Friday, July 18, 2014

வெள்ளிக்கிழமை ராமசாமி வெட்டாஃபீஸ் வெங்கிடுசாமி (18 7 .2014 ) 6 படங்கள் முன்னோட்ட பார்வை

 

1. வேலையில்லா பட்டதாரி


தனுஷின் 25வது படம் வேலையில்லா பட்டதாரி!

Dhanushs 25th movie titled Velailla Pattathari
 மரியான் படத்தைத் தொடர்ந்து தனுஷ் நடிக்கும் அவரது 25வது படத்திற்கு வேலையில்லா பட்டதாரி என்று பெயர் வைத்துள்ளனர். கேமராமேன் வேல்ராஜ் இயக்கும் இப்படத்தில் தனுசுக்கு ஜோடியாக அமலாபால் நடிப்பது உறுதியாகி விட்டது. 
மேலும், ஏற்கனவே ஐஸ்வர்யா இயக்கிய 3 படத்தில் தனுசுக்கு ஜோடியாக நடிக்க கமிட்டாகியிருந்த அமலாபால், அப்போது ஏற்பட்ட கால்சீட் பிரச்னையினால் அந்த படத்திலிருந்து விலகினார். அதனால் இந்த முறை அப்படி ஏதேனும் தடங்கல்கள் ஏற்பட்டு வெளியேறிவிடக்கூடாது என்று தனுஷ் பட நிறுவனம் கேட்ட தேதியை ஒதுக்கி கொடுத்திருக்கும் அமலாபால், இந்த படத்தில் சென்னை பெண்ணாக நடிக்கிறாராம். அதிலும் இதுவரை அவர் எந்த படங்களிலும் நடிக்காத ஆர்ப்பாட்டமான வேடமாம். அதனால், தோழிகளுடன் ஜாலியாக ஊர் சுற்றுவது, தியேட்டர்களில் படம் பார்க்கும்போது விசில் அடித்து ரகளை செய்வது என்றெல்லாம் கலகலக்கப்போகிறாராம் அமலாபால்.


அதுமட்டுமின்றி, தலைவாவை விட பல மடங்கு கவர்ச்சி களத்திலும் குதிக்கிறாராம். இதுவரை தெலுங்கு படங்களில் மட்டுமே கூடுதல் கவர்ச்சி சேவை புரிந்து வந்த அமலா, இனி தமிழிலும் அதே அளவு கவர்ச்சி கதாநாயகியாக உருவெடுக்கிறாராம். அதற்கு இந்த வேலையில்லா பட்டதாரிதான் அடித்தளம் போடுகிறதாம்.
ஈரோடு ராயல் , அன்னபூரணி , சீனிவாசா , சண்டிகா  வில் ரிலீஸ் 
 
சதுரங்க வேட்டை -  சினிமா & பிக்சர் ஹவுஸ்’ நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் படம் ’சதுரங்க வேட்டை’.
 அறிமுக இயக்குனர் எச்.வினோத் இயக்கும் இப்படத்தில் நட்ராஜ் நடிக்கிறார். இவர், ‘நாளை’, ‘மிளகா’ போன்ற படங்களில் நடித்தவர். அதுமட்டுமின்றி இந்தியில் பிரபல ஒளிப்பதிவாளரும் கூட. இதில் நட்ராஜுக்கு கோடியாக இஷாரா நடிக்கிறார். இவர்களுடன் இளவரசு, பொன்வன்னன், பிறைசூடன், தரணி, வல்லவன், ராமச்சந்திரன் ஆகியோர் நடிக்கிறார்கள். கே.ஜி.வெங்கடேஷ் ஒளிப்பதிவு செய்ய ஷான் ரால்டன் இசையமைக்கிறார்.



இந்தப் படத்திற்கு கவிப் பேரரசு வைரமுத்துவும் அவரது மகன் மதன் கார்க்கியும் பாடல்கள் எழுதியிருக்கிறார்கள். கிட்டத்தட்ட படப்பிடிப்பு முடிந்துள்ள நிலையில் படம் விரைவில் திரைக்கு வரும் என எதிர்பார்க்கப்படுகிறது.



படம் குறித்து இயக்குநர் வினோத் கூறுகையில், "இங்க பணம் இருந்தா நீங்க ஹீரோ ஆகலாம், எம்.பி ஆகலாம், எவனையாவது பிடிக்கலேன்னா அடிக்கலாம். மொத்தத்தில் பணம் இருந்தா என்ன வேண்ணா பண்ணலாம். அப்படிபட்ட பணத்தை சம்பாதிக்க ஏன், என்ன வேண்ணா பண்ண கூடாதுன்னு, நினைக்கிற ஒருத்தனோட கதைதான் 'சதுரங்க வேட்டை'.



நல்லவனா வாழ்ந்தா செத்த பிறகு சொர்க்கத்துக்கு போகலாம். கெட்டவனா வாழ்ந்தா வாழும் போதே சொர்க்கத்துல வாழ்லாம்னு சொல்ற ஹீரோவோட ப்ளே முழுக்க முழுக்க காமெடி, புதுமையான வசனங்கள் கலந்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆறு எபிசோடுகளா படத்தோட திரைக்கதை அமைக்கப்பட்டிருக்கும் இப்படம் ரசிகர்களுக்கு புதுமையான அனுபவத்தை தரும். மொத்தத்தில் நம் சமூகத்தின் முன் வைக்கப்பட்ட கண்னாடி இந்த படம். இதில் உங்களையே பார்த்து கொள்ளலாம், சிரிக்கலாம், யோசிக்கலாம்." என்றார்.

 
 3  இருக்கு ஆனா இல்லை -

இருக்கு ஆனா இல்லை" தலைப்பு எங்களுக்கே சொந்தம்: தயாரிப்பாளர் சொல்கிறார்

Irukku Aanna Illai title ours says producers
கடந்த சில தினங்களுக்கு முன்பு தினமலர் இணையதளத்தில் விரைவில் பஞ்சாயத்துக்கு வரப்போகும் தலைப்புகள் என்று செய்தி வெளியிட்டிருந்தோம். அதில் ஒரு பஞ்சாயத்து வந்து விட்டது. ஆர்.எஸ்.இன்போடெயின்மெண்ட் நிறுவனத்தின் சார்பில் எல்ரெட் குமார் தயாரிக்கும் படத்துக்கு "இல்ல ஆனாலும் இருக்கு" என்ற பெயரை சமீபத்தில் அறிவித்தார். ஏற்கெனவே "இருக்கு ஆனா இல்லை" என்ற பெயரில் ஒரு படம் தயாராகி வருவதை அந்த செய்தியில் குறிப்பிட்டிருந்தோம்.

இப்போது "இருக்கு ஆனா இல்ல" படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஒரு அறிக்கை வெளியிட்டிருக்கிறது. அதில் கூறப்பட்டிருப்பதாவது: எங்கள் படத்தின் பெயர் தென்னிந்திய திரைப்பட மற்றும் தொலைக்காட்சி தயாரிப்பாளர்கள் சங்கத்தில் (தயாரிப்பாளர் கில்டு) கடந்த ஜூலை 15ந் தேதியே பதிவு செய்து விட்டோம். ஆகஸ்ட் 21ந் தேதி அதற்கான ஒப்புதல் பெறப்பட்டுள்ளது. எங்கள் படத்தில் விவந்த் என்பவர் ஹீரோவாகவும், ஈடன், மனீஷா ஹீரோயின்களாவும் அறிமுகமாகிறார்கள். கிரிஷ் ஏ.சந்தர் ஒளிப்பதிவு செய்கிறார். சமீர் இசை அமைத்துள்ளார்.

திறமையாளர்களுக்கு போட்டி நடத்தி அதில் வெற்றி பெற்ற கே.எம்.சரவணன் டைரக்ட் செய்கிறார். கடல் கடந்து வாழும் தமிழர்களாகிய நாங்கள் சினிமா மீது கொண்ட பேரன்பினால் வரம் கிரியேஷன் என்ற நிறுவனத்தை தொடங்கி இந்தப் படத்தை தயாரித்து வருகிறோம். காமெடி திரில்லர் படம். பெரும்பகுதி ஷூட்டிங் முடிந்துவிட்டது. விரைவில் திரைக்கு வர இருக்கிறது.

இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளனர்.
 
METRO

மெட்ரோ ரெயில் ஊழல் சினிமா வருகிறது

movie on metro rail corruption
மெட்ரோ ரெயில் திட்டம் இன்னும் முழுசா முடியல; அதுக்குள்ள அதுல நடந்த ஊழல் பற்றிய சினிமாவான்னு அதிர்ச்சி அடைஞ்சிடாதீங்க. இது வெளிநாட்டு மெட்ரோரெயில் ப்ராஜக்டில் நடந்த ஊழலைப் பற்றி வந்திருக்கும் வெளிநாட்டுப் படம்.

லண்டனில் மெட்ரோ ரெயில் வந்து 50 வருடமும், ஜப்பானில் 30 வருடமும் ஆகிவிட்டது. ஒரு கணக்கெடுப்பின் படி அந்த மக்கள் இன்னும் ஒரு பயத்துடன்தான் பயணம் செய்கிறார்களாம். அதை மையமாக வைத்து வெளிவரும் ஹாலிவுட் படம் மெட்ரோ.

எல்லாத் துறையிலும் ஊழல் இருப்பதுபோல மெட்ரோ ரெயிலிலும் ஊழல் புகுந்து தரம் குறைந்த மெட்ரோ பாதை அமைக்கப்பட்டால் வரும் விளைவுகளும் அதனை ஹீரோ எப்படி தடுக்கிறார் என்பதும்தான் படத்தோட கதையாம். செர்கே புஷ்கேபாலிஸ் ஹீரோ, அனா டோனிபிலியூ ஹீரோயின். ஆண்டன் மெகர்டிச்வ் டைரக்டர். படத்தை பார்த்துட்டு நம்ம ஊர் மெட்ரோவாட கம்பேர் பண்ணி பயப்படாதீங்க. 
ஹாலிவுட்டில் தயாரான ஆங்கில படம் ‘மெட்ரோ’. தமிழில் அதே பெயரில் வருகிறது. உலகின் நான்காவது போக்குவரத்தான மெட்ரோ ரெயில் திட்டம் ஆரம்பித்து 50 ஆண்டுகள் கடந்து விட்டது. நாட்டில் மலிந்துவிட்ட ஊழல் மெட்ரோ ரெயில் கட்டுமானத்தில் ஊடுருவினால் என்ன ஆகும் என்பதே கதை.

திகில், திரில்லிங் காட்சிகளுடன் இதை படமாக்கியுள்ளார் டைரக்டர் ஆண்டன் மெகர்டிச்வ். மெட்ரோ ரெயில் பயணம் என்ன மாதிரியான பாதிப்புக்களை ஏற்படுத்தும் என்பது சீட் நுனிக்கு இழுக்கும்படி காட்சிபடுத்தியுள்ளார் இயக்குனர்.

செர்கே புஷ்கே பாலிஸ், அனாடோனி பிலியூ, அலெக்ஸி பர்ட் யூகோவ், கேத்ரினா ஆகியோர் நடித்துள்ளனர். மெட்ரோ இண்டோ ஓவர்சிஸ் பிலிம்ஸ் பெரோஸ் இலியாஸ் தமிழிலும், ஆங்கிலத்திலும் இந்தியாவில் இப்படத்தை வெளியிடுகிறார்.
 

5  தலைகீழ் - ஒரு பயானுபவம்!


தலைகீழ் படத்தின் குழுவினர் அந்தப் படத்தை எடுத்ததை விட சந்தித்த அனுபவங்கள் படு திகிலாக உள்ளன.


ரெக்ஸ் ராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள படம் தலைகீழ். சமீபத்தில்தான் படப்பிடிப்பு முடிந்தது. சமீபத்தில் பாடல் வெளியீடு நடந்தது. அப்போது படப்பிடிப்பின்போது சந்தித்த திகிலான அனுபவங்களை ரெக்ஸ் ராஜ் பகிர்ந்து கொண்டார். அவர் கூறக் கூற படத்தை விட அது படு திகிலாக இருந்தது.


முதலில் நாயகி தேஜாமயிக்கு ஏற்பட்ட அனுபவம். படப்பிடிப்பில் ஆட்டோ துரத்தல் காட்சி ஒன்றில் நடித்தபோது அவர் மயங்கி விழுந்து விட்டாராம். பின்னர் வனப்பகுதியில் நடந்த படப்பிடிப்பின்போது பெரிய நாகப் பாம்பு படம் எடுத்து ஆடி அனைவரையும் அலற வைத்துள்ளது.


நாகப் பாம்பைப் பார்த்து படப்பிடிப்புக் குழுவினர் பயந்து ஓடியுள்ளனர். இந்த துயரத்திலிருந்து மீண்டு அடுத்த கட்டப் படப்பிடிப்பு நடந்தபோது, 60 அடி பள்ளத்தில் உதவி இயக்குநர் ஒருவர் விழுந்து விட்டாராம். ஹீரோவுக்கு காட்சியை விளக்கிக் கொண்டிருந்தபோது பள்ளத்தில் விழுந்துள்ளார் அவர்.
வனப்பகுதியில் வசித்து வரும் கிராமத்தினர் தக்க சமயத்தில் அவரை காப்பாற்றி மீட்டனராம்.


அதேபோல வில்லன் துரத்தும் காட்சியில் 2வது நாயகி நிவேதிதா தவறி விழுந்து காலை ஒடித்துக் கொண்டாராம்.


இப்படி பல சிக்கல்களைத் தாண்டி ஒரு வழியாக படப்பிடிப்பை நடத்தி முடித்துள்ளனராம்.


திரைப்பட வர்த்தக சபை அரங்கில் நடந்த இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழாவில் ரெக்ஸ் ராஜ் இவற்றை வர்ணித்தபோது அரங்கமே அதை திகிலுடன் கேட்டது.


படத்திற்கு இசையமைத்திருப்பவர் ஆதிஷ் என்ற புதுமுகம். இவருக்கும், இசையமைப்பாளர் தேவாவுக்கும் நல்ல நட்பு உள்ளதாம். அந்த நட்பின் காரணமாக தேவாவும் நிகழ்ச்சிக்கு வந்திருந்தார். தேவாவுடன் சில காலம் இணைந்து பணியாற்றியுள்ளாராம் ஆதிஷ்.

 Hate Story 2 movie review
Hate Story 2 has a sense of affection like many of those epic revenge sagas made in our Indian cinema. The problem is that after setting an apt plot, it doesn’t do much justice to it.

Cast- Surveen Chawla, Jay Bhanushali, Sushant Singh
Director- Vishal Pandya
Music Director- Mithoon, Meet Bros Anjjan, Rashid Khan


In a scene the female protagonist Surveen Chawla out of angst over her lover’s (Jay Banushali) murder, assaults one of the killers physically by tying him on a chair. The scene stirs angst against the killer after you know that innocent Jay was slayed mercilessly, but despite that you are not able to connect with the scene and it departs giving you an empty feeling.

Hate Story 2 has a sense of affection like many of those revenge sagas made in our Indian cinema. The problem lies here is that after setting an apt plot, it doesn’t do much justice to it.


Debutant director Vishal Pandya picks a vindictive idea and attempts to make it as gruesome as he can. After exotic romance and dreadful assassination in the first half, the flick follows vengeful killing of the murderers in the second half.

Surveen Chawla and Akshay (Jay Bhanushali) falls in love. This isn’t acceptable by a high profile leader (Sushant Singh) as he also loves her. Sushant and his men kill Jay, but leave Surveen alone after assaulting her. We will call it a big mistake by Sushant who faces a backfire by this wounded lover.

The movie is undoubtedly a revenge thriller like its earlier installment but the screenplay thins down as and when it proceeds. However, there are scenes, which pull over so brilliantly that you are moved with them. The techniques of assassination have a thrill element but they come out of nowhere.


The flick also focuses the dirty politics prevalent all over; however, it doesn’t concern us much since it’s all predictable. A little too much exposure by Surveen Chawla in the flick works for the front row viewers in theatres but not for those who are looking out for logics.

Surveen Chawla is impressive in her first attempt in the movie. As an annihilator seeking for revenge Surveen is great.

Jay Bhanushali doesn’t have a meaty role in the flick but is good in whatever he gets.

Sushant Singh is the show stealer. As an arrogant politician he sums the performance with a brilliant act.

Music by Mithoon, Meet Bros Anjjan, Rashid Khan is good. The remake of the old melody ‘Aaj phir tumpe’ is brilliantly sung by Arijit Singh and Samira Koppikar is our pick from the album.


நன்றி - தினமலர் , தினமணி , மாலை மலர் , அனைத்து  சினிமா இதழ்கள் , தட்ஸ் தமிழ்

0 comments: