'பிச்சைக்காரன்' பாடலுக்கு எழுந்துள்ள சர்ச்சைக்கு அப்படத்தின் தயாரிப்பாளர் மற்றும் நடிகர் விஜய் ஆண்டனி விளக்கம் அளித்திருக்கிறார்.
இயக்குநர் சசி இயக்கத்தில் விஜய் ஆண்டனி நடித்துள்ள படம் 'பிச்சைக்காரன்'. இப்படத்தில் 'பாழா போன உலகத்துல' என்ற பாடலுக்கு சில மருத்துவர்கள் அமைப்பு கடும் எதிர்ப்பு தெரிவித்திருக்கிறது.
இதற்கு விஜய் ஆண்டனி விடுத்துள்ள அறிக்கையில், "'பாழா போன உலகத்துல காசு பணம் பெருசு' என்ற சமூக விழிப்புணர்வு பாடலை 'பிச்சைக்காரன்' படத்தின் விளம்பர பாடலாக கவிஞர் லோகன் எழுதியுள்ளார்.
அந்த பாடலில், பண பலம் படைத்த கல்வித்தகுதி இல்லாத சிலர் தன் பண பலத்தை உபயோகித்து தனியார் கல்வி நிறுவனங்கள் சிலவற்றுக்கு லட்சத்தையும், கோடிகளையும் கொடுத்து மருத்துவர்களாகி நல்ல மருத்துவ சமுதயாத்துக்கு களங்கம் விளைவிக்கின்றார்கள் என்பதைத்தான் 'கோட்டாவுல சீட்டு வாங்கி டாக்டராவுரான்' என்று பாடலாசிரியர் லோகன் குறிப்பிட்டுள்ளார்.
பிற்படுத்தப்பட்ட சமூகத்தை சேர்ந்த டாக்டர்களை அவமதித்து, லோகன் அந்த பாடலை எழுதவில்லை.
இன்னும் சொல்ல போனால், கவிஞர் லோகனும், பாடலை பாடிய வேல்முருகனும் பிற்படுத்தப்பட்ட சமூகத்தில் இருந்து வந்து சாதனை படைத்தவர்கள் தான்.
ஒரு வரியை வைத்து எங்கள் மீது களங்கம் கற்பிக்க வேண்டாம். இந்த பாடலை முழுமையாக கேட்டால் தான், இப்பாடல் எழுதப்பட்ட நோக்கம் என்ன, அது யாருக்காக எழுதப்பட்டது என்பது உங்களுக்கு புரியும். இந்த பாடல் மூலம், சமுதாயத்தில் ஒடுக்கப்பட்ட மக்களின் பிரச்சினைகளைத்த்தான் எடுத்து சொல்கிறோமே தவிர, யாரையும் புண்படுத்தும் நோக்கம் எங்களுக்கு இல்லை.
ஒரு நல்ல மருத்துவன் எப்படி வாழ வேண்டும் என்று என்னுடைய முந்தைய படமான 'சலீம்'-ல் வாழ்ந்து காட்டியவன் நான். சமூகத்தின் மேல் குறிப்பாக ஒடுக்கப்பட்ட சமுதாயத்தின் மேல் மிகுந்த அக்கறை எனக்கும் உண்டு.
பாடலின் அர்த்தம் சிலருக்கு சரியாக புரியவில்லை என்பதால், 'கோட்டா' என்ற வார்த்தையை நீக்கிவிட்டு 'காசு கொடுத்து' என மாற்றி விட்டோம் என்பதை தங்களிடம் தெரிவித்துக் கொள்கிறேன்.
பாடலாசிரியர் லோகன் எழுதிய பாடல் வரிகள் சிலரை புண்படுத்தி இருந்தால், அதற்கு என் 'பிச்சைக்காரன்' படக்குழுவின் சார்பாக நான் விளக்கமளிக்கிறேன்" என்று தெரிவித்திருக்கிறார் விஜய் ஆண்டனி.


2 போக்கிரிராஜா

 ராம்பிரகாஷ்ராயப்பா இயக்கத்தில் ஜீவா, ஹன்சிகா உள்ளிட்டோர் நடித்திருக்கும் போக்கிரிராஜா படம் மார்ச் 4 ஆம் தேதி வெளியாகும் என்று சொல்லப்படுகிறது.
ஆனால் சொன்ன தேதியில் படம் வெளியாகுமா? என்கிற கேள்வி இப்போது எழுந்திருக்கிறதாம். ஏனெனில் இந்தப்படத்தைத் தயாரித்திருக்கும் பி.டி.செல்வகுமாரின் தயாரிப்பில் வெளியான விஜய்யின் புலி படத்தை வாங்கிய விநியோகஸ்தர்களுக்கு நிறைய நட்டம் ஏற்பட்டுவிட்டதாம்.
அதனால் அவர்களெல்லாம் ஒன்றுகூடி, எங்கள் நட்டத்துக்குப் பொறுப்பெடுத்துக்கொண்டால் மட்டுமே போக்கிரராஜாவை திரையிட அனுமதிப்போம் என்று சொல்லிவிட்டார்களாம். இதுதொடர்பாக தயாரிப்பாளர்கள் மற்றும் விநியோகஸ்தர்கள் பேச்சுவார்த்தை நடந்திருக்கிறது.
அந்தப்பேச்சுவார்த்தையின் போது, புலி படத்தால் சுமார் ஆறுகோடிவரை நட்டம் ஏற்பட்டிருப்பதாகவும் அந்தத் தொகைக்கான பொறுப்பை தயாரிப்பாளர்கள் ஏற்றுக்கொண்டால்தான் போக்கிரிராஜாவை வெளியிடுவோம் என்று சொல்லியிருப்பதாகத் தெரிகிறது.
இதனால் தயாரிப்பாளர்கள் அதை ஏற்றுக்கொள்வார்கள் என்றும் அதனால் படவெளியீடு சொன்னபடி நடந்துவிடும் என்றும் சொல்கிறார்கள்.    

3 சவுகார்பேட்டை

மைனா, சாட்டை, மொசக்குட்டி படங்களை தொடர்ந்து ஷாலோம் ஸ்டுடியோஸ் ஜான்மேக்ஸ் அடுத்து தயாரிக்கும் படம் “ சவுகார்பேட்டை “
இந்தப் படத்தில் ஸ்ரீகாந்த் கதாநாயகனாக வித்தியாசமான வேடமேற்று நடிக்கிறார். நாயகியாக ராய் லட்சுமி நடிக்கிறார்.  மற்றும் சரவணன், விவேக், அப்புகுட்டி, கோட்டா சீனிவாசராவ், சம்பத், கோவை சரளா, சுமன், பவர்ஸ்டார் சீனிவாசன், நான் கடவுள் ராஜேந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள்.
ஜான் பீட்டர் இசையமைக்க படத்துக்கு சீனிவாசரெட்டி ஒளிப்பதிவு செய்கிறார். கதை, திரைக்கதை எழுதி இயக்குகிறார் வி.சி..வடிவுடையான். இவர் 'தம்பிவெட்டோத்தி சுந்தரம்’ என்ற படத்தை இயக்கியதுடன், விரைவில் வெளியாக உள்ள “ கன்னியும் காளையும் செம்ம காதல் ‘படத்தையும் இயக்கி உள்ளார்.
படத்தை பற்றி இயக்குநர் வடிவுடையானிடம் கேட்டோம்…
சென்னையில் உள்ள சவுகார்பேட்டை ஜனசந்தடி அதிகமுள்ள இடம் மட்டுமல்ல… பணம் அதிகளவில் புழங்கும் இடமும் கூட.. அப்படிப்பட்ட சவுகார்பேட்டையில் நடக்கும் சுவாரஸ்யமான சம்பவங்கள் தான் கதை!
காதல், ஆக்ஷன், சென்டிமென்ட், திகில், ஹாரர் எல்லாமும் இருக்கும் கமர்ஷியல்  படம் இது. ஷூட்டிங் தொடர்ந்து நடைபெற்று முடிவடைகிறது என்றார் வடிவுடையான்.
4 பக்கிபயலுக

மீனாட்சி அம்மன் வழங்க ஆர்.எஸ்.கே. ஸ்டுடியோ சார்பில் ஆத்தூர் சிவக்குமார் தயாரிக்கும் படத்துக்கு பக்கி பயலுக என பெயரிடப்பட்டு உள்ளது.

இதில் பாரதி, பாலாஜி, மணிகண்டன், வைவுல்லா ஆகியோர் கதையின் நாயகர்களாக அறிமுகமாகின்றனர். அனிதா, பரிமளா ஆகியோர் நாயகிகளாக அறிமுகமாகின்றனர். கராத்தே ராஜா, பாவா லட்சுமணன், ரிஷா, முருகேசன், பகவதி பாலா ஆகியோரும் நடிக்கின்றனர்.

இப்படத்துக்கு கதை, திரைக்கதை, வசனம் எழுதி பாரதி இயக்குகிறார். படம் பற்றி அவர் சொல்கிறார்.

வாலு வச்ச குரங்கும் சரி, நாலு பேரும் சேர்ந்த கேங்கும் சரி எங்கே போனாலும் சேட்டைதான் என்று ஊர் சுற்றிக் கொண்டு திரியும் நான்கு இளைஞர்கள் வேலை தேடி சென்னை வருகிறார்கள். ஒரு பெண்ணால் அவர்களது முன்னேற்றம் தடைபடுகிறது. அதில் இருந்து மீண்டு எவ்வாறு வாழ்க்கை பாதையை அமைத்துக் கொள்கிறார்கள் என்பது கதை.

இதன் படப்பிடிப்பு சேலம், ஆத்தூர், மேட்டூர், ஏற்காடு போன்ற பகுதிகளில் நடந்து முடிந்துள்ளது.

ஒளிப்பதிவு: பகவதிபாலா, இசை: புருஷ், பாடல்: கார்க்கி பிரியா, எடிட்டிங்: ராஜ்கீர்த்தி.நன்றி - தினமணி  மாலைமலர் ஆல் சினி வெப்சைட்