Monday, May 08, 2017

ஜம்மு- - காஷ்மீர் மாநிலத்தில் கல்லணை கட்டப்போறீங்களா?

மற்றவர்கள் முடக்கத்தில் இருந்து  பாஜக தொடக்கம் பெற அவசியம் இல்லை - தமிழிசை # தலைவரே! நம்மைத்தான் தாக்கறாங்க , புரிஞ்சுதா?===================கருணாநிதி நேர்மை பற்றி பேச எடப்பாடி பழனிச்சாமிக்கு என்ன தகுதியிருக்கு?- துரைமுருகன் #,அதானே?ஊழல்லயும் வயசுலயும் அவர் எவ்ளோ சீனியர்?==============3 குடியிருப்புப் பகுதிகளில் மதுக் கடைகளை திறக்கக் கூடாது - உயர்நீதிமன்றம் # அப்போ ஏகப்பட்ட "குடி" "இருப்பு" ஸ்டாக் ஆகிடுமே?
==================4 மணல் விற்பனை மூலம் அரசுக்கு ஆண்டுக்கு ரூ.20,000 கோடி வருவாய் கிடைக்கும்:- யுவராஜ் # என் சொந்த மண்ணை விட்டுக்கொடுக்க மாட்டேன்னு டயலாக் இதுக்குதானா?==========================
5


மத்திய அரசு மிரட்டுகிற நிலையில், தமிழக அரசு இல்லை.-தமிழக நிதியமைச்சர் ஜெயகுமார் # சார், அந்த ஃபேக்சை ஆன் பண்ணுங்க, உங்க வீட்ல ஏதோ ரெய்டாம்=====================

வரலாற்றை புரட்டுகையில், மோடியை விட, மன்மோகன் சிங், அதிக முறை வெளிநாடுகளுக்கு பயணம் மேற்கொண்டார் என்பது தெரிய வரும்.-அமித்சா # வரலாற்று புரட்டு, குறியீடு

================


BJP,வினரை பார்த்தால், சிரித்துக் கொள்ளலாம்;DMKவினரை கண்டால் முறைக்க வேண்டும் என, மேலிடஉத்தரவு -வைகைச்செல்வன் # மொத்தத்துல சுயமா எதும் செய்ய மாட்டீங்க

==================


வாரா கடன்களை வசூலிக்கும் அவசர சட்டம் அமலுக்கு வந்தது #  அதாவது லோன் வாங்குனவங்க உள் நாட்டில் இருந்தா


==============================================

10 

விரைவில் சட்டசபை தேர்தல் -OPS # இதே டயலாக்கை ஸ்டாலின் , தமிழிசை ,திருமா,கனிமொழின்னு ஆளாளுக்கு ஆறு மாசமா சொல்லிட்டு இருக்காங்க


======================


11 ஸ்டாலின் எப்போது முதல்வர் ஆவார் என்று மக்கள் காத்துக்கொண்டிருக்கிறார்கள்- துரைமுருகன் #,ஆமா,உதயநிதி ,துர்கா,மற்றும் பலர்================
12 ஸ்மிருதி ராணி க்கு வளையல் அனுப்பும் போராட்டம் நடத்துவோம் -நக்மா #,ஏம்மா.அப்டியே ஜிமிக்கி ,மூக்குத்தி ,மோதிரமும் அனுப்பிடுங்க.=================13 ஊழல் இல்லாத தமிழகம் விரைவில் உருவாகும் - ஸ்டாலின்

# திமுக,அதிமுக ,காங் அல்லாத ஒரு ஆட்சி மலர பல.வருசம் ஆகும்


====================

14 எப்படி தோப்புக்கரணம் போட்டாலும், குட்டிக்கரணம் அடித்தாலும் தமிழகத்தில் BJP காலூன்ற முடியாது:EVKS # "கை" ஊன்றவும் முடியாது


==================

15 பெண் ஊழியர்கள் ஆன்லைனில் பாலியல் புகார் தெரிவிக்கலாம் : மேனகா காந்தி # புகாரை பெறுபவர் பெண்ணா இருக்கனும்.ஆண் லைன் ல இருந்தா பிரச்னை


==================

16 ஆட்சியை கைப்பற்றுவது பற்றி மட்டுமே அதிமுகவின் இரு அணியினரும் சிந்திக்கின்றனர்:-.ஸ்டாலின்# சரி,விடுங்க நாம கடைசி வரை எதிர்க்கட்சி தான்

================

17 கறுப்புப் பணத்தை மீட்டு, ஒவ்வொருவருக்கும், 15 லட்சம் ரூபாய்தருவதாக, பாஜ.,வினர் கூறினர். ஆனால், இதுவரை ஒரு ரூபாய் கூட தரவில்லை.-நக்மா: #கறுப்புப்பணத்தை மீட்டாத்தானே?


===================

18 தமிழ் எந்த அளவிற்கு வளர்ந்துள்ளது என கழகங்கள் விளக்கம் தர வேண்டும்: பொன். ராதா # இணையத்தில் ஹிந்தியை பின்னுக்குத்தள்ளி முதலிடம் வகிக்கும் அளவு வளர்ந்துள்ளதே?


===================

19  தமிழக அரசியல் மிகவும் பலவீனமாக உள்ளது.  -மகேந்திரன்: # அரசியல்ல பழுத்த பழமா இருந்தவர் ஓய்வில் இருப்பதால் அப்படி, மீண்டும் ஃபார்முக்கு வந்துட்டா பலமா ஆகிடும்


====================

20  ஜம்மு- - காஷ்மீர் மாநிலத்தில் பாதுகாப்பு படையினர் மீது மாணவர்கள் கல்லெறியும் சம்பவம், விரைவில் சரியாகி விடும்.-ஜிதேந்திர சிங் # திருச்சியில் இருப்பது போல் கல்லணை கட்டப்போறீங்களா?==================

0 comments: