Tuesday, May 30, 2017

நான் உங்கள் வீட்டு பிள்ளை

1 ஊழல்வாதிகளிடம் இருந்து கைப்பற்றப்படும் கறுப்புப் பணம், ஏழைகளிடம் வந்து சேரும்-மோடி # எப்டி? அந்த  15 லட்சம் ரூபா எல்லோர் கணக்கிலும் தந்த மாதிரியா?

=====2   தொகுதி பிரச்னை குறித்து கோரிக்கை மனு அளிக்கவே, MLA,க்கள் என்னை சந்தித்தனர்.-முதல்வர் பழனிசாமி # அம்புட்டு நல்லவங்களா? நம்ப முடியலையே?

=======

மோடியை, தமிழக முதல்வர் சந்தித்து இருப்பது, மாநில உரிமையை நிலைநாட்டவும், நிதியை பெறுவதற்காகவும் மட்டுமே; அரசியல் ஆதாயத்திற்காக அல்ல- ஜெயகுமார்: # எதுக்கு இந்த விளக்கம்?மடியில் பயம் இல்லை எனில் வழியில் ஏன் கலக்கம்?

======


அ.தி.மு.க., அரசை யாரும் கவிழ்க்க வேண்டியது இல்லை;


மக்களே இந்த ஆட்சியை விரட்டிவிடுவர்.-குஷ்பு: அப்போ கவர்னருக்கு என்ன வேலை?

========

5

இனி, மீன் சாப்பிடுவதற்கும், பா.ஜ., அரசு தடை விதித்தாலும் விதிக்கும்-.கேரள முதல்வர் பினராயி விஜயன் # அப்போ இப்பவே முன் ஜா”மீன்” ரெடி பண்ணிக்குங்க

===================
 நான் தேர்தலில் போட்டியிடுவது குறித்து, கட்சி மேலிடம் முடிவு செய்யும்.-நக்மா # குஷ்பூ வுக்கே இன்னும் வாய்ப்பு கிடைக்கலை, அதுக்குள் அவசரப்படுவது தகுமா?


==========

7 அரசியலுக்கு வருவது பற்றி நேரம் வரும் போது செல்வேன்; -ரஜினி! # இதுக்காகவே நல்ல நேரம், நேரம் இரண்டு படங்களையும் ரீ ரிலீஸ் பண்ணப்போறாங்க\\\


===============

அதிமுகவில் குழப்பம் ஏற்படுத்துவதை விட ஓபிஎஸ் பாஜகவில் சேருவதே நல்லது: நாஞ்சில் சம்பத் # நீங்க மதிமுகவில் சேர்வதே நல்லதுன்னு அவர் சொல்வாரோ?


================

9 எனக்கு தமிழ் கற்றுக்கொடுத்தவர்கள் கருணாநிதி, கண்ணதாசன், சிவாஜி கணேசன்: கமல்# ஆனா அவங்க பேசறது புரியுது, இவர் பேசறது மட்டும் புரியவே மாட்டேங்குது

==

10  தனியார் பால் நிறுவனங்களிடம் பணம் பெறவே குற்றச்சாட்டு: -EVKS # பணம் வாங்கின பின் பால் மாறிப்பேசினா ஜனங்க ஒத்துக்குவாங்களா?======================


11 பாஜகவின் மூன்றாண்டு ஆட்சி வேதனை அளிக்கும் வகையில்தான் உள்ளது:-EVKS # கறுப்புப்பணம் வெச்சிருக்கறவங்களுக்கும், எதிர்க்கட்சிகளுக்கும் வேதனை?

===============
12 நடிப்பு என் தொழில்; அதை செய்ய விடுங்கள். - ரஜினி # போர் வரும்போது பார்த்துக்கலாம்னு        அக்கப்போரை ஆரம்பிச்சதே நாம தானே?

====


13  கோவாவில் வெங்காயம் போல் விற்பனையாகும் "சிம்' கார்டுகள் # சின்ன (2ஜி,3 ஜி) சிம் , பெரிய (4ஜி , 5ஜி) சிம்னு விக்கறாங்களா?

==========
14

பிரதமர் மோடி உலகம் போற்றும் தலைவராகத் திகழ்கிறார்: அமைச்சர் பி.தங்கமணி # முதல்வரையே முந்திட்டாரே,ரொம்ப அதிகமா எதிர்பார்க்கறாரோ?

===============

15   ஜெ., வாழ்ந்த இல்லத்தை, கோவிலாக கருதுகிறேன் -தீபா: # அப்போ உங்க சொத்துல பாதியை உண்டியல்ல போட்டுட்டு கிளம்புங்க

============

16  ஊழல்வாதிகள், மதவாதிகள் , ஜாதியவாதிகள் தான் பிரதமர் மீது அதிருப்தியில் உள்ளனர்.-வெங்கையா நாயுடு # அந்த தேச துரோகிகள் டயலாக்கை மறந்துட்டீங்க

================

17 எதை சாப்பிட வேண்டும் என்பதை, சாப்பிடுபவர் தான் முடிவு செய்ய வேண்டும்;-திருநாவுக்கரசர் # சில சமயம் ஃபேமிலி டாக்டர் கூட முடிவு பண்ணுவார்

==================

18 தனியார் பால் நிறுவனங்களிடம் இருந்து பணத்தை பெறுவதற்காகவே, அமைச்சர் குற்றச்சாட்டை தெரிவிக்கிறார்-EVKS #  பணம் பெற முடியலைங்கற கோபமாவும் இருக்கலாம்
================

19  பசுவை பாதுகாப்பதற்காக,  அரசு கொண்டு வந்துள்ள சட்டத்தை, மதத்துடன் தொடர்புபடுத்தி கொச்சைப்படுத்த வேண் டாம்-பொன்.ராதா # முதல்ல மனுசனைக்காப்பாத்துங்க

================

20  ரேடியோ உரையில்  மோடி உருக்கம்!: நான் உங்கள் வீட்டு பிள்ளை  # பேச்செல்லாம் செண்ட்டிமெண்ட்டாதான் இருக்கு, செயல் பூரா வில்லத்தனமால்ல இருக்கு?


=====================
 

0 comments: