Monday, May 01, 2017

மிஸ்!உங்க ஒவ்வொரு ட்வீட்லயும் குடைக்கீச்சு (DM)வராதீங்கனு எதுக்கு வார்னிங் பண்றீங்க?

எந்தப்பொண்ணையும் டி போட்டு கூப்பிட மாட்டேன்.


அப்டியா?உங்க சம்சாரம் பேரென்ன?
டியாரா


====================

2 டாக்டர்.வாழ்க்கைல நிறைய நேரம் தோச சாப்ட்டா நல்லாருக்கும்னு நினைச்சுட்டே இட்லிய சாப்டுட்டு இருக்கேன்.


ஓஹோ.நான் வக்கீல்


===================

3 ஜட்ஜ் = எம் எல் ஏ மீது ஏன் முட்டை வீசுனே?


அவரு ஆஃபாய்ல்னு சொன்னாங்க , மேட்சுக்கு மேட்ச்

===================


4 மிஸ் , ஃபோன் பண் றேன்னு சொல்லி ஒரு வாரம் ஆச்சு, இன்னும் பண்ணலையே?


என் ஃபாலோயர்ஸ் 4918 பேர்ட்டயும் சொல்லி இருக்கேன், வரிசைப்படி


================

5 சிஷ்யா! ஆண்டவன் படி அளப்பான், கவலைப்படாதே


குருவே! சும்மா அளக்காதீங்க


================

6 தமிழர்களை முட்டாளாக்க ஒரு கும்பல் இயங்குது.


தமிழர்களை முட்டாள் ஆக்க முடியாது தலைவரே!அப்டி இருந்தா உங்க கட்சி ஆட்சி பிடிச்சிருக்குமே?================

7 டாக்டர். பறவைகளை தொடர்ந்து பார்த்தால் மன அழுத்தம் குறையுமாமே?நிஜமா?


அதுக்காக "குருவி" படத்தை அடிக்கடி பாத்துட்டு இருக்கக்கூடாது


================

8 சார்.ஹீரோவா நடிச்சதுக்கும் ,இப்போ டைரக்ட் பண்றதுக்கும் என்ன வித்யாசம்?

ஹீரோவா நடிக்கும்போது ஹீரோயினை மட்டும் கரெக்ட் பண்ணினேன்

=================

9 விஜய் ஆண்ட்டனி =என் புதுப்படம் டைட்டில் எமன்

இதுதாண்டா போலீஸ் புகழ் டாக்டர் ராஜசேகர் =எமனா இருந்தா எனக்கென்ன?

================

10 அறுக்கத் தெரியாதவனுக்கு எதுக்குடா அம்பத்தெட்டு அருவாளு?

ஏன்?அவன் அரிவாள் சேல்ஸ்மேனா இருக்கக்கூடாதா?

==================

11 தலைவரே! கட்சி மகளிர் அணித்தலைவி மதுபாலா வை ஏன் ஒதுக்கிட்டீங்க?

பூரண மது விலக்கை அமுல்படுத்த முடியல.அட்லீஸ்ட் மதுபாலாவையாவது


==================

12 சார்.புதுப்படத்துல 3 வேடமாமே?எதுக்கு?

ஒரு வேடத்துல வந்தாலே 100 கோடி.அப்போ 3 ன்னா 300 கோடி வசூல் ஆகுமில்ல?


===============

13 த்ரிஷா வை.விட நயன் தாரா வுக்கு தான் 3 மடங்கு ரசிகர்கள்னு எப்டி சொல்றே?

3ஷா ,9தாரா ,3*3=9,இந்த கால்குலேசனை வெச்சுத்தான்

==================

14 தலைவரே!மீத்தேன் திட்டத்துல தெரியாம சைன் போட்டுட்டீங்களாமே?

ஆமா.சாரி.
சரி.இந்த வெத்து பான்ட் பேப்பர்ல சைன்

===================

15 மார்ச் 1 ல இருந்து டாப்சி க்கு தடை விதிச்ட்டாங்களாமே?

அது பெப்ஸி


=================

16 மிஸ்!உங்க ஒவ்வொரு ட்வீட்லயும் குடைக்கீச்சு (DM)வராதீங்கனு எதுக்கு வார்னிங் பண்றீங்க?

அப்டி சொன்னாலாவது யாராவது எட்டிப்பார்ப்பாங்கனுதான்

==================

17 பிரபல திமிராக நடந்திருக்கிற சிலரை... Block பண்ணப்போறேன்

மிஸ்!உங்களை நீங்களே எப்டி பிளாக் பண்ண முடியும்?

===================

18 கொஞ்சம் கூட மேனர்சே இல்லாம டி எல் லில் என் அழகை வர்ணிக்கறீங்களே?

மிஸ்! டிஎம் வராதே!எதுவா இருந்தாலும் டிஎல் லில் சொல்லுனு நீங்கதானே சொன்னீக

==================

19 மிஸ்! உங்க DPல கண் மட்டும்தாம் தெரியுது.மூக்கைக்காணோமே?

முழு முகத்தை காட்னா பொறுக்கிப்பசங்க நோஸ்கட் பண்றாங்க.அதான் நோஸ் கட் போட்டோ

==============

20 குருவி 1-உனக்கு கூடு விட்டு கூடு பாயும் வித்தை தெரியுமா?
குருவி 2 = யா.எதிர் கூட்டு ஆன்ட்டி இல்லாதப்ப அந்த கூட்டுக்கு போவேன்

===============

0 comments: