Saturday, May 13, 2017

நயன் தாரா தான் சீதையா?

நான் அரசியலுக்கு வருவதில் என்ன தவறு? - உதயநிதி
# கருணா"நிதி",தயா"நிதி",கலா"நிதி",வரிசையில் உதய"நிதி" நிதி இருப்பவர் வரலாம் தப்பே இல்லை

==================

2 பாலியல் குற்றங்களைத் தடுக்க முடியாது! - பா.ஜ.க அமைச்சரின் சர்ச்சை கருத்து
எது நடந்தாலும் வேடிக்கை பார்ப்போர் சங்கம்

==============

3 சசிகலா குடும்பம் இல்லை என்றால், இன்று, அ.தி.மு.க., என்ற கட்சியோ, ஆட்சியோ இல்லை-நாஞ்சில் சம்பத்:  # நல்ல வேளை , எம்ஜிஆர் ஆட்சி அமைக்கக்காரணமே சசிகலா தான்னு சொல்லலை


==================

 தமிழகத்தில், காங்., வலுப்பெற . கூட்டுத் தலைமை தேவை.- தங்கபாலு: # நக்மா வும் குஷ்பூ வும் ஒண்ணு சேரனும்கறாரா?


====================

அ.தி.மு.க., ஆட்சியை பினாமி ஆட்சி எனக்கூற, தி.மு.க.,வுக்கு அருகதை இல்லை.-பொன்.ராதா # அங்கே அடிச்சா இங்கே வலிக்குது, அப்போ வதந்தி கன்ஃபர்ம் தான்


=========================


6  விவசாயிகளில் பெரும் பணக்காரராக இருப்பவர்கள், மிக மிக அரிது.-அருண் ஜெட்லி # எங்க குடும்பம் கூட ஒரு வகையில் விவசாயக்குடும்பம்தான்னு கலைஞர் சொன்னாரே?


===================

விவசாய வருமானத்திற்கு வரி விதிக்கும் திட்டம் ஏதும், அரசின் பரிசீலனையில்  இல்லை- அருண் ஜெட்லி # விவசாயத்துல ஏதுங்க வருமானம்?அசலுக்கே கட்டாது


==================

குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் யாரும் நாட்டிற்காக உயிர் தியாகம் செய்துள்ளார்களா?- அகிலேஷ்# உயிருக்கு உயிரான இல்லற வாழ்க்கையை தியாகம் செஞ்சிருக்கார்னு சொல்வாங்களோ?


===================


ATM-ஐ பயன்படுத்தும் ஒவ்வொரு முறைக்கும் 25 ரூபாய் கட்டணம். SBI வங்கியின் புதிய அறிவிப்பு # பாஸ் புக் ல என்ட்ரி போடறதுக்கு ஏதும் சார்ஜ் போடல?

=================

10 மக்கள் எதிர்ப்புத் தெரிவிக்கும் இடங்களில் டாஸ்மாக் கடைகள் திறக்க மாட்டோம்" -தமிழக அரசு
# கீழே.விழலை மீசை ல மண் ஒட்டலை மொமெண்ட்


================

11 வசூலே பிரதானம் என செயல்படும் ஆட்சி: ஸ்டாலின் # திமுக ன்னா மகசூல் ,அதிமுக ன்னா வசூல் இதெல்லாம் ஜனங்களுக்கு பழகிடுச்சு தலைவரே

==================

12 பாஜக அரசின் சாதனை மலரை வெளியி டுகிறது தமிழகஅரசு # முக்கிய சாதனை ஆளுங்கட்சி அரசியல்வாதிகள் வீட்டில் ரெய்டு நடத்தி மாட்ட.வைத்தது


==================

13 27 முறை பறந்து ரூ. 275 கோடி செலவில் 43 நாடுகளுக்கு மோடி வெளிநாடு பயணம் எடுக்காம ஆன் ட்யூட்டில ஏன் இருக்கார்னு இப்ப புரியுது


==================

14 ஆற்றங்கரை அருகில் நிலையம் அமைத்து மணல் விற்பனை செய்யப்படும்: தமிழக அரசு. # மணல் கொள்ளையர்கள் வியாபாரத்தில் மண் அள்ளிப்போடும் முயற்சியா?

==================

15 பணியிடமாற்றத்திற்கு ரூ.10லட்சம்லஞ்சம்பெற்றகுற்றச்சாட்டுக்குவிரைவில் அறிக்கை:அமைச்சர் சரோஜா.
# ஆமாவா?இல்லையா?சொல்ல அஞ்சு நிமிசம் போதுமே?

==================

16 அடுத்த பிரதமரை திமுக முடிவு செய்யும். -ஸ்டாலின்
# ஆனா இவரை முதல்வர் ஆக்கத்தான் அப்பாவோ ,பொதுஜனமோ முடிவு செய்ய மாட்டேன்றாங்க


===============

17 மும்மொழியில்... ரூ.500 கோடியில்... உருவாகிறது 'ராமாயணம்'# நயன் தாரா தான் சீதையாம்.சிம்பு,பிரபுதேவா,விக்னேஷ் க்கு எதுனா ரோல் உண்டா?

=================

18 OPS மண்பொம்மை..- நாஞ்சில் சம்பத் # அப்போ மண் பொம்மையை ஆத்துல கரைக்காம அவா ஆத்துக்கு பேச்சு வார்த்தைக்கு ஏன் போனாக?உங்க ஆளுங்க?

=================

19 சமஸ்கிருதம் தெரியாததால்சிரமப்படுகிறேன் - பொன்.ராதா. # ஏன்?சமஸ்கிருதம் படிச்சாதான் பதவில நீடிக்க முடியும்னு மேலிடம் சொல்ச்சா?

=================

20 அதிமுகவை வழிநடத்த குழு அமைக்கப்படும் - டி.ஜெயகுமார்
டெல்லி ல இருந்து ஒரு குழு வழி நடத்திட்டு தானே இருக்கு?


================

0 comments: