Thursday, May 18, 2017

குருவே!அடிமைகளுக்கு ரோஷம் எப்போ வரும்?

ஒரிஜினல் Ids ஓவரா பொய் பேசறாங்க,

fake Ids அதிகமா உண்மை பேசறாங்க.
பொதுவா பொண்ணுங்க போக்கிரிகளையும் பேக் ஐடி களையும்தான் நம்பி ஏமாறுவாங்க


==============

2 தலைவரே! நீங்க 130 பாலங்கள் கட்டுனீங்களாமே?நிஜமா?சட்டப்படி.2,செட்டப்படி 2,மொத்தம் 4,கட்னேன்.அது வேணா நினைவிருக்கு


===============

3 தலைவர் எப்டியும் 130 கோடி சம்பாதிச்சிருப்பார்னு எப்டி சொல்றே?1,பாலத்துக்கு1 கோடி மினிமம் அடிச்சிருந்தாக்கூட.130 க்கு 130 கோடி ஆச்சே?


====================

4 தலைவரே! இயேசு உயிர்த்தெழுந்ததை மட்டும் உங்க பகுத்தறிவு எப்டி ஏத்துக்கிச்சு?சிறுபான்மையினர் ஓட்டு கிடைக்குதில்ல?நமக்கு எது முக்கியம்?


===============

5 தலைவரே!மக்கள் நலத்திட்டங்கள் பல நீங்க செஞ்சிருக்கறதா பேசிக்கறாங்களே?பாவம்.நான் நலத்திட்டத்துக்கு 40% ஒதுக்குனா எனக்கு 60%


================

6 தலைவரே! குலக்கல்வித்திட்டம்னா என்ன?
நம்ம வீட்டுக்குழந்தைங்க இங்க்லீஷ் ,ஹிந்தி படிக்கனும்.ஊரான் குழந்தை எல்லாம் தற்குறியா இருக்கனும்

=============

7 தலைவரே!,நீங்க காவி க்கு ஆதரவுனு சில புத்திசாலிங்க சொல்றாங்களே?தப்பு.அப்டியே இருந்தாலும் பாவிக்குத்தான் ஆதரவு கூடாது


=============

8 தலைவரே! காமராஜரை.விட நீங்கதான் திறமைசாலினு கட்சிக்காரங்க எதை வெச்சு சொல்றாங்க?10 தலைமுறைக்கு நான் சேர்த்து வெச்ச சொத்தை வெச்சு


==============

9 மாப்ளைக்கு வருமானம் எவ்ளோவ் வரும்?

 ஹெலிகாப்டர் வாங்கற அளவு இல்லைன்னாலும் மானம் கப்பல் ஏறாத அளவு வரும்


======================

10 ஜட்ஜ் - டைவர்ஸ் ஆன பின்பு மீண்டும் சேர்ந்து வாழ விருப்பமா? சரி வருமா?
யுவர் ஆனர், எலியும் பூனையுமா அடிச்சுக்கிட்ட அரசியல் கோஷ்டிங்களே ஒண்ணு சேருது

=====================

11 தலைவரே! நமக்கு ஜாதகமே சரி இல்லைன்னு ஏன் புலம்பறீங்க?

 குழம்பிய குட்டையில் மீன் பிடிக்கலாம்னு பார்த்தேன், 2 குட்டையும் 1 சேரப்போகுதாமே?

======================

12 வெளியூர்ல வேலை செய்றவனுக்கு பொண்ணு தர மாட்டோம்

மாமா,வீட்டோட மாப்ளை தான் வேணும்னு அடம் பிடிச்சா எப்டி?


=====================

13  பேங்க் பேலன்ஸ் அதிகமாகிட்டே வருது, பரவால்லை 

 மிஸ்! உங்க அக்கவுண்ட்லயா? பேங்க்கோட டோட்டல் பேலன்ஸா?===================


14 இன்னைக்கு ஆஃபீஸ்ல பேப்பர் போடலாம்னு இருக்கேன்

ஏன் பேப்பர் மட்டும் போடனும்? கூடவே வீக்லி , மந்த்லி மேகஜினும் போட்டா வருமானம் கூடுமில்ல?


====================

15 


 தலைவரே! நீங்க எதுக்கு இப்போ ஆலோசனைக்கூட்டம் நடத்துனீங்க?

எதிரியோட இரு அணிகளும் இணைஞ்சுட்டா  நம்ம கதி அதோகதி ஆகிடுமா?னு டவுட்


====================

16  சாட்சிக்காரன் கால்ல விழறதை விட சண்டைக்காரன் கால்லயே விழலாம்னு முடிவு பண்ணிட்டோம்

 மொத்தத்துல நாம யார் கால்லயாவது விழுந்துட்டே இருப்போம்?


=====================

17 குருவே!அடிமைகளுக்கு ரோஷம் எப்போ வரும்?


சிஷ்யா! எஜமானர் ஜெயிலுக்குப்போய்ட்டா /ஒரேயடியா மேல போய்ட்டா வரும்

==================

18 டியர்.என்னை ஏன் அடிக்கடி வம்புக்கு இழுக்கறீங்க?அதுல அப்டி என்ன சந்தோஷம்?முறைப்பொண்ணுன்னா ஜடை,மச்சினின்னா இடை பிடிச்சு இழுப்போம்


=====================


19 மேடம்.வீட்டை விட்டு அனுப்பிய புருசனுக்கு ஏன் போன் பண்றீங்க?


அரசனை நம்பி புருஷனை கைவிட்ட கதையாகிடக்கூடாதில்ல


==================

20 ஜெயிலர் சார்.பரோல்ல விடனும்


எதுக்கு?
சமாதி க்குப்போய் ஒரு சாபம் விடனும்==================

0 comments: