Saturday, May 27, 2017

சிங்கிள் டிஜிட்காரரே MBBS படிக்க ஆசைப்படறப்போ

1 ஆவியைக் கண்டு பயப்படுவது போல், தமிழகத்தில் காவியைக் கண்டு பயம் -் தமிழிசை # தமிழ் சினிமால ஆவி ன்னா காமெடி ,அரசியல்ல காவின்னா ட்ராஜடி


===============

2 ரஜினி அரசியலுக்கு வரக்கூடாது -"கை கொடுக்கும் கை" யை கையே எதிர்ப்பது ஏனோ?

=======

3 குற்றவியல் நடைமுறை சட்டத்தில் குரல் மாதிரி சோதனைக்கு இடமில்லை - தினகரன்# பேசறதெல்லாம் லாயர் மாதிரி,பண்றதெல்லாம் க்ரிமினல் மாதிரி


=============

4  ரஜினி அரசியலுக்கு வருவதால் தேமுதிகவிற்கு பாதிப்பு் இல்லை!- பிரேமலதா# அது பாட்டுக்கு தேமே ன்னு ஒரு ஓரமா இருக்கு பாவம்.எப்டி

பாதிப்பு

=================

5 ரஜினி் பேச்சின் உள் நோக்கம் புரியவில்லை - பொன்.ராதா#,கமல்,ரஜினி பேச்செல்லாம் புரிய எங்களுக்கே 20 வருசம் ஆகும்

============

6 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்டால் உடனடியாக பேச்சுவார்த்தை நடத்த தயார்-OPS#எந்தப்பேச்சுவார்த்தையும் கூடாது என்பதுதான் முதல் நிபந்தனையாம்

=============

7 ஒரு ஓட்டுக்கு 3 முதல்வர்களை எங்கயாச்சும் பாத்திருக்கீங்களா? - விஜயகாந்த் கிண்டல் # இன்னும் 4 வருசத்துல எத்தனையோ?


============


8 மாலுமியற்ற கப்பல் போல தமிழக காவல்துறை தரைதட்டி நிற்கிறது-ஸ்டாலின் குற்றச்சாட்டு. முக்கியம்?மாமூல் வாழ்க்கை தானே முக்கியம்?

==============

9 வரும் கல்வி ஆண்டு முதல் அரசு பள்ளிகளில் சீருடை மாற்றம் அமைச்சர் செங்கோட்டையன் அறிவிப்பு# காவி ,வெள்ளை .பச்சை?பிஜெபி யூனிபார்மா?

==============


10  இன்று காலை 11.30 மணிக்கு மோடியை சந்திக்கிறார் முதல்வர் பழனிசாமி # நல்ல வேளை.4மணி நேரம் முன்பு சந்திக்கலை


==============


11 தமிழகத்தில் பாஜக ஆட்சி தான் நடக்கிறது; ஆட்சி அடமானம் வைக்கப்பட்டுள்ளது:சீமான் # ரெய்டு வந்தா நீங்க காப்பாத்துவீங்களா?


================

12 போலீஸ் போல் நடித்து சங்கிலி பறிக்கும் மஹாராஷ்டிர மாநில கொள்ளையர்கள் =காக்கி யூனிபார்ம் பாத்தாலே ஜாக்கிரதையா இருக்கனும்

=============


13 ஸ்டாலினும் ஓ.பி.எஸ்.சும் ஒரே குரலில் பேசுகின்றனர்.-. நாஞ்சில் சம்பத்# சரி.நீங்க ஏன் வை கோ குரல்ல பேசறீங்க?


================

14 ரஜினிக்கு தமிழக அரசியலை நிர்ணயிக்கும் சக்தி இல்லை - ஆவடி குமார் # அப்பறம்.ஏன் பல தலைவர்கள்.ரஜினி வர்றதை எதிர்க்கறாங்க? பயப்படறியா குமாரு?


================

15 பாஜக விரிப்பது பாசவலை அல்ல... சதி வலை.. உஷார்.. ரஜினிக்கு திருமாவளவன் எச்சரிக்கை #,அதாவது போன தேர்தல்ல நீங்க விஜய்காந்த்க்கு செஞ்சது

====


16  அ.தி.மு.க. என்பது ஒரு கம்பெனி. அங்கு, முதல்வர் என்ற மேனேஜர் பதவிக்கு யார் வேண்டுமானாலும் வரலாம்.-துரைமுருகன் # திமுக என்பது பிரைவேட் கம்பெனி,அதில் கலைஞர் குடும்பத்தார் மட்டும் சிஎம் ஆக முடியும்?

===================


17   அரசியல் சிஸ்டம் சரியில்லை எனக்கூறும் ரஜினி, சினிமா துறையின் சிஸ்டத்தை சரி செய்யாதது ஏன்?-ஜெ தீபா # இதை சரி செஞ்சா அது ஆட்டோமெட்டிக்கா சரி ஆகிடுமாம்


=============== 


18 ஜனநாயக நாட்டில் யார் வேண்டுமானாலும் கட்சி தொடங்கலாம்-வைகோ கட்சி தொடங்கினாலும் ( ஆதரவு தந்து)அதை முடிச்சு வைப்பது அண்ணன் தான்

=============


19 ஸ்டாலின்,எப்படியாவது ஆட்சியைப்பிடிக்க காய் நகர்த்துகிறார்- ops # சிங்கிள் டிஜிட்காரரே MBBS படிக்க ஆசைப்படறப்போ 98/234 மார்க் வாங்கினவர்

=================

20 நடிகர்களுக்கு முக்கியத்துவம் தரக்கூடாது.-(ரஜினியைப்பற்றி) அமைச்சர் ராஜு # அதனாலதான் உங்க கட்சில எம்ஜிஆரை இருட்டடிப்பு பண்ணீட்டிங்களா?

============

0 comments: