Saturday, May 06, 2017

தலைவரே! இனி எல்லா டாஸ்மாக் கடைகளும் மொட்டை மாடியில் தான் இயங்குமா? ஏன்?

தலைவரே! வாண்ட்டடா எதுக்கு ஜெயிலுக்குப்போறீங்க?வெளில இருந்தா ஆர் கே நகர் ல ஏன் நிக்கலை?னு கேட்டு உயிரை எடுப்பானுங்க கோ


===============

2 தலைவரே!அடிக்கடி ஏன் பந்த் பண்றீங்க?அப்போதான் நம்ம பந்துக்கள் நம்மை மதிப்பாங்க உடன் பிறப்பே!


==============

3 டியர்.காலை சாப்பாடு சாப்புடாதவங்களுக்கு heart attack வர சான்ஸ் அதிகமாமே?
நீ சாப்பிட்ட ஹோட்டல் பில்லைப்பார்த்தாதான் எனக்கு வரும்

==============

4 டாக்டர்..கும்பலா பசங்கள பார்த்தா பயப்படுறேன்.நாங்க அப்டி இல்ல.பொண்ணுங்களை கும்பலா/சோலோவா எப்டி பாத்தாலும் சந்தொசப்படுவம்


===============

5 குருவே!நல்லா சாப்பிடணும்

நல்லா தூங்கணும்.அதுக்கு என்ன செய்யனும்?
அடுத்த ஜென்மத்துல ஹோட்டல் ஓனரை கல்யாணம் செய்யனும்


===============================================


6 மோடி வந்தால் டோல் கேட் கிடையாது என களமாடி இங்கு வாக்கு கேட்டது நீஙக தான?ஆமா.மோடி.வந்தா அவருக்கு டோல் கேட் ்கிடையாது ன்னேன்


==============

7 மயிலு வளர்க்கனும்னு ஆசையா இருக்கு... எங்கு கிடைக்கும்னு யாருக்காவது தெரியுமா..?போனிகபூர் வீட்லதான்.ஆனா அவர் ஒத்துக்குவாரா தெரியல


================

8 ஐயா பட நயன் தாராக்கும் ,டோரா நயன் தாரா.வுக்கும் ஏதோ ஒண்ணு குறையுதே?அட அரைகுறையா சிந்திக்காதே.

===============

9 உனக்கு பிடிச்ச டீச்சர் யாரு?மா.1,= பிரேமம் மலர் டீச்சர்
மா(ணவன்) 2 = கடலோர கவிதைகள் ஜெனிபர் டீச்சர்
ம(ஞ்ச)மா(க்கான்)= மீனம்மா டீச்சர் .முந்தானை முடிச்சு தீபா டீச்சர்


=================


10 டாக்டர், அப்பளம் டெய்லி சாப்பிட்டா உடல் பலம் ஆகுமா?

 ஆயில் கெடுதல், பழம் டெய்லி  சாப்ட்டா வேணா பலம் ஆகும், அதுக்காக டெய்லி ஒரு பலாப்பழம் சாபிட்ராதே


===========================

11 பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதிகளை மையமா வெச்சு டிஆர் படம் எடுத்தா என்ன டைட்டில் வைப்பார்?உயிர் உள்ளவரை உஷா(ர்)

===============

12 ஜட்ஜ் =ஒரே நாள் ல 80கோடி பட்டுவாடா பண்ண பணம் ஏது?
கைதி=ஜெ சொத்துக்குவிப்பு வழக்கில் 100கோடி கட்ட தேவை இல்லைனு லூசுத்தனமா சொன்னதால அதை யூஸ்டு
=============

13 எங்க பேங்க்ல மினிமம் பேலன்ஸ் 5000 இல்லைன்னா 1000 ரூ ஃபைன்

அய்யோ,அப்போ A/C க்ளோஸ் பண்ணிக்கறேன்

அதுக்கு 575 ரூ ஃபைன்

அடேங்கப்பா, ஒரு டம்ளர் தண்ணி குடுங்க

 இந்தாங்க, இதுக்கு 10 ரூபா கழிச்சுக்குவோம்


====================

14  பட புது ஸ்டில் எங்க ஆள் படமான காவலன் படத்துல இருந்து உருவுனது

 சும்மா அடிச்சு விடாதீங்க, காவலனே பாடி கார்டு  மலையாள பட உல்டாதானே?


===================

15 ஜட்ஜ் = வாக்காளர்களுக்கு கள்ள நோட்டு தந்தீங்களா?

கைதி= நான் நல்ல நோட்டுதான் தந்தேன், நம்ம கட்சி ஆளு உள்ள புகுந்து விளையாடிட்டான் யுவர் ஆனர்


===================


16 
நான் அவருக்கு வெளில இருந்து ஆதரவு தர்றேன்

பொய் சொல்லாதீங்க தலைவரே. தேச துரோக வழக்குல ஜெயிலுக்கு உள்ளே தானே இருக்கீங்க?


=========================

17
டாக்டர் , உடம்பைக்குறைக்கனும்னா டெய்லி என்ன சாப்பிடனும்?

மேடம், எப்போப்பாரு எதுனா நொறுக்ஸ் சாப்பிட்டுட்டே இருந்தா எப்படி உடம்பு குறையும்?


=====================
18 உன் லவர் பணக்காரப்பொண்ணா?

எப்டி தெரியும்?

மாதங்களில் அவள் மார்கழி
மலர்களிலே அவள் மல்லிகை
தொகுதிகளில் அவள் ஆர் கே நகர்-னு கவிதை எழுதி இருக்கியே?


====================


19

டாக்டர் , டெய்லி சாப்பிடற உணவில் ஓட்ஸ் சேர்த்துக்கறேன், ஆனாலும் உடம்பு குறையலை


ஓட்ஸ் மட்டும் தானே சாப்பிடச்சொன்னேன்


====================

20 

தலைவரே! இனி எல்லா டாஸ்மாக் கடைகளும் மொட்டை மாடியில் தான் இயங்குமா? ஏன்?


 குடி உயர கோன் உயரும்னா ங்க. எப்டி ஐடியா?


==================0 comments: