Sunday, May 21, 2017

சினேகா தான் சிஎம் ஆகனும்?

சொத்துக்களை பறிமுதல் செய்ய வேண்டாம்: மல்லையா கோரிக்கை நிராகரிப்பு
# ஏலம் விட்டா மானம் தான் போகுது.பொருள் போக மாட்டேங்குது

===========

2 விஜயபாஸ்கர் வீட்டில் மீண்டும் வருமான வரித்துறை சோதனை! எல்லாம் கொண்டு.வந்து.வெச்ட்டுப்போறாங்களோ?

=============

3 செல்ல வேண்டிய இடத்துக்கு செல்வார்: ப.சிதம்பரம் மீது சுப்பிரமணியன் சுவாமி தாக்கு
# ஜெயில் "செல்"வார்?னு சூசகமா சொல்றாரா?

=============


4 பள்ளிப் பாடத்திட்டத்தில் புதிய புதிய மாற்றங்கள்.. யோகா கட்டாயம்… செங்கோட்டையன் அதிரடி # மோடி வாசனை அடிக்குதே

==============

5 அன்னிய செலாவணி மோசடி வழக்கு: கேள்வித்தாளை முன்கூட்டியே தர சசிகலா மனு! # இப்படிக்கு முன் கூட்டியே பிட் ரெடி பண்ணியும் அரியர் வைத்தோர் சங்கம்


================

6 எந்த தேசிய கட்சியிலும் ரஜினி சேரமாட்டார்- தனிக்கட்சிதான் தொடங்குவார்: திருநாவுக்கரசர் # தனிக்கட்சி தொடங்க தில் இருந்திருந்தா பாட்சா டைம்லயே


===============

7 காளீஸ்வரி எண்ணெய் நிறுவனத்தில் 2-வது நாளாக ஐடி அதிகாரிகள் சோதனை # பேர்லயே.வரி இருக்குன்னு வரி கட்டலையா காளீஸ்"வரி"


==============

8 சென்னையில் பரபரப்பு.. போலீஸ் சீருடை விற்பனை கடையில் ரூ.40 கோடி பழைய ரூபாய் நோட்டு பறிமுதல் # மாமூல் நியூஸ்னு விட்டுட முடியாது


===============


9 ரஜினிகாந்த் அரசியலுக்கு வந்தால் தவறில்லை, வரவேற்கிறேன் - ராதாரவி # வந்தால் தவறில்லை.ஆனால் படையப்பா டைமில் இருந்த பவர் இல்லை


==============

10 கோல்டு வின்னர் சமையல் எண்ணெய் நிறுவன தொழிற்சாலை யில் ரெய்டு.# பேக்டரில கோல்டு இருக்கா ?னு விசாரிச்சிருப்பாங்களோ.?அது பிராண்ட்நேம்


===============


11 சென்னை் BJP பிரமுகர் வீட்டில் 45 கோடி ரூ பழைய நோட்டுகள் பறிமுதல்
# கறுப்புப்பணத்தை ஒழிப்போம்னு மோடி சொன்னாரு.ஒளிப்போம்னு இவரு செயல்


================

12 அதிக படித்த ஆண்கள் இருக்கும் மாவட்டம் 2011 சென்சஸ் படி புதுக்கோட்டை # ஈரோட்லயும் இருக்கோம்.வெளில சொல்லிக்க மாட்டோம்.தன்னடக்கம்


=================

13 ரஜினி மட்டுமல்ல... யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் -கனிமொழி # குத்தம் செஞ்சா மட்டும் புழல்/திகார் போகலா


=================

14 அமிதாபச்சனை போல சிந்தனை திறனற்றவர் ரஜினிகாந்த்- மார்கண்டேய கட்ஜீ# அமிதாப்போட மருமக கூட டூயட் ஆடிய திறன் மிக்கவர்.தெரியுமில்ல.


================

15 தமிழகத்தில் நடப்பது மக்கள் விரோத ஆட்சி-OPS# மக்கள்.சினேக ஆட்சி வேணும்னா சினேகா தான் சிஎம் ஆகனும்


================

16 எடப்பாடி பழனிசாமி மீது MLA-க்கள் அதிருப்தி-செய்தி#இப்போ இல்லாட்டி எப்போ கறக்க முடியும்?


=================

17 வைரஸ் தாக்குதலால் திருப்பதி கோவிலின் இணையதளம் முடக்கம்# இதுதான் சாக்குன்னு லட்டை பிளாக் ல வித்துடாதீங்க


=================

18 படம் எடுக்கும் போது ரஜினி காலில் விழ ரசிகர்களுக்கு தடை
# படம் எடுத்து முடிச்ச பின் ஆதார் கார்டைக்காட்டி ஒரு வாட்டி விழுந்துக்கலாமா?

===============

19 தமிழகத்துக்கு, காவிரியில் தண்ணீர் திறந்து விடும்படி, காங்., கூட்டணியில் உள்ள, தி.மு.க., இதுவரை கர்நாடக அரசுக்கு கோரிக்கை விடவில்லை.-பொன்.ராதா # ஆதாயம் இல்லாம அணு அளவும் எதுவும் அசைப்பதில்லை அரசியல்வாதி


=====================

20 குளிப்பதற்கு பாதுகாப்பற்றது கங்கை நீர்
மாசு கட்டுப்பாட்டு வாரியம் தகவல் # பாவிகள் ஆளாளுக்கு போய் பாவத்தைக்கழுவிட்டு வந்தா இப்டித்தான்

================

0 comments: