Thursday, April 18, 2024

DEAR (2024) - டியர் - தமிழ் - சினிமா விமர்சனம் ( ஃபேமிலி டிராமா)

            


ஒரு  அசிஸ்டெண்ட்  டைரக்டர் இரு  வேறு  டைரக்டர்களிடம் ஒரே  கதையின்  ஒன் லைனை  கொஞ்சம்  மாற்றிச்சொல்லி  இருப்பார்  போல , இரு இயக்குநர்களுக்கும் தாங்கள்  எடுப்பது  ஒரே  கதை  தான்  என்பது  தெரியாமல்  இருந்திருக்கலாம். ஒரு இயக்குநரின்  படம்  முதலில்  ரிலீஸ்  ஆகி  முந்திக்கொண்டதால்  இரண்டாவது  டைரக்டருக்கு அதிர்ச்சி . பாதிப்படம்  எடுத்தாகி  விட்டது . டிராப்  பண்ணவும்  முடியாது . அதனால்  அவசர  அவசரமாக பின்  பாதி  திரைக்கதையில் மாற்றம்  செய்து  இரு  வேறு  கிளைக்கதைகளை  புகுத்தி  ஒப்பேற்றி  இருக்கிறார்கள் 


இது  தமிழ்  சினிமாவுக்குப்புதுசில்லை . சார்லி  சாப்ளின் நடித்து  1931 ல்  ரிலீஸ்  ஆன  சிட்டி  லைட்ஸ்  என்ற  படத்தின்  கதையை  பட்டி  டிங்கரிங்  பண்ணி  அட்லீ  ஒர்க்  செய்யப்பட்ட  கதைகள்  தான்  29/1/1999 ல்  ரிலீஸ்  ஆன  துள்ளாத  மனமும்  துள்ளும் , 30,4,1999 ல்  ரிலீஸ் ஆன  நிலவே  முகம்  காட்டு . முந்திக்கொண்ட  படம்  மெகா  ஹிட் , லேட்டா  வந்த  படம்  சுமார்  ஹிட் 


14//1/1998  ல்  ரிலீஸ்  ஆன  நாம் இருவர் நமக்கு இருவர்,  14/4/1998 ல்  ரிலீஸ்  ஆன  காதலா  காதலா  ஆகிய  இரு  படங்களுமே  ஒரே  டிவிடியைப்பார்த்து  சுட்டு  எடுத்த  படங்களே!. இதில்  காமெடி  என்ன  என்றால்  இரண்டிலுமே  பிரபுதேவா  இருக்கிறார். . இதில்  முந்திக்கொண்ட  படம்  அட்டர்  ஃபிளாப் . லேட்டாக  வந்த  படம்  ஹிட். இரண்டுமே  ஆள்  மாறாட்டக்காமெடி  தான். முதல்  படத்தில்  பிரபுதேவாவே    டபுள்  ரோலையும்  செய்திருப்பார். இன்னொன்றில்  கமல் +  பிரபு தேவா . வசனம்  இதில்  கிரேசி  மோகன். அதில்  ரைட்டர்  சுபா ஸ்பாய்லர்  அலெர்ட்


 நாயகன்  டி வி  சேனலில்  செய்தி  வாசிப்பவர். இவர்  தன்  பணியில்  புகழ்  பெற  வேண்டும், சாதிக்க  வேண்டும்  என்ற  எண்ணம்  கொண்டவர் . நாயகி க்கு  ஒரு  குறைபாடு  உண்டு . தனக்கு  வரப்போகும்  மாப்பிள்ளையிடம்  தன்னிடம்  இருக்கும்  குறை  பற்றி  முன் கூட்டியே  சொல்கிறார். எல்லாருமே  துண்டைக்காணோம், துணியைக்காணோம்  என  ஓடி  விடுகிறார்கள் 


  இதனால்  நாயகியின்  பெற்றோர்  இந்த  முறை  நாயகன்  பெண்  பார்க்க  வரும்போது  நாயகியை  அடக்கி  வாசிக்கச்சொல்கிறார்கள் . திருமணம்  நடக்கிறது 


நாயகியின்  குறை  நாயகனுக்குத்தெரிய  வருகிறது . ஆரம்பத்தில்   அதைப்பெரிதாக  எடுத்துக்கொள்ளாத  நாயகன்  அந்தப்பிரச்சனையால்  தன்  வேலையே  போகும்போது  தன்   எதிர்கால  நன்மை  கருதி  நாயகியை  டைவர்ஸ்  செய்ய  முன்  வருகிறார். இதற்குப்பின்  திரைக்கதையில்  ஏற்படும்  திருப்பங்கள்  தான்  மீதி  திரைக்கதை 


நாயகன்  ஆக  ஜி வி பிரகாஷ் . தாடி  கெட்டப்  சகிக்கவில்லை .  சிகை  அலங்காரம்  பஞ்சப்பரதேசி  போல்  இருக்கிறது . இந்த  மாதிரி  தகர  டப்பா  தலையரை  எந்த  நியூஸ்  சேனலில்  வேலைக்கு  எடுப்பார்கள்  என  தெரியவில்லை. ஆனால்  அவர்  நடிப்பு  கனகச்சிதம்


நாயகி  ஆக  ஐஸ்வர்யா  ராஜேஸ்.  சிரிப்பு  இவருக்கு  பிளஸ்  பாயிண்ட்  தான். ஆனால்  கீழ்  பல்  ஒன்று  விழுந்ததால்  ஒரு  கேப்  தெரிகிறது .  கேமரா  கோணம்  வைக்கும்போது  அது  தெரியாமல்  காட்ட  வெண்டும்.


 நாயகனை  விட  நாயகி  உயரம் ,  வயது  இரண்டுமே  அதிகம்    என்பதால்  ஜோடி  மாதிரி  தெரியவில்லை . அக்கா  - தம்பி  போல்  காட்சி  அளிக்கின்றனர். இது போதாது  என  படம்  முழுக்க  நாயகி  நாயகனி  டேய்  என்று  தான்  அழைக்கிறார்


நாயகனின்  அம்மாவாக  ரோஹினி  ரகுவரன்  பாந்தமான  நடிப்பு . அப்பாவாக  தலை  வாசல்  விஜய்   சில  இடங்களில்  ஓவர்  ஆக்டிங்


நாயகியின்  அப்பாவாக  இளவரசு  யதார்த்தமான  நடிப்பு   நாயகியின்  அம்மாவாக  வரும்  கீதா  கைலாசம்  குட்  ஆக்டிங் . நாயகனின்  அண்ணனாக  வரும்  காளி  வெங்கட்  பிரமாதமான  நடிப்பு .  ஆனால்  ஒரே  ஒரு  இடத்தில்  ஓவர்  ஆக்டிங் 


ஜெகதீஷ்  சுந்தர  மூர்த்தியின்  ஒளிப்பதிவு  தரம், ஆனால்  நாயகிக்கு  க்ளோசப்ஷாட்கள்  இல்லை . ஜி  பிரகாஷ்  இசையில்  பாடல்கள்  ஓக்கே  ரகம் 


 இரண்டேகால்  மணி  நேரம்  படம்  ஓடும்படி  ட்ரிம்  செய்திருக்கிறார்  எடிட்டர் 
சபாஷ்  டைரக்டர்


 12  இடைவேளை  வரை  எடுத்த  பின்  அதே  கதையில்  இன்னொரு  படம்  ரிலீஸ்  ஆனதால்  சாமார்த்தியமாக  நாயகனின்  அம்மா, அப்பா  ஃபிளாஸ்பேக்  கதையை  உள்ளே  புகுத்தியது  அருமையான  ஐடியா


2   நாயகனின் அண்ணன் -  அண்ணி  இருவருக்குமிடையேயான  உறவுச்சிக்கலை  சொல்லி  வீட்டுக்கு  வீடு  வாசப்படி  என்ற  கருத்தை  சொன்ன  விதம் 


3  வசனகர்த்தா  பல  இடங்களில்  கவனம்  ஈர்க்கிறார்


  ரசித்த  வசனங்கள் 


1   ஒருவருடைய  கேரக்டர்  டிசைன்  அவர்  இருக்கும்  ஊரின்  க்ளைமேட்டுக்கு  ஏற்றாற் போல  மாறிக்கொண்டு  இருக்கும்


2  நீங்க  லைட்  ஸ்லீப்பரா?  சவுண்ட்  ஸ்லீப்பரா?  (  ஆழந்த  உறக்கம் )


  அது  வந்து... சவுண்ட்  ஸ்லீப்  தான்  ( குறட்டை  விடுவேன் ) 


3   அண்ணே !  நேத்து  நைட்  ரூம்ல  இருந்து  ஏதாவது  சத்தம்  கேட்டுதா? 


4   இந்த  ஹோட்டல்  ரூம்ல  ஏதாவது  சத்தம்  போட்டா  வெளில  கேட்குமா?


5   என்ன  சாதாரணமா  உங்க  லவ்  ஸ்டோரியை  முடிச்சுட்டீங்க ? ஸ்பைஸ்  கலந்து  சொல்லுங்க 


 ஸ்பைஸ்  எல்லாம்  லவ்  பண்ற  வரை  தான் . மேரேஜ்  ஆன  பின்  குறைகள்  தான்  தெரியும் 


6   நாம  ரொம்ப  நேசிச்சவங்களை  வெறுக்க  வேண்டி  வருவது  கொடுமை +


7   வாழ்க்கைல  இரண்டாவது  வாய்ப்பைத்தவற  விட்டவர்கள்  வாழ்க்கையையே  இழக்கிறார்கள் 


8   எனக்கு  இருக்கும்  ஒரு  குறைக்காக  என்னை  டைவர்ஸ்  பண்ற  நீ  அதே  குறை  நம்ம  குழந்தைக்கும்  இருந்தா  என்ன  செய்வே? 


9   நோ படி  100%  பர்ஃபெர்க்ட்  இன்  த  வோர்ல்டு 


10  ஒருவரோட  குறையை  ஏத்துக்கிட்டு  சகிச்சுக்கிட்டு  வாழ்வதுதான்  தாம்பத்யம் 


லாஜிக்  மிஸ்டேக்ஸ் , திரைக்கதையில்   சில  நெருடல்கள் 


 1  கொஞ்ச  நாள்  இடைவெளிக்குப்பின்  மகனைப்பார்க்கும்  அம்மா  ரோகினி  என்னடா  தாடி எல்லாம்  வளர்த்தி  இப்படி  இருக்கே?  என்கிறார். ஆனால்  படம்  போட்டதில்  இருந்து  கடைசி  காட்சி  வரை  நாயகன்  ஆன  மகன்  பஞ்சப்பரதேசி  போல  தான்  இருக்கிறார்


2    தனது  கணவர்  என்ன  காரணத்துக்காக  தன்னை  விட்டுப்போனார்?  இப்போது  எப்படி  இத்தனை  வருசம்  கழிச்சு  வந்தார்  என  காரணம்  கேட்க  மாட்டாரா? 


3   நாயகி  தன்  மீது  குறையை  வைத்துக்கொண்டு  நாயகனை  சைக்கலாஜிக்கல்  ட்ரீட்மெண்ட்  எடுத்துக்கொள்ளச்சொல்வது  ஏற்றுக்கொள்ளூம்படி  இல்லை 


4   நாயகன்  திடீர்  என  மனம்  மாறுவது , நாயகனின்  அப்பா  மனம்  மாறுவது ,  நாயகனின்  அண்ணன்  திடீர்  என  மனம் மாறி  அழுவது  எல்லாம்  டி  வி  சீரியல்   காட்சி  போல  இருக்கு . ஒரு  போல  பெண்களைக்கவர  அப்படி  சீன்  வெச்சுட்டாங்க  போல 


அடல்ட்  கண்ட்டெண்ட்  வார்னிங் -  காட்சி   ரீதியாக  யூ . வசன  ரீதியாக  இரண்டு  காட்சிகளில்  டபுள்  மீனிங்  டயலாக் சி பி எஸ்  ஃபைனல்  கமெண்ட் -   2023 ல்  ரிலீஸ்  ஆன  குட்  நைட்  படம்  பார்க்காதவர்கள்  இதைப்பார்க்கலாம் ,  பார்த்தவர்கள்  பின்  பாதியை  மட்டும்  பார்க்கலாம்   ரேட்டிங்  2.25 / 5 . விரைவில்  நெட்  ஃபிளிக்ஸ் ரிலீஸ் 

0 comments: