Friday, April 18, 2014

டமால் டுமீல் - சினிமா விமர்சனம்

 


 கோடிக்கணக்கான சொத்துக்கு அதிபதியான  அழகிரியைத்திடீர்னு ஒரே நாள் ல நம்ம தலைவர் கட்சியை விட்டு வெளில போ-னு அனுப்பின மாதிரி ஒரு ஐ டி கம்பெனில  ஹீரோவை வேலையை விட்டு அனுப்பிடுது .இப்போ அவருக்கு ஏகப்பட்ட பிரச்சனை . இந்த சமயம் பார்த்துத்தான் அவர் காதலி அவளோட அப்பா கிட்டே லவ் மேட்டரை சொல்லி அப்பாவை  மீட் பண்ணச்சொல்லுது . இந்தப்பொண்ணுங்களே இப்படித்தான் ஏதாவது பிரச்சனைல நம்மளைக்கொண்டு வந்து மாட்டி விட்டுடுவாங்க . 


இந்த மாதிரி ஒரு சூழ்நிலைல  ஹீரோ குடி இருக்கும் அபார்ட்மெண்ட் வாசல்ல  5 கோடி  ரூபா பணம் உள்ள ஒரு பெட்டி அநாமத்தா கிடக்கு . உடனே   ஹீரோ கூட்டணிக்கு கதவைத்தட்டுன ஒரே ஜீவனான கார்த்திக்கை காங்கிரஸ் டபார்னு இழுத்துப்போட்டுக்கிட்டா மாதிரி அந்தப்பாக்சை உள்ளே எடுத்துக்கறார். அது ஆக்சுவலா 2  கேங்க்  இடையே நடக்க வேண்டிய பண பரிவர்த்தனை . 


 அந்த 2 குரூப்பும்  ஒருத்தரை ஒருத்தர் துரோகின்னு நினைச்சு தேடல் ல இருக்கும்போது எதிர்பாராத விதமா  3 ரடிங்க ,ஒரு போலீஸ் ஆஃபீசரை  ஹீரோ கொலை செய்ய நேருது .அவர்  வீட்லயே விழுந்த 4 டெட் பாடியை அவர் எப்படி டிஸ்போஸ் பண்றாரு , இந்த மேட்டர்  காதலிக்கு  தெரிஞ்சு அவ என்னா பண்றா , போலீஸ் ல மாட்னாரா ? இல்லையா? இதுதான்  மிச்ச மீதிக்கதை




ஹீரோ வா வைபவ் நல்லா பண்ணி இருக்கார் .  ஐ டி கம்பெனில ஒர்க் பண்ற இளைஞனைக்கண் முன் நிறுத்தறார். ஆனா சேசிங்க் சீன் , த்ரில்லர் காட்சிகள் ல அவர் முகத்துல எக்ஸ்பிரசன்ஸ் கம்மி 


 ஹீரோயின் ரம்யா நம்பீசன் ....கண்ணியமான உடைகளில் வலம் வரும், மற்றும் ஒரு அழகிய நாயகி  ( நாம எந்தக்காலத்துல   ஹீரோயினைக்குறை சொல்லி இருக்கோம் ? ) லவ் சீனை விட   அதிர்ச்சிக்காட்சிகளீல் , நாயகன் தன்னை விட்டு விலகிடுவாரோ என பதறும் காட்சிகளில் நல்லா பண்ணி  இருக்கார் 


சார்லி ஒரு ரோல்  பண்ணி  இருக்கார். கோட்டா சீனிவாசன் ,சாயாஜி ஷிண்டே  இருவரும்  வில்லன் ரோல். கோட்டா நல்லா காமெடி சென்சோட நடிச்சிருக்கார். அடியாட்களா வரும் 4 பேர் நடிப்பும்  செம .





 இயக்குநர் பாராட்டுப்பெறும் இடங்கள்



1.  படத்தோட ஓப்பனிங்க்லயே கதைக்கு வந்துவிடுவது 


2   போஸ்டர்  டிசைன் , மார்க்கெட்டிங்க்  பக்கா 


3  படத்தின்   ஓட்ட அளவு (  டியூரேஷன் டைம்)   சரியா  2 மணி நேரம்  தான் . ஷார்ட்  ஸ்வீட் 


4 படத்தில்  சீரியசான காட்சிகளில்  கேரக்டர்கள் இயல்பா காமெடி பண்ணுவது , குறிப்பா வில்லனின் அடியாட்கள்




 இயக்குநரிடம் சில கேள்விகள் 


1.  தன் வீட்டில் விழுந்த  2 டெட் பாடிகளையும்    ரூம்ல வெச்சுட்டு  ஹீரோ வெளில போறார். டெட் பாடில  இருக்கும்  செல் ஃபோனை டீ ஆக்டிவேட் பண்ணாம ., அதை ஸ்விட்ச் ஆஃப் பண்ணாம யாராவது  போவாங்களா? 



2 ஒரு காமெடி  சீன் ல  ஒரு பொண்ணு முன்னால   பிஎஃப்  கேசட் கேட்டு அவமானப்படுத்திட்டீயேனு வசனம் வருது . ஆனா  அந்த காட்சியில்  பஸ் ஸ்டாப்பில்  2  ஃபிகருங்க பேசிட்டு  இருக்கும் 


3 ஹீரோயின்   பீச்ல ஹீரோவை சந்திச்சு பேசிட்டு  தன் ஸ்கூட்டில அவ பாட்டுக்கு போயிடுது . ஹீரோவை  டிராப் பண்ணலை ? வீட்டுக்குத்தெரிஞ்ச லவ் தானே? 


4  ஹீரோ  ரூம் ( அபார்ட்மெண்ட் ) E 6  ஆனா அங்கே குழந்தைங்க  கிரிக்கெட் விளையாண்டு   ஒரு  கோடு கட் ஆகி F 6 ஆகிடுது . அதுனால நடக்கும் குழப்படிகள் தான்  பல சம்பவங்கள் .ஆனா அவர் வீட்டுக்குப்பக்கமே அடுத்தடுத்து  ஈ 5 , ஈ 7 இருக்கே . அதைப்பார்க்க மாட்டாங்களா? 


5   தனக்கு  5  கோடி கிடைச்ச மேட்டரை  ஹீரோ ஏன் லவ்வர்  கிட்டே  சொல்லலை? 


6 நண்பனின் காதல் தோல்வி அனுபவத்தைக்கேட்டு  ஹீரோ தன் காதலி கிட்டே அவ மனம் புண் படும் படி சம்பந்தமே இல்லாம அவ காதலை சந்தேகிப்பது அபத்தம்

 7   ஜீப் ல ஓப்பனா 4 சவப்பெட்டியை  ஏத்திக்கிட்டு மெயின் ரோட்ல போறார். யாரும் அவரைக்கண்டுக்கவே  இல்லை. அவர் என்ன ஆளுங்கட்சி எம் எல் ஏவா? 


8    டெட் பாடிக்கு  எந்த வாசனைத்திரவியமும் அடிச்சு விடலை . டெட் பாடி ஸ்மெல் பக்கத்து  வீட்டுக்கு அடிக்காதா? யாருமே எதுவும் கேட்கல? 



9 மாசம்  20,000  ரூபா சம்பளம் வாங்கும்   ஹீரோ 15,000  ரூபா வாடகைக்கு ஒர்த்தான  வீட்டில் தங்குவது எப்படி ?   பொதுவா என்ன சம்பளமோ அதுல 25%  தான் அதிக பட்ச வாடகையா பார்ப்பாங்க 



10  ஹீரோ சாப்பிடும் பிரியாணி  சிந்தி தவறி விழுந்துடுது. அந்த சாதம் வழுக்கி  அடியாள் கீழே விழுந்து தலையில் அடிபட்டு இறப்பது போல் காட்சி . சாதம் வழுக்கி விழ சாத்தியக்கூறுகள்  கம்மி . வாழைப்பழத்தோல் சீனா மாத்தி இருக்கலாம் 




மனம் கவர்ந்த வசனங்கள்

1. என்ன சார் திடீர் னு வேலையை விட்டுத்தூக்கிட்டீங்க?



 பிரமோசன் ,இன் க்ரிமென்ட் எல்லாம் சொல்லிட்டா குடுத்தோம் ? # டமால் டுமீல்

2. ஐ டி ல ஒர்க் பண்றவங்க எப்டி பணத்தை செலவு பண்றதுனு தெரியாம பண்றாங்க # டமால் டுமீல்

3. என்னை மாதிரி ரவுடிங்க சட்டத்தை மதிக்க மாட்டோம்.ஆனா சொன்ன வார்த்தையை மீறமாட்டோம் # ட டு

4. வாழ்க்கைல நல்லா செட்டில் ஆனவன் ,வசதியானவன் அப்டினுதானே என்னை லவ் பண்றே? எனக்கு வேலை போய்ட்டா வேற் வசதியான பையனை பிடிச்சுக்கமாட்டே?#டடு


5  பாஸ் ! நான் போலீசை போட்டுத்தள்ளிட்டேன் 


 என்னால நம்ப முடியலை 


 சத்தியமா பாஸ் ! 


 டேய். போலீஸ் நம்ம நடமாட்டத்தை  மோப்பம் பிடிச்சதை நம்ப முடியலைனு சொன்னேன் 


6  இது எதுக்கு இவ்ளவ் பெரிய பொட்டி ? 

 புக்ஸ் வைக்க 


 அடேங்கப்பா . இதே மாதிரி 4 பொட்டி போகுதே . அப்போ நிறையா படிப்பார் போல  ( ஆக்சுவலா அது டெட் பாடி வைக்கும் சவப்பெட்டி ) 


7   சார்லி = பொட்டில என்ன? 

 புக்ஸ்  தான் 


 பொண கனம் கனக்குதே 


8  என் money   எங்கே ? 


 இவன் தான்  உன் ஆள் மணி 

 அய்யோ , என் மணி பணம் எங்கே? 




9 இவனைப்பார்த்தா புத்திசாலியாத்தெரியறான் . எ அடியாளுங்க இப்படிப்புத்திசாலியாவா இருப்பாங்க ? யோசிச்சுப்பாரு

10 நிரந்தர நண்பன் னு எனக்கு யாரும் இல்லை.ஏதாவது ஒரு சந்தர்ப்பத்துல யாராவது துரோகி ஆகிடறாங்க #,டமால் டுமீல்

11 . நீண்ட கால நண்பன் உதவி எல்லாம் ரெண்டாம் பட்சம் தான் .பணம் தான் தக்க சமயத்தில் உதவும் # ட டு





படம் பார்க்கும்போது போட்ட ட்வீட்ஸ்

1. மல்லாக்கா படுத்திருக்கும் நாயகி திரும்பி குப்புறக்கா படுக்குது.எப்டி ஹீரோயினுக்கு ஓப்பனிங் சீன் ? # டமால் டுமீல்

2. யாமிருக்க பயமே - ட்ரெய்லர் கலக்கல்.த்ரில்லர் மூவி லைக் பீட்சா





சி பி கமெண்ட் 



டமால் டுமீல் - மதி நுட்பமான காமெடிக்காட்சிகள் நிறைந்த ஏ செண்ட்டர் ரசிகர்களுக்கான த்ரில்லர் ,மூவி - 


ஆனந்த விகடன்  எதிர்பார்ப்பு மார்க் =41 , 


 குமுதம் ரேங்க்கிங்க் = ஓக்கே 
\

ரேட்டிங்க் = 2.5 / 5


 ஈரோடு ஆனூரில் படம் பார்த்தேன்





2 comments:

குரங்குபெடல் said...

கடமை வீரனே . . . வாழ்க . . . உமது விமர்சன தொண்டு . . .

Unknown said...

உமக்கு வேறு வேலை இல்லையா?