Friday, May 05, 2017

"நாட்டாமை"களுக்கு "சோதனை"காலம்

கிழக்கு நோக்கி தியானம் செய்ய ஜோதிடர்கள் ஆலோசனை... ஸ்டாலின் மெரீனா விசிட் ரகசியம் # பகுத்தறிவுக்கொள்கைல ஜாதகம் பாதகம் ஆச்சே?

=============

2 பாமகவினர் விடிய விடிய கொலை மிரட்டல்.SMS.கள்... ராமதாஸ் மீது தீபா காட்டம் # பகல்ல தூங்கிட்டிருப்பீங்கனு தெரிஞ்சு வெச்சிருக்காங்க


======================

3 தனியா நின்னு டெபாசிட் கூட வாங்காத கட்சி பாமக.. என்னை மிரட்டுவதா… தீபா ஆவேசம் # நாம இன்னும் ஒரு தேர்தல்ல கூட நிக்கக்கூட இல்லையே

===============

4 தமிழகத்தில் பாஜக ஆட்சி அமைக்க வேண்டுமென மக்கள் விரும்புகிறார்கள் - பொன்.ராதா # மக்களுக்கு 1008 பிரச்சனை இருக்கு 1009 வதா இவரு வேற

=================

5 BJP MP என்னை பாலியல் பலாத்காரம் செய்தார், தற்காப்புக்காக வீடியோ எடுத்தேன்- பெண்# ஏம்மா.புடிச்சு தள்ளி.விடாம வீடியோ?

=============

6 பிரச்சனைகளுக்கு RSS கொள்கைகளால் மட்டுமே தீர்வு - நிதின் கட்காரி
# பிரச்சனையே அவங்களாலதான்.
RSS க்கு நோ நோ சொல்வோம்


==================

7 தமிழகத்தில் பாஜகவை வளர்த்துவிட்டது நாங்கள் செய்த பாவம் - கலைராஜன் (அதிமுக அம்மா) # மொத்தத்துல நாம செஞ்சது செய்யறது எல்லாம் பாவம்தான்

===============

8 ஆட்சியை கலைப்பதே திமுகவின் நோக்கம்: எடப்பாடி பழனிசாமி தானே கலைக்க முடியும்?ஸ்டாலின் கவர்னரா?

================

9 அதிமுகவில் யார் வேண்டுமானாலும் முதல்வராக, அமைச்சராக வரலாம்:பழனிசாமி # அப்போ வாரா வாரம் ஒரு MLA க்கு வாய்ப்பு கொடுங்க

================

10 ADMK -2அணிகளும் பிரிவதற்கு BJPகாரணம் அல்ல: பொன்.ராதா # மாப்ளை மோடி தாங்க.அவர் கோட்சூட் அவருது இல்லங்க

================

11 அதிகாரிகளுக்கு லஞ்சம்தரமணல் குவாரி மூலம் 50 கோடி வசூல் செய்த தினகரன் # சொந்தக்காசில் சூன்யம் வெச்சுக்கிட்டாருனு சொல்ல.வழி இல்ல


=================

12 மத்திய அரசை விமர்சிக்க கூடாது.. அமைச்சர்களுக்கு முதல்வர் EPS திடீர் உத்தரவு. பாகு"பலி"போல் பதவி இறக்கம்?

===============

13 சிதறு தேங்காயானது அதிமுக.. 'தோப்பு' வெங்கடாசலம் தலைமையில் உதயமானது புது அணி.# தனி மரம் தோப்பு ஆகாதுனு சொல்ல முடியாது இனி

============

14 பாகுபலி யில் சமுதாய கருத்து
இல்லை- பா.ரஞ்சித் # அனுஷ்கா கீழே.விழும்போது ஹீரோ இடையைப்பிடிச்சு நிறுத்துனாரே.அது?

=============

15 தமிழக அரசுக்கு ரூ.1 கோடி அபராதம்: நீதிமன்றம் உத்தரவு #,மக்கள் வரிப்பணத்துல இருந்து கட்டுவாங்க ,CM,MLA சம்பளத்துல இருந்தா தரப்போறாக?


==================

16 அரசாங்கம் இயங்கவில்லை என்ற ஆதங்கம் தமிழக மக்களிடையே இருக்கிறது- ஸ்ரீநிவாசன் (BJP) # பிள்ளையை கிள்ளி விட்டு தொட்டிலை ஆட்டுவது இதான்


=================

17 திருச்சி, கரூர் மாவட்டங்களில் இயந்திரம் மூலம் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை # மீதி மாவட்டங்கள்ல அள்ளிக்கலாமா?

===================

18 உச்சநீதிமன்ற நீதிபதிகளுக்கு ஜாமீனில் வெளிவர முடியாத பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி கர்ணன் உத்தரவு # "நாட்டாமை"களுக்கு "சோதனை"காலம்


===================

17 சேலம் தொழிலதிபர் வீட்டில் 720 சவரன் நகை கொள்ளை சம்பவத்தில் ஒருவர் கைது; 700 சவரன் நகை பறிமுதல்: போலீஸ் தகவல்#மீதி 20 போலீஸ் சர்வீஸ் சார்ஜ்?


===================

18 மாணவர்கள் ஆசிரியர்களுக்கு அட்டெண்டென்ஸ் எடுப்பார்கள்: யோகி அதிரடி # அட்டென்சன் சீக்கிங் மாதிரி அட்டெண்டென்ஸ் சீக்கிங்


=================

19 திருச்சி, கரூர் மாவட்டங்களில் இயந்திரம் மூலம் மணல் அள்ள உயர்நீதிமன்றம் தடை # இயந்திரம்மூலம் தானே கூடாதுன்ட்டு கையாலயே அள்ளி போட்டுட்டா?


===================


20 தமிழக அமைச்சர் யாரும் மோடி அரசை விமர்சிக்கக்கூடாது:முதல்வர் எடப்பாடி # எல்லாரும் வீட்ல "தாமரை" வளர்க்கனும்னு சொல்லலயா ?


================

0 comments: