Monday, May 08, 2017

சமூக நீதி காத்த.2 ஜி வீராங்கனை

திமுக ஆட்சிக்காலத்தில் உருவாக்கப்பட்ட சாலை வசதிகளை எடுத்துரைக்க ஏடுகள் போதாது: மா.சுப்பிரமணியன் # ரோடுகள் முழுசா ஊர் போய் சேராது?

===============

2 குடிநீா் தேவைக்காக கடல் நீரை குடிநீா் ஆக்கும் திட்டம் பற்றி பொன்.ராதா ஆலோசனை ‍# அதுவும் "இந்தி"யப்பெருங்கடல் குடி நீர் தானாம்

=============

3 நீட்’ தேர்வு சமூக நீதிக்கு எதிரானது கனிமொழி எம்.பி. # சமூக நீதி காத்த.2 ஜி வீராங்கனை சொன்னா சரியாதான் இருக்கும்

============

4 JJ TV-கருவிகள் இறக்குமதி மோசடி: சசிகலாவின் அக்காள் மகன் பாஸ்கரன் கோர்ட்டில் ஆஜர் கும்பலுக்கு தனி ஜெயில் ஓப்பன் பண்ணனும் போல


================

5 கணவர் குடித்தால் கட்டையால் அடிக்கலாம் !! - மத்திய பிரதேசத்தின் மாநில அமைச்சர் # சும்மாவே இந்த பொண்டாட்டிங்க உதைக்கும்.இதுல இவருவேற

================

6 டாஸ்மாக்கிற்கு எதிராக போராடுவோரை கைது செய்யக்கூடாது என பொதுவான உத்தரவு நாளை பிறப்பிக்க உள்ளதாக உயர்நீதிமன்றம் அறிவிப்பு # இப்பவெல்லாம் ஜட்ஜ் கூட டீசர் விடறாரு

================

7 உள்ளாட்சி தேர்தலில் OPS அணியினருடன் கூட்டணி தொடரும்-வாசன்.# நீயும் வெட்டி , நானும் வெட்டி , 2 பேரும் சேர்ந்தா வாழாவெட்டி

================


8 ஆதார் திட்டத்தில்
DNA சோதனை செய்ய திட்டம் வைத்துள்ளோம் -மத்திய அரசு அவங்கவங்க ஜாதக விபரத்தையும் வாங்கிடுங்க

======================

9 சங்கரராமன்
கொலைவழக்கில் அனைவரும் விடுதலையானால் கொலை செய்தவர் யார்-நீதிபதி # தானாகவே முன்வந்து தற்கொலை னு கேசை முடிச்சிடுங்க

===================

10 நாமக்கல்: பட்டா சிட்டா நகலை வழங்க ரூ500 லஞ்சம் வாங்கிய வழக்கில் VAO க்கு 2 ஆண்டு சிறை-#66 கோடி க்கு 4 வருசம்.500ரூ க்கு.2,வருசம்! குத்து மதிப்பு குமார சாமி கணக்கா இருக்கே?


==========================


11 விஞ்ஞான வளர்ச்சியில் இந்தியா முன்னேறி செல்கிறது - சிவதாணுபிள்ளை...
படு பாதாளத்தில் .அதை கவனிங்க முதல்ல

=================

12 மே 15 முதல் 90% அரசுப் பேருந்துகள் ஓடாது - செளந்தரராஜன்...
10% ஓடும் நிலையில் இல்லை.ரிப்பேர்?


======================

13 அமைச்சர்கள் பொறுப்புடன் பேச வேண்டும்! - ஜனாதிபதி கண்டிப்பு # கட்சி கட்டுப்பாட்டை மீறி பேசுனா அமைச்சர் பொறுப்பே பறிக்கப்படுதே


======================
14 கறுப்புப்பண ஊடுருவலில் இந்தியாவுக்கு முதலிடம்! :.எதுலயாவது உலக அளவில் நெ.1 இடம் பிடிச்சாச்சு.ஆப் கி பார்


=================

15 கால்நடைகள் வறட்சியால் இறக்கவில்லை -தமிழகஅரசு # வயதானதாலும்,நோய்வாய்ப்பட்டும் இறந்துடுச்சா?


=================


16 பணம் பட்டுவாடா செய்தது உறுதியானதால் RKநகர் தேர்தல் ரத்து: மு.க.ஸ்டாலின் # ஆனா நாம மட்டும் திருமங்கலம் இடைத்தேர்தல்ல தப்பிச்ட்டோம்


==================

17 பிரேக்கிங் நியூஸ்
தனிக்கட்சி துவங்குகிறார் முகஅழகிரி- செய்தி ஆட்டம் சூடு பிடிக்குது.சூரியன்னாலே சூடு தானே?

==================

18 நாஞ்சில் சம்பத்தை ஒரு தலைவராகவே நாங்கள் மதிக்க வில்லை - தமிழிசை # நாங்க எல்லாம் அவரை ஒரு மனுசனாவே மதிக்கலை


===================

19  அனைத்து மணல் குவாரிகளையும் அரசே ஏற்று நடத்தும் - முதலமைச்சர் பழனிசாமி # ஆமா, வேற யாரும் சம்பாதிக்க விட மாட்டோம்=================


20  ஹிந்தி படிக்க விருப்பம் இருக்கும் மாணவர்களை தமிழக தலைவர்கள் ஏன் தடுக்க நினைக்கிறார்கள்?- தமிழிசை# மொழி உணர்வை தூண்டி விட்டு ஓட்டு வாங்கத்தான்


-====================

0 comments: