Wednesday, May 10, 2017

ஒவ்வொரு மாநிலத்துலயும் ஒரு OPS உருவாகறாங்க

1  தமிழகத்தில் சட்டம் - ஒழுங்கு சரியில்லை; கவர்னர் அறிக்கையால் அரசுக்கு சிக்கல்? # மத்திய அரசுடன் இணக்கமாக இருக்கவும்னு எச்சரிக்கை அறிவிப்பு இது=================நான் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு -உதயநிதி ஸ்டாலின் # அதானே?யார் யாரோ வர்றாங்க.இதுக்கு தகுதி ,தராதரம் எதுனா தேவையா என்ன?=================3 உடல்நலக்குறைவால் 10 மாதத்திற்கு பின் ஜூன் 3 ஆம் தேதி தொண்டர்களை சந்திக்கிறார் கருணாநிதி # பாகுபலியாகிய நான் மொமெண்ட்================4 கேரள மாநிலம் கண்ணூரில் நீட் தேர்வை எழுதும் முன் மாணவியரின் உள்ளாடைகளை கழற்ற கட்டாயப்படுத்திய அதிகாரிகள் # ஊர் உலகம் காரி துப்புது அதி காரி
==================5 விவசாயிகள் பற்றி பேச DMKகு அருகதை இல்லை பொன்.ராதா# தமிழகத்தில் 3%,வாக்குவங்கி உள்ள பாஜக 35% வாக்குவங்கி உள்ள திமுக வை பேசலாமா?================
6 ரஜினி அரசியலுக்கு வந்தால் ஜெயிப்பார் - நக்மா # நக்மா விரித்த அரசியல் வலையில் பாட்ஷா பட்சி சிக்(கு)மா?
===============7 வாழ்க்கையில் முன்னேற இந்தி படியுங்கள் - எஸ்.வி.சேகர் # சார், நீங்க ஏன் உங்க 18 நாடகங்களையும் தமிழ் ல எழுதி டைரக்ட் செஞ்சீங்க? ஹிந்தில எழுதி முன்னேறி இருக்கலாமே?==================8 இந்தியா காவிமயமாகி வருகிறது விரைவில் தமிழகமும் காவிமயமாகும்:தமிழிசை # ஆல்ரெடி தமிழகம் பாவிமயமா இருக்கு, இன்னுமா?======================9 இந்தியா காவிமயமாகி வருகிறது விரைவில் தமிழகமும் காவிமயமாகும்:தமிழிசை # இந்தியா பூரா காவி மயமா ஆனாலும், தமிழகத்தில் மட்டும் காவி மாயமாகும்
===================10 தலைவர் கருணாநிதியின் வைர விழாவிற்கு எங்களையும் அழையுங்கள் -் தமிழிசை # மோடி சம்பந்தப்பட்ட விழாவுக்கு நீங்க அழைச்சீங்களா?==================

11 தமிழகத்தின் ஒப்பற்ற ஒரே தலைவராக உருவாகி வருகிறார் தினகரன்-நாஞ்சில் சம்பத் காருக்குப்பதிலா ரயிலே எதிர்பார்க்கறார் போல

================


12 சுகாதாரத்துறை அமைச்சர் மாமனாருக்கு 3 ஆண்டு சிறை தண்டனை : மோசடி வழக்கில் # விஜயFAILகர்


================

13 தமிழகத்தில் பொதுத்தேர்தல் வருவதும், வராததும் ஆட்சியாளர்கள் கையில் தான் உள்ளது -தமிழிசை # மத்தியில் ஆளும் ஆட்சியாளர் கையில்?


==================

14 இந்தியை எதிர்க்கவில்லை, இந்தி திணிப்பை தான் எதிர்க்கிறோம் - ஸ்டாலின் # ஆத்துல ஒரு கால் சேத்துல ஒரு கால்.டக்னு மாற வசதி

====================

15 ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான், கருணாநிதியின் விருப்பம்.-ஸ்டாலின் # ஆட்சிக்கு வர வேண்டும் என்பதுதான் விருப்பம்னு சொன்னா ஏத்துக்கலாம்


=====================

16 அரவிந்த் கெஜ்ரிவால், 2 கோடி ரூ     லஞ்சம்  வாங்கியதை என் கண்ணால் பார்த்தேன்.-கபில் மிஸ்ரா # ஒவ்வொரு மாநிலத்துலயும் ஒரு OPS  உருவாகறாங்க


======================

17  ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான், கருணாநிதியின் விருப்பம்.-ஸ்டாலின் #  அண்ணா மறைந்த போது 5வது இடத்திலிருந்த​ முக​
முதல்வரானது ஜனநாயகமா?

================

18 ஸ்டாலினின் பலதரப்பட்ட நடிப்பால், தொண்டர்களை ஏமாற்றலாம்; ஆனால், மக்களை ஏமாற்ற முடியாது.-வைகைச்செல்வன் # ஆனா MGR,ஜெ  வும் திரையில் நடிச்சு பின் அரசியலுக்கு வந்தவங்கதானே/?

=======================


19  ஸ்டாலின் , தளபதியாக தான் இருக்க முடியுமே தவிர, மன்னராக முடியாது-செங்கோட்டையன் # 1991 ல தளபதியா வந்த ரஜினி 1992 ல மன்னன் ஆகலையா?


=======================


20  குஜராத் துணை முதல்வர் மகன் அளவுக்கு அதிகமான மது அருந்தியிருந்ததால் விமானத்தில் ஏற அனுமதி மறுக்கப்பட்டது.  # காந்தி பிறந்த மண்ணுக்கு   வந்த சோதனை

=====================

0 comments: