Showing posts with label ஆன்மீகம். Show all posts
Showing posts with label ஆன்மீகம். Show all posts

Thursday, August 23, 2012

சனி தோஷம் நீங்க.... ( ஆன்மீகம்)

சனிக்கிரக தோஷம் நீங்க... பைரவருக்கு துலாபாரம்!

பலன்... பரிகாரம்... புண்ணிய தரிசனம்!
ன் உருக, அந்தப் பரவசத்தில் உள்ளமும் உருக, சித்தத்தில் சிவம் வைத்து நித்தமும் வழிபட்ட சித்த புருஷர்களது கனவில் ஒளி வடிவாகத் தோன்றி, தென்னாடுடையான் அருள்பாலித்த திருத்தலம் - என்.வைரவன்பட்டி.
காரைக்குடி- திருப்பத்தூர் சாலையில், பிள்ளையார்பட்டியில் இருந்து சுமார் 1 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது இந்தத் திருத்தலம். இங்கே, அருள்மிகு வளரொளி நாதராகக் கோயில்கொண்டிருக்கிறார் சிவனார். சித்தர்களுக்கு ஒளி வடிவாய் காட்சி தந்ததால் இப்படியரு நாமகரணம் இந்தச் சிவனாருக்கு. இங்கு அருளும் அம்மையின் திருநாமம்- ஸ்ரீவடிவுடைநாயகி.
பாண்டியர்களால் நிர்மாணிக்கப்பட்ட இந்த ஆலயம், நகரத்தார்கள் போற்றிப் பரவும் 9 ஆலயங்களில் முதன்மையானது என்கிறார்கள். இந்தக் கோயிலின் சிறப்பம்சம் ஸ்ரீபைரவ தரிசனம். அம்மையப்பனுக்கு அடுத்த பிரதான தெய்வமாக இவரே இங்கு வழிபடப்படுகிறார்.


தேவாதிதேவர்களாலும் வெல்ல முடியாத வல்லமை பெற்றிருந்தான் சம்பகாசுரன். அவனை, சிவபெருமானின் நெற்றிக் கண்ணில் தோன்றிய ஸ்ரீபைரவ மூர்த்தி வதம் செய்தார். இதை நினைவுகூரும் வகையில் வருடம்தோறும் ஐப்பசி மாதத்தில், சம்பகா சஷ்டி விழா இங்கே கொண்டாடப்படுகிறது. திருக்கோயிலில் ஸ்ரீவளரொளி நாதரும் ஸ்ரீவயிரவரும் அருகருகே சந்நிதி கொண்டுள்ளனர் (ஸ்ரீபைரவரையே வயிரவர், வைரவர் என்றெல்லாம் அழைப்பர்).பிணி தீர்க்கும் பைரவ தீர்த்தம்!


ஸ்ரீபைரவர் மட்டுமல்ல, அவருக்கான வழிபாடுகளும் இங்கே விசேஷம்தான்! இந்தத் திருத்தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவர் சந்நிதிக்கு எதிரே உள்ள பைரவ தீர்த்தத்தில் நீராடி வழிபட்டால் சகல நோய்களும் தீரும் என்பது ஐதீகம். சம்பகாசுரனை வதம் செய்த சூலத்தைக் கழுவுவதற்காக ஸ்ரீபைரவர் உருவாக்கிய தீர்த்தம் இது என்கின்றன புராணங்கள். இதை, அஷ்ட வயிரவ சூல தீர்த்தக் குளம் என்றும் போற்றுகின்றார்கள்.


ஸ்ரீபைரவர் சந்நிதியின் 12 தூண்களும் 12 ராசிகளுக்காகக் கட்டப்பட்டுள்ளன. இவையனைத்தையும் கட்டுப்படுத்தும் மூலவராக ஸ்ரீபைரவர் அருள்கிறார் என்பது ஐதீகம்.


குழந்தை வரம் அருளும் தெய்வ விருட்சம்!


தொடர்ந்து 3 புதன்கிழமை (அ) சனிக்கிழமைகள் இந்தக் கோயிலுக்குச் சென்று அஷ்ட வயிரவ சூல தீர்த்தத்தில் நீராடி, ஸ்ரீபைரவரை வழிபட்டு, கோயிலின் பின்புறம் உள்ள ஏறு அழிஞ்சில் மரத்தை வலம் வந்து வணங்க, குழந்தை வரம் கிடைக்கும்;  இழந்த பணத்தையும் புகழையும் மீண்டும் பெறலாம் என்கின்றனர். இந்த மரத்தடியில் தியானம் செய்வதை விருட்ச விசேஷம் என்பர்.


இந்த மரத்துக்கு வேறொரு மகத்துவமும் உண்டு. இறைவனால் உருவாக்கப்பட்ட மனிதன் இறந்ததும் மீண்டும் இறைவனால் ஆட்கொள்ளப்படுகிறான் என்பதை உணர்த்தும் விதமாக, ஏறு அழிஞ்சில் மரத்திலிருந்து கீழே விழும் விதைகள் மீண்டும் மரத்திலேயே ஒட்டிக்கொள்கின்றனவாம். மேலும், மாசி மாதத்தில் இந்த மரத்தில் பூக்கும் சூரிய வெண்மை கொண்ட பூக்களைக் காண்பதே புனிதம் என்கிறார்கள்.


தோஷம் நீக்கும் துலாபாரம்!


ஸ்ரீபைரவருக்குப் பிடித்தமான உளுந்து, வெல்லம், பச்சரிசி ஆகியவற்றைத் துலாபாரம் செலுத்தி வழிபடுவதால், அஷ்டமத்து சனி, ஏழரைச் சனி, சனி தசை நடைபெறும் அன்பர்கள் சனிக் கிரக பாதிப்புகள் யாவும் நீங்கி நலம் பெறுவர் என்பது நம்பிக்கை.


மேலும், படிப்பில் மந்தமாக உள்ள பிள்ளைகளை இந்தத் தலத்துக்கு அழைத்து வந்து வழிபடச் செய்தால், விரைவில் அவர்களின் கல்வியறிவு மேம்படும்; பாலாரிஷ்ட தோஷம் முதலானவை நீங்கும் என்றும் விவரிக்கிறார்கள் பக்தர்கள்.


இரவில் தங்கி... உச்சிப்பொழுதில் தரிசனம்!


இந்தக் கோயிலின் மற்றுமொரு சிறப்பு ஸ்ரீவடிவுடையம்மன். மற்ற கோயில்களில் உள்ள அம்மன்களைவிட ஸ்ரீவடிவுடையம்மனின் காது பெரிது எனச் சிலாகிக்கிறார்கள் பக்தர்கள். செவ்வாய், வெள்ளிக்கிழமைகளில் இரவு ஸ்ரீவடிவுடையம்மனைப் பிரார்த்தித்து, அங்கேயே தங்கியிருந்து, மறுநாள் உச்சிப் பொழுதில் ஸ்ரீபைரவரை வழிபட, நினைத்த காரியங்கள் இனிதே நிறைவேறும்.


நித்யாக்னி பூஜை!


வளரொளி நாதர் அக்னி சொரூபராக இருப்பதால், வருடத்தின் 365 நாட்களும் இங்கே நித்ய அக்னி பூஜை நடைபெறும். இதில் கலந்து கொண்டு வழிபடுவதால் தீராத பீடைகளும் நோய்களும் நீங்கும்; திருமண தோஷங்கள் தவிடுபொடியாகும். அதேபோன்று, அம்மன் சந்நிதிக்கு நேர் பின்புறம் உள்ள இரண்டு பல்லி உருவங்களை வழிபடுவதன் மூலம் பில்லி தோஷங்கள் அகலுமாம். வள்ளி- தெய்வானை தேவியருடன் ஸ்ரீசண்முகநாதராகவும், ஸ்ரீசுப்ரமணியராகவும் இரண்டு சந்நிதிகளில் முருகப்பெருமான் இங்கு அருள்பாலிக்கிறார். ஸ்ரீசண்டீஸ்வரர், ஸ்ரீஆஞ்சநேயர் ஆகியோரையும் இங்கே தரிசிக்கலாம்.பெரும்பாலும் சிவாலயங்களில் வலப்புறம் விநாயகரும் இடப்புறம் முருகப்பெருமான் சந்நிதி யும் அமைந்திருக்கும். ஆனால், இங்கே இடப் புறத்தில் முப்பலிக் கருப்பர் அருள்கிறார். இவரை வணங்கி வழிபட, மன தைரியம் உண்டாகும்; உடல் பலம் பெருகும் என்கின்றனர். நாமும் வைரவன்பட்டி தலத்துக்குச் சென்று ஸ்ரீபைரவரை வழிபட்டுப் பலன் பெறுவோம்.நன்றி - சக்தி விகடன்

Thursday, August 09, 2012

திருப்பதி ஏழுமலையான்

நாம் அனைவருக்குமே திருப்பதி ஏழுமலையானை பற்றி தெரிந்திருக்கும், உங்களுக்கு தெரியாத பல பிரமிக்க வைக்கும் அதிசியங்கள் இருக்கின்றன, அதில் தமிழும் தமிழனும் எந்த அளவு  சம்பந்த பட்டு உள்ளான் என்பதையும் தெரிந்து கொள்ளுங்கள்.
http://www.whereincity.com/files/photo-gallery/172/tirupati-temple-634_m.jpg

பிரம்மிக்க வைக்கும் திருப்பதி அதிசியங்கள்

திருப்பதி ஸ்ரீ ஏழுமலையான் திருவுருவச்சிலையில் சிலிர்க்க வைக்கும் ரகசியங்கள் உள்ளன

அவைகளில் சில.........1. திருப்பதி ஆலயத்திலிருந்து 1 கிலோமீட்டர் தொலைவில் "சிலாதோரணம்" என்ற அபூர்வ பாறைகள் உள்ளன. உலகத்திலேயே இந்த பாறைகள் இங்கு மட்டும் தான் உள்ளன.இந்த பாறைகளின் வயது 250 கோடி வருடம். ஏழுமலையானின் திருமேனியும், இந்த பாறைகளும் ஒரே விதமானவை.
2. ஏழுமலையான் திருவுருவச்சிலைக்கு பச்சைக்கற்பூரம் சார்த்துகிறார்கள். இந்த பச்சைக்கற்பூரம் ஒரு இரசாயனம். அரிப்பைக் கொடுக்கும் ஒருவகை அமிலம். இந்த இரசாயனத்தை சாதாரணக்கருங்கல்லில் தடவினால் கருங்கல் வெடித்துவிடும். ஆனால், சிலாதாரணத்தில் உள்ள பாறைகளில் இதைத் தடவினால் அந்தப்பறைகள் பெடிப்பதில்லை. ஏழுமலையாக் திருவுருவச்சிலைக்கு 365 நாளும் பச்சைக்கற்பூரம் தடவுகிறார்கள். ஆனாலும்வெடிப்புஏற்படுவதில்லை.http://3.bp.blogspot.com/-i1YlHK1zAV4/UAq3ZHIKViI/AAAAAAAADGw/FK6-hM1DATs/s1600/tirupathi.jpg

3. எந்தக் கருங்கல் சிலையானாலும் எங்காவது ஒர் இடத்தில் சிற்பியின் உளிபட்டிருக்கும் இடம் தெரியும்.. உலோகச்சிலையானாலும் உலோ கத்தை உருக்கி வார்த்த இடம் தெரியும். ஏழுமலையான் திருவுருவச்சிலையில் அப்படி எதுவும் அடையாளம் தெரியவில்லை. எந்த கருங்கல் சிலையை எடுத்துக்கொண்டாலும் சுரசுரப்பாக இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருமேனியில் நுணுக்க வேலைப்பாடுகள் எல்லாம் மெருகு போடப்பட்டது போல் இருக்கின்றன. ஏழுமலையான் விக்ரகத்தில் நெற்றிச்சுட்டி, காதணிகள், புருவங்கள், நாகாபரணங்கள் எல்லாம் நகைக்கு பாலீஷ் போட்டது போல் பளபளப்பாகஇருக்கின்றன.
4. ஏழுமலையான் திருவுருவச்சிலை எப்போதும் 110 டிகிரி ஃபாரன்கீட் வெப்பத்தில் இருக்கிறது. திருமலை 3000 அடி உயரத்தில் உள்ள குளிர்பிரதேசம். அதிகாலை 4.30 மணிக்கு குளிர்ந்த நீர், பால் மற்றும் திரவியங்களால் அபிஷேகம் செய்கிறார்கள். ஆனால், அபிஷேகம் முடிந்தவுடன் ஏழுமலையானுக்கு வியர்க்கிறது.பீதாம்பரத்தால் வியர்வையை ஒற்றி எடுக்கிறார்கள். வியாழக்கிழமை அபிஷேகத்திற்கு முன்னதாக, நகைகளைக் கழற்றும் போது, ஆபரணங்கள் எல்லாம் சூடாகக்கொதிக்கின்றன.
http://www.thehindu.com/multimedia/dynamic/00114/06_tirupati_114072f.jpg

திருப்பதி ஆலயம், அதன் வழிபாடு, உண்டியல் வசூல், பூஜை முறைகள், சரித்திர சம்பவங்கள் அனைத்தும் அதிசய நிகழ்வுகளாகஇருக்கின்றன.1. திருப்பதி திருக்கோயில் சமையல்கட்டு மிககூம் பெரியதாகும். பொங்கல், தயிர்சாதம்,புளிச்சாதம், சித்ரான்னம், வடை, முறுக்கு, ஜிலேபி, அதி ரசம், போளி, அப்பம், மெளகாரம், லட்டு, பாயசம், தோசை, ரவாகேசரி, பாதாம்கேசரி, முந்திரிப்பருப்பு கேசரி போன்றவை தினமும் பெரிய அளவில் தயார் செய்யப்படுகின்றன.2. ஏழுமலையானுக்கு தினமும் ஒரு புதிய மண்சட்டி வாங்குகிறார்கள். இதில் தயிர்சாதம் தவிர வேறு எந்த நைவேத்தியமும் கோவில் கர்ப்பக்கிருகத்திற்குக் குலசேகரப் படியைத் தாண்டாது. வைரம், வைடூரியம், தங்கப்பாத்திரங்கள் எதுவும் குலசேகரப்படியைத் தாண்டச் செல்லாது. ஆண்டவனுக்கு நைவேத்தியம் செய்யப்பட்ட எச்சில் மண்சட்டியும், தயிர்சாதமும் ஒரு பக்தனுக்குக் கிடைக்கப் பெற்றால் அது மிகப்பெரிய பாக்கியமாகும்.3. ஏழுமலையான் உடை 21 முழ நீளமும் 6 கிலோ எடையும் கொண்ட புடவை பட்டு பீதாம்பரமாகும். இந்த ஆடையை கடையில் வாங்க முடியாது. திருப்பதி தேவஸ்தான அலுவலகத்தில் 12500 ரூபாய் செலுத்த வேண்டும்.வாரத்தில் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மட்டும் தான் வஸ்திரம் சாத்துவார்கள். இது மேல் சாத்து வஸ்திரம். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு மூன்று வருடங்கள் காத்திருக்க வேண்டும்.4. உள் சாத்து வஸ்திரம் ஒரு செட் இருபதாயிரம் ரூபாய் கட்டணமாகும்.ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் 15 வஸ்திரங்கள் சார்த்துவதற்கு சமர்ப்பிக்கப்படும். பணம் செலுத்திய பிறகு வஸ்திரம் சாத்துவதற்கு பத்து வருடங்கள் காத்திருக்க வேண்டும்.

http://media-cdn.tripadvisor.com/media/photo-s/01/37/aa/04/tirupati-temple.jpg

5. பக்தர்கள் சமர்பிக்கும் வஸ்திரங்கள் தவிர அரசாங்கம் சமர்பிக்கும் சீர் வஸ்திரங்கள் ஆண்டுக்கு இரண்டு முறை சாத்தப்படுகிறது.6. ஏழுமலை ஆண்டவனுக்கு அபிஷேகம் செய்ய இன்று கட்டணம் செலுத்தினால் மூன்று ஆண்டுகள் காத்திருக்க வேண்டும்.


7. அபிஷேகத்திற்காக ஸ்பெயினில் இருந்து குங்குமப்பூ, நேபாளத்திலிருந்து கஸ்தூரி, சைனாவிலிருந்து புனுகு, பாரிஸ் நகரத்திலிருந்து வாசனை திரவியங்கள் முதலிய உயர்ந்த பொருட்கள் வரவழைக்கப்பட்டு, தங்கத்தாம்பாளத்தில் சந்தனத்தோடு கரைக்கப்படும் 51 வட்டில் பால் அபிஷேகம் செய்யப்படும். பிறகு கஸ்தூரி சாத்தி, புனுகு தடவப்படும், காலை 4,30 மணி முதல் 5,30 மணி வரை அபிஷேகம் நடைபெறுகிறது. அபிஷேகத்திற்கு சுமார் ஒரு லட்ச ரூபாய் செலவு ஆகும்.8. ஐரோப்பாவில் உள்ள ஆம்ஸ்டர்டாமில் இருந்து பக்குவப்படுத்தப்பட்ட ரோஜா மலர்கள் பக்தர்களால் திருப்பதிக்கு விமானத்தில் அனப்பி வைக்கப்படுகின்றன. ஒரு ரோஜா மலரின் விலைசுமார்80ரூபாய்.9. சீனாவிலிருந்து சீனச்சூடம், அகில், சந்தனம், அம்பர், தக்கோலம், இலவங்கம், குங்குமம், தமாலம், நிரியாசம் போன்ற வாசனைப் பொருட்கள் ஏழுமலையான் திருக்கோயிலுக்காக அனுப்பப்படுகின்றன.


10. ஏழுமலையானின் நகைகளின் மதிப்பு ரூ.1000 கோடி, இவருயை நகைகளை வைத்துக்கொள்ள இடம் இடமும் இல்லை. சாத்துவதற்கு நேரமும் இல்லை. அதனால் ஆண்டிற்கு ஒரு முறை உபரியாக உள்ள நகைகளை செய்தித்தாட்களில் விளம்பரப்படுத்தி ஏலம் விடுகிறார்கள்.

http://indiantraveljourney.com/wp-content/uploads/2010/11/Venkateshwara_Tirupati_Temple.jpg

11. ஏழுமலையானின் சாளக்கிராம தங்கமாலை 12கிலோ எடை. இதை சாத்துவதற்கு மூன்று அர்ச்சகர்கள் தேவை. சூரிய கடாரி 5 கிலோ எடை. பாதக்கவசம் 375 கிலோ. கோவிலில் இருக்கும் ஒற்றைக்கல் நீலம் உலகில் யாரிடமும் கிடையாது. இதன் மதிப்பு ரூ.100கோடி.12. மாமன்னர்களான இராசேந்திர சோழர், கிருஷ்ண தேவராயர், அச்சதராயர் போன்றோர் .ஏழுமலையானுக்கு பல காணிக்கைகளையும், அறக்கட்டளைகளையும் செய்து அவற்றை கல்வெட்டுகளிலும், செப்பேடுகளிலும் பொறித்துள்ளனர். சோழ அரசியும் இங்கு வந்து காணிக்கை சமர்பித்து இருக்கிறார்.13. ஆஜானுபாகுவாக இருக்கும் மூலவர் ஏழுமலை ஆண்டவனைப்போலவே, அபிஷேக அலங்காரம் செய்து பார்க்க ஒரு சிறிய விக்கிரகம் கி.பி.966 ஜுன் 8ஆம் தேதி வெள்ளியால் செய்யப்பட்டது. இந்த விக்ரகத்திற்கு பல்லவ குறுநில மன்னன் சக்தி விடங்கனின் பட்டத்து அரசி காடவன் பெருந்தேவி நகைகளைத்தந்து, பூஜைக்கு அறக்கட்டளையும் வைத்தார். முதலாம் குலோத்துங்க சோழன் திருமலை தேடிவந்து காணிக்கைசெலுத்திஉள்ளார்.


14. திருப்பதி ஓவியங்கள் 300 ஆண்டுகள் பழமையானவை.


15. வெள்ளிக்கிழமைகளில் வில்வ இலை அர்ச்சனைக்கு உபயோகப்படுத்தப்படுகிறது. மார்கழிமாத அர்சனைக்கும் உபயோகப்படுத்தப்படுகிறது.
http://i1.trekearth.com/photos/34318/dsc08166.jpg

16. சிவராத்திரி அன்று க்ஷேத்ர பாலிகா என்ற உற்சவம் நடைபெறுகிறது. அன்று உற்சவப்பெருமானுக்கு வைரத்தில் விபூதி நெற்றிப்படடை சாத்தப்பட்டு திருவீதி உலா நடைபெருகிறது. தாளப்பாக்கம் அன்னமய்யா, ஏழுமலையானை பரப்பிரம்மமாகவும், சிவாம்சம் பொருந்திய ஈஸ்வரனாகவும், சக்தி ஸ்வரூபமாகவும் பாடி, அந்த பாடல்களை செப்பேடுகளில் எழுதிவைத்துள்ளார். திருப்புகழ் பாடிய அருணகிரிநாதப் பெருமான் திருப்பதிக்கோயிலுக்கு வந்திருக்கிறார். அவரும் அன்னமய்யாவும் சமகாலத்தவர்கள். சங்கீத மும்மூர்த்திகளில் ஒருவரான முத்துசாமி தீட்சிதர் சிறந்த வித்யா உபாசகர், மந்திர சாஸ்திரம் தெரிந்தவர், நூற்றுக்கணக்கான தெய்வங்கள் மீது பாடியுள்ளார். ஏழுமயைான் மீது சேஷசல நாமம் வராளி ராகத்தில் பாடியுள்ளார்.17. அபிஷேகத்தின் போது ஏழுமலையான் தனது மூன்றாவது கண்ணை திறக்கிறார் என்ற ஐதீகம் உள்ளது.


18. ஏழுமலையானின் ஸ்தல விருட்க்ஷம் புளிய மரம்.


19. எந்த சாத்வீக, சாந்தமான தெய்வத்தின் திருவுருவச்சிலையிலும் கையில் ஒரு ஆயுதமாகிலும் இருக்கும். ஆனால் ஏழுமலையான் திருவுருவச்சலையில் எந்த ஆயுதமும் கிடையாது. அவர் நிராயுதபாணி. அதனால்தான் தமிழ் இலக்கியத்தில் நம் முன்னோர்களால், வெறுங்கை வேடன் என்று அழைக்கப்பட்டார்.20. 1781 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் பீரங்கிப்படை தக்கோலம் என்ற இடத்தில் முகாமிட்டிருந்தது. அப்படையின் 33 ஆவது பிரிவைச்சேர்ந்த லெவெல்லியன் என்ற போர் வீரர் படுகாயம் அடைந்தார். அவர் குணமடைய ஏழுமலையானை பிராத்தித்திருகிறார். குணமடைந்ததும் ஓர் இந்து சிப்பாய் மூலம் நேர்த்திக்கடன்செலுத்தியிருக்கிறார்.
http://www.tnsindia.net/backwater-temple-tour/gifs/tirupati-temple.jpg

21. ஆங்கிலேயர்கள் சர் தாமஸ் மன்றோ, கர்னல் ஜியோ ஸ்டிராட்டன் போன்றவர்கள் ஏழுமலையானின் பக்தர்கள் ஆவர்.


22. திருமலையின் புனிதத்தன்மை கருதி 1759 முதல் 1874 வரை எந்த ஆங்கிலேயரும் மலை ஏறவில்லை. ஆங்கிலப்பாதிரிகள் மலையில் ஏதாவது ஒரு பகுதியில் ஒரு சிலுவை நட விரும்பினார்கள். ஆனால் அதற்கு ஆங்கிலேயத் தளபதிகளே அனுமதி அளிக்கவில்லை. திருமலை திருக்கோயிலில் நித்யபடி பூஜைகள் நடக்க வேண்டும் என்று ஆங்கிலேயர்கள் விரும்பினார்கள். பூஜைகள் சரிவர நடக்காவிட்டால் தங்கள் ஆட்சிக்கு பங்கம் வரும் எனக் கவலைப்பட்டார்கள்.


23. திருப்பதி அலமேல்மங்கைக்கு உள்பாவாடை கத்வால் என்ற ஊரில் பருத்தியில் தயார் செய்யப்படுகிறது. செஞ்சு இனத்தைச்சேர்ந்த நெசவாளர்கள் இதை பயபக்தியுடன் நெய்கிறார்கள். உள் பாவாடை சீமாட்டியின் திருமேனியில் படுவதால், இதை நெய்யும் போது நெசவாளர்கள் மூன்று வேளை குளிப்பார்கள். அவர்கள் மது, மாமிசம் உண்ணமாட்டார்கள். வெள்ளிக்கிழமை அபிஷேகத்திந்கு பரிமள அறையில் வியாழன் இரவு அறைத்து தயார் செய்யப்படுகிறது. குங்குமப்பூ கலவையும் அபிஷேகத்திக்கு சேர்கப்படுகிறது. வெளிநாடுகளிலிருந்து வாசனை திரவியங்கள் பக்தர்கள் அனுப்பிய வண்ணம் உள்ளனர். ஒரு வாரத்திற்கு ரூ,50000 மதிப்புள்ள வாசனை திரவியங்கள் வருகின்றன.24. ஏழுமலையான் வாரத்தில் நான்கு நாட்கள் அம்பாளாகவும், 2 நாட்கள் விஷ்னுவாகவும், ஒரு நாள் சிவனாகவும் கருதப்பட்டு பூஜை நடைபெற்று வந்துள்ளது.


25. ஏழுமலையானின் அபிஷேக நீர் குழாய் மூலம் புஷ்கரணியில் கலக்கிறது. ஆகவே இது புனிதமான நீராகும். இங்கே குளித்துவிட்டு நீரில் நின்ற படியே இரு கைகளாலும் தண்ணீரை எடுத்து குளத்திலேயே விடவேண்டும். இது விசேஷ வழிபாடாகும்.


http://www.rang7.com/myindia/uploads/15609/photo/3604.jpg
26. வெள்ளிக்கிழமை அதிகாலை அபிஷேகத்திற்கு முன்பு ஒரு விசேஷ சாத்து முறை நடக்கும்.வடகலை சம்பிரதாயத்தில் '' வேங்கடமெனப்பெற்ற" என்ற பாசுரமும், தனியன்களும் இடம் பெறும். சாத்துமுறையின் போது பூ, வஸ்திரம் இல்லாமல் ஏழுமலையான் திருமேனியுடன் இருப்பார். முதலில் ஒரு தீபாராதனை எடுக்கப்படும். பிறகு தென் கலை சாத்து முறை சேவிக்கப்படும். பிறகு நைவேத்தியம் செய்யப்படும். பிறகு ஒரு தீபாராதனை செய்யப்படும். ஏழுமலையான் அந்த தீப ஒளியில் கண்ணைப் பறிக்கும் அழகோடு இருப்பார்.26. கி.பி.1543ல் விஜயநகர மாமன்னர் அச்சுதராயர் பத்மாவதிதாயாருக்கு திருக்கோயில் எழுப்பி கும்பாபிஷேகம் செய்துள்ளார். கி.பி.1764ல் நிஜாம் தெளலா என்பவனின் தலைமையில் வந்த முஸ்லீம் படைகளால் இடித்து தரைமட்டமாக்கப்பட்டன. இதன் இடிபாடுகள் இன்றைக்கும் உள்ளன.27. திருவில்லிப்புத்தூர் கோவிலில் இருந்து ஸ்ரீ ஆண்டாள் அணிந்த மாலைகள் திருபதி கொண்டு வரப்பட்டு ஏழுமலை ஆண்டவனுக்கு சாத்தப்படுகிறது. ஸ்ரீ ஆண்டாள் ஏழுமலையானை கடவுளாக வழிபட்டு வாழ்த்தி வணங்கிணார்.28. திருமலை திருக்கோவிலில் 1180 கல்வெட்டுக்கள் உள்ளன. இதில் 236 பல்லவ, சோழ, பாண்டியர் காலத்தவை. 169 கல்வெட்டுக்கள் சாளுவ வம்ச மன்னர்கள் காலத்தவை. 229 கிருஷ்ண தேவராயர் காலத்தவை. 251 அச்சுதராயர் காலத்தவை. 147 சதாசிவராயர் காலத்தவை. 135 கொண்டை வீடு அரசர் காலத்தவை. நந்திவர்மன் (பல்லவர்) ஆண்ட கி.பி.830 தொடங்கி 1909 வரை உள்ளன. கல்வெட்டுகளில் 50 கல்வெட்டுக்கள் தான் தெலுங்கு, கன்னட மொழிகளில் உள்ளன. மீதம் 1130 கல்வெட்டுக்கள் தமிழில் தான் உள்ளன.


 https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEhuiM4uKxhPxPiDq4t1ZUSXmOBjpDklY0uEfoW-IpjgN8e4jImy2QBlmyy7AdjI2vaqAO48Pcy1eJo6ANL6extluV10xjqQS_aqCVcFjs7oT6NQD9yHuWINNqzTtSvLHc653_o3t16Zjrc/s1600/tirupathi-balaji.jpg


நன்றி: உலக தமிழ் மக்கள் இயக்கம், தொழிற்களம்

கோகுலாஷ்டமி


http://3.bp.blogspot.com/-w2fdDAHSNWY/Tm-bzn8vzTI/AAAAAAAABw0/JRUT4wiE36k/s1600/Lord-Krishna-Wallpapers-2.jpgவன், நான் தவமா தவமிருந்து பெற்ற பிள்ளை’ என்கிற வசனத்தை நெகிழ்ச்சியும் மகிழ்ச்சியுமாகச் சொல்லாதவர்கள், நம் தேசத்தில் மிகக் குறைவுதான். குழந்தை என்பது இங்கே மிகப் பெரிய உன்னதமான வரமாகப் பார்க்கப்படுகிறது. வரம் என்பது தவத்தால் அடையக்கூடியது.தேடல் இருப்பவர்களே தவம் இருக்க முடியும். அது கடவுள் தேடலாக இருந்துவிட்டால், அந்தத் தவத்தின் பலனைச் சொல்லவே வேண்டாம். அப்படியரு தவத்தின் பலனாக, வரமாகக் கிடைப்பது காணக் கிடைக்காத ரத்தினமாக, பொக்கிஷமாக இருக்கும் என்பதில் எள்ளளவும் சந்தேகம் இல்லை!தசரத மகாராஜா, தனக்கும் தன் தேசத்துக்கும் வாரிசு வேண்டும் என்று ஆசைப்பட்டார். புத்திர பாக்கியம் இல்லையே என்கிற சோகத்தைத் தவிர, வேறு எந்தச் சோகமும் அவருக்கு இல்லை. புத்திர பாக்கியம் என்கிற ஒரு சந்தோஷம் இருந்துவிட்டால், வேறு எந்தச் சந்தோஷமும் இந்த உலகில் முக்கியமில்லை.அப்பேர்ப்பட்ட தசரத மகாராஜா, இறைவனை வேண்டித் தவமிருந்தார். கோயில் கோயிலாக அலைந்து தரிசித்து, மனமுருகப் பிரார்த்தித்தார். குருமார்களின் ஆசியுடனும் அறிவுரையுடனும் புத்திர காமேஷ்டி யாகம் செய்தார். அந்த தவத்தின் பலனாக, யாகத்தின் பலமாக, கேட்ட வரம் அவருக்குக் கிடைத்தது. சந்தான பாக்கியம் கேட்டவருக்கு நான்கு குழந்தைகள் பிறந்தார்கள்.


இங்கே ராமாயணத்தில் இப்படி என்றால், அங்கே மகாபாரதத்தில் என்ன நிகழ்ந்தது?


'அழகிய மகனைப் பெறுகிற பாக்கியத்தைக் கொடு’ என்று யசோதை வேண்டினாள். நந்தகோபனின் சிந்தனையில் பிள்ளை வரம் தவிர, வேறு எதுவும் இல்லை. இதேபோல், அனவரதமும் வசுதேவன், குழந்தைச் செல்வம் வேண்டும் வேண்டும் என்றே பிரார்த்தித்து வந்தார். மனமுருகி, ஆத்மார்த்தமாக, உள்ளுணர்வுடன்... குழந்தை கேட்டு தேவகியும் கண்ணீர்விட்டுப் பிரார்த்தனை செய்தாள்.


நந்தகோபன்- யசோதை, வசுதேவன்- தேவகி ஆகிய நான்கு பேரும் வேறெந்தச் சிந்தனையுமின்றி, 'எனக்கும் இந்த உலகுக்கும் நன்மை செய்யும் விதமாக குழந்தை வேண்டும்’ என்பதையே வரமாகக் கேட்டனர். அந்த நான்கு பேரின் தவத்தை நிறைவேற்றும் விதமாக, ஸ்ரீகிருஷ்ணர் அவதரித்தார்.http://media1.santabanta.com/full1/Hinduism/Lord%20Krishna/lor37s.jpg


அதாவது, ஒரேயருவர் மட்டுமே வேண்டிக்கொள்ள, ஸ்ரீராமபிரான் உட்பட நான்கு பேர் பிறந்தார்கள். இங்கே நான்கு பேர் வேண்டி விரும்பிப் பிரார்த்திக்க, ஒரேயரு கிருஷ்ண பகவான் அவதரித்தார். என்ன விளையாட்டு இது?


'சரி, அப்படின்னா... ஒருத்தர் வேண்டிக்கிட்டதுக்காக, நாலு பேர் பிறந்தது உசத்தியா? நாலு பேர் பிரார்த்தனை பண்ணினதுக்காக ஒருத்தர் பிறந்தாரே, அது உசத்தியா?’ என்று கேள்வி எழலாம்.


இதில் உசத்தி என்ன, தாழ்த்தி என்ன? இரண்டு பேருமே உசத்திதான்! அதுவொரு விதம், இதுவொரு விதம்! ஒருவர் விரதமிருந்து நான்கு பேர் பிறந்தனர். அங்கே... மூத்தவருக்கு, ஸ்ரீராமபிரானுக்கு ஸ்ரீராம ரத்தினம் என்று பெயர் அமைந்தது. அதேபோல் நான்கு பேர் விரதம் மேற்கொண்டு, பிரார்த்தனை அனுஷ்டித்தனர். அந்தக் குழந்தைக்கு, ஸ்ரீகோபால ரத்தினம் எனும் பெயர் அமைந்தது. அவர்... ராமரத்தினம்; இவர்... கோபால ரத்தினம், இரண்டு பேருமே உலகை உய்விக்க வந்தவர்கள்தான்.


ஆக, தவமிருந்து, விரதம் மேற்கொண்டு பிறந்த ஸ்ரீகண்ணபிரானுக்கு 'மேதேஜ:’ என்று திருநாமம் அமைந்தது. மேதேஜ என்றால் விரதத்தில் இருந்து பிறந்தவன் என்று அர்த்தம். நான்கு பேர் மட்டுமின்றி தேவர்களும் ஸ்ரீகிருஷ்ணரின் வருகையையும் பிறப்பையும் அவதரிப்பையும் ஆவலுடன் எதிர்பார்த்துப் பிரார்த்தித்தனர்.


அதுமட்டுமா? ஸ்ரீகிருஷ்ணர் இன்னொரு காரணத்தினாலும் அவதரித்தாராம்!
அதாவது, நந்தகோபனும் யசோதையும், வசுதேவரும் தேவகியும், தேவர்பெருமக்களும் வேண்டிக் கொண்டதற்காக மட்டுமின்றி, இந்த உலக மக்களுக்காக, அவர்கள் நன்மை பெற வேண்டும் என்பதற்காக, அவதரிக்க வேண்டும் என தாமே விரும்பி, விரதம் போல் உறுதிகொண்டு, பூமியில் அவதரித்தாராம் பகவான் ஸ்ரீகண்ணன்.


இப்படி, தாமே விரும்பி விரத உறுதி கொண்டு, அவதரித்ததால், சமேதஹ என்கிற திருநாமமும் கண்ண பரமாத்மாவுக்கு உண்டு. கிருஷ்ணாவதாரம் என்பது மிக உன்னதமானது. ஆகவே, வாழ்வில் ஒவ்வொரு நாளும் சந்தர்ப்பம் கிடைக்கிற தருணங்களில் எல்லாம் கிருஷ்ணரை மனதாரப் பிரார்த்திக்கொள்ளுங்கள்.ஸ்ரீகிருஷ்ணரின் பிறப்பு குறித்து பெரியாழ்வார் பாடும்போது, ரோகிணியில் அவதரித்தவன் என்று நேரிடையாகச் சொல்லவில்லை. அஸ்தத்தில் இருந்து 10-ஆம் நாள் அவதரிப்பவன் என்று குறிப்பிடுகிறார். அதற்கு நேரடியாகவே ரோகிணி நட்சத்திரம் என்று சொல்லியிருக்கலாமே!


ரோகிணி நட்சத்திரம் என்று பளிச்சென்று சொன்னால், அந்த நட்சத்திரத்தில் பிறந்த குழந்தையை, கம்சன் நிமிட நேரத்தில் கண்டுபிடித்துவிடுவான். பிறகு, ஆவேசத்துடன் குழந்தைக்கு ஏதேனும் தீங்கு விளைவிப்பான். கோபமும் ஆத்திரமும் ஆவேசமும் மரண பயமும் கொண்டு திரிகிற கம்சனுக்கு அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் அவதரித்த குழந்தை என்றால், சட்டென்று எந்த நட்சத்திரம் என்று தெரியாதாம்! 


http://wallpaper.365greetings.com/d/2116-2/radhakrishna-1k.jpg


அப்படித் தெரிந்து கொள்வதற்கு சில விநாடிகள் பிடிக்குமாம். தவிர, அஸ்தத்தில் இருந்து பத்தாம் நாள் என்றால் முன்னே வரவேண்டுமா பின்னே செல்ல வேண்டுமா என்று குழம்பித் தவிப்பானாம் கம்சன். இந்தத் தவிப்பு அடங்கி, ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தை என்று தெரிவதற்கு முன்பாக, தன்னை எப்படித் தற்காத்துக் கொள்வது என வியூகம் அமைத்துவிடுவானாம், குறும்புக் கண்ணன்!


பெரியாழ்வாரின் ஸ்ரீகிருஷ்ண பக்தி எத்தகையது என கொஞ்சம் நினைத்துப் பாருங்கள். நினைக்க நி¬னைக்க... கண்ண பரமாத்மா மீதும் பெரியாழ்வார் மீதும் அளப்பரிய பக்தி வந்து நம்முள் வியாபிக்கிறது!


பகவான் ஸ்ரீகிருஷ்ண பரமாத்மாவுக்கு யசோதை போல், நந்தகோபனைப் போல, வசுதேவரைப் போல, தேவகியைப் போல, ஏன்... நம் பெரியாழ்வார் போல், எத்தனையோ தன்யன்கள் இருக்கிறார்கள். கிருஷ்ண பிறப்பைச் சொல்லிச் சொல்லிப் பூரித்து, அவன் திருவடியை அடைந்தார்கள்.


ஆனால், இந்த உலக மக்களுக்கெல்லாம் அந்த கண்ண பரமாத்மா தன்யனாக இருக்கிறான். நம்மை அளவுக்கு அதிகமாக நேசிக்கிறான். நம் ஒவ்வொருவரின் நலனிலும் அதீத அக்கறை கொண்டிருக்கிறான். அதனால் அவனுக்கு தன்யஹ என்கிற அழகிய திருநாமமும் அமைந்தது.


நாம் அவனுக்குத் தன்யனாவோம். ஸ்ரீகிருஷ்ண ஜயந்தியை, அவனுடைய மகா பிறப்பை நினைத்துப் பூரிப்போம். அவன், நமக்குத் தன்யனாவான். நம் வீட்டுக்கு வந்து, இல்லத்தையே சுபிட்சமாக்குவான்http://www1.sulekha.com/mstore/sagribow/albums/default/Latest%20Radha%20Krishna%20wallpaper.jpg


கோகுலாஷ்டமியும் ஆடி கிருத்திகையும் அடுத்தடுத்து இந்த மாதத்தில் வருகின்றன. கண்ணபிரானுக்கும் கந்தவேளுக்கும் உகந்த திரு நாட்கள் அவை. கண்ணன், கந்தன் இருவருமே தெய்விகக் குழந்தை கள். 'குழந்தையும், தெய்வமும் கொண்டாடும் இடத்திலே’ என்பார்கள். தெய்வங்களே குழந்தைகளாகத் திகழும்போது கொண்டாட்டத்துக்குக் கேட்கவேண்டுமா? இந்த இரண்டு தெய்வங்களுக்கும் பல ஒற்றுமைகள் உண்டு.ஆடும் மயிலில் முருகன் அசைந்து வருகிறான் என்றால், கண்ணன் மயில் பீலியைத் தலையில் அணிந்த வண்ணம்  ஆடி வருகிறான்.
பகவத்கீதையை அருளிய பரந்தாமனை 'கிருஷ்ணம் வந்தே ஜகத்குரும்’ என்கின்றன புராணங் கள். அவ்வண்ணமே பிரணவ உபதேசம் அருளிய முருகப்பெருமானை பரமகுரு, குருசுவாமி என்று அழைத்து மகிழ்கிறோம்.குழல் ஊதி மனதெல்லாம் கொள்ளை கொள்கிறான் கோகுலக் கண்ணன். முருகக்கடவுளையும் சங்க காலத் தலைமை நூலான திருமுருகாற்றுப் படையில் நக்கீரர் 'குழலன், கோட்டன்’ என்றே குமரனை அழைத்து மகிழ்கிறார்.
வேலெடுத்து வினைகளைத் தீர்க்கிறான் ஆறுமுகன். கண்ணன் கையிலும் வேல் இருக்கிறது. ஆண்டாள் திருப்பாவையில் 'வென்று பகை கெடுக்கும் நின்கையில் வேல் போற்றி!’ எனப் பாடி மகிழ்கிறாள்.


கிருஷ்ணன் பிறந்தது ஓரிடத்தில்; வளர்ந்தது வேறிடத்தில். தேவகி பாலனை யசோதைதானே வளர்த்தாள்! அதேபோன்று, பார்வதி புத்திரனாகிய வேலவனையும் கார்த்திகைப் பெண்கள்தானே வளர்த்தார்கள்!


http://www.totalbhakti.com/wallpaper/image/thum_1024x768/lord-krishna-768.jpg


தர்மத்தை நிலைநாட்ட, தீயவர்களை அழிக்க கண்ண பெருமான் போர்க்களம் கண்டார். கந்தபெருமானும் சூராதி அவுணர்களை அழித்து தேவர் உலகை வாழச் செய்தார். கீதையில் கிருஷ்ண பகவானே 'சேனைத் தலைவர்களிலே நான் குகப் பெருமானாக விளங்குகிறேன்’ என்று கூறி மகிழ்கிறார்.


கண்ணன் காதல் மன்னன். கந்தனும் தினைப்புனம் சென்று, குறவர் குடிசை நுழைந்து வள்ளி நாயகியாரிடம் புரிந்த லீலைகளைக் கந்தபுராணம் விவரிக்கிறது.
 
 
வள்ளி- தெய்வானை தேவியர் இருமருங்கும் விளங்க முருகன் காட்சி தருவது போலவே பாமா, ருக்மிணி தேவியருடன் பகவான் கிருஷ்ணர் விளங்குகிறார்.
'மயிலும் ஆடி நீயும் ஆடி வரவேண்டும்’ என வேலனிடம் வேண்டுகோள் வைக்கும் அருணகிரிநாதர், 'எந்தை வருக! ரகுநாயக வருக! மைந்த வருக!’ என கண்ணுக்கினிய கறுப்பு நிறக் குழந்தை கண்ணனையும் காதலித்து அழைக்கிறார்.


'பாம்புத் தலைமேலே நடம் செய்யும் பாதத்தினைப் புகழ்வோம்!’ எனக் கண்ணனைப் போற்றும் பாரதியார், 'வெற்றி வடிவேலன் அவனுடை வீரத்தினைப் புகழ்வோம்’ என்று முருகனையும் பாடுகிறார். ஆதிசங்கரரோ... சுப்ரமண்ய புஜங்கம், பஜகோவிந்தம் இரண்டும் பாடி கந்தன், கண்ணன் இருவரையும் வணங்குகிறார்.


தெய்வக் குழந்தைகள் இருவரிடமும் தீராத பக்தியும், மாறாத அன்பும், ஆறாத காதலும் கொள்வோம்; அன்றாடம் வாழ்வினில் வெல்வோம்!
'உங்க அமெரிக்கப் பயணத்தில் மறக்க முடியாத அனுபவம் எது?’ என்று நண்பர் ஒருவர் என்னிடம் கேட்டார்.


'அமெரிக்காவுக்கு இப்போது நான் நாலாவது முறையாகச் சென்றாலும், இந்த முறை என் துணைவியாரும் என்னோடு வந்ததுதான் மறக்க முடியாத அனுபவம். நாங்கள் தங்கியிருந்த நாட்களில் அங்கே அதிகம் போன இடம் கோயில்கள்தான்!' என்று நான் சொன்னபோது, 'என்னது... அமெரிக்காவில் இந்துக் கோயில்களா?' என்று நண்பரும், உடன் இருந்த எல்லோரும் வியந்தார்கள்.


'ஆமாம்! அமெரிக்காவில் இருக்கின்ற 53 மாநிலங்களிலும் சேர்த்து 500-க்கும் மேற்பட்ட இந்துக் கோயில்கள் இருப்பதாக ஒரு தமிழ் நண்பர் சொன்னார். நியூஜெர்ஸி பகுதியில் மட்டும் 40-க்கும் மேற்பட்ட கோயில்கள் உள்ளனவாம். அங்கே தமிழ்ச் சங்கக் கூட்டங்களைக் கோயில்களில் வைப்பதன் மூலம் பக்தியும் தமிழும் கைகோப்பதை என்னால் பார்க்க முடிந்தது. இன்னொரு அதிசயம் என்ன தெரியுமா? 
 
 அமெரிக்காவில் நான் பார்த்த அளவில் புல்வெளிகள், சோலைகள் ஆகியவற்றில் இருந்த அணில்கள் நம்மூர் முயல்கள்போல இருந்தன. அவற்றின் முதுகில் கோடுகள் இல்லை!' என்றேன். 


'அப்ப அது அணிலே இல்லை' என்றார் ஒருவர். 'கோடுகள் இல்லாத அணிலா?' என்று இன்னொருவர் கவலைப்பட்டார்.  'அட, விடுய்யா! நம்ம ஊர்ல இதுக்கு ஒரு கதையே உண்டு. ராமர் இலங்கைக்குப் போக பாலம் கட்டுறப்போ அணில் உதவினதால, நன்றியோட அதன் முதுகுல தடவுனாராம்; அதனால கோடு விழுந்துச்சாம். ராமர்தான் அமெரிக்கா போயிருக்கமாட்டார்ல... அதனாலதான் அங்கே கோடு இல்லாத அணில்' என்று ஒருவர் விளக்கம் தந்தார். எல்லோரும் கைதட்டினார்கள்.


http://www.totalbhakti.com/wallpaper/image/thum_800x600/Lord-Krishna-wallpaper-855.jpg'இவர் சொல்லுறதுகூட நல்லாதான் இருக்கு'' என்று பாராட்டிய நான், ''அணில் முதுகுல இருக்குற கோட்டுக்கு ராமர்தான் காரணம் என்பதை வெச்சு ஒரு புதுக்கவிதை வந்திருக்கு, தெரியுமா?' என்று கேட்டேன். 'தெரியுமே..! 'இந்த அரசாங்க ஆட்கள் எதைத் தொட்டாலும் வரிதான்!’ என்று சட்டென எங்கள் நண்பர் கவிதைப் பித்தன் தாடியை வருடியபடி சொல்ல, எல்லோரும் அவருக்கு சபாஷ் சொன்னோம்.பேச்சு வேறெங்கெங்கோ திசைதிரும்பிற்று. 'அமெரிக்காவில் இருக்கிற மாநிலங்கள் எத்தனை என்பதை ஈஸியா நினைவில் வெச்சுக்க ஒரு 'ஐடியா’ இருக்கு, தெரியுமா?' என்று புதிர் போட்டார் வரலாற்றுத்துறை பேராசிரியரான நண்பர்.'மேப்பைப் பார்த்து தெரிஞ்சுக்க வேண்டியதுதானே?' என்று ஒருவர் அலுப்புடன் கேட்க, 'அது தேவையே இல்லை. அமெரிக்கக் கொடியில் நட்சத்திரங்கள் இருப்பதைப் பார்த்திருப்பீர்கள்தானே? அந்த நட்சத்திரங்களின் எண்ணிக்கைதான் அமெரிக்க மாநிலங்களின் எண்ணிக்கை' என்று அவர் சொன்னபோது எல்லோரும் ஆச்சரியப்பட்டார்கள்.


அந்த நேரத்தில் ஜில்ஜில் ஜிகர்தண்டா குளுமையான மணத்தோடு ஐஸ்கிரீம் கப்புகளில் வந்து சேர, அத்தனை பேரும் அமெரிக்காவை மறந்து ஜிகர்தண்டாவில் ஐக்கியமானார்கள்.


 நன்றி - சக்தி விகடன்

Tuesday, August 07, 2012

கர்நாடகா -சிருங்கேரி - ஸ்ரீசாரதா பீடத்தின் ஆச்சார்யா ஜகத்குரு. பேட்டி

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjSIB_dMmT8-lncyaG9nk-Nie1ljXBS_1LIw4VMeU96mafdGBSBrGIjBpKEcCDhan49a5mMuc_ZBRJZIpU1WNjQBJlc71B1Tnh3VhPV0PkhSwh4RXxR7lDqp5hq7WrudomvtI9ckSfrGou2/s320/SirungeriNews1.jpg 

ஆச்சார்ய தரிசனம்
தர்ம சிந்தனை தூண்டப்பட வேண்டும்!
பி.சுவாமிநாதன்
கர்நாடக மாநிலம் சிக்மகளூர் மாவட்டத்தில் அமைந்துள்ள புண்ணிய பூமி - சிருங்கேரி. மகான் ஸ்ரீ ஆதிசங்கரர் ஸ்தாபிதம் செய்த புனிதமான ஸ்ரீசாரதா பீடம் இங்கேதான் அமைந்துள்ளது. ஸ்ரீ சரஸ்வதி தேவியே இங்கு சாரதாதேவியாக அருள்பாலிக்கின்றாள். ஸ்ரீ ஆதி சங்கரருக்கு சிவபெருமான் தந்தருளிய ஸ்படிக லிங்கத்துக்கு சிருங்கேரி பீடாதிபதிகள் இன்றளவும் பூஜை செய்து வருகின்றனர்.சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36ஆவது ஆச்சார்யாளாகத் தற்போது வீற்றிருப்பவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் ஆவார். ‘கல்கி’ இதழின் பிரத்யேகப் பேட்டிக்காக ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகளை சென்னையில் சந்தித்தோம். நறுக்குத்தெறித்தாற் போல் தமிழ் பேசுகிறார் ஜகத்குரு.தங்களுக்கு முந்தைய ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரிடம் தாங்கள் பார்த்து வியந்த நிகழ்வு ஏதேனும் சொல்லுங்களேன்...?
ஒன்றா, இரண்டா... அவரிடம் நான் பார்த்து வியந்த நிகழ்வுகளை இங்கே சொல்ல ஆரம்பித்தால், அது ஒரு மாபெரும் தொகுப்பாக ஆகிவிடும். 23 வருடங்கள் அவருடன் இருந்திருக்கிறேன்; பயணித்திருக்கிறேன். பல விஷயங்களை எனக்குச் சொல்லிக் கொடுத்திருக்கிறார். அவரிடம் நான் என்னென்ன அம்சங்களைக் கண்டு வியந்தேனோ, தெரிந்து கொண்டேனோ - அவற்றை எல்லாம் தொகுத்து ‘அஷ்டோத்தர சதநாம ஸ்தோத்திரம்’ என்று எழுதி இருக்கிறேன். அதாவது 108 நாமாக்களில் என் குருநாதரின் சரிதத்தை எளிமையாகக் குறிப்பிட்டிருக்கிறேன். இந்த நாமாக்களை எவர் ஒருவர் சொல்லிப் பிரார்த்திக்கும்போதும் என் குருநாதரை பிரத்யட்சமாகத் தரிசிக்கலாம்."தர்ம சிந்தனை இன்று பெருகி இருக்கிறதா?

தர்மம் செய்ய வேண்டும் என்பது ஓர் உணர்வு. எந்த ஓர் உணர்வும் தூண்டப்பட வேண்டும். தூண்டப்பட்டால்தான் அதற்குப் பலன் இருக்கும். எல்லோருக்கும் பக்தி உணர்வு இருக்கிறது. இந்தப் பக்தி உணர்வானது தூண்டப்பட்டால்தான் பலன். பக்தி உணர்வு தூண்டப்படுவதன் வெளிப்பாடே - சத் சங்கம். வழிபாடு. பஜனை. நாம கோஷம்.அதுபோல் தர்மம் செய்ய வேண்டும் என்கிற எண்ணமும் ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்பட வேண்டும். உரிய சந்தர்ப்பம் வரும்போது இத்தகைய தர்ம உணர்வு ஒவ்வொருவருக்குள்ளும் தூண்டப்படும். தர்மம் செய்ய வேண்டும் என்கிற உணர்வு எல்லோருக்கும் இருக்கிறது. அதற்குரிய சந்தர்ப்பம் வர வேண்டும்.இன்றைக்கு எனது உபன்யாசம் இங்கே இருக்கிறது என்றால், இதைக் கேட்பதற்கு எல்லோரும் வர வேண்டும். ஆச்சார்யாள் உபன்யாசத்தைக் கேட்க எல்லோரும் வர வேண்டும் என்றால், வருவதற்கு உரிய சந்தர்ப்பம் வாக்க வேண்டும் அல்லவா? சந்தர்ப்பம் அமைந்தால்தானே வர முடியும்?சந்தர்ப்பம் அமைந்தபின் சிரத்தை வரும். உபன்யாசம் கேட்பதற்கே சந்தர்ப்பம் வரவில்லை என்றால், ஜனங்களுக்கு சிரத்தை எப்படி வரும்? எந்த ஒரு நல்ல காரியத்தையும் கேட்பதற்கு - செய்வதற்கு மக்களுக்கு சந்தர்ப்பத்தைத் தர வேண்டும்."
http://www.ammandharsanam.com/magazine/July2010unicode/images/Thagavlkalangiyam.jpg


நேர்மையாக வாழும்போது அதிக கஷ்டங்கள் வருகின்றனவே? இதுவே பல நேரங்களில் சோர்வைத் தருகின்றதே...?
நேர்மையாக வாழ்ந்து வருபவருக்குத் தான் கஷ்டங்கள் வரும். சோதனைகள் வரும். நியாயம் தோற்பது போல் தெரியும். ‘தோற்றுப் போய் விடுவோமோ’ என்கிற பயம் வரும். ஆனால், கடைசியில் நேர்மை தான் ஜெயிக்கும்.பொதுவாக, ஆன்மிகத்தில் இருந்தாலே எல்லா கஷ்டங்களையும் பட வேண்டி இருக்கும். கஷ்டப்படுகிறவர்தான் கடைசியில் ஜெயிப்பார். ஸ்ரீராமரின் வாழ்க்கையையும், ஸ்ரீதர்மரின் வாழ்க்கையையும் பார்த்தாலே இது புரியும்.மூன்று லோகங்களையும் ஆண்டவன் ராவணன். புஷ்பக விமானம் என்ன... படாடோபமான அரண்மனை என்ன... சோகுசாக இருந்தான். ஆனால், ராமபிரானுக்கு என்ன வசதி இருந்தது? அவர் பட்ட கஷ்டம் கொஞ்சமா நஞ்சமா? கடைசியில், ராவணனின் கொட்டம் அடங்கி, சத்தியம் ஜெயித்து, ராமபிரான் சக்கரவர்த்தி ஆனாரே!எல்லாவற்றையும் கடவுள் பார்த்துக் கொண்டிருக்கிறார். கடவுளின் கண்களை நம்மால் மூட முடியாது. இது நினைவில் இருக்க வேண்டும்."பிரார்த்தனை செய்தால், அது பலித்து விடுமா? ஒருவரின் பிரார்த்தனை பலிக்க என்ன செய்ய வேண்டும்?

பிரார்த்தனை மட்டும் போதாது. பக்தியும் நம்பிக்கையும் வேண்டும். பக்தியும் நம்பிக்கையும் இல்லாமல் செய்யப்படுகின்ற பிரார்த்தனை பலன் தராது

.

இன்றைக்கு எல்லோரிடமும் நம்பிக்கை இருக்கிறது. ‘நிச்சயம் நல்லது நடக்கும்... நடக்க வேண்டும்’ என்று நம்பித்தான் பக்தி உணர்வு மேலோங்க கோயிலுக்கும் பீடங்களுக்கும் வருகிறார்கள். தங்கள் பிரார்த்தனைகளை அங்கே வைத்து அவை நிறைவேறப் பெறுகிறார்கள்."
மதங்களுக்கும் அரசியலுக்கும் தொடர்பு இருக்கிறதா?அரசியலுக்கு மதம் தேவை இல்லை. ஆனால், தர்மம் அவசியம் தேவை.தர்மம் என்றால் என்ன? உண்மை. இந்த உண்மையைத்தான் நாம் தர்மம் என்கிறோம். ‘நான் அரசியலுக்கு வந்து விட்டேன். இனிமேல் உண்மை பேசவே மாட்டேன்’ என்று யாராவது சொல்ல முடியுமா? தர்மத்தை மீற முடியுமா?

http://2.bp.blogspot.com/_SQQxuGz7JZ4/S98MlcKzYwI/AAAAAAAABwU/jJCXQOzFpzg/s640/sringeri+mutt9.jpg

மதத்தையும் தர்மத்தையும் சேர்த்துக் குழப்பிக் கொள்ளக் கூடாது. மதம் என்பது ஒவ்வொருவரும் தொன்றுதொட்டுப் பின்பற்றி வரும் வழி. ஆனால், தர்மம் என்பது இந்த மதத்துக்கு மட்டும் தான் என்றில்லை. எல்லா மதத்துக்கும் உண்டு. ‘அப்பா- அம்மாவை வைத்துக் கடைசிவரை காப்பாற்ற வேண்டும்’ என்பது இந்து மதத்துக்கு மட்டுமில்லை... உலகில் இருக்கிற எல்லா மதங்களுமே இதைப் போதிக்கின்றன. ‘திருடக் கூடாது... பொய் சொல்லக் கூடாது’ என்பதை இந்து மதம்தான் என்றில்லை... அனைத்து மதங்களுமே போதிக்கின்றன. நாம் கொண்டுள்ள தர்மத்தை எந்த நாளும் கைவிடக் கூடாது."புன்னகைத்து விடைகொடுக்கிறார் ஜகத்குரு. அவரை சாஷ்டாங்கமாக நமஸ்கரிக்கிறோம். ஒரு சமஸ்தானத்தை - சன்னிதானத்தைத் தரிசித்த ஆனந்தமும் சிலிர்ப்பும் மேலோங்க... வெளியே வந்தால் - பெரும் ஜனத்திரள் இந்த மஹா ஸ்வாமிகளின் தரிசனத்துக்காகக் காத்திருக்கிறது.சென்னையில் சாதுர்மாஸ்யம்

சிருங்கேரியின் 35-வது ஆச்சார்யாளாக இருந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரால் அடையாளம் காணப்பட்டு, சிறு வயதிலேயே சந்நியாசம் பெற்றவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள்.ஆந்திர மாநிலம் குண்டூர் மாவட்டத்தில் நாகுலேரு நதிக்கரையில் அமைந்துள்ள அலகுமல்லிபடு கிராமத்தில் 1951-ல் அவதரித்தவர் ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள். பெற்றோர் இவருக்கு வைத்த திருநாமம் - சீதாராம ஆஞ்சநேயலு. பள்ளியில் படித்த காலத்திலிருந்தே சம்ஸ்க்ருத மொழியிலும் கவிதை புனைவதிலும் கரை கண்ட சீதாராம ஆஞ்சநேயலு, சிறந்த சிவ பக்தர்.அப்போது சீதாராம ஆஞ்சநேயலுக்கு வயது ஒன்பது. சிருங்கேரி பீடத்தில் 35-வது ஆச்சார்யாளான ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் ஒரு முறை சீதாராம ஆஞ்சநேயலு படித்து வரும் பள்ளிக்கு விஜயம் செய்தார். சீதாராம ஆஞ்சநேயலுவின் அளவு கடந்த ஞானம், குருதேவரை மகிழ்ச்சிக்கு உள்ளாக்கியது. சிறிது நேரம் உரையாடிவிட்டு, சிறுவனுக்குப் பொன்னாடை வழங்கி அருள் பாலித்தார்.அடுத்தடுத்து வந்த ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்தரின் யாத்திரைகளில் கலந்து கொள்ளத் தொடங்கினார் சீதாராம ஆஞ்சநேயலு. இப்படித்தான் குருவுக்கும் சீடனுக்கும் அன்னியோன்னியமும் ஏற்பட்டது.தன் 23-வது வயதில் (1974-ல்) ‘ஸ்ரீபாரதீ தீர்த்தர்’ எனும் தீக்ஷா நாமத்துடன் - புகழ் பெற்ற சிருங்கேரி ஸ்ரீசாரதா பீடத்தின் 36-வது ஆச்சார்யாளாகப் பொறுப்பேற்றுக் கொண்டார் சீதாராம ஆஞ்சநேயலு. 1989-ல் ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகளின் முக்திக்குப் பின் பாரத தேசத்தின் ஒப்பற்ற குருவாக இவர் அமைந்து உலா வருவது நாம் பெற்ற பேறு. 1960-ஆம் ஆண்டு சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீஅபிநவ வித்யா தீர்த்த ஸ்வாமிகள் சென்னை தி.நகரில் சாதுர்மாஸ்ய விரதத்தை (சந்நியாசிகள் அனுஷ்டிக்கும் விரதம்) மேற்கொண்டார். அவருக்கு அடுத்த சிருங்கேரி பீடாதிபதியான ஸ்ரீபாரதீ தீர்த்த மஹாஸ்வாமிகள் தற்போது சென்னை மயிலாப்பூரில் ‘சுதர்மா’ இல்லத்தில் சாதுர்மாஸ்ய விரதத்தை அனுஷ்டித்து வருகிறார்.


http://img.dinamalar.com/data/large/Tamil_News_large_448861.jpgAநன்றி - கல்கி, சீதாரவி, அமிர்தம் சூர்யா, கதிர்பாரதி, புலவர் தருமி

Saturday, August 04, 2012

ஆடி 18 @ ஈரோடு மாவட்டம் பவானி கூடுதுறை

ஆடி 18ன்னா  ஆறு இருக்கும் இடங்கள் எல்லாம் கூட்டம் அள்ளிக்கும்.. ஆடி 18 களை கட்டும் இடங்கள கொடுமுடி ,பவானி ,மேட்டூர் ,முக்கொம்பு திருச்சி ,கோவை குற்றாலம்,பவானிசாகர்,டாப் ஸ்லிப் பொள்ளாச்சி்.

 ஈரோட்டில் இருந்து 16 கிமீ தொலைவில் பவானி இருக்கு.. பழைய பஸ் ஸ்டேண்ட் ஸ்டாப்பிங்க்..  சர்வீஸ் பஸ்ல 10 ரூபா டிக்கெட் , டவுன் பஸ்ல 6 ரூபா டிக்கெட்..  டவுன் பஸ் நெம்பர் 5 , 16 ( அக்ரஹாரம் வழி). 3,3பி ( சித்தோடு வழி)


3 லட்சம் பேர் இன்னைக்கு வருவாங்கன்னு சொல்றாங்க.. நான் போனப்ப 70,000 பேர் @ 6 AM


பவானி கூடுதுறை முகப்பு
பவுர்ணமி பூஜை @ ஈரோடு மாவட்டம் சென்னிமலை அருள் மிகு காமாட்சி அம்மன் கோவில்

ஆகாயத்தாமரைகளால் ஆக்ரமிக்கப்பட்ட பவானி ஆறு

வலம்புரி விநாயகர் @ பவானி
 அ

ஸ்தல விருட்சகம் இல்ந்தை மரம்
முளைப்பாரி
குட்டீஸ்க்காக
 
 அ
கோடீஸ்வரர்
 
கம்மங்கூழ் சைடு டிஷ் 6 வகையறா
 a


காய்ச்சலை குணப்படுத்தும் ஜூரஹேஸ்வரர்
a
சனீஸ்வரருக்கான எண்ணெய் தீபம்
ஜவ்வு மிட்டாய் வாட்ச்மேன்
 
சென்னிமலை மாரியம்மன் கோவில் பிள்ளையார்
மாரியம்மன் செக்யூரிடிஸ்
 
 
 
 a
பேண்ட் அணியாத எலிபேன்ட்
a

பவானி கூடுதுறை சனீஸ்வரர் அலங்காரம் அழகு
a
பவானி கூடுது றையில் பலா மரம்
 
பவானி கூடுதுறை ஆற்றில்

சென்னிமலை மாரியம்மன்
 
 
 
 
 

Sunday, September 04, 2011

சுமங்கலிப்பெண்கள் வேண்டுதலுக்காக மொட்டை அடிக்கலாமா? ( ஆன்மீகம் கேள்வி பதில்கள் )

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

1. விநாயகருக்கு கோயில் கட்டும் விருப்பத்துடன், அதற்கான வாஸ்து பூஜை செய்து திருப்பணி துவங்கும் நாளில், விநாயகர் விக்கிரகம் திருடுபோய் விட்டது. எங்குதேடியும் கிடைக்கவில்லை. இந்த நிலையில் திருப்பணிகளைத் தொடரலாமா? கோயிலில் புதிதாக ஒரு விநாயகர் விக்கிரகத்தை பிரதிஷ்டை செய்யலாமா?


திருப்பணியைத் தொடருங்கள். புது விநாயகர் விக்கிரகத்தை வாங்கி வந்து பிரதிஷ்டை செய்யுங்கள். கோயிலில் குடியிருத்த இறையுருவம் வேண்டும். கைக்கு எட்டியது நழுவினால், மற்றொன்றை பெற்றுச் செயல்படுவது சிறப்பு. வருங்காலச் சந்ததியின ருக்கு வழிகாட்டும் அறத்தை, இறையுருவத்தின் இழப்பைக் காரணம் காட்டி தவறவிட்டுவிடக் கூடாது. 

கோயில்கள் நடைமுறை என்பது, பொது அறத்தைப் போதிக்கும் மௌன குரு; ஒருவனை, பண்பட்ட குடிமகனாக வார்த்தெடுக்கும் திறன் கோயில்களுக்கு உண்டு. எனவே, இடையூறை எதிர்த்துச் செயல்படுங்கள். வெற்றி உண்டு.


2. நானும் என் கணவரும் (வயது 55) அம்மன் விரதங்களில் ஏதேனும் ஒன்றை கடைப்பிடித்து வழிபட விரும்புகிறோம். எந்த விரதத்தைக் கடைப்பிடிக்கலாம்?


அலுவல்களை மறந்து அம்பாளை நாடும் எண்ணம் மனதில் முளைக்கும் வேளை, வழிபாட்டுக்கு உகந்தது. அம்பாளின் பெருமைகளை விளக்கும் புராணக் கதைகள், உலகை துயரத்தில் இருந்து விடுவிப்பதற்காக அவள் செயல்பட்ட நாள்- நேரம் ஆகியன எல்லாம், மனதில் ஆழமாகக் குடிகொண்டிருக்கும் அம்பாளை நினைவுகூரப் பயன்படுபவை. 
 
அம்பாளின் பெருமை சொல்லில் அடங்காது. உமாமகேச்வர விரதம், கிருத்திகா சோமவாரம், நவராத்திரி போன்ற விழாக்கள், அம்பாளின் நினைவைப் பசுமையாக வைத்துக்கொள்ள உதவும். அலைபாயும் மனதை அடக்கிவைக்கவும் பயன்படும். தவிர, நித்யமாக அவளை வழிபடும் நடைமுறையை ஏற்படுத்திக் கொண்டால், மனம் அசையாமல் அவளிடம் நின்று விடும். அது நம்மை நல்வழிப்படுத்தும். 
 
பண்டைய காலத்தில் பஞ்சாயதன பூஜையை நித்யமாக ஏற்று வந்தோம். சூரியன், அம்பிகை, விஷ்ணு, கணபதி, ஈசன் ஆகியோரை வழிபடுவது பஞ்சாயதன பூஜை. பெருமாளிடம் மனம் லயித்தவர்கள், சாளக்கிராமத்தை நடுநாயகமாக வைத்து, மற்ற நான்கு தெய்வங்களை பரிவார தேவதையாக அமைத்து வழிபடுவார்கள். அதேபோல், அவரவர் விருப்பத்துக்கு ஏற்ப மற்ற தெய்வங்களையும் நடுநாயகமாக வைத்து வழிபடலாம். புராணங்கள், கதைகள், வரலாறுகள், கோயில் நடைமுறைகள், சிறப்புகள், சம்பிரதாயங் கள், நம்பிக்கைகள் ஆகியவற்றைக் கொண்டு கணக்கிலடங்கா வழிபாட்டு முறைகள் உண்டு.

ஆனால், நமது விருப்பத்தை ஒட்டுமொத்தமாக நிறைவேற்றி, பிறப்பின் பலனை அடையச் செய்யும் பஞ்சாயதன முறையை ஸனாதன தர்மம் நமக்குப் பரிந்துரைக்கிறது. அது, நமக்குத் தேவையான பலனை அளிப்பதால், பஞ்சாயதனத்தை (தேவி பஞ்சாயதனம்) ஏற்று வழிபடுங்கள்; வெற்றிகள் கைகூடும்.


3. வீணையை வீட்டில் வைத்திருந்தால் விருத்தி கிடையாது என்கிறார்களே... அப்படியா?


வீணையை வீட்டில் வையுங்கள்; அதனால் விருத்தி ஏற்படும். வீணையில் அலைமகள் குடிகொண் டிருக்கிறாள். எனவே, அதை வைத்துக்கொள்வது சிறப்பு; வீடு, செல்வச் செழிப்புடன் விளங்கும் என்கிறது வேதம் (ச்ரியாவா எதத்ரூபம். யத்வீணா. ச்ரியமேவாஸ்மின்...).

   'வீணையை வாசி. ஐஸ்வர்யம் கொட்டும்’ என்று சாஸ்திரம் சொல்கிறது. கலைமகள், வீணையும் கையு மாகக் காட்சியளிப்பாள். ஸீமந்தோன்னயனத்தில் வீணையை வாசிப்பார்கள். தர்மசாஸ்திரமும், வீணை வாசிக்கச் சொல்கிறது. வேதம் அறிமுகம் செய்த வாத்தியம் அது. எனவே, வீணையை வீட்டில் வைத்துக்கொள்ளலாம்.

4. சில மாதங்களில், ஒரே நட்சத்திரம் இரண்டு முறை வருகிறது. அந்த மாதத்தில் பிறந்த நாள் வரும் நிலையில், ஜன்ம நட்சத்திரமாக எதை எடுத்துக் கொள்வது?

இரண்டாவதாக வரும் நட்சத்திரத்தை எடுத்துக்கொள்வது சிறப்பு. சாஸ்திரமும் அதை ஏற்கும். நட்சத்திர மாதம் 27 நாட்களில் முடிவடையும். நாம் ஸெளரமானத்தை ஏற்கிறோம். ஒரு ராசியில் சூரியன் நுழைந்து மறு ராசியில் காலெடுத்து வைக்கும் நாள் வரை கணக்கிட்டு, ஒரு மாதமாக ஏற்கிறோம். 

இதன்படி, மாதங்களில் 29 நாளிலிருந்து 32 நாள் வரை வித்தியாசம் காணப்படுவதுண்டு (அதாவது, ஒரு மாதத்தில் 29 நாட்கள் வரும்; இன்னொரு மாதத்தில் 32 நாட்கள் இடம்பெறும்).

நாட்களின் அடிப்படையில் மாதத்தைக் கணக்கிட, 30 நாட்கள் எடுத்துக்கொள்வோம். ஸெளரமானம், நட்சத்திரமானம், ஸாவனம் - ஆகிய மூன்று அளவையில் இருக்கும் மாதங்களை... செய்யும் சடங்குக்கு ஏற்ப, பொருத்தமானதை தேர்ந்தெடுப் போம்.

உதாரணத்துக்கு... மகப்பேறு மாதத்தைக் கணக்கிடும்போது, நட்சத்திர மாதத்தை ஏற்போம். அங்கு ஸெளரமானமோ, ஸாவனமோ பொருந்தாது. ஸெளரம் 29-ல் இருந்து 32 வரை இருப்பதும், ஸாவனம் 30 நாளாக இருப்பதும் கணக்கிடுவதற்கு இடையூறாக இருக்கும். ஆகவே, அதற்கு நட்சத்திர மாதம்தான் பொருந்தும் என்கிறது ஜோதிடம்.

27 X 10 =  270 நாட்கள் தாண்டினால் மகப்பேறு நடைபெறுவது உண்டு. பத்து மாதம் சுமந்து பெற்றாள் என்கிற கோட்பாடு, நட்சத்திரமானத்துக்கு பொருத்தமாக இருக்கும். ஸெளரமானாலும் ஸாவனமானாலும் 30X10 = 300; 31X10 = 310 என்று தெளிவில்லாத காலத்தைக் குறிப்பிடும்.


ஓர் அயனம்- 6 மாதங்கள் (30 நாள் கொண்டது), ஒரு பருவ காலம், 2 மாதங் கள் ( அதாவது 60 நாள்கள்), ஒரு மாதம் (30 நாட்கள்), ஒரு பஷம் (15 நாள்), ஒரு நாள், ஒரு முகூர்த்தம் ஆகியவற்றைக் கூட்டினால்... அதாவது, 6 2 1 அரை மாதம் ஒரு நாள் மூன்றரை நாழிகை ஆகியவற்றைச் சேர்த்தால்...  9 மாதம், 16 நாள், 1 மணி, 24 நிமிடம் கழிந்தால்... குழந்தை வெளிவர ஆயத்தமாகிவிடும் என்று ஜோதிடம் தகவல் அளிக்கும் (அயனக்ஷணமாஸ...). 270 நாட்கள் நட்சத்திர மாதம்.அதையும் தாண்டும் மகப்பேறு, 300 நாட்களுக்கு முன்பே நிகழ்ந்துவிடும்.

இங்கு ஸெளரமோ நட்சத்திரமானமோ பொருந்தாது ஸாவனம்தான் பொருந்தும் என்பது கண்கூடு. அதுபோல், ஸெளரத்தை அளவுகோலாக வைத்து பிறந்த நாளைக் குறிப்பிடும் முறையை நாம் பின்பற்றுவதால், 2-வதாக வரும் நட்சத்திர நாள், முழு வருஷம் வந்து விட்டது என்பதை ஏற்கும் வகையில் பொருத்தமாக இருக்கும். முதலில் வரும் நட்சத்திரத்தை ஏற்றால், நாட்களின் அடிப்படையில் வருஷம் முடியாமலும் இருக் கும். ஆகவே, 2-வதாக வரும் நட்சத்திரத்தை ஏற்பது சிறப்பு.


5. திருக்கோயில்கள் பலவற்றில், நீலோத்பல மலரை ஏந்தியவாறு காட்சி தருகிறாள் அம்பாள். இதற்கான தாத்பரியம் என்ன?அலைமகள் கையில் செந்தாமரைப்பூ இருக்கும். கலைமகளோ வெள்ளைத் தாமரையில் வீற்றிருப்பாள். இயற்கை யின் செல்வமான பூக்கள், இறைவன் ஆராதனைக்கு உகந்தவை. மென்மை யான மனமும் மென்மையான அணுகு முறையும் சேர்ந்து வாழும் நமக்கு சிறப்பை அளிக்கும்.

கவிஞர்கள், கண்களைப் பெருமைப் படுத்த அவற்றை நீலோத்பல மலரோடு ஒப்பிடுவார்கள். புஷ்பங்கள், இயற்கை அழகை நிலைநிறுத்துகின்றன. அவை, வண்டினத்துக்கு உணவளிக்கின்றன; புஷ்பாதிவாசத்துக்கும் பயன்படுகின்றன. இரண்டு கைகளாலும் பூக்களை அள்ளி சமர்ப்பித்து இறையுருவத்தை வழிபடுவோம். 

அதன் வாசனை, நுகர்பொருளாகப் பயன்படுகிறது. அயர்ந்த நித்திரைக்கு புஷ்பப் படுக்கை பயன்படுகிறது. காமதேவன், புஷ்ப பாணத்தால் இளம் உள்ளங்களில் ஆசையை விதைக்கிறான். காதலனைப் பிரிந்த காதலியர், பிரிவின் தாக்கத்தைத் தணிக்க புஷ்பங்களைப் பயன்படுத்துவர். 'மென்மையான உள்ளங்கள் சடுதியில் என்னை வந்து அடையலாம்’ என்று சொல்லாமல் சொல்லுகிறாள் அம்பாள்.


6. குறிப்பிட்ட தலங்களில் வேண்டு தலின் பொருட்டு பெண்களும் முடி காணிக்கை செலுத்துகிறார்கள். ஆனால், எங்கள் வீட்டுப் பெரியவர்கள் சுமங்கலிகள் எக்காரணம் கொண்டும் மொட்டையடித்துக் கொள்ளக் கூடாது என்கிறார்களே... சரியா?


பெண்ணினத்தின் இலக்கணத்தில் ஒன்றாக கேசத்தைப் பார்க்கிறது சாஸ்திரம் (ஸ்தன கேசவதீநாரீ). முடியைத் துறந்த பெண்ணானவள், மாற்றுத் திறனாளியாகக் கருதப்பட்டாள். 

கணவனையே பறிகொடுத்த பிறகு, அவன் கையால் வருடப்பட வேண்டிய கூந்தல் இனி எதற்கு? எனும் நோக்கத்தில் முடியைத் துறந்த பெண்மணிகள் பண்டைய காலத்தில் உண்டு.


முடி, தாதுவின் கழிவுப்பொருள். அதை கடவுளுக்கு அளிப்பதில் தர்மசாஸ்திரத்துக்கு உடன்பாடில்லை. ஒருபக்கம் முடி வளர்வதற்கு விஞ்ஞான கண்டுபிடிப்புகளைத் தேடி அலைகிறோம். இன்னொரு பக்கம்... வளர்ந்த முடியை வெட்டி அழகுப்படுத்துகிறோம். அன்றாடம் அலுவல்களின் சுமை அழுத்திக் கொண்டிருக்கும் வேளையிலும், முடியை துறப்பதும் வளர்ப்பதும் தடங்கல் இல்லாமல் நடந்துகொண் டிருக்கிறது. 

காலாவதியான தர்மசாஸ்திரக் கோட்பாடுகளைப் புதுப்பிக்க முற்படுவது சரியில்லை. இதைவிட உயர்ந்த கோட்டுபாடுகள் எல்லாம் நினைவில் இருந்தே விலகிவிட்டன! கவலைப்படாதீர்கள்... காலத்தின் கோலம் அது!

thanx - sakthi vikatan

Sunday, August 14, 2011

புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில்..... ( ஆன்மீகம் )

https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjH25aYiXPAGLTR8iuM8cXkJrI_Hu-mqK-yz9m8dWggo6nT_AHqPk53BK7P1wg_7uR6NMVkQdtxSe_FPFqYAmqNvcwxI4lEFCrYX3SOgm7KflN48McmsDgBGUWjZvhSYgFd-KiBbikaWWiY/s1600/thenimalai7.jpg
தேனிமலை தீர்த்தம்

கேள்வி-பதில் : சேஷாத்ரிநாத சாஸ்திரிகள்

கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா?

1. ஆலயங்களின் கோபுர கலசங்களில் இரீடியம் எனும் மதிப்பு வாய்ந்த உலோகம் இருப்பதாகக் கருதி, சில இடங்களில் கோபுர கலசங்கள் களவாடப்படுவதாகச் செய்தி படித்து அதிர்ந்தேன்! உண்மையிலேயே கோபுர கலசங்களுக்கு அதீத சக்தி உண்டா? கோபுர கலசங்கள் குறித்து ஆகமங்கள் என்ன சொல்கின்றன? ஸனாதனத்தின் உட்பிரிவான ஸ்மிருதி நூல்கள் 'பிரதிஷ்டா மயூகம்’ போன்ற நூல்களை அறிமுகம் செய்தன. அது வழி... வாஸ்து சாஸ்திரத்தின் துணையுடன் இறையுருவத்தை இருத்தி வழிபட, ஆலயம் அமைக்கும் நடைமுறையைக்  கையாண்டு வந்தது. பிற்காலத்தில் சைவம், வைணவம் போன்ற பிரிவுகள் சுதந்திரமாகச் செயல்பட எண்ணியபோது, சைவ- வைணவ ஆகமங்கள் தோன்றி, ஆலய நிர்மாணம் பற்றிய பரிந்துரைகளை அளித்து உதவின.

தேசத்துக்கு தேசம் ஆலயம் அமைக்கும் விதத்தில் மாறுபாடு இருக்கும். கும்பத்தில், மந்திரம் வாயிலாக இறையுருவைக் குடியிருத்தி, பணிவிடைகளால் மகிழ்வித்து, அந்தக் கும்ப ஜலத்தை கோபுரக் கலசத்தில் சேர்ப்பார்கள். இதனால், இறையுருவின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்துக்கு வந்துவிடும். இதன் அடிப்படையிலேயே, 'கோபுர தரிசனம் கோடி புண்ணியம்’ என்கிற வழக்கு எழுந்தது. கூரான உருவ அமைப்பு, இடி- மின்னலால் பாதிக்கப்படாமல் இருக்கும். இரீடியம்... அதற்கு சக்தி அதிகம் என்று தாங்கள் குறிப்பிடுவதெல்லாம் நம்பிக்கையில் விளைந்தது. அதைவிடப் பெருமை வாய்ந்தது, கோபுரக் கலசத்தில் தென்படும் இறை சாந்நித்தியமே!

கோயில் இறைவனின் உடல்; கோபுரக் கலசம் அவருடைய சிரசு; கருவறை அவன் உறைந்திருக்கும் இடம் (தேஹோ தேவாலய:...). நம்முள் ஜீவாத்மா இருப்பது போல், கோயிலுக் குள் பரமாத்மா இருக்கிறார். கும்பாபிஷேக வேளையில், மந்திர ஒலியுடன் இணைந்த கோபுரக் கலசங்கள், ஆகாயத்தில் அவ்வப்போது நிகழும் தட்பவெப்பத்தின் தாக்கத்தாலும், அன்றாடம் கோயிலில் ஒலிக்கும் வேத மந்திரங்களின் சேர்க்கையாலும், சிந்தனைக்கு எட்டாத பெருமையைப் பெற்று விளங்கும்.

விஞ்ஞானம் கண்டுபிடித்தது கை மண்ணளவு; கண்டுபிடிக்காதது உலகளவு. விஞ்ஞானத் தகவலை வைத்துப் பெருமை கொள்வதைவிட, மெய்ஞ்ஞானத்துக்குப் பயன்படும் என்பதை அறிவது சிறப்பு. 'இரீடியம்’ இருப்பதால் கோபுரக் கலசங்கள் களவாடப் படுவதாகச் சொல்கிறீர்கள். களவாடப்படும் விஞ்ஞானம் நமக்கெதற்கு?!

எவராலும் களவாட முடியாத ஆன்மிகம், என்றென்றைக்கும் விளங்கிக் கொண்டிருக்கிறது. விஞ்ஞான விளக்கத் தோடு சிந்தனைக்கு முற்றுப்புள்ளி வைக் காமல்... கோபுரக் கலசம் முதலான வற்றில் இணைந்திருக்கும் ஆன்மிகப் பெருமைகளை உணரும் வகையில் நம் சிந்தனைகள் தொடர வேண்டும்.

மட்டையோடு இணைந்த தேங்காய் பயனுள்ளது. மட்டை, கயிறு திரிக்கப் பயன்படும்; கொட்டாங்கச்சி- அகப்பை செய்வதற்குப் பயன்படும்; தேங்காய்- சமையலுக்கு உதவும்; எண்ணெயும் கிடைக்கும்.

அதே நேரம்... தென்னையின் இளநீர் பருகவும் பயன்படும்; இறை அபிஷேகத்துக்கும் உதவும்; அதன் மூலம் ஆன்மிகச் சிந்தனைக்கு நம்மைத் திருப்பிவிடும். 'இரீடியம்’ உபயோகப் பொருள். அதைவிட உயர்ந்த தத்துவம், (திருட முடியாத) கோபுரக் கலசத்தில் அடங்கியிருக்கிறது. களவாடப்படும் பொருட்கள், காலத்தால் அழிவைச் சந்திக்கும். அழிவற்ற பரம்பொருளின் சாந்நித்தியம் கோபுரக் கலசத்தில் உறைந்திருப்பதை உணர்ந்து, அதை வழிபடுவோம்.

http://www.nakkheeran.in/UltimateEditorInclude/UserFiles/omm/2011/feb/rameswaram.jpg
ராமேஸ்வரம்


2. கிரகஸ்தனான நான், தியானத்தின்போது தூய்மையான துணியை தரையில் விரித்து, அதன் மீது அமர்ந்து தியானம் செய்கிறேன். இனி, தர்ப்பைப் பாயின் மீது அமர்ந்து தியானம் செய்ய எண்ணியுள்ளேன். இது சரியா? தர்ப்பாசனத்தில் அமர்ந்து தியானம் செய்வது சிறப்பு. தியானத்தைச் சிறப்பிக்க வைப்பதில் ஆசனத்தின் பங்கும் உண்டு. பரிசுத்தமான பொருள் தர்ப்பை. தர்ப்பாசனம் அசையாமலும் சுகமாகவும் இருக்கும்; அதைப் பயன்படுத்துவது சிறப்பு என்று பதஞ்சலி கூறுவார் (ஸ்திர சுகமாஸனம்).

அதன் மீது அமர்ந்து தியானிப்பதால், புவியின் ஆகர்ஷணம் நம்மைப் பாதிக்காது. தியானத்தின் பலனை எட்டுவதற்கு அது பயன்படும். வேதம் சொல்லும் சடங்குகளில்... தர்ப்பையில் அமர்ந்து, தர்ப்பையைக் கையில் ஏந்திச் செயல்படுவதுண்டு (தர்பேஷ§ஆஸுன: தர்பான் தாரயமாண:). தர்ப்பையின் பெருமை, தூய்மையான துணிக்கு இருக்காது.

புவி ஆகர்ஷணத்தைத் தடுக்கும் தகுதி அதற்கு இல்லை. வேறு வழி இல்லாத நிலையில், துணியைப் பயன்படுத்தலாமே தவிர, நிரந்தரமாக ஏற்கக்கூடாது. ஆமை வடிவில் இருக்கும் மரத்தாலான பலகையைப் பயன்படுத்துவதும் உண்டு. அதுவும் புவிஆகர்ஷணத்தைத் தடுப்பதுடன், ஆசன இலக்கணத்தோடு விளங்கும் (ஆசன மஹா மந்திரஸ்ய... கூர்மோதேவதா). துணிக்கு இலக்கணமும் இல்லை; ஆகர்ஷணத்தைத் தடுக்கும் திறனும் இல்லை.https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEitOWWVX7D5BBOs03rdcdVMPtfkv9o0KUaRhdTFR1vuvCiboUjmaixI0mftEjsYy-KT036PMWODqHWerLBZTolwx62UldxCL4Pq1OrfSvNfbpjusAtfYHBC6deb5VfO3sPfxdobjROuxZQ/s1600/theerththam.jpg

3. உடல்நலக் குறைபாடு காரணமாக புண்ணிய தீர்த்தங்களில் நீராட முடியாத நிலையில், கடவுள் பெயரைச் சொல்லித் தீர்த்தத்தை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால், தீர்த்தமாடியதற்கான பூரண பலன் கிடைக்குமா? குளித்தால் உயிர் பிரிந்துவிடும் அல்லது நீரின் குளிர்ச்சியால் நோய் முற்றி, பல அலுவல்களை இழக்க நேரிடும் என்று தெளிவாகத் தெரிந்தால்... நீரை அள்ளித் தலையில் தெளித்துக்கொண்டால் போதும்; பலன் உண்டு.

வெந்நீரில் குளித்தாலே சளி ஏற்பட்டு பாதிப்புக்கு ஆளாவோரும் குற்றாலம் அருவியில் குளிப்பதுண்டு. உடல் நலமில்லாதவன், தந்தைக்குக் கொள்ளி வைத்த கையோடு குளிப்பதுண்டு. மாறா வியாதியில் மருந்து எடுத்துக்கொண்டு இருப்பவர்கள் ஏராளம். அவர்கள் அத்தனை பேரும் தலை முழுகிக் குளிக்காமலா இருப்பார்கள்?! அவசர- ஆபத்து வேளைகளில் குளிப்பதற்குப் பதிலாகத் தெளித்துக் கொள்ளலாம் என்ற விதிவிலக்கை, குளிக்காமல் தவிர்ப்பதற்குப் பயன் படுத்தக்கூடாது. விதி வேறு; விதிவிலக்கு வேறு.

விதிவிலக்கைத் தேடிப்பிடித்துச் சட்டமாக மாற்ற முற்படக்கூடாது. உடல் நலம் இருக்கும்போது தீர்த்தக்கரைக்குப் போக வேண்டும். குளிப்பதற்காகத்தான் தீர்த்தங்கரை செல்கிறோம். குளிக்க முடியாத நிலையில் அங்கு போவது தவறு. உடல்நலக் குறைபாடு, தீர்த்தங் கரை ஸ்னானத்துக்கு உகந்ததல்ல. உடல் நலனோடு இருக்கும்போது, அங்கு சென்று நீராடுவது சிறப்பு. அன்றாடம் நீராடிப் பழக்கப் பட்டால், உடல் ஆரோக்கியம் சிறக்கும்; தீர்த்தங் கரையைப் பார்த்ததும் நீராடத் தோன்றும்; விருப்பமும் நிறைவேறும்.


http://karurtimes.com/wp-content/uploads/2011/08/river-photo.jpg


4.திருமணமானதும் கிரகப் பிரவேசம் செய்யும் மணப்பெண், வீட்டு வாசற்படியில் வைக்கப் பட்டிருக்கும் அரிசி அல்லது நெல் நிரம்பிய பாத்திரத்தைக் காலால் தட்டிவிட்டு உள்ளே நுழைவாள். இந்தச் சடங்குக்கான தாத்பரியம் என்ன? மெழுகிச் சுத்தம் செய்து, கோலமிட்டு அலங்கரிக்கப்பட்ட வீட்டில், மணப்பெண் அடியெடுத்து வைக்குமுன் பீஜ தான்யத்தை, அதாவது நெல்லை வாரி இறைப்பார்கள். அதன்பிறகு, அவள் உள்ளே நுழைவாள்.

தான்ய லட்சுமியின் வருகைக்குப் பிறகு, கிரஹலட்சுமி விஜயம் செய்வாள். அறுசுவை உணவுடன் சேர்ந்த ஆனந்த வாழ்க்கைக்கு ஆதாரம் தானியம்; அதாவது நெல். அது அந்த வீட்டில் என்றென்றும் நிரம்பி வழியவேண்டும். இந்த நடைமுறை இடத்துக்கு இடம் மாறுபட்டு இருக்கும். வட நாட்டில், கிரஹலட்சுமியே தான்ய லட்சுமியை வாரியிறைக்கும் விதமாகத் தனது காலால் தானியத்தைக் கொட்டிய பிறகு நுழைவாள். இது, நம் பகுதிகளில் தென்படாததால், வியப்பாகத் தோன்றுகிறது!


- பதில்கள் தொடரும்... 

thanx - vikatan