Monday, April 09, 2012

ஆல் in all அழகு ராணி -அடல்ட்ஸ் ஒன்லி embroiding.y y y?

1.உண்மையான அன்பின் ஒரு பக்குவம் இல்லாத வெளிப்பாடு பொசசிவ்னெஸ் ,உண்மையான அன்பின் ஒரு  பக்குவமான வெளிப்பாடு கோபம்

-----------------------------------

2. கடற்கரையோரங்களில் மட்டும் ஏன் இத்தனை சர்ச்சுகள் புதிதாக கட்டப்படுகின்றன?

ஏன்னா பாவம் செஞ்சுட்டு கையோட மன்னிப்பு கேட்க வசதியா இருக்குமே?

--------------------------------

3. நீ என் எதிரில் நிற்கையில்  உன்னை பார்க்க என் கண்களை திறக்க வேண்டி இருக்கிறது, நீ என்னை விட்டு நீங்கிச்செல்கையில் உன்னைக்காண என் கண்களை மூட வேண்டி இருக்கிறது

-------------------------------

4. பெண்பால் ஈர்க்கப்படும் பண்பால், ஆண் பால் வார்க்கப்படும் அன்பால்

----------------------------------

5. டியர், பீச்சுக்குப்போய் கடலை போடலாமா?

லூசாய்யா நீ? மணல்ல எப்படி விளையும்? செம்மண் நிலம் வேணும் # அக்ரிகல்ச்சர் ஜிகிடி

-

---------------------------------

6 . நீங்க எனக்கு லவ் லெட்டர் குடுத்த விஷயம் என் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு..

அய்யய்யோ உன் தங்கைக்குமா?

---------------------------------------

7.  பூமி சூரியனை சுற்றி வருது - இதுல இருந்து ஒரு நீதி சொல்..

டீச்சர், என்னதான் பூமி சூரியனை சுற்றி வந்தாலும் அதால சூரியனை பிக்கப் பண்ண முடியாது

--------------------------------------

8.  வசதியான பெரிய இடத்து ஸ்கூல்ல படிக்கனும்னா  ஸ்டேட் ஃபர்ஸ்ட் வரனுமா?

முதல்ல ஏதாவது ஒரு ஸ்கூலுக்கு போகனும், கிளம்பு

-----------------------------------

9. டியர், இன்னைக்கு ஜாக்கெட்ல ஏ அப்டினு எம்பிராய்டரி பண்ணி இருக்கே? ஆல் இன் ஆல் அழகு ராணீன்னு அர்த்தமா?

ம்ஹூம்,இன்னைகு லோ கட், லோ ஹிப்ல ஆஃபீஸ் போறேன், அடல்ட்ஸ் ஒன்லின்னு அர்த்தம்..

---------------------------------------

10. டேய், ரொமாண்டிக்கா பேசறது எப்படி?ன்னே உனக்கு தெரில .

இவ்ளவ் தானே, எப்படி பேசனும்னு எழுதி கொடு, கலக்கிடறேன் #  மக்கப் பண்ணும் ஜேக்கப்

--------------------------------

11. காயத்ரி ("G"AYATHRI)  , கவுரி( "G" OWRI)-ன்னு 2 பொண்ணுங்களை ஏமாற்றி தலைவர் கல்யாணம் பண்ணிக்கிட்டாராம் ..

அடப்பாவமே இதுதான் 2G ஊழலா? அவ்வ்

------------------------------------

12. கிங்க்காங்க் படம் கற்றுக்கொடுத்த நீதி - மனுஷனா இருந்தாலும், குரங்கா இருந்தாலும் பெண்ணை நம்புனா சாவு தான் # SMS

--------------------------------

13. டீச்சர், எப்பவாவது நாய் உங்க கிட்டே தாங்க்ஸ் சொல்லி இருக்கா?

இல்லை./.

அப்புறம் எதை வெச்சு நாய் நன்றி உள்ள பிராணின்னு சொன்னிங்க?

--------------------------------------

14. இந்த கலியுகத்துல நல்லவங்களை ஃபாரீன்ல தேடுனா கிடைக்க மாட்டாங்க.. ஏன்னா நான் தான் ஈரோட்டையே இன்னும் தாண்டாம இருக்கேனே? ஹி ஹி

-----------------------------------

15. பொறுமையில் எருமையாய் இரு, உன் வாழ்வு அருமையாய் இருக்கும் - சம்சாரம் எவ்ளவ் அடிச்சாலும் அசராமல் அசட்டு சிரிப்பு சிரிப்போர் சங்கம் ஹி ஹி

--------------------

16. அத்தான், நீங்க ஏன் சரக்கு அடிச்சா மப்பு தெளியற வரை வீட்டுக்கு வர்றதில்லை?

ஆ? அஸ்கு புஸ்கு.நான் ஏதாவது என் ஃபிளாஸ்பேக் உளறுவேன்,ஏன் வம்பு

--------------------------------

17. தனது கணவர் குடிப்பது தவறு இல்லை என்று சொல்லும் பெண்களும் இருக்கிறார்கள் என்பது ஆச்சரியமாக இருக்கிறது

-----------------------------------

18.சாமியார் என்ற ஆண்பாலுக்கு, பெண்பால் என்ன?  சாமியார் மேடம் அல்லது சாமியாரினி

-------------------------------------

19. நமது உள்மன விகாரங்கள் நம் படைப்பில் வெளிப்படும் என்றால் நாளை நாம் தெருவில் நடக்கையில் நம் முகம் விகாரமாக மற்றவர் கண்களில் தெரியக்கூடும்

------------------------------------

20. மேடம், உங்க கணவர் நீங்க ட்வீட்டறதை கண்டுக்க மாட்டாரா?

அவருக்கு டைப்ரைட்டருக்கும், கம்ப்யூட்டருக்குமே வித்தியாசம் தெரியாது, ஐ ஜாலி

------------------------------

10 comments:

Unknown said...

காலை வணக்கம்!

முத்தரசு said...

வணக்கம் சித்தப்பு

முத்தரசு said...

13. எந்த நாயை சொல்றீக?

கோவை நேரம் said...

வணக்கம் பங்காளி

முத்தரசு said...

@???? ?????

கோவை நேரம் உங்க வலைபூவுகுள் நுழைய முடியல..என்னான்னு பாருங்கோ

Unknown said...

என்னவோ போங்க சித்தப்பு!

ராஜி said...

நீங்க எனக்கு லவ் லெட்டர் குடுத்த விஷயம் என் வீட்ல எல்லாருக்கும் தெரிஞ்சுடுச்சு..

அய்யய்யோ உன் தங்கைக்குமா?
>>>'அவனவன் கஷ்டம் அவனவனுக்கு..

Unknown said...

கலக்கல் சித்தப்பூ! :-)

முட்டாப்பையன் said...

7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.

C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.7.ஹிட்ஸ், ரேங் எல்லாத்தையும் திடீர்னு தூக்கிட்டா உங்களிடம் என்ன மாற்றங்கள் இருக்கும்?

பெரிசா ஒண்ணூம் மாற்றம் வராது.ஹிட்ஸூக்காக நான் அலையறதில்லை.பத்திரிக்கைகளூக்கு ஜோக் எழுதும்போதே மற்றவர்களை விட நாம் தனிச்சு தெரியனும்னு நினைப்பேன்.. எல்லாரும் வாரம் 5 ஜோக் அனுப்பும்போதே நான் 100 ஜோக் அனுப்புனவன்.. அதனால ஹிட்ஸ்,ரேங்க் அதுக்கும், என் பதிவுக்கும் சம்பந்தம் இல்லை.. தமிழ்மணம் மக்கர் பண்ணுன நாட்கள்ள, இண்ட்லி ரிப்பேர் ஆன நேரத்துல கூட என் பதிவு எப்பவும் போல வந்துட்டே தான் இருந்தது. இருக்கும்..////

யாரு நீயி?
உன் மனச தொட்டு சொல்லு.நீ ஹிட்ஸ்க்கு அலையிலையா?
அல்லது உன் குழந்தை மீது சத்தியம் பன்னி சொல்லு.
வெக்கக்கேடு.இந்த பதில் எழுதும்போது உன் மனசாட்சி உறுத்தலை?

நீ சொல்லுவது சத்தியம் எனில் தமிழ்மணம்,மற்றும் எல்லா திரட்டியிலும் இருந்து வெளிய வா?
தமிழ்மணம் பிரச்னை அப்ப நீ என்ன சொன்ன?
அது எப்படியா வலிக்காத மாதிரியே பதில் சொல்லுற?

ஒன்னு அந்த கேள்விக்கு வேற பதில் போடு.
இல்லேன்னா எல்லா வோடே பட்டைய எடு.இல்லாவிட்டால் எங்கள் தளத்தில் தொடர்ந்து கிழிப்போம்.சவாலை சந்திக்க தயாரா?

அண்ட புளுகு,ஆகாச புளுகு எல்லாம் கேள்வி பட்டிருக்கேன்.
இந்த மாதிரி புளுகுக்கு சிபின்னு தான் பேர் வைக்கணும் போல.
தமிழ்மணத்துல 6,4,வது இடம் வந்த உடன் தினமும் ஐந்து போஸ்ட் போட்டு எல்லார் உயிரையும் எடுத்துக்கிட்டு இருக்கே.
சிபி கொஞ்சமாவது நேர்மை வேண்டும்.நீ என்ன விதைக்கிறாயோ அதுதான் உன் பசங்களிடமும் வரும்.
நன்றாக யோசிக்கவும்.

முன்பே உனக்கு இறுதி எச்சரிக்கை சொன்னோம்.இந்த மைனஸ் வோட் பிரச்சனையை முடித்துவிட்டு மீண்டும் உன்னிடம் வருகிறோம்.

C&P நீ பன்னுரதில்லையா?கண்ணாடி முன் நின்று உன்னை நீயே கேட்டு பார்.

நம்பள்கி said...

தம்பி செந்தில் Number 2- வை தூக்குபா!
எவனாவது குறும்புக்காரப் பய, பாவத்தை ஊர் நடுவில் இருக்கும் கோவில்களில் பக்தன் செய்து விட்டு கடலருகே உள்ள சர்ச்சுகளுக்கு பாவ மன்னிப்பு கேட்க வர்றான் அப்படின்னு எழுதப் போறான்!!!