Saturday, April 28, 2012

TEZZ - பிரியதர்ஷன் -ன் ஹிந்தி ஆக்‌ஷன் த்ரில்லர் - சினிமா விமர்சனம்

http://www.glamsham.com/movies/scoops/12/apr/tezz-anil.jpg 

ஸ்பீடு-ன்னு ஒரு படம் பஸ்சை பேஸ் பண்ணி ஹாலிவுட்ல எடுத்தாங்களே.. அதுல இருந்து கதை நாட் (KNOT), 1980 இல் வந்த  THE BURNING TRAIN ல இருந்து கொஞ்சம் திரைக்கதை , கமல் -ன் உன்னைப்போல் ஒருவன் கொஞ்சம் எல்லாம் எடுத்து மிக்ஸ் பண்ணுனா தேஜ் படத்தோட கதை ரெடி. 

 தேஜ்-னா ஹிந்தில வேகம், கூர்மை அப்டினு 2 அர்த்தம்.. படம் வேகமாப்போகுது.. ஆனா யாரும் லாஜிக் மிஸ்டேக் எல்லாம் கேட்டு கூர்மையா பார்க்கக்கூடாதுன்னு அர்த்தம் போல. ஹி ஹி

படத்தோட கதை என்ன?  லண்டன் டூ கிளாஸ்கோ போற ட்ரெயின்ல ஹீரோ டைம் பாம் வெச்சுடறாரு. அந்த ரயிலை நிறுத்துனாலோ, வேகத்தை குறைச்சாலோ அது டமார்னு வெடிச்சுடும். அந்த ரயில்ல ஏராளமான பயணிகள் இருக்காங்க.. அது போக ரயில்வே கண்ட்ரோல் ஆஃபீசர் பொண்ணும் அதுல இருக்கு..


அவர் ஏன் பாம் வெச்சார்னா அதுக்கு ஏத்துக்கவே முடியாத காரணம் வெச்சிருக்காரு டைரக்டர்.. அதாவது இமிக்ரேஷன் இல்லாம , பர்மிட் வாங்காம  ஃபாரீன்ல வேலை செய்யறவரு அதுக்காக போலீஸ் பிடிச்சதும் அதுக்காக நாட்டையே பழி வாங்க  இப்படி கேனத்தனமா ஒரு ஐடியா பண்றாரு.. 


http://www.pinkvilla.com/files/imagecache/ContentPreview/tezz%203.jpg

 க்ளைமாக்ஸ்ல திடீர்னு டைரக்டருக்கு ஒரு டவுட். யாராவது ஹீரோவை வில்லன்னு சொல்லிடக்கூடாதே அதுக்காக அடிச்சார் பாருங்க ஒரு அந்தர் பல்டி . டாக்டர் ராம்தாஸ் எல்லாம் பிச்சை வாங்கனும்.. எல்லாம் டூப்பாம் ரயில்ல வெச்சது டம்மி பாமாம் ஹி ஹி ..  கேட்கறவன் கேனயன்னா  கேயாஸ் தியரியை எழுதுனது டாக்டர் ரியாஸ்னு சொல்லிடுவாங்க போல

 ஹீரோவா அஜய் தேவ் கான்.. ஆள் பந்தாவா இருக்காரு.. தாடி வெச்சிருக்காரு.. அப்போதான் டெரரிஸ்ட் எஃப்ஃபக்ட் வருமாம்.. ஹய்யோ அய்யோ.. படம் பூரா நிலம் , நீர், காற்று அப்டினு பைக்ல , கார்ல, போட்ல ஃபிளைட்ல பறந்துட்டே இருக்கார்.. நாய்க்கு நிக்க நேரம் இல்லைன்னு எங்க ஊர்ல பழமொழி சொல்லுவாங்க.. 

 ஹீரோயின் கங்கணா ரனவத். வர்றதே 20 நிமிஷம் தான்.. இந்தப்படம் பெருசா பிரேக் தரும் ஆக்சிலெரேட்டர் தரும்னு பாப்பா ஸ்டார் டஸ்ட் புக்கிற்கு பேட்டி எல்லாம் குடுத்துது அய்யோ பாவம்.. 

 சமீரா ரெட்டி சப்போர்ட்டிங்க் கேரக்டர்.. அதாவது ஹீரோவுக்கும் சப்போர்ட்.. கிளாம்ர் ரசிகர்களுக்கும் சப்போர்ட். பாப்பா லோ கட் டி சர்ட் போட்டுக்கிட்டு ( டி சர்ட்ல கூட எப்படி லோ கட்னா அப்பப்ப குனியறது ஹி ஹி ) ஆக்‌ஷன் பண்றப்ப காமெடியா இருக்கு.. இடை வேளை விடும்போது பாப்பாவுக்கு ஒரு ஆக்சிடெண்ட் ஆகி  இன்சிடெண்ட்டா காணாம போயிடறாரு.. ஆக்சுவலி இவர் தான் ஹீரோயின்.. நடிச்ச வரை ஓக்கே.. முடிஞ்சவரை அவர் திரமையை சென்சார் அனுமதிச்ச அளவு காட்டி இருக்கார்.. 


 தீவிரவாதத்துக்கு எதிரான என்கவுண்ட்டர் ஆஃபீசராக அனில் கபூர். ஆள் செம கம்பீரம்.. அசால்ட்டா நடிச்சு அப்ளாஸ் வாங்கிங்க். சேசிங்க் சீன்ல ஆக்‌ஷன் சீன்ல  ஃபுல் ஃபார்ம்ல ஒர்க் பண்ணி இருக்கார்..

 மோகன் லால் ஒரு கெஸ்ட் ரோல்..ல வர்றார்,, ரயிலில் இருக்கும் ஒரு ஆஃபீசர்.  சும்மா 2 சீன் .. இது எதுக்குன்னா மலையாளத்துல இந்தப்படத்தை மார்க்கெட் பண்ண.. ( பிரியதர்ஷன்  ரொம்ப விவரமானவர்ங்கோ)

http://image.buzzintown.com/files/movie/upload_14000/upload_original/326290-tezz.jpg


இயக்குநர் பாராட்டு பெறும் இடங்கள்


1.  ஒளிப்பதிவு கலக்கல் ரகம்.. ஓடும் ரயிலை ஹெலி வியூவில் எடுத்தது, சேசிங்க் சீன்களை  ஆங்கிலப்படங்களீல் ஜாக்கிசான் பட ரேஞ்சுக்கு மெனக்கெட்டு எடுத்தது எல்லாம் செம. 


2. பட போஸ்டரை வடிவமைத்த விதம்  செம .. அஜய் தேவ்  கான், மோகன் லால்,சமீரா ரெட்டி எல்லாரும் பந்தாவா இருக்கற மாதிரி காட்டி ஒரு பில்டப்பை உருவாக்குனது

3.  பாடல்காட்சிகள் ஆக்‌ஷன் படத்துக்கு தேவை இல்லை என்றாலும் ரிலாக்‌ஷேஷனுக்காக அமைக்கப்பட்ட இஜ்ஜத் மில்தி நஹி ( மரியாதை கிடைக்கலை)ச்சீன் ஹி பட்தி ஹை'( பிடுங்கிட்டு போயிடறே) 'பகுத்னா பூரே கோன் கா பதலா ஹை ( என் வேலையை நீ கெடுக்கறே) பாடல் வரிகள் ஓக்கே 


4. லொக்கேஷன் செலக்‌ஷன், ரயிலில் மாட்டிக்கொண்ட அந்த சிறுமியின் நடிப்பு எல்லாம் டாப் ரகம்  


http://2.bp.blogspot.com/-T9Wtt-_Csq8/TeYzSELaiKI/AAAAAAAAAp0/5K0MT_ztsSg/s1600/sameera.JPG

இ யக்குநர் இடம் சில கேள்விகள், திரைக்கதையில் சில ஆலோசனைகள்


1.  டைம்பாமை ஒரு பேப்பர்லயாவது சுத்தி மறைப்பா கொண்டு போக மாட்டாங்களா? அவ்ளவ் மக்கள் புழங்கும் இடத்துல என்னமோ கொய்யாப்பழத்தை போட்டுட்டு பொற மாதிரி பப்ளிக்கா டஸ்ட் பின்ல டைம் பாமை போட்டு பத்திரப்படுத்தறாரே ஹீரோ? ஏன்?
2.  ஹீரோ என்னதான் அப்பாடேக்கரா இருக்கட்டும், டைரக்டர் ரொம்ப புத்திசாலியா இருக்கட்டும், தயாரிப்பாளர்  ஏமாந்த சோணகிரியா இருக்கட்டும் ஹீரோ படம் பூரா தலா 19000  ரூபா  மதிப்புள்ள 6 செல் ஃபோனை தண்ணிக்குள்ள, குப்பைல தூக்கி கடாசுறார்..  சிம் கார்டை கழட்டி தூக்கிப்போட்டா போதாதா?  ஹீரோ ஒவ்வொரு டைமும் போலீஸ்க்கு ஃபோனை போட்டு  கால் பண்ணிட்டு தூக்கி கடல்ல வீசிடறார். அவ்வ் 


3.  நாட்டை வெறுத்த , வாழ்வில் ஏமாற்றம் சந்தித்த மனிதன் எப்பவும் கவலையா இருப்பான்..  ஹீரோ கைல லேடீஸ் மாதிரி ஏகப்பட்ட மோதிரங்கள் அணிஞ்சிருக்காரு.. அது ஏன்? நல்ல வேலை  கட்டை விரலுக்கு போடலை

4.  போலீசை சூட்கேஸ்ல பணத்தை வெச்சு ஆத்து தண்ணில போடச்சொல்றாரு ஹீரோ.. அதுக்குப்பின் பல கஷ்டப்பட்டு அதை அந்த சூட்கேசை பிடிக்கறாரு.. ஏம்ப்பா அவ்ளவ் கஷ்டம்? ஏன் மூக்கைசுத்தி நாக்கை தொடனும்? நான் என்ன சொல்றேன்னா த்ரிஷா கால்ஷீட் வேணூம்னா த்ரிஷா கிட்டேயே நேரா போயிடனும் , எதுக்கு அவங்கம்மா கிட்டே போய் கேட்டு அப்புறமா த்ரிஷா கிட்டே போக?

5.  பல கோடி ரூபா பணகட்டு உள்ள பேக்கை முதுகுல சுமந்த  பேக்கு ஹீரோயின் எப்படி பேலன்ஸ் பண்ணி பைக்ல சர்க்கஸ் வேலை எல்லாம் செய்யுது? அவ்லவ் வெயிட்டை வெச்சு பைக்கை ஓட்டவே முடியாது.. 

6.  போலீஸ்ட்ட அபேஷ் பண்ணுன பணத்தை ஒரு கார் டிக்கில வெச்சு மறைவா, கமுக்கமா கலைஞர் மாதிரி நடந்துக்காம யாராவது அப்பட்டமா பைக்ல கொண்டு போவாங்களா? 

7. சமீரா ரெட்டி பைக்ல போறார்.. அவரை 4 கார், 12 பைக், 2 ஹெலிகாப்டர் துரத்துது.. யாராலும் அவரை சுட முடியலை அவ்வ்வ்வ் 

http://bollywood.celebden.com/wp-content/uploads/2008/03/kangana_ranaut_photo_10.jpg


ஆக்‌ஷன் பட விரும்பிகள் பார்க்கலாம்.. காது பத்திரம்.. பூவே பூச்சூடவான்னு காதுல ரீலா சுத்துவாங்க ஹி ஹி 

 மும்பைல இது ஹிட் ஆகிடும்.. தமிழ் நாட்ல சென்னை, கோவைல மட்டும் நல்லா ஓடும் , மற்ற இடங்கள்ல டல்லா தான் ஓடும்.. i c in  erode srnivaasaa

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்
http://bollywoodceleb.in/wp-content/uploads/2012/03/normal_Bollywood-Hot-sexy-Actress-Kangana-Ranaut-download-free-desktop-wallpaper-of-indian-bollywood-celebrity-6.jpg

4 comments:

MARI The Great said...

படங்களை தேடி பிடிச்சு போடுவீங்கலோ .. ?

தாமரைக்குட்டி said...

சத்தியமா நான் பார்க்கமாட்டேன்... எச்சரிக்கைக்கு நன்றி... நல்ல தெள்ளத்தெளிவான் விமர்சனம்.....

உலக சினிமா ரசிகன் said...

சிபிக்கு வயசாயிருச்சா...
சமீரா ரெட்டி என்ற பேரிளம் பெண்ணை ரசிக்க ஆரம்பிச்சாச்சு...

Vadakkupatti Raamsami said...

கங்கனா ரனாவதுக்கு ரொம்ப நேரம் வருகிற ரோல் இல்லையாமே?அப்போ நான் படம் பாக்க மாட்டேன்!