Monday, May 15, 2017

குடும்பப்பாங்கான ஊழல்னா என்ன?

 புதிய ஜனாதிபதி தேர்தலுக்குப் பின், தமிழகத்தில், 'பிரேக்கிங் நியூஸ்' வரும்- பிரேமலதா # ஷங்கரோட முதல்வன் ரீமேக்கில் விஜய்காந்த் நடிக்கப்போறாரா?


===================தமிழகத்தில், அமைச்சர்கள் பலர் மீது, குற்றச்சாட்டுகள் வந்த வண்ணம் உள்ளன. இது, நல்ல ஆட்சிக்கு உகந்ததல்ல-வாசன் # இது நல்ல  ஆட்சின்னு நாங்க சொன்னோமா?======================ஆட்சியின் நாட்கள் எண்ணப்படுகின்றன -மைத்ரேயன் # அப்டி ஓரமா உக்காந்து 1,2,3 --1826 வரை எண்ணவும்
==================
:'நேஷனல் ஹெரால்டு'  2,000 கோடி ரூபாய் முறைகேடு வழக்கில்,  சோனியா,  ராகுலை தொடர்ந்து, பிரியங்காவும்,  சிக்குகிறார் # குடும்பப்பாங்கான ஊழல்னா இதான் போல=====================
எம்ஜிஆர் நூற்றாண்டு விழாவை நடிகர் சங்கம் கண்டுகொள்ளாதது ஏன்?- தீபா வேதனை # தேர்தல் நேரத்தில்தான் எம்ஜிஆர், இப்போ எம் ஜி யாரு?==================

6  செய்தி: உள்ளாட்சித் தேர்தலுக்கு முன் அதிமுகவின் இரு அணிகளும் இணையுமா அல்லது அதன் பின்னர் இணையுமா என இப்போது சொல்ல முடியாது- செங்கோட்டையன்.
பஞ்ச்:
ஜெதீபாஅணி  ,மாதவன் அணி எல்லாம் என்ன பாவம்செஞ்சுது?அவங்களையும் இணைச்சிடுங்க.10 ஓட்டு கிடைக்குதில்ல?

===================


எங்கள் பக்கம் 122 எம்எல்ஏக்கள், 38 எம்பிக்கள், 95 சதவீத கட்சி நிர்வாகிகள் உள்ளனர்- திண்டுக்கல் சீனிவாசன்.
பாஜக வை விட்டுட்டீங்களே?


==================

அதிமுகவின் இரு அணிகளும் இணைவதற்கு 'இணைப்புப் பாலம்' அமைக்கப்பட்டுள்ளது- செங்கோட்டையன்.
பஞ்ச்: 
இணைப்புப்பாலம் கட்ட ரூ10 லட்சம் செலவு ன்னு கணக்கு எழுதிடுவாரோ?

==================

மொழியைச் சொல்லி திமுக, அதிமுக மக்களை முட்டாள் ஆக்குகின்றன- பொன்.ராதாகிருஷ்ணன்.
பஞ்ச்:
ரயில்வே டிக்கெட்ல ஹிந்தி மொழியைப்புகுத்திதமிழ் மொழியை அகற்றி நீங்க மக்களை முட்டாள் ஆக்கலை?

====================

10 இரட்டை இலையை மீட்டெடுத்து, தொடர்ந்து 25 ஆண்டு காலம் இந்த ஆட்சி நடைபெறும்- திண்டுக்கல் சீனிவாசன்.
பஞ்ச்: 
வெள்ளி விழாகொண்டாட நினைக்கறீங்க.சனி பெயர்ச்சி  என்ன பலன் தருதோ


==================

11 ரஜினி- நக்மா சந்திப்பில் அரசியல் இருப்பதாக எண்ணுவது சரியில்லை- திருநாவுக்கரசர்.
பஞ்ச்: பிரேக்கிங்  நியூஸ் க்கு உதவுச்சு.குஷ்பூ க்கு ஒரு செக்வெச்சிருக்கு நக்மா

==================

12 தமிழகத்தில் ஆட்சி முறையில் மாற்றம் செய்தாலே போதும்- பொன்.ராதாகிருஷ்ணன்.
பஞ்ச் 1: பெங்களூர் (சசி) சொல்படி ஆட்சி நடத்தாம டெல்லி (மோடி)சொல்படி ஆட்சி நடத்தனுமா?

======================

13 கிரானைட் குவாரிகளை அரசே நடத்த வேண்டும்- ஐஏஎஸ் அதிகாரி 'சகாயம்'.
பஞ்ச்:  ஆளுங்கட்சி எம் எல் ஏ க்களுக்கு சகாயம் பண்ணிக்குடுத்த மாதிரிஆகிடும் மிஸ்டர் சகாயம்

=====================

14 கேஜ்ரிவால் மீது, பதவி நீக்கம் செய்யப்பட்ட அமைச்சரே ஊழல் புகார் கூறியுள்ளார்- டெல்லி காங்கிரஸ் தலைவர் அஜய் மக்கான்.
பஞ்ச்: அவருக்கே மீண்டும் பதவி கொடுத்துப்பாருங்க.அர்விந்த் தெய்வம் பாரு.

======================

15 அதிமுகவுக்காக எந்த தியாகமும் செய்யாதவர் மைத்ரேயன்- அமைச்சர் ஜெயக்குமார்.
பஞ்ச்: யாகம் செஞ்சா போதுமே.தியாகம் எதுக்கு?


=====================

16 50 ஆண்டுகளாக இரு கழகங்களும் தமிழகத்தை அழித்துவிட்டன- பொன்னார்.
பஞ்ச்: எங்களுக்கும் ஒரு 'வாய்ப்பு கொடுங்கன்னு  பாமக ,தேமுதிக,சீமான்,பாஜக க்யூ.வில்'

====================

17 ந்தப் போரிலும் பொருளாதாரம் பெரும் பங்கு வகிக்கிறது- ராஜ்நாத் சிங்.
பஞ்ச்:
ஆமா.நாட்டில் போர் னா பொருளாதாரம் வீட்டில்னா தாரம்

=====================

18 முகம் காட்டாமலே அதிமுகவை வழிநடத்தியவர் சசிகலா- நாஞ்சில் சம்பத்.
பஞ்ச்: ஆமா.ஜெ அப்போல்லோவில் இருந்தபோது கடைசி வரை அவர் முகம் காட்டவே இல்லை

==================


19  மக்கள் பிரச்சினைக்காக திமுகவும், காங்கிரஸும் இணைந்து போராடுவது குறித்து ஸ்டாலினுடன் விவாதித்தேன்- நக்மா.
அப்டியா?மக்களோட பிரச்னைகள்10  சொல்லுங்க பார்ப்போம்

====================


20 அண்டார்டிகாவில் வெப்பம் அதிகரித்து, பனிக்கட்டி உருகி, கடல்மட்டம் உயர்ந்து வருகிறது- செல்லூர் ராஜூ.#உலக அளவுல 'தெர்மாகோலுக்கு' மார்க்கெட்டிங் ல இறங்கிட்டாரு போல

===================

0 comments: