Tuesday, May 02, 2017

நீலம் டாய்லெட்டுக்காக , சிவப்பு பாத்ரூமுக்காக

தம்பி ராமய்யா ,சூரி,ஈரோடு மகேஷ் 3 பேருக்கும் ஒரு ஒற்றுமை


என்ன ?
எதுனா பழங்கால அரதப்பழசான மொக்கை ஜோக் சொல்லி அவங்களே சிரிச்சுக்குவாக


=============

2 டாக்டர்.நைட்டானா தூக்கமே வர மாட்டேங்குது .. காலைல முழிப்பே வர மாட்டேங்குது .. என்ன டிசைன்னே தெரியல


மிட் நைட் மசாலா பார்க்கும ்டிசைன்


==============

3 தலைவரே!60வருச பொது வாழ்க்கைல உங்க சாதனையா எதை நினைக்கறீங்க?


இன்னும் ஜனங்க என்னை நம்பிட்டு இருக்காங்க்ளே அது


=============

4  உங்க கிட்டே எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே வெச்சுக்குங்க, வெளில காட்டிக்க வேணாம்

 சரி, ஆனா என் 2 சம்சாரங்களும் ஷாப்பிங்க் போலாம்னு சொல்லும்போது


==================


5  டியர், நான் தானே இந்தக்குடும்பத்துக்கு சுமை தாங்கி?

 ஆமா

 அப்போ லாரி ஸ்ட்ரைக் முடியும் வரை நானும் ஸ்ட்ரைக், சமைக்க மாட்டேன்


====================

உங்க கிட்டே எவ்ளோ கஷ்டம் இருந்தாலும் உள்ளுக்குள்ளேயே வெச்சுக்குங்க


சரி, ஆனா என் 2 சம்சாரங்களும் ஷாப்பிங்க் போலாம்னு சொல்லும்போது என்ன செய்ய?

================

6 சார்.நீங்க.வசூல் மன்னனாமே?


அப்டிதான் பேசிக்கறாங்க.
அப்போ 14 கோடி நட்டம்னு நட்ட ஈடு கேட்ட சங்கதி?
இது நமக்கு 1ம் புதுசில்லியே?

============

7 இந்த டைட்டிலுக்காக அவருக்கு 10 லட்சம் ரூபா குடுத்தோம்.

லூசாய்யா நீ?1000 ரூபா கொடுத்தா வெரைட்டி யா யோசிச்சு சொல்ல ஆள் இருக்கு

==============

8 விஜய் ரசிகர்களுக்குப்பிடிக்காத/ரஜினி ரசிகர்களுக்குப்பிடிச்ச பழமொழி எது?

ஊர்க்"குருவி" பருந்து ("கழுகு") ஆகுமா?

===============

9 தலைவரே ! ஆட்சிக்காலம் 5 வருசம் தானே? ஏன் 2 வருசம் போதும்கறீங்க?

தமிழகத்தை ரெண்டா கூறு போட்டு விக்க 2 வருசம் போதாதா?


====================

10  தலைவர் மணிரத்னம் ரசிகர்னு எப்டி சொல்றே?

 ஆர் கே நகர் ல காற்று வெளி யிடை தேர்தல்னு போஸ்டர் ஒட்டி இருக்காரே?


=================

11  இடைத்தேர்தல்ல யார் ஜெயிப்பாங்க?

இலியானா அல்லது  மியா ஜார்ஜ்


========================

12  இந்த இடைத்தேர்தலில் எங்கள் வேட்பாளரு  க்குத்தான் 99 வயசு. இவரை தேர்ந்தெடுத்தால் மீண்டும் விரைவில் இடைத்தேர்தல் வரும், நல்லா நீங்க சம்பாதிக்கலாம், எனவே.....


=====================

13 விஜய் டி வி க்கு ரொம்ப நல்ல மனசுன்னு எப்டி சொல்றே?

 தன்னைத்தான் கழுவிக்கழுவி ஊத்தி இருக்காங்கன்னு தெரியாமயே “கவண்” பட  ப்ரமோ போட்டுட்டு இருக்கா ங்களே?


===================

14 தலைவரே! மேடைல பேசும்போது நட்சத்திர மீன், நட்சத்திர ஆமைனு சம்பந்தம் இல்லாம ஏன் பேசறீங்க?

 நட்சத்திரப்பேச்சாளன்னு பேர் எடுக்க


=====================

15 கமல் ரசிகைன்னா எப்படியும் ஆபத்து, அதனாலதான் ரஜினி ரசிகையா இருக்கேன்
 அப்பவும் ஆபத்துதான்

எப்டி?

 ரஜினி வீட்ல தானே தனுஷ் இருக்கார்?


================

16 கூவம் நதிக்குப்பக்கத்துல கட்சி ஆஃபீஸ் எதுக்கு?

அப்ப தான் 60 வருசமா என்னை சுத்திதான் அரசியல் நடக்குதுனு சொல்லிக்கலாம்

புரியலையே
அரசியல் ஒரு சாக்கடை ஆச்சே?


=====================

17

இந்த  தொகுதில எல்லா ஹோட்டல்லயும் பிளேட்ல தான் சாப்பாடு பரிமாறுகிறாங்க ஏன்?

தெரில
 இரட்டை இலைக்குத்தானே தடை? வாழை இலை இருக்கில்ல?


======================

18  

வேட்பு மனு தாக்கல் பண்றதுக்கு முன் எதுக்கு தலைவர் சுடுகாட்டுக்குப்போறாரு?


 கோயிலுக்குப்போறது அவுட் ஆஃப் ஃபேஷன், சமாதிக்குப்போவதுதான்  லேட்டஸ் ட்ரெண்ட்

=====================

19

ஒரு சின்ன பிரச்சனையால தேர்தல்ல நிக்கலை


 ஓ, என்ன பிரச்சனை

 அதான் சொன்னேனே? சின்னம் தான் பிரச்சனை

===================


20 

  நம்ம கட்சியோட  கொடில ப்ளூ கலரும் , ரெட் கலரும் இருக்கே?


 நீலம் டாய்லெட்டுக்காக , சிவப்பு பாத்ரூமுக்காக, டி வி விளம்பரம் பார்த்ததில்ல?


=======================

0 comments: