Thursday, May 25, 2017

2 அடுக்கு பாதுகாப்பு , அடுக்கு மல்லி , அடுக்கு மாடி, இது அடுக்குமாடி?

1  EPS நான் பார்த்து வளர்ந்தவர். அவர் வந்து, எனக்கு நிதியமைச்சர் பதவி தருகிறேன் என்பது, நகைப்பாக உள்ளது.-OPS # முதல்வர்  பதவியே தான் வேணுமா?பந்தம் கிந்தம் கொளுத்துனா ஒத்துக்க மாட்டீங்களா?


=================

உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும்; தவறு செய்தவர்களை, மத்திய அரசு தண்டிக்கும்.-இல.கணேசன் # ஓஹோ, பாஜக வுக்கு ஓட்டு போட்ட ஜனங்களுக்கு இதனால தான் தண்டனையா?

===================


உப்பு தின்றவர்கள், தண்ணீர் குடித்து தான் ஆக வேண்டும் --இல.கணேசன் # அடிப்பது கோடை வெய்யில் எதுவுமே சாப்பிடலைன்னாலும் டெய்லி 4 லிட்டர் தண்ணி குடிக்கனும்


==================

ரசிகர்கள் மத்தியில் இன்று உரையாற்ற உள்ளேன் - ரஜினிகாந்த் # ரைட்டு , மீம்ஸ் க்ரியேட்டர்கள் ஓவர் டைம்ல இன்னைக்கு ஒர்க் பண்ணுவாங்க

==============

5


 எப்போதெல்லாம் எதிர்க்கட்சிகளிடையே ஒற்றுமை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம்  பா.ஜ., அரசு அச்சமடைந்துவிடும்-  திவாரி # அதான் ரெய்டு நடத்தி ஜெயிலுக்கு அனுப்பி பிரிச்சு வெச்சிடுதா?


===============
6  

தமிழக ஆட்சியாளர்கள் தடம் புரண்டுவிட்டனர்- ஓபிஎஸ் # எம்ஜிஆர் , கலைஞர் , ஜெ 3 பேர்ல யாரைச்சொல்றீங்க?=================
7  ஆண்டவனிடம்தான் கேட்க வேண்டும்: ரஜினி அரசியலுக்கு வருவது பற்றி இல.கணேசன் # ஆழ்வார்ப்பேட்டை ஆண்டவரிடமா?கமலுக்கு அது பற்றி எப்டி தெரியும்?

===============

8 நடிகர் ரஜினிகாந்த் பேச்சுக்கு எதிர்ப்பு: கோவையில் தபெதிக போராட்டம் #,யாருப்பா நீங்க எல்லாம்?தபால் பெட்டியில் திருடுவோர் கழகமா?


=================

9 தமிழகத்தில் நிலவும் பிரச்சினைகள் குறித்து பிரதமரிடம் எடுத்துக் கூறினோம்:OPS #,ஏன்?பிரதமர் நியூஸ்.சேனல் எதும் பார்க்க மாட்டாரா?

===============

10  பட்டப்பகலில் ஆபீசை பூட்டி பெண்ணுடன் தனிமையில் இருந்த அதிகாரி:வெளிப்பக்கமாக பூட்டு போட்ட மக்கள் # உள்ளே 1,வெளில 1 பூட்டு.2 அடுக்கு பாதுகாப்பு


===============

11 தனது படங்களுக்கு பிரச்னை வராததுபோல சாமர்த்தியமாக பேசியுள்ளார் ரஜினி -தமிழிசை # எத்தனை படங்கள் ல டயலாக் பேசி இருக்காரு?அனுபவம் கை கொடுக்குது

=================

12  தற்போதைய தமிழக அரசியலைப் பார்த்து உலகமே காரி உமிழ்கிறது- தங்கர்பச்சான் # கூல் டவுன் சார்.நாஞ்சில் சம்பத் தான் துடைச்சுக்குவோம்னாரே


==========

13 ஊழலுக்கு காரணமான ஸ்டாலினை ரஜினி புகழ்ந்தது ஏன்? - தமிழிசை # ஊழலின் ஊற்றுக்கண் ஜெ ,கலைஞர் 2,பேரையுமே புகழ்ந்தாச்சு.இது ஜூஜூபி


================

14 MGRஅம்மா தீபா பேரவைக்கு மாவட்டச் செயலாளர்கள் வருகிற 22/5/17அறிவிப்பு-ஜெ.தீபா # வேலை இல்லாத வெட்டிப்பசங்க மாவட்டத்துக்கு 1 ஆள் சிக்கிடும்

==================

15 இப்போதைக்கு திருமணம் செய்ய மாட்டேன் - ராய்லட்சுமி # மார்க்கெட் ஸ்டெடியா இருக்கு என பொருள் கொள்க

================

16 தமிழகத்தில் உள்ளாட்சி தேர்தல் தேதி அறிவித்ததும் BJP-வுடன் கூட்டணி குறித்து அறிவிப்போம்--ops # பூனைக்குட்டி வெளில வரப்போகுது

==============

17 தமிழகத்தில் காலூன்றி பாரதிய ஜனதா ஓடத் தொடங்கிவிட்டது; இல.கணேசன்.# அதுக்குள்ள தமிழர்கள் துரத்த ஆரம்பிச்ட்டாங்களா?

===============

18 அ.தி.மு.க., அமைச்சர்கள் டில்லிக்கு படையெடுப்பது, மக்கள் நலனுக்காக அல்ல-ஸ்டாலின்: # தானைத்தலைவர் எவ்வழி அவ்வழி


===============

19 ரஜினி அரசியலுக்கு வந்தால் தமிழகத்தில் திருப்புமுனை ஏற்படும் -திருமா # ஊட்டி,கொடைக்கானலைவிட தமிழக அரசியல்லதான் ஏகப்பட்ட திருப்புமுனைகள்


=================

20 ஸ்டாலின் என்னை காப்பியடிக்கிறார் -அன்புமணி # தானிக்கு தீனி.நீங்க உதயநிதியைக்காப்பி அடிங்க

=================

0 comments: