Friday, July 25, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (25.7 .2014 ) 4 படங்கள் முன்னோட்ட பார்வை

1. திருமணம் எனும் நிக்காஹ்-விஜய்யின், துப்பாக்கி படம் வெளியாக இருந்தபோது, அப்படத்தில் முஸ்லீம்களை தீவிரவாதிகளாக சித்தரித்திருப்பதாக சில முஸ்லிம் மத அமைப்புகள் படத்தில் சில காட்சிகளை கத்தரிக்க கேட்டனர். அதையடுத்து, கமலின் விஸ்வரூபம் படம் திரைக்கு வர இருந்தபோதும், முஸ்லிம்களுக்கு எதிரான படம் என்று போர்க்கொடி பிடித்தனர். அதனால் அரசாங்கமும் அந்த படத்தை வெளியிட தடை விதித்தது. பின்னர் நீதிமன்றம் வழக்கு என நாட்கள இழுத்தடிக்கப்பட்டு படம் திரைக்கு வந்தது.

இப்போது முஸ்லிம் இயக்குனர் அனீஸ் என்பவர் இயக்கியுள்ள திருமணம் என்னும் நிக்காஹ் படத்திலும், சில காட்சிகளை நீக்க வேண்டும் என்று முஸ்லிம் அமைப்புகள், எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இல்லையேல் படத்தை வெளியிட விட மாட்டோம் என்று புதிய எச்சரிக்கை விடுத்துள்ளனர். அதோடு, நீதிமன்றத்தையும் அணுகியுள்ளனர். இதுதொடர்பாக பதில் மனு அளிக்க சென்னை போலீஸ் கமிஷனர், தணிக்கை குழவின் மண்டல அதிகாரி, தயாரிப்பாளர் ரவிச்சந்திரன் ஆகியோருக்கு நோட்டீசு அனுப்ப உத்தரவிட்டிருக்கிறார்.

இதனால், கோடை விடுமுறையிலேயே படத்தை வெளியிட்டு நாலு காசு பார்த்து விடலாம் என்று கணக்குப்போட்டு வைத்திருந்த ஆஸ்கர் பிலிம்ஸ், கோடையில் படம் வெளியிட முடியாத நிலை ஏற்பட்டிருப்பதால், இப்போது தடை கோரிய அமைப்புகளிடம் பேச்சுவார்த்தையை முடுக்கி விட்டுள்ளது.
ஆஸ்கர் பிலிம் ரவிச்சந்திரனின் தயாரிப்பில் ஜெய், நஸ்ரியா நஸீம் நடிப்பில் அனீஸ் இயக்கியிருக்கிறார். படத்தின் தயாரிப்பாளர் ஆஸ்கார் ரவிசந்திரன் பணப் பிரச்சினையில் சிக்கியிருப்பதாகவும், இதனால் படம் வெளிவர தடையிருப்பதாகவும், இன்னொரு பக்கம் முஸ்லீம் அமைப்புகள் இந்தப் படத்தை எதிர்ப்பதாகவும். அதனால் ஏற்பட்ட சிக்கலால்தான் வெளியிட முடியவில்லை என்றும் பல்வேறு பக்கங்களிலிருந்தும் கிசுகிசுக்கள் பறந்து வந்தன.



முஸ்லீம் அமைப்புகளின் எதிர்ப்புகளுக்காக படத்தினை அவர்களுக்கு திரையிட்டுக் காட்டியிருக்கிறார் தயாரிப்பாளர் ரவிச்சந்திரன். படத்தைப் பார்த்துவிட்டு ஒரு சிலர் ஓகே என்றாலும்.. வேறு சிலர் சொல்லணுமே என்பதற்காக சில காட்சிகளுக்கு ஆட்சேபணை தெரிவித்தார்களாம்.. ஆனாலும் அவர்களிடம் ரவிச்சந்திரன் நைச்சியமாகப் பேசி சமாளித்து அனுப்பிவிட்டிருக்கிறார்.


இப்போது இந்தப் படம் ரம்ஜான் பண்டிகையன்று வெளிவர வாய்ப்பிருப்பதாக ஆஸ்கர் ரவிச்சந்திரன் ஒரு அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கை இது :


“திருமணம் எனும் நிக்காஹ்’ எல்லோருக்கும் பொதுவான ஒரு படமாகும். இந்த திரைப்படம் யாரையும் புண்படுத்தவோ , காயபடுதவோ எடுக்கப்பட்ட படமல்ல. ஒவ்வொரு மதத்துக்குள்ளும் இருக்கும் கலாசார பெருமையை வெளிபடுத்தும் படம்தான் ‘திருமணம் எனும் நிக்காஹ்’


அனைவருக்குள்ளும் புரிதல் அவசியம் என்னும் கருத்தை வலியுறுத்தும் படமாகும். கணவன் மனைவிக்கிடையே ஆகட்டும், பிள்ளைகள் இடையே ஆகட்டும்,நண்பர்கள் இடையே ஆகட்டும் ,நம்முடன் பணிபுரியும் சகாக்கள் இடையே ஆகட்டும் , நம்மிடம் பணிபுரிகிறவர்கள் இடையே ஆகட்டும், எல்லோரிடமும் நாம் பரஸ்பரம் உறவை மேற்படுத்த ‘புரிதல்’ அவசியம். ‘திருமணம் எனும் நிக்காஹ்’ மதங்கள் இடையேகூட கலாசாரம் வாயிலாக புரிதல் அவசியம் என்பதை வலியுறுத்தும் படமாகும்.


இந்த படத்தை சூழ்ந்திருந்த பிரச்சனைகள் இப்போது முடிந்துவிட்டன. இஸ்லாமிய சகோதரர்கள் நோன்பு காலம் முடிந்த பின்னர் படத்தை கண்டு ரசிக்கும் வகையில் ரம்ஜான் பண்டிகை அன்றோ அல்லது அதற்கு பிறகோ ‘திருமணம் எனும் நிக்காஹ்’ வெளியாகும்…”


- இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியிருக்கிறார் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன்.


இந்தப் படம் ரிலீஸ் ஆவுறதுக்குள்ள படத்தோட ஹீரோயின் நஸ்ரியாவுக்கு ‘நிக்காஹ்’ நடந்திரும் போலிருக்கு..!


ஈரோடு அபிராமி , ஆனூர்-ல்  ரிலீஸ்

 நன்றி - http://www.tamilcinetalk.com/thirumanam-ennum-nikkha-movie-will-release-soon/
 

இன்னார்க்கு இன்னாரென்று. -ஆசாமி’ படத்தின் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ் கதை, திரைக்கதை, வசனம் எழுதி இயக்கும் படம் ‘‘இன்னார்க்கு இன்னாரென்று...’’. இத்திரைப்படத்தை ‘‘ஏழுமலையான் மூவிஸ்’’ மற்றும் ‘‘நாயகன் சினி ஆர்ட்ஸ்’’ என்ற இரு நிறுவனங்கள் சார்பில் எஸ்.நாயகம் தயாரிக்கிறார். இதில் புதிதாக ஒரு சிலம்பரசன் அறிமுகமாகிறார். இவருடன் ஸ்டெபி, ஆந்திராவை சேர்ந்த அஞ்சனா ஆகியோர் கதாநாயகிகளாக நடிக்கிறார்கள்.  இப்படத்தில் அனுபவம் வாய்ந்த இயக்குநர்களான சந்தானபாரதி, விஜய் கிருஷ்ணராஜ், அனுமோகன் ஆகிய மூவரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். மேலும் முன்னணி காமெடி நடிகர்கள் சிலரும் இந்த படத்தில் காமெடி காட்சிகளில் கலக்குகிறார்கள்.

வேகமாக எடுக்கப்பட்டு வரும் இந்த படத்திற்கு வசந்தமணி இசையமைத்துள்ளார்.  இதன் இயக்குநர் கதை, திரைக்கதை, வசனம் எழுதியதுடன் பாடல்களும் எழுதியுள்ளார். இவருடன் பிறைசூடன், இளையகம்பன் ஆகியோரும் பாடல்கள் எழுதியுள்ளனர். ஒளிப்பதிவை சாய்நட்ராஜ் கவனிக்கிறார்.

இதில் ‘கேட்டுக்க நண்பா கேட்டுக்க, மாத்திக்க நண்பா மாத்திக்க, மனசையும் சீக்கிரம் மாத்திக்க’ என்ற பாடலின் வரிகள் இளசுகளை தாளம் போடவைக்கும் ரகம்! இந்த பாடல் சூப்பர்ஹிட் என்று இதன் படப்பிடிப்பில் கலந்துகொண்ட படக்குழுவினர் பாராட்டுகின்றனர். இந்த படம் கடலூர், விழுப்புரம், பண்ருட்டி, நெய்வேலி ஆகிய பகுதிகளில் படப்பிடிப்பு முடிந்து, இறுதிக்கட்ட படப்பிடிப்பு சென்னையில் நடைபெற்று வருகிறது.

இந்த படத்தில் வித்தியாசமான கதையுடன் காதலை நாகரீகமாக சொல்லியிருக்கிறாராம் இயக்குநர் ஆண்டாள் ரமேஷ். இப்படம் பற்றி அவர் மேலும் கூறியதாவது: ஹீரோவை முதலில் காதலித்த பெண் விதவையாக... அடுத்து காதலிக்கும் ‌பெண் விட்டுக்கொடுக்க... யாரை மணப்பது என்பதில் ஹீரோ முடிவெடுக்க முடியாமல் குழப்பத்துடன் தவிக்கிறார். கிளைமாக்ஸில் ஹீரோவின் குழப்பத்திற்கு விடை கிடைக்கும். அத்துடன் மிக அற்புதமாக வந்துள்ள 5 பாடல்களும் கதையின் உள்ளோட்டமாக இருப்பதால் படத்திற்கு பலமே பாடல்கள்தான் என்றும் கூறியுள்ளார்.
 

 3  K ICK -= (HINDI)-கிக்' படத்தின் பிரமோஷன் நிகழ்ச்சி ஒன்றில் புகைப்படக் கலைஞர்களுக்கும், சல்மான் கானின் பாதுகாவலர்களுக்கும் மோதல் ஏற்பட்டதைத் தொடர்ந்து, சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் இனி கலந்து கொண்டு புகைப்படம் எடுக்கப் போவதில்லை என புகைப்படக் கலைஞர்கள் சங்கம் தீர்மானித்தது. அதன் பின் சல்மான் கான் கலந்து கொள்ளும் நிகழ்ச்சிகளில் எந்த புகைப்படக் கலைஞர்களும் புகைப்படம் எடுப்பதில்லை. 
சில வருடங்களுக்கு முன் வெளி வந்த "கிக்" படம் மாபெரும் வெற்றி பெற்றது. இந்த படத்தில் எல்லா தரப்பு மக்களையும் திருப்திப்படுத்தும் கதாநாயகன் ரவி தேஜா தான் நடித்திருந்தார்.



இந்த படம் தெலுங்கு மட்டும் இன்றி தமிழில் ஜெயம் ரவி நடிப்பில் "தில்லாலங்கடி" என்ற பெயரில் வெளி வந்தது, இது மட்டும் இல்லாமல் இப்போது சல்மான் கான் இந்த படத்தின் ஹிந்தி ரீமேக்கில் நடிக்க இருக்கிறார்.



ஈரோடு அண்ணா , வி எஸ்பி யில்  ரிலீஸ்
 

 4 -Hercules Reborn (2014)
 When a young man's bride is kidnapped by an evil king, he turns to Hercules for help. The fallen hero has been living in exile, banished for killing his family, but the young man's courage inspires Hercules. Together, they fight to rescue the bride and reclaim the honor of Hercules

0 comments: