Friday, April 13, 2012

ஓ பி அடிக்க நினைக்கும் இல்லத்தரசிகள் செய்யும் தகிடுதித்தங்கள் ( ஜோக்ஸ் )


இது குதிரையின் ஓவியம் மட்டுமல்ல # ரசிக்க முடிந்தவர்கள் ரசித்துக் கொள்ளவும் ! http://pic.twitter.com/wk7dqLFF - அண்ணே ஒரு விளம்பரம்
pic.twitter.com/wk7dqLFF
Flag this media powered by Photobucke

1. ஆண்கள் பயன்படுத்தும் மிக வலிய ஆயுதம்- என்னதான் பொண்ணுங்க கண்டுக்காம போனாலும் அதைக்கண்டுக்காமல்  பின்னாலயே போறது தான்! ஹி ஹி # எ கீ


---------------


2. ஆஸ்தியை கரைக்க ஆண் குழந்தை, கடைசி வரை நம் உடன்  இருந்து நம் அஸ்தியை கரைக்க பெண் குழந்தை, எது வேண்டும்? மக்களே?


--------------------

3.  முகத்தை பார்த்து பேசறதில்லைன்னு ஆண்களை குறைகூறும் பெண்களே! நாங்கள் கூச்சசுபாவம், அதனால் தலை குனிந்து பேசறோம், டோண்ட் மிஸ்டேக்கன்,ஹி ஹி 


--------------------------------------

4. மாநில ஆட்சி, மத்திய ஆட்சி இரண்டிலுமே  பெண்ணின் ஆதிக்கம் கண்டும் பெண் குழந்தையை அழிக்க நினைக்கும் விசித்திர தேசம் இது:(


---------------------------

5. டியர், என்னை மடச்சாம்பிராணின்னு திட்டாதே, மீ எம் சி ஏ யூ நோ? 


 அவ்ளவ் தானே ,கம்ப்யூட்டர் சாம்பிராணி ஓக்கே?


-------------------------


அறிவு ஜீவிகளுக்கு ! http://pic.twitter.com/ctOPQp8Q - சேட்டைக்காரன்
6. என்னடா இரவுடின்னு சொல்றாங்களேன்னு மண்டையை உடைச்சுக்கிட்டேன்.. அது ரவுடியின் செந்தமிழாம், ஹய்யோ அய்யோ


----------------------------

7. மெச்சூர் ஆனபின் போடுவது மெச்சூர் ட்வீட், மெச்சூர் ஆவதற்கு முன் போடுவது அமெச்சூர் ட்வீட்? ஹி ஹி 


--------------------------
8.இன்னைக்கு டிஃபன் புட்டு சாப்பிடப்போறேன்...... நாங்க மட்டும் புடாமயா சாப்பிடுவோம்?இட்லி, தோசை எதா இருந்தாலும் புட்டுதான் சாப்பிடுவோம்

--------------------------

9.  பல ஃபிகருங்க அஞ்சலி, ஓவியா மாதிரி.. அடக்கமான ஃபிகருங்கன்னு நினைப்போம், திடீர்னு சர்ப்பரைஸ் ஷாக் குடுத்துடுவாங்க

--------------------


10. டிராக்டர் ஓட்டும் விவசாயியை விட ஏர் உழும் விவசாயி என் கண்களுக்கு அழகாகத்தெரிகிறான்----------------------------------

chambakka(rose apple) kerala spl,mouth watering;p http://pic.twitter.com/RzD8rbbX - புரோட்டா புவனா


11.உனக்கும், எனக்கும் பெரிதாக வித்தியாசம் ஏதும் இல்லை, நீ அழகாக இருக்கிறாய்.. நான் அழகுடன் ( உன்னுடன்) இருக்கிறேன்


-----------------------------------

13. சில சமயங்களில் என்னைக்கட்டுப்படுத்தும் மந்திரவாதி ஆகிறாய்! பல சமயங்களில் என்னைக்கட்டுப்படுத்த முடியாத “மந்த்ரா” வாதி ஆகிறாய்


-------------------------------

14. என்னுடன் எப்போதும் நீ பேசிக்கொண்டிருக்கிறாய்!தனிமையில் தன்னைப்போல நான் பிதற்றுவதாய் இந்த உலகம் பிதற்றிக்கொண்டிருகிறது


----------------------------

15. 2ஜி வழக்கு: அடக்கமாக நடந்துகொள்ளுமாறு ராசாவுக்கு நீதிபதி எச்சரிக்கை # வாயைத்திறந்தா உள்ளேயே அடக்கம் பண்ணிடுவாங்கன்னு எச்சரிக்கை?


---------------------------


அனைவருக்கும் என் இனிய தமிழ் புத்தாண்டு நல்வாழ்த்துகள். என் வாழ்வில் நான் காணும் இரண்டாம் நந்தன வருடம். http://pic.twitter.com/AesDwSW9 -

16. ஓ பி அடிக்க நினைக்கும் இல்லத்தரசிகள் செய்யும் டிஃபன் உப்புமா, லஞ்ச் - அரிசிம்பருப்பு சாதம்


-------------------------

17. மார்கழிப்பனியின் குளிரில் நாம் இருவரும் கட்டித்தழுவி நிற்கையில் நமக்கிடையே கோடை வெப்பம் .. அதை சிலர் பனிப்போர் என்றனர்


---------------------------------

18. மனைவியை அழ வைக்காத கணவனும், கணவன் மனம் நோக வைக்காத மனைவியும் இந்த உலகில் இல்லை # வீட்டுக்கு வீடு அடிதடி


------------------------------

19.  டாக்டர்,பன்றிக்காய்ச்சலுக்கு ட்ரீட்மெண்ட் பண்ணுங்க..


 ரியாஸ் - ஓக்கே, நீங்க மட்டும் தான் வந்திருக்கீங்க, பன்றி எங்கே?


-----------------------------

20. எந்த வேலைக்கும் போகாம ஊரைச்சுத்திட்டு இருந்தா அவன் ஊர்சுற்றி,கவர்மெண்ட்சம்பளம் வாங்கிட்டு உலகத்தையே வெட்டியா சுத்திட்டு இருந்தா ஜனாதிபதி


--------------------------------

 

5 comments:

சித்தார்த்தன் said...

எல்லா ட்விட்மே சும்மா நச்சுனு இருக்குது...............

Unknown said...

அண்ணே 8 சூப்பர்

Unknown said...

அரிசிம்பருப்பு (அரிசியும் பருப்பும்) கொங்கு நாட்டில் ரொம்ப பேமஸ்.

ராஜி said...

கலக்கல் ட்வீட்ஸ். தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள்

ADAM said...

SUPER