Friday, April 27, 2012

அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ? ( ஜோக்ஸ்)

மாப்புள்ள விட்டுறாத !! ,,இன்னும் கொஞ்சம்தான் ...ம்ம்ம்ம்ம்ம்ம்... தம்.. கட்டு ,,,,மேல போய்டலாம் :)) http://pic.twitter.com/pcopTqAJ-அண்ணே ஒரு விளம்பரம்
1. மெல்ல மெல்ல மாரி தூறுவது  என்பதே திரிந்து மொள்ள மாரி என அழைக்கப்பட்டதா?


-----------------------------

2.அழகு நிலையங்கள் பெரும்பாலும் ஏன் பெண்களுக்கு மட்டுமே உள்ளது ?


ஏன்னா ஆண் செயற்கை அழகில்  நாட்டம் கொள்வதில்லை


-----------------------------


 3.கண்மணியே பேசு!மவுனம் என்ன கூறு!  # நான் பேசுனா நீ தாங்க மாட்டே! 4 மாசம் தூங்க மாட்டே @ மயில் போல பொண்ணு ஒண்ணு (குரல்ல)

----------------------


4.  என்னதான்  சூப்பர் ஃபிகரா இருந்தாலும்  அவள் நெற்றியில் குங்குமம் இல்லை என்றால் தமிழனால் முழுமையாக ரசிக்க முடியாது # சைக்காலஜி


----------------------------

5. உடம்பை குறைக்க எளிய வழி

1. சாப்பாட்டை பாதியாக குறைக்கவும்

2.புரோட்டா,அசைவம் தவிர்க்க

3.வாக்கிங்க், ஜாக்கிங்


4. டெயிலி ------- ஹி ஹி ( அதாவது சிரிச்சுட்டே இருக்கவும் )

--------------------------------


6. ரவி - எப்பவும் முன்னாலயே போ.. பேக் அடிக்காத...


 பவி - அப்போ காரை ரிவர்ஸ் எடுக்கனும்னா?


---------------------------

7.  ஹாய் மிஸ்! நீங்க செம ஃபிகரா இருக்கீங்க.

ம்க்கும், இதெல்லாம் கேட்டு எனக்கு பழகிடுச்சு..


 தக்காளி, எல்லாப்பயலுகளும் பொய்யைதான் சொல்லி இருக்கான்


---------------------------

8. ஜட்ஜ் - உனக்கு ஜாமீன் தர முடியாது, நீ வெளில போனா பலருக்கு ஆபத்து.


கில்மா டீச்சர். குமுது - அப்போ உள்ளே இருந்தா யாருக்கும் ஆபத்து இல்லியா? ஹி ஹி


---------------------------

9. மனைவி அமைவதெல்லாம் இறைவன் கொடுத்த வரம் என்றால் நான் இறைவனிடம் கேட்க விரும்புவது  வருடம் ஒரு புது வரம் ஹி ஹி---------------------------------

10. :ஐ.நா.பொதுச்செயலாளர் பான்-கீ-மூன், 3 நாள் பயணமாக  இந்தியா வருகை # எனக்கு தெரிஞ்ச ஹிந்தில பான் கி மூன் = பாக்கின் நிலா( பாகிஸ்தான்?)


-------------------------

இனி நடக்கபோற எல்லாத்துக்கும் ! உனக்கும் பங்கு இருக்கு ! ...;)))


11. கூட்டுறவுதுறையை அழித்தது தி.மு.க-  பன்னீர்செல்வம்#  ஓக்கே, தானிக்கு தீனி, நீங்க எதை அழிக்கப்போறீங்க?


--------------------------

12. ஆண்கள் ஐ க்யூ ஸ்பெஷலிஸ்ட்ஸ்.. பெண்கள் அந்த ஐ க்யூக்களையே க்யூவில் நிற்க வைக்கும் ஸ்பெசலிஸ்ட்ஸ்


----------------------------

13.திகார் சிறையில் அழகிரி , ஆ ராசா சந்திப்பு #


ஆ ராசா - நான் குற்றமற்றன்..

 அழகிரி - ஜட்ஜ் சொன்னாரா?

ராசா - இல்லை, நானே சொல்லி பார்த்தேன்


---------------------

 14. அன்பே! என் அன்பு ஆல் டைம் அட்ச திரிதியை.. நீ எப்போ எவ்ளவ் கொடுத்தாலும் அது பல்கிப்பெருகும், டவுட்னா உன் தங்கச்சிட்ட கேளு


----------------------

15. இம்சை அரசன் 23-ம் புலிகேசி பார்ட் -2! வடிவேலு-சிம்புதேவன் ஆயத்தம்!! # வில்லனா கேப்டனை போடுங்க, படம் பிச்சுக்கும்


--------------------


இது எனக்கு !,, http://pic.twitter.com/eQOsXFzW

16. என்னை அடக்க நினைந்தால் அழிந்து போவார்கள் - விஜயகாந்த் சாபம்#  அப்போ பிரேமலதாவுக்கு ஆயுசு கம்மியாண்ணே?


---------------------------

17. நெருக்க நெருக்க விலகிப்பொகிறது ஃபிகர் # பஸ்சில்


------------------------

18. உலகின் சிறந்த ஜோடி யார்?னு 1000 பேர்ட்ட கேட்டா ஒரு பய தன்னையும் தன் சம்சாரத்தையும் சொல்லலை, யோசிக்கறானுங்க..


-----------------------

19. கொள்ளையர்கள் முதலில் சுட்டதால் போலீசார் தற்காப்புக்காக திருப்பி சுட்டனர்:ஜெ # அங்கேயும் போலீஸ்க்கு செகண்ட் ப்ளேஸ் தானா? அய்யோ பாவம்


--------------------------

20. தமிழகத்தில் மட்டுமே புகார் தருபவர்கள் அமர்வதற்கு நாற்காலிகள் உள்ளன-ஜெ  # ஐ ஜாலி , ஒரு புகார் கொடு,.. ஒரு சேரை எடு, வீட்டுக்கு ஓடு?


-----------------------

டேய் யாருடா அது ! வெள்ளாமை பண்ணுரகாட்டுல அசிங்கம் பண்ணுறது ...? # அய்யா .!ஆனது ஆச்சு 5 நிமிஷம் ;))) http://pic.twitter.com/bUjC2fWd

7 comments:

கோவை நேரம் said...

காலை வணக்கம்

கோவை நேரம் said...

இன்னிக்கு முத சீட் நானா?

நிரூபன் said...

வணக்கம் சார்,
நல்லா இருக்கீங்களா?

மதில் மேல ஏற தம் கட்டுவது நீங்க தானே;-))))\

நிரூபன் said...

ஆகா... உடம்பை குறைக்கும் டிப்ஸ் சூப்பரா இருக்கே! சிரிச்சுட்டே இருந்தாலும் முகத்தில் மலர்ச்சி வருமாம்!

ஆனால் எந் நேரமும் சிரிச்சிட்டே இருந்தா லூசு என்று சொல்லமாட்டாங்கோ.

நிரூபன் said...

அருமையான தொகுப்புக்கள் பாஸ்..

நீண்ட நாளைக்கு பின்னர் வந்த தால் என்னவோ... காரம் கொஞ்சம் கம்மியா இருக்கு.

அ. முஹம்மது நிஜாமுத்தீன் said...

பலே!

R. Jagannathan said...

Please remove No. 16. It is not a joke and will hurt the couple and their relatives. (When said without names, it is ok; but don't name people for such 'jokes'.