Thursday, May 11, 2017

"காலி"பண்ணுனதே காவி தானே

6 வீடுகளை கடைசி மகனுக்கு தந்தை எழுதி வைத்ததால் ஆத்திரத்தில் 3 அண்ணன்கள் வெறிச்செயல். # உடன் பிறப்பு களுக்குள்ளே எதுக்கு தகறாரு?


================2 சென்னையில் திடீரென மு.க.ஸ்டாலின்- நக்மா சந்திப்பு # நேத்து ஒரு தளபதி (ரஜினி),இன்று ஒரு தளபதி (ஸ்டாலின்) நாளை யாரோ?================3 சினிமாவை வைத்து தான் அரசியலுக்கு வர வேண்டும் என்ற அவசியம் எனக்கு இல்லை: உதயநிதி பார்முலா தேவை இல்லை.கலைஞர் பார்முலா போதும்?=================4 தமிழகத்தில் தாமரை மலர்ந்தால் பயிர் கடன்கள் ரத்து- தமிழிசை# சேத்தியாதோப்பு , முக்கொம்பு அணை ,கடலூர் இங்கே எல்லாம் குளத்தில் தாம்ரை மலர்ந்திருக்கு. அப்போ ரத்து ?=====================5 தேர்தல் கூட்டணியில், யார், யாரை சேர்த்துக் கொள்வது என்பதை,, நான்  முடிவு எடுக்க முடியாது.-திருமா #யார்  கூப்ட்டாலும் போவேன்கறதை கமல் பாணில சொல்றார்
===================
பா.ஜ., அரசின், மூன்றாண்டு சாதனைகளை, மலராக வெளியிட தமிழக அரசு  முடிவு செய்துள்ளது. #மற்ற மாநிலங்களுக்கு முன்னுதாரண ஜிங் ஜக் மாநிலம்
=======================மதுக்கடைகளுக்கு எதிராக, பெண்கள் இந்தளவுக்கு போராட்டங்களில் ஈடுபடுவது, பா.ம.க.,விற்கு கிடைத்த வெற்றி-மணி # கடைசி வரை நமக்கு இந்த வெற்றி மட்டும் தான் மிஞ்சும் போல
=====================
8  உடன் பிறப்புகள், வெட்டி வா என்றால், கட்டி வரும் ஆற்றல் மிக்கவர்கள் -ஸ்டாலின் # உறவே வேண்டாம்,  வெட்டி விட்ருன்னா கல்யாணம் கட்டிட்டு வருவாங்களோ?
=====================
குட்டைகள், குளங்கள்,, ஆறுகள் ஆகியவற்றை துார்வாரி பாதுகாக்கும் பணியில், தி.மு.க., நிர்வாகிகள், தொண்டர்கள் ஈடுபட வேண்டும். -ஸ்டாலின் # சன் டிவி சொத்துக்களை பாதுகாக்கும் பணீயை அவர் பார்த்துப்பார்
====================10 கெஜ்ரிவாலிடம் ஆசி வாங்கி அவருக்கு எதிராக புகார் தந்த முன்னாள் அமைச்சர் கபில் மிஸ்ரா #  ஓபிஎஸ் க்கே டஃப் ஃபைட் தருவார் போலயே
===================
11  தமிழகத்தில் முதல்வர் வேட்பாளரை காங்கிரஸ் நிறுத்தும் - நக்மா # என்னை முதல் வேட்பாளர் ஆக்குங்கள், குஷ்பூ வைவிட எனக்கு வரவேற்பு அதிகம் என பொருள் கொள்க
=======================12 காங்., செயல் தலைவர் பதவி: பீட்டர், நக்மா, குஷ்பு போட்டி # நக்மா போட்டில ஜெயிச்ட்டா குஷ்பூ பழைய ஜிகிடி கதவைத்திறடின்னு திமுக பக்கம் வந்துடுவாரு
===================13 தீபா மற்றும் என் பெயரில்தான் மொத்த ஜெ. சொத்தும் உள்ளது.. உயில் என்னிடமே உள்ளது.. தீபக் புது தகவல் #,உயில் விரைவில் காணாம போகப்போகுது======================
14 வறண்டு போன வைகை... தண்ணீர் தொட்டியில் இறங்கிய கள்ளழகர் தண்ணித்தொட்டி தேடி வந்த கன்னுக்குட்டி நான்=====================15 தமிழகத்தில் காவி கொடி பறக்கும் -தமிழிசை # கொடி பறக்குது-ன்னு சொன்ன ரஜினிக்கே அது வெற்றியைத்தரலை,கொடி பறக்கும்னு சொன்ன பாஜக வுக்கு மட்டும் வெற்றி கிடைக்குமா என்ன?
===================
16 வழக்குகளில் சிக்கும் சிறார்களை போலீஸார் கைது செய்ய முடியாது: உயர் நீதிமன்றம் உத்தரவு # நிர்பயா, வழக்கை நினைவில் கொண்டு சிறார்க்கும் வேண்டும் கறார்
===========================17 பத்திரிகை சுதந்திரத்தில் இந்தியாவுக்கு 136-வது இடம் ,சலூன்,டீக்கடை ன்னு ஓசி ல பேப்பர் படிப்பதில் தமிழகம் என்றும் முதலிடம்===================


18 இந்திய தேர்தல் ஆணைய ஆவணங்களில், அதிமுக பொதுச்செயலாளர் பதவி தற்போதும் காலியாக உள்ளது
# "காலி"பண்ணுனதே காவி தானே ?னு ஜனங்க பேசிக்கறாங்க

=================

19 நீதிபதி கர்ணனை கைதுசெய்யும் முயற்சியில் மேற்கு வங்கம், தமிழகம் மற்றும் ஆந்திர மாநில போலீசார் தீவிரம்.
.தீவிரவாதி ரேஞ்ச்

==================

20 கலைஞரின் வைரவிழாவில் நானும் பங்கேற்பேன்:அழகிரி
# மக்கள்நலனுக்காக குரல் கொடுப்பார்னு பார்த்தா தன்னலத்துக்காக உரிமைக்குரல் எழுப்பறார்

================

0 comments: