Sunday, April 29, 2012

தேன்ன்ன்ன்ன்ன் அடை சந்தானம் ஜோடி மதுமிதா பேட்டி - கிடாவெட்டு

பத்திரிகையில் 'சிரஞ்சீவி தம்பி பவன் கல்யாண் நல்ல கதை தேடிக்கிட்டு இருக்கார்’னு ஒரு பெட்டிச் செய்தி படிச்சேன். உடனே ஹைதராபாத் கிளம்பிப் போய் அவரைப் பார்த்து கதை சொன்னேன். எதுவும் சொல்லாம, கட்டிப் பிடிச்சுக்கிட்டார். அப்படிக் கிடைச்சது தான் 'தொலி பிரேமா’ வாய்ப்பு. 

சி.பி - அடடா. நம்ம ஆளூங்களூக்குத்தெரிஞ்சிருந்தா கைலி பிரேமான்னு டப் பண்ணி ரிலீஸ் பண்ணீ 4 காசு பார்த்திருப்பாங்களே?


அடுத்தடுத்து தெலுங்கில் 13 வருஷத்துல எட்டுப் படங்கள். ஹிட் டைரக்டர்னு பேர் கிடைச்சது. என்ன... சினிமாவில் வரும் ஒரே பாட்டு... ஓஹோ வளர்ச்சி மாதிரி நாலே வரியில் சொல்லிட்டேனா என் கதையை!'' - கண் சிமிட்டிச் சிரிக்கிறார் கருணாகரன்.


 தெலுங்குப் படவுலகில்  வெற்றியைக் குத்தகைக்கு எடுத்த தமிழர். இரண்டு தேசிய விருதுகள், நான்கு மாநில விருதுகளுக்குப் பிறகு 'ஏனென்றால்... காதல் என்பேன்’ மூலம் தமிழில் கதை சொல்ல வந்திருக்கிறார். 


சி.பி - கூட்டுத்தொகை 3 வருது ஹி ஹி   (ஏனென்றால்... காதல் என்பேன் = 12 = 3)நாமம் போடாம இருந்தா சந்தோஷம்


 ''தேவகோட்டைக்காரன் நான். பாலிடெக்னிக் படிக்க ஆர்வம் இல்லாம, சென்னைக்கு வந்தேன். அங்கே எதுவுமே ஈஸி இல்லை. ஒரு வேளை சாப்பாடு கிடைக்கிறது லாட்டரியில் பரிசு விழற மாதிரி ஆச்சு. எனக்கு நல்லா மிமிக்ரி வரும். நண்பர்களிடம் அதைச் செஞ்சு காமிச்சு காசு வாங்கிச் சாப்பிடுவேன். எப்படியோ பல்டி அடிச்சு டைரக்டர் கதிர்கிட்ட சேர்ந்தேன். அப்புறம் ஒரு சுபயோக சுபதினத்தில்தான் அந்தப் பெட்டிச் செய்தியைப் படிச் சேன்!''  

சி.பி - கதிர் படம்னாலே காதல் தான். அதான் நீங்களூம் லவ் ஸ்டோரி செலக்ட்? வெரி குட்..  காதல் வைரஸ் மாதிரி டப்பா படம் தராம காதலர் தினம் மாதிரி ஹிட் படம் தர வாழ்த்துகள்


1. ''இத்தனை வருஷத்தில் தமிழ்ல ஏன் படம் பண்ணவே இல்லை?''


''நிறையத் தடவை கூப்பிட்டாங்க. ஆனா, தெலுங்கில் நான் படம் பண்ணின ஒவ்வொரு தயாரிப்பாளரும் அவங்களோட அடுத்தடுத்த படங்களிலும் என்னை கமிட் பண்ணிட்டே இருந்தாங்க. அந்த அளவுக்கு அங்கே ஹீரோ, தயாரிப்பாளர்கள்னு எல்லாரும் நண்பர்களாப் பழகிட்டோம். 


 இருந்தாலும் தமிழ்ல படம் பண்ண ரொம்ப ஏக்கமா இருந்துச்சு. அதுக்கு இப்போதான் வாய்ப்பு கிடைச்சிருக்கு. இதோ ஆட்டத்துக்கு ரெடி. இது அசல் தமிழ்ப் படம்.  ராம், தமன்னா ஜோடி. இதுக்கு மேல சினிமாவில் காதலைப் பத்திச் சொல்ல எதுவும் இல்லை. ஆனா, ட்ரீட்மென்ட் ரகளையா இருக்கும். என் பட போஸ்டரைச் சுவத்திலும் என் பேட்டியை விகடனிலும் பார்த்தா, என்னோட அப்பா, அம்மா ரொம்ப சந்தோஷப்படுவாங்க!''


2. ''என்னதான் தாய்மொழியா இருந்தாலும் தமிழில் படம் பண்ண எதுவும் சிரமம் இருக்கா?''


''மொழி வேற வேறயா இருந்தாலும் சினிமா எப்பவும்ஒண்ணு தான். எல்லா மக்களோட உணர்வுகளும் ஒண்ணுதான். நான் தமிழ்நாட் டில் பார்த்ததை, படிச்சதை, அனுபவிச்ச தைத்தான் அங்கே படமா எடுத்தேன். அதையேதான் இங்கேயும் பண்ணப்போறேன்.

 என்னைப் பொறுத்தவரைக்கும் உலக சினிமாவும் தென்னிந்திய சினிமாவும் தரத்திலும் ரசனையிலும் ரொம்பப் பக்கத்துலதான் இருக்கு. என்ன, உலக சினிமா உள்ளதை உள்ளபடி கொடுக்குறாங்க. நாம அதை இன்னும் எளிமை ஆக்குறோம். அவ்வளவுதான்!''

 சந்தானத்துடன் ஓக்கே ஓக்கே ஜோடி பேட்டி

டை... தேன்ன்ன்ன்ன் அடை.... ஜாங்ங்கிரி... அம்முக்குட்டி... பொம்முக்குட்டி!'' என 'ஓ.கே. ஓ.கே.’ படத்தில் சந்தானம் உருகி உருகிக் காதலிக்கும் 'ஐஸ்க்ரீம்’ காதலி யார் என விசாரித்தால்... ''ஹாய்... ஐ மதுமிதா. நைஸ் மீட் ஆஃப் யூ. ஐ வெரி பிஸி. யூ ஆஸ்க் கொஸ்டீன்... ஐ டாக் ஆன்ஸர்!'' எனக் கை குலுக்குகிறார்.சி.பி - டேன்சர்னா நம்ப மாட்டோம்.. மானாட மயிலாட-ல  குத்தாட்டம் போட்டீங்களா? அப்போத்தான் நம்புவோம்

 ''பிறந்தது வண்ணாரப்பேட்டை. என் அப்பா வண்ணை கோவிந்தன், அ.தி.மு.க. தலைமைக் கழகப் பேச்சாளர். அப்பா - அம்மாவுக்குக் கல்யாணம் பண்ணிவெச்சது புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். நாலு பொண்ணுங்கள்ல நான்தான் கடைக்குட்டி. எனக்கு ஒரு வயசு இருக்கும்போதே அப்பா இறந்துட்டாங்க. அம்மாதான் கஷ்டப்பட்டு வளர்த்தாங்க. மூணு அக்காக்களுக்கும் கல்யாணம் பண்ணிவைக்கிறதுக்குள்ள குடும்பத்துல கடன் கழுத்தை நெரிக்கவும் படிப்பை நிறுத்திட்டு ரிசப்ஷனிஸ்ட் வேலைக்குப் போயிட்டேன்.
அங்கே என் துறுதுறுப்பைப் பார்த்துட்டு,

 சி.பி - அப்படி துறு துறுன்னு என்னா செஞ்சீங்க.. அங்கே ஏன் அவர் வந்தாரு.. வந்து என்ன பார்த்தாரு. ஆல் டீட்டெயில்ஸ் வீ வாண்ட்./. ஹி ஹி


 'சினிமாவுல நடிக்க முயற்சி பண்ணு’னு சொன்னாங்க. அப்படியே நடிக்க வாய்ப்பு தேடி ராஜ் டி.வி. 'சூப்பர் காமெடி’, சன் டி.வி. 'சூப்பர் 10’, விஜய் டி.வி. 'லொள்ளு சபா’, ஜெயா டி.வி. 'காமெடி பஜார்’னு ஆரம்பிச்சு... 'அழகான நாட்கள்’, 'ரேகா ஐ.பி.எஸ்.’, 'பொண்டாட்டி தேவை’, 'அத்திப்பூக்கள்’, 'அழகி’னு சீரியல்களிலும் நடிக்க ஆரம்பிச்சேன்.  

 சி.பி - சீரியல்ல நடிச்சீங்களா? ஆனா அழுமூஞ்சி போலவே தெரியலயே?


'சிவா மனசுல சக்தி’ படத்துலயே நான் நடிச்சு இருக்க வேண்டியது. அப்போ மிஸ் ஆகிடுச்சு. இப்போ 'ஓ.கே. ஓ.கே.’ ஆடிஷன்ல செலெக்ட் ஆனதும் சோடாபுட்டிக் கண்ணாடி, எடுப்பான பல்லு, தலைக்கு 'விக்’னு என்னை உலக அழகி ரேஞ்சுக்கு அலங்கரிச்சுட்டாங்க. 'இப்படி ரவுண்டு கட்டி அசிங் கப்படுத்துறீங்களே’னு நான் ஃபீலிங்ஸ் காட்ட... 'இப்போ அப்படித்தான் இருக்கும். பின்னாடி பேட்டி கொடுக்குறப்ப பெருமையா சொல்லிக்கலாம்’னு சொன்னாங்க. அது இப்போ நிஜமாகி இருக்கு.எனக்கு ஹீரோயின் கனவெல்லாம் கிடையாது. கோவை சரளா மாதிரி நடிச்சுப் பேர் வாங்கணும். நான் சரியான சவுண்ட் பார்ட்டி. கோவை சரளா இடத்தை நான் நிரப்ப ஆசைப்படுறேன். ப்ளீஸ்... தமிழ் சினிமா படைப்பாளிகள் எனக்கு அந்த வாய்ப்பைக் கொடுங்க. ஐ ஆக்ட் குட். சத்தியமா ஐ பிராமிஸ்!''சி.பி - கடைசி வார்த்தை உண்மையா? ஃபோட்டோ பார்த்தா அப்படித்தெரியலையே? ஹி ஹி  

டிஸ்கி  - http://www.hotlinksin.com

திரட்டி குறித்து நேற்றே நாம் எழுதியிருந்தோம். நேற்று ‘மாலைச்சுடர்’ மாலை நாளிதழில் www.hotlinksin.com
திரட்டி குறித்து வெளியாகியிருந்த கட்டுரையில் இந்த திரட்டி பதிவுகளை எழுதும் பதிவர்களைத் தேர்ந்தெடுத்து பரிசுகளை வழங்க உள்ளதாக செய்தி வெளியாகியிருந்தது. விரைவில் இதற்கான அறிவிப்புகளை www.hotlinksin.com
திரட்டி அறிவிக்க உள்ளது. எனவே பதிவுலக நண்பர்கள் உடனே ஹாட்லிங்க்ஸ்இன் திரட்டியில் இணைந்து பரிசுகளை வெல்லத் தயாராகிக் கொள்ளுங்கள்

8 comments:

கோவை நேரம் said...

முதல் வணக்கமுங்க'

கோவை நேரம் said...

முதல் வணக்கமுங்க'

கோவை நேரம் said...

சனிக்கிழமை பப் போகலையா ? இன்னமும் இதை கட்டிகிட்டு அழறீங்க?

கோவை நேரம் said...

முதல் வணக்கம் சொன்னேன்...காணோம்

கோவை நேரம் said...

தேன்ன் ன் ன் ன் ன் ....ரொம்ப...வழியுது

Karthik Somalinga said...

Hotlinksin - just joined :)

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

HOT LINKS ல JOIN பண்ணிட்டேன். விடமாட்டோம் இல்ல.

Unknown said...

ரொம்ப நல்ல பதிவு.