Tuesday, May 09, 2017

ராமதாஸ் , சீமான், விஜயகாந்த் இவங்க வரிசைல இவரும் சேர்ந்துட்டாரு

ராமன் ஆண்டா என்ன? ராவணன் ஆண்டா என்னன்னு இருக்க முடியாது : கருணாஸ் # மண்டோதரிகள்,சூர்ப்பனகைகள் ஆண்டுட்டு இருக்கும் மாநிலம் இது===============2 பாஜக வலையில் இருந்து நிச்சயம் மீள்வோம்! - ஜெ. பாணியில் எடப்பாடி சொன்ன கதை! # தமிழ்நாட்ல இப்போ உங்க க"வலை" யே இதானா?
================3 கமல்ஹாசனுக்கும் பாஜகவுக்கும் ஒரே சிந்தனை;

- பொன்.ராதா.# ஆமா.2 பேரும் மக்களுக்கு புரியாத பாஷைல பேசுவாங்க


==============

4 ஜனநாயக முறைப்படி ஆட்சிக்கு வர வேண்டும் என்பது தான் கருணாநிதியின் விருப்பம்-ஸ்டாலின் # 4 வருசம் டைம் இருக்கில்ல.அமைதியா இருங்க


=============

5 பணம் பெற்று ஓட்டளிக்க,  மக்கள் தயாராக இருக்கும் வரை, மாற்று அணிகள் தோற்றுத் தான் போகும்.- வை கோ # பெரிய பெரிய தலைவர்களே பணம் பெறும்போது சாதா ஜனம் வாங்குனா தப்பா?


=====================


தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்

விவசாயிகள் கடன் தள்ளுபடி
செய்யப்படும் - தமிழிசை # ராமதாஸ் , சீமான், விஜயகாந்த் இவங்க வரிசைல இவரும் சேர்ந்துட்டாரு
================


7 அன்புமணிக்கு எதிராக மாஜி MLA ரவிராஜ் போர்க்கொடி !
பாமகவில் இருந்து விலகினார் ரவிராஜ்! # ரவி ன்னா சூரியன்.அதான் ஒத்துப்போகலை


=================


8 நாட்டிலேயே தொழில் செய்ய உகந்த மாநிலமாக தமிழகம் திகழ்கிறது: அமைச்சர் டி.ஜெயக்குமார் # ஆனா சிலது மட்டும் ஆந்திராக்கு டைவர்ட் ஆகிடுது=================

9 பிஹார், குஜராத் மாநிலங்களைப் போல பூரணமதுவிலக்கு தமிழகத்தில் எப்போது? - அரசுக்கு நீதிபதி கேள்வி#,அதைஏன் என்னைப்பாத்து அப்டி கேட்டே மொமெண்ட்


==================

10 மின்தடை குறித்து புகார் அளிக்க செல்போன் எண்கள் வெளியீடு: மின்சார வாரியம் அறிவிப்பு -# கரண்ட் இல்லாம சார்ஜ் ஏத்த முடியாம பேட்டரி வீக் காம்


==================


11 3 வருடம் கழித்துதான் மணல் அள்ளுவதை முற்றிலும் தடுக்க முடியுமா?- முதல்வருக்கு விஜயகாந்த் கண்டனம் # ஆமா.3வருசத்துல மணல் ஸ்டாக்கே இருக்காது


==================

12 அக்னி வெயிலை சமாளிக்க போக்குவரத்து போலீஸாருக்கு தெர்மாகோல் தொப்பி: # செங்கோல் ஆட்சி நடத்துங்கன்னா தெர்மாக்கோல் ஆட்சி நடத்திட்டு இருக்காக


==================

13 ரஜினி -காங் கட்சி நக்மா சந்திப்பு # இதை பேலன்ஸ் பண்ண இன்னும் 24 மணி.நேரத்துல ரஜினி கவுதமி /தமிழிசை யை சந்திப்பார் பாருங்க


===================

14 அமைச்சர் காமராஜ் மீது மோசடி வழக்குப் பதிவு: செய்தி # பொதுச்செயலாளர் எவ்வழி (ஜெயில்)தொண்டன் அவ்வழி


==================


15 மணல் கொள்ளை அடித்து தமிழகத்தையே பாலைவனமாக மாற்றிவிட்டனர்: விஜயகாந்த் # தலைவர்னா தொண்டன் கன்னத்துலயோ ,ஏழை.வயித்துலயோ அடிக்கறாக


===================

16 முழுக்கை சட்டைக்கு நீட் தேர்வுல அனுமதி கிடையாது #,அப்போ நீட் தேர்வுக்கு சட்டை நீட்டா இருக்கக்கூடாது.

==================

17 தமிழகத்தில் பாஜக ஆட்சிக்கு வந்தால்
விவசாயிகள் கடன் தள்ளுபடி
- தமிழிசை # ராமதாஸ் , சீமான், விஜயகாந்த் இவங்க வரிசைல இவரும் சேர்ந்துட்டாரு

=================

18  சசிகலா. கணவர் நடராஜனை, தமிழக காங்., தலைவர் திருநாவுக்கரசர் சந்தித்தது, மிகப்பெரிய தவறு.-EVKS #  கை மேல் பலன் கிடைக்கும்னு சொல்றீங்களா?


======================

19  

கெஜ்ரிவால் லஞ்சம் வாங்கினார்: முன்னாள் அமைச்சர் 'பகீர்' # பதவில /கட்சில இருக்கும்போதே ஏன் சொல்லலை?


==================

20 

84 லட்சம் பேருக்கு வேலை இல்லை- ஸ்டாலின்  # நம்ம ஆட்சில 65 லட்சம் பேருக்கு வேலை இல்லை, அதுக்குப்பின் படிச்சவங்க அவ்ளோ பேர்

====================

0 comments: