணும்!''


10. ''இந்த கேரக்டரை நாம செய்திருக்கலாமேனு உங்களை யோசிக்கவைத்த கேரக்டர் எது?''  
 ''கிட்டத்தட்ட 200 படங்களில் நடிச்சாச்சு. இப்பவும் 'சின்னத் தம்பிகேரக்டர்ல நாம நடிச்சிருக்கலாமேனு யோசிச்சவங்க, யோசிக்கிறவங்கதான் நிறையப் பேர் இருக் காங்க. சமீபத்தில் மலையாளத்தில் நான் நடிச்ச 'கையப்புபட கேரக்டர்ல நடிச் சிருக்கலாமேனுகூட நிறையப் பேர் நினைச் சதா என்கிட்ட சொல்லியிருக்காங்க.
நான் தொடர்ந்து கதாநாயகியா நடிச்சிட்டு இருந்தப்ப இந்தக் கேள்வியைக் கேட்டிருந்தா, பாலசந்தர் சாரின் ஒவ்வொரு படத்திலும் நான் நடிக்க ஆசைப்பட்டேன்னு சொல்லிஇருப்பேன். அப்புறம் நிச்சயமா 'மௌன ராகம்ரேவதி மேடம் கேரக்டர்ல நடிச்சிருக்கணும்னு சொல்லியிருப்பேன். அமிதாப் பச்சன் நடிச்ச 'சீனி கம்படத்தில் தபு கேரக்டர் மேல எனக்குப் பொறாமையே உண்டு. அந்தப் படம் பார்த்துட்டு, திட்டித் திட்டி தபுவுக்கு மெசேஜ் அனுப்பியிருக்கேன்!''       


சி.பி -  உங்களூக்கு மேட்டர் தெரியுமா? தபுவுக்கு செல் ஃபோன்ல மெசேஜ் படிக்கற பழக்கமே கிடையாதாம்.. ஸ்டார் டஸ்ட் இதழ் 1.6.2009 இதழ்ல   பேட்டி குடுத்திருக்காரு.. ஹய்யோ அய்யோ
11. ஒரு நடிகையாக நீங்கள் பெற்றது என்ன? இழந்தது என்ன?''


சி.பி - பெற்றது பல பாய் ஃபிரண்ட்ஸ்களை.. இழந்ததும் கழட்டி விடப்பட்ட பாய் ஃபிரண்ட்ஸ்களே ஹி ஹி 
 ''பெற்றது பேர், புகழ், பணம், குடும்பம், மரியாதை, எல்லாருடைய அன்பு. இழந்தது என்று எதுவும் இல்லை. 'நடிகையானதால் இதை இழந்துட்டேன்னு சொன்னா, அது பொய்யாத்தான் இருக்கும். சில நேரங்களில் பிரைவசி பாதிக்கப்படும். என் பெரிய பொண்ணு ரொம்பவே கூச்சப்படுற டைப். போட்டோவுக்கு முகம் காட்டக்கூடத் தயங்குவா. வெளியூர், வெளிநாடுகளுக்கு டூர் போனோம்னா, வளைச்சு வளைச்சு போட்டோ எடுப்பாங்க. எவ்வளவு சொன்னாலும் கேட்க மாட்டாங்க.

 என் குழந்தைகள் வளர்ந்துட்டாங்க. அவங்க போட்டோக்கள் வெளியில வரக் கூடாதுனு நினைக்கிறேன். அதை இழப்புன்னு சொல்ல முடியாது. மக்களின் அதீத அன்புன்னு வேணும்னா சொல்லலாம்.''

டிஸ்கி - இதன் முதல், 2 வது,3வது , 4வது பாகம் படிக்க 

முற்றும்