அதேனிமலை தீர்த்தம்
கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்
கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா?
ஸனாதனத்தின் உட்பிரிவான ஸ்மிருதி நூல்கள் 'பிரதிஷ்டா மயூகம்’ போன்ற நூல்களை அறிமுகம் செய்தன. அது வழி... வாஸ்து சாஸ்திரத்தின் துணையுடன் இறையுருவத்தை இருத்தி வழிபட, ஆலயம் அமைக்கும் நடைமுறையைக் கையாண்டு வந்தது. பிற்காலத்தில் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்பட எண்ணியபோது, சைவ- வைணவ ஆகமங்கள் தோன்றி, ஆலய நிர்மாணம் பற்றிய பரிந்துரைகளை அளித்து உதவின.
தேசத்துக்கு தேசம் ஆலயம் அமைக்கும் விதத்தில் மாறுபாடு இருக்கும். கும்பத்தில், மந்திரம் வாயிலாக இறையுருவைக் குடியிருத்தி, பணிவிடைகளால் மகிழ்வித்து, அந்தக் கும்ப ஜலத்தை கோபுரக் கலசத்தில் சேர்ப்பார்கள். இதனால், இறையுருவின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்துக்கு வந்துவிடும். இதன் அடிப்படையிலேயே, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிற வழக்கு எழுந்தது. கூரான உருவ அமைப்பு, இடி- மின்னலால் பாதிக்கப்படாமல் இருக்கும். இரீடியம்... அதற்கு சக்தி அதிகம் என்று தாங்கள் குறிப்பிடுவதெல்லாம் நம்பிக்கையில் விளைந்தது. அதைவிடப் பெருமை வாய்ந்தது, கோபுரக் கலசத்தில் தென்படும் இறை சாந்நித்தியமே!கோயில் இறைவனின் உடல்; கோபுரக் கலசம் அவருடைய சிரசு; கருவறை அவன் உறைந்திருக்கும் இடம் (தேஹோ தேவாலய:...). நம்முள் ஜீவாத்மா இருப்பது போல், கோயிலுக் குள் பரமாத்மா இருக்கிறார். கும்பாபிஷேக வேளையில், மந்திர ஒலியுடன் இணைந்த கோபுரக் கலசங்கள், ஆகாயத்தில் அவ்வப்போது நிகழும் தட்பவெப்பத்தின் தாக்கத்தாலும், அன்றாடம் கோயிலில் ஒலிக்கும் வேத மந்திரங்களின் சேர்க்கையாலும், சிந்தனைக்கு எட்டாத பெருமையைப் பெற்று விளங்கும்.
விஞ்ஞானம் கண்டுபிடித்தது கை மண்ணளவு; கண்டுபிடிக்காதது உலகளவு. விஞ்ஞானத் தகவலை வைத்துப் பெருமை கொள்வதைவிட, மெய்ஞ்ஞானத்துக்குப் பயன்படும் என்பதை அறிவது சிறப்பு. 'இரீடியம்’ இருப்பதால் கோபுரக் கலசங்கள் களவாடப் படுவதாகச் சொல்கிறீர்கள். களவாடப்படும் விஞ்ஞானம் நமக்கெதற்கு?!
எவராலும் களவாட முடியாத ஆன்மிகம், என்றென்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞான விளக்கத் தோடு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக் காமல்... கோபுரக் கலசம் முதலான வற்றில் இணைந்திருக்கும் ஆன்மிகப் பெருமைகளை உணரும் வகையில் நம் சிந்தனைகள் தொடர வேண்டும்.
மட்டையோடு இணைந்த தேங்காய் பயனுள்ளது. மட்டை, கயிறு திரிக்கப் பயன்படும்; கொட்டாங்கச்சி- அகப்பை செய்வதற்குப் பயன்படும்; தேங்காய்- சமையலுக்கு உதவும்; எண்ணெயும் கிடைக்கும்.
அதே நேரம்... தென்னையின் இளநீர் பருகவும் பயன்படும்; இறை அபிஷேகத்துக்கும் உதவும்; அதன் மூலம் ஆன்மிகச் சிந்தனைக்கு நம்மைத் திருப்பிவிடும். 'இரீடியம்’ உபயோகப் பொருள். அதைவிட உயர்ந்த தத்துவம், (திருட முடியாத) கோபுரக் கலசத்தில் அடங்கியிருக்கிறது. களவாடப்படும் பொருட்கள், காலத்தால் அழிவைச் சந்திக்கும். அழிவற்ற பரம்பொருளின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்தில் உறைந்திருப்பதை உணர்ந்து, அதை வழிபடுவோம்.
ராமேஸ்வரம்
2. கிரகஸ்தனான நான், தியானத்தின்போது தூய்மையான துணியை தரையில் விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்கிறேன். இனி, தர்ப்பைப் பாயின் மீது அமர்ந்து தியானம் செய்ய எண்ணியுள்ளேன். இது சரியா?
தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்).
அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்... தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ§ஆஸுன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது.
புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழி இல்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக்கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவிஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும் (ஆசன மஹா மந்திரஸ்ய... கூர்மோதேவதா). துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.

3. உடல்நலக் குறைபாடு காரணமாக புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லித் தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால், தீர்த்தமாடியதற்கான பூரண பலன் கிடைக்குமா?
குளித்தால் உயிர் பிரிந்துவிடும் அல்லது நீரின் குளிர்ச்சியால் நோய் முற்றி, பல அலுவல்களை இழக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிந்தால்... நீரை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால் போதும்; பலன் உண்டு.
வெந்நீரில் குளித்தாலே சளி ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாவோரும் குற்றாலம் அருவியில் குளிப்பதுண்டு. உடல் நலமில்லாதவன், தந்தைக்குக் கொள்ளி வைத்த கையோடு குளிப்பதுண்டு. மாறா வியாதியில் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் அத்தனை பேரும் தலை முழுகிக் குளிக்காமலா இருப்பார்கள்?! அவசர- ஆபத்து வேளைகளில் குளிப்பதற்குப் பதிலாகத் தெளித்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கை, குளிக்காமல் தவிர்ப்பதற்குப் பயன் படுத்தக்கூடாது. விதி வேறு; விதிவிலக்கு வேறு.
விதிவிலக்கைத் தேடிப்பிடித்துச் சட்டமாக மாற்ற முற்படக்கூடாது. உடல் நலம் இருக்கும்போது தீர்த்தக்கரைக்குப் போக வேண்டும். குளிப்பதற்காகத்தான் தீர்த்தங்கரை செல்கிறோம். குளிக்க முடியாத நிலையில் அங்கு போவது தவறு. உடல்நலக் குறைபாடு, தீர்த்தங் கரை ஸ்னானத்துக்கு உகந்ததல்ல. உடல் நலனோடு இருக்கும்போது, அங்கு சென்று நீராடுவது சிறப்பு. அன்றாடம் நீராடிப் பழக்கப் பட்டால், உடல் ஆரோக்கியம் சிறக்கும்; தீர்த்தங் கரையைப் பார்த்ததும் நீராடத் தோன்றும்; விருப்பமும் நிறைவேறும்.
4.திருமணமானதும் கிரகப் பிரவேசம் செய்யும் மணப்பெண், வீட்டு வாசற்படியில் வைக்கப் பட்டிருக்கும் அரிசி அல்லது நெல் நிரம்பிய பாத்திரத்தைக் காலால் தட்டிவிட்டு உள்ளே நுழைவாள். இந்தச் சடங்குக்கான தாத்பரியம் என்ன?
மெழுகிச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில், மணப்பெண் அடியெடுத்து வைக்குமுன் பீஜ தான்யத்தை, அதாவது நெல்லை வாரி இறைப்பார்கள். அதன்பிறகு, அவள் உள்ளே நுழைவாள்.தான்ய லட்சுமியின் வருகைக்குப் பிறகு, கிரஹலட்சுமி விஜயம் செய்வாள். அறுசுவை உணவுடன் சேர்ந்த ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரம் தானியம்; அதாவது நெல். அது அந்த வீட்டில் என்றென்றும் நிரம்பி வழியவேண்டும். இந்த நடைமுறை இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும். வட நாட்டில், கிரஹலட்சுமியே தான்ய லட்சுமியை வாரியிறைக்கும் விதமாகத் தனது காலால் தானியத்தைக் கொட்டிய பிறகு நுழைவாள். இது, நம் பகுதிகளில் தென்படாததால், வியப்பாகத் தோன்றுகிறது!
- பதில்கள் தொடரும்...
thanx - vikatan

1. கோயில்களில் கும்பாபிஷேகத்துக்குப் பிறகு, தொடர்ந்து 48 நாட்கள் மண்டல பூஜை நடத்துகிறார்களே... இதற்கான தாத்பரியம் என்ன?
2. ஆலயங்களில், எந்தத் திசையை நோக்கி தீபங்கள் ஏற்றிவைக்க வேண்டும்?
4. முதல் நாள் மாலை ஸ்வாமிக்குச் செய்யப்படும் சந்தனக் காப்பு அலங்காரத்தை எப்போது களையலாம்? மறுநாள் அலங்காரத்தைக் கலைத்து, நித்திய அபிஷேகம் செய்யலாமா? அல்லது அதற்கும் அடுத்த நாள் காலையில்தான் களைய வேண்டுமா?
6. என் பேரன் பிறந்தது 2006 ஜனவரியில். எனில், அவனுக்கு எப்போது பூணூல் கல்யாணம் பண்ணிவைக்கலாம்? இந்த வைபவத்தை 8-வது வயதின் துவக்கத்தில் செய்யவேண்டுமா அல்லது 8 வயது பூர்த்தியானதும் செய்யவேண்டுமா?

''ஒரு புறம் காந்தியம் பேசுகிறீர்கள்... இன்னொரு புறம் அணுகுண்டுகளை நியாயப்படுத்துகிறீர்கள்... ஏன் இந்த முரண்பாடு?''
5. ''அறிவியல் துறையில் உங்கள் முன்னோடி யாக நீங்கள் யாரைக் கருதுகிறீர்கள்?''
''ஜனாதிபதியாக இருந்தபோது, ஒரு முறை நான் கோயம்புத்தூர் சென்றேன். இரவு 11 மணி அளவில் நான் பார்வையாளர்களைப் பார்த்தபோது, ஒருவர் வீல் சேரில் வந்தார். அவரைப் பார்த்ததும் எனக்கு ஒரே ஆச்சர்யம். அவருக்கு இரண்டு கை களும் இல்லை, கால்களும் இல்லை. நான் அவரிடம், 'உங்களுக்கு ஏதாவது உதவி வேண்டுமானால் சொல்லுங்கள் சார்... செய்கிறேன்’ என்றேன். கணீர் என்ற குரலில் அவர் சொன்னார், 'எனக்கு உங்களிடம் இருந்து ஒன்றும் வேண்டாம். நான் நன்றாகப் பாடு வேன். உங்கள் முன்பு பாடட்டுமா?’ என்று கேட்டார். 'பாடுங்கள்’ என்றேன். என்ன அருமையாகப் பாடினார் தெரியுமா? 'எந்தரோ மகானுபாவலு’ என்ற தியாகராஜ கீர்த்தனையை ஸ்ரீராகத்தில் பாடினார். அவர் பெயர் கோவை கிருஷ்ணமூர்த்தி. அவரை ராஷ்டிரபதி பவனுக்கு அழைத்துக் கௌரவித்து, அங்கும் பாடச் செய்தேன். அது ஒரு மறக்க முடியாத நிகழ்ச்சி!''