Monday, May 01, 2017

இப்போ 2 பேரும் சினேக மாகிட்டீங்க போல

புதிய இந்தியாவை உருவாக்க மாநில அரசுகள் ஒத்துழைக்க வேண்டும்: பிரதமர் # புதிய "இந்தி"யாவின் முக்கிய திணிப்பு "இந்தி "யா?

==============

2 தமிழகத்தில் ஆட்சியை தக்கவைக்க பதவியை ஏலம் விடுகின்றனர்: ஸ்டாலின்.# பதவி வேணும்னா ஏலம் மட்டுமா விடுவாங்க?பட்டை,கிராம்பு எதுவா இருந்தாலும்


=================

3 வேலை இல்லாதவர்கள்

போராட்டம் நடத்துகிறார்கள்
-பொன்.ராதா
# அப்போ கேரளா இடுக்கி DT ல பிஜேபி 24/4/17 ஒரு நாள் பந்த் நடத்துச்சே?


===================

4 போலீஸ் வேனில் ஏற மறுப்பு! 5 கிலோ மீட்டர் நடந்தே வந்த மு.க.ஸ்டாலின்!

# நாளை வாக்கிங் போற வேலை மிச்சம்

=================

5 பதஞ்சலியின் ‘ஆம்லா ஜூஸுக்கு தடை! பாபா ராம்தேவுக்கு 'செக்'

# கில்லி மாதிரி சேல்ஸ் டார்கெட் காட்டிட்டு இப்டி நெல்லி ல மாட்டிக்கிட்டாரே?

===============

6 தெர்மாகோல் திட்டம் அனைவராலும் பாராட்டப்படுகிறது.

-செல்லூர் ராஜூ# தமிழ் இலக்கணத்துல வஞ்சப்புகழ்ச்சி அணி ன்னு.1 இருக்கு.

=================

7 தமிழகத்தில், பா.ஜ.,வை பலப்படுத்தும் வேலை நடந்து வருகிறது.-தமிழிசை  # அது நடந்துட்டுப்போகட்டும், ஆனா எதுக்கு அதிமுக வை “பதப்படுத்தும்” “பதம் பார்க்கும்” வேலை நடக்குது?

====================

2019ல் நடக்கும் லோக்சபா தேர்தல், மோடிக்கு சவால் நிறைந்ததாக இருக்கும்.-ஷீலா தீட்சித் # சவாலே சமாளி தான் அவர் பாலிசி, எதிர்த்து நிற்பவை எல்லாம் ஏமாளி


====================

மூன்றே குண்டுகளில் உலகை அழித்துவிடுவோம்: சவால்விடும் வடகொரியா # வட கொரியாவும் அந்த குண்டுல மேல் லோகம் போயிடுமில்ல?


====================

10 அதிமுக அலுவலகத்திலிருந்து சசிகலா பேனர்கள் அகற்றம் # சசிகலாவும், தினகரனும் ஜெயில்ல, இனி தடி எடுத்தவரெல்லாம் தண்டல்கார


=================

11 டெல்லியில் காங்கிரஸ் துணைத்தலைவர் ராகுல்காந்தியுடன் குஷ்பு சந்திப்பு # என்ன விஷயம்னு கேட்டா மரியாதை நிமித்தமான சந்திப்பு ம்பாக

=================

12 குற்றம் செய்தவர்கள் BJP ஆட்சியில் தப்ப முடியாது: தமிழிசை பொதுவா சொன்னா எல்லாரும் பயப்படுவாக.குத்தம் செய்து BJPயை எதிர்ப்போர்.. கள் தப்ப முடியாதுனு சொல்லங்க

==================

13 இன்று தினகரன்
ஏசுநாதரைப் போல் புனிதராகியுள்ளார் -நாஞ்சில் சம்பத் # ஏசுநாதர் எப்போ யாருக்கு லஞ்சம் கொடுத்தார்?எப்போ ஜெயிலுக்குப்போனார் ?

=================

14 TTV கூட எந்த தொடர்பும் இல்லை-C.V.சண்முகம்
கேனயனா இருந்தா ADMK MLA.யார் வீட்லயும் TV கூட கிடையாதும்பாங்களோ?

=====================

15 தமிழ்ப்பெண்களை இழிவாக பேசிய கேரள அமைச்சர் மணியை கண்டித்து போராட்டம் நடத்த மூணாறு செல்கிறேன் - தமிழிசை ல எல்லாரும் அபிசியலா டூர் போறாக

====================

16 தமிழகம்-மின்தடையை போக்க அரசு நடவடிக்கை எடுக்காதது கண்டிக்கத்தக்கது: அன்புமணி தடை நீக்கம் சம்பந்தமான வேலைக்கே டைம் சரியா இருக்காம்

====================

17 தனுஷை தப்பாக தான் நினைத்தேன் - பிரசன்ன ஓபன் டாக் 2 பேரும் சினேக மாகிட்டீங்க போல


===================

18 சோழர்களுக்கு பிறகு ஆற்றை தூர் வாரியது தி.மு.க தான் - துரைமுருகன் # அப்போ மணல் கொள்ளை.அடிச்சதை ஒத்துக்கறீங்க?


================

19 எல்லா அரசுக்கும் முன்மாதிரியாக தமிழக அரசு திகழ்கிறது
-செங்கோட்டையன் #,உதிரி உதிரியா ஒவ்வொண்ணா ஜெயிலுக்குத்தான் போய்க்கிட்டு இருக்கு


================

20 குறைந்த கட்டணத்தில் விமான சேவை உதான் திட்டம் தொடக்கம்.
-மோடி #,விவசாயிகளை சந்திக்க நேரம் ஒதுக்காததால ஏற்கனவே நம்ம மானம் கப்பல் ஏறிக்கிடக்கு

==============

0 comments: