Monday, May 29, 2017

நான் வாங்குன.120 ரூ டிக்கெட் படத்தோட முதல் பாதிக்கே சரியாப்போச்சு

சின்னம் வேணும்கறதுக்காக எப்டி 50கோடி லஞ்சம் தர பேரம் பேசுனீங்க?மாட்டினாக்கூட. "சின்ன" பிரச்னை யை எல்லாம் பெருசு பண்ணாதீகனு சொல்லிடலாமே?


===================

2 நீ இல்லாத நேரத்தில் உன் ஆடைகளை நான் அணிவது போல என் ஆடைகளையும் நீ உடுத்துவாயா?

துவைச்சு அயர்ன் பண்ணவே டைம் இல்லை, இதுல இது வேறயா?


========================


3 நான்


தரும் தேநீர், முத்தம்

2ல் எது உனக்கு அதிக விருப்பம்?
எப்டியும்.நீ போட்ட டீயை வாயில் வைக்க முடியாது.லெட் ட்ரை 2nd

================

4 லிப் கிஸ் இப்போ தர முடியாது.காலம் கனியட்டும்.'பலவீனமானவன் வாய்ப்புக்கு காத்திருப்பான்;வலிமையானவன் "வாய்"ப்பை உருவாக்குவான்


================

5 தலைவரே! நாட்டு மக்களின் நன்மைக்காக பந்த் நாளை நடத்தறீங்க?ஆமா
அப்போ சன் டி வி , கலைஞர் டி வி மட்டும் இயங்குதே?லீவ் விடலையா?


=================

6 தலைவரே! நம்ம கிட்டே எவ்ளோ சொத்து இருக்கும்?சுமாரா 1 லட்சம் கோடி
நேத்து வந்த சினேகா 10 லட்சம்ரூ விவசாயிக்கு நிதி உதவி இருக்கு, நாம எப்போ?


=================

7 கமல் குழம்பிய (அரசியல்)குட்டைல இறங்கி மீன் பிடிக்க நினைக்கறாரா?ம்க்கும், இவர் இறங்கினா மேன்மேலும் குழப்பி விட்டுடுவார்


=================

8 அஜித் ரசிகர்கள் விஜய் ரசிகர்களை விட யூத் னு எப்டி சொல்றே?ஆதி தமிழன் ல ஆதி,தமிழன் 2மே விஜய்யை குறிப்பதால்==================

9 டாக்டர்.பலாப்பழம் சாப்பிட்டா உடல் நலனுக்கு நல்லதா?கெட்டது
எப்டி?
முள் குத்தும்.பலாச்சுளை சாப்ட்டா நல்லது
==================

10 தலைவரே! தேர்தல் நிதி திரட்ட அடிக்கடி.நாம பிச்சை எடுப்போமே?

ஆமா

அது போல கட்சித்தொண்டர்கள் கிட்டே விவசாயிகளுக்கு ஏன் நிதி திரட்டலை?


===============


11 தலைவரே! நமக்கு சொந்தமான டிவி சேனல் ஏன் முழு அடைப்பில் கலந்துக்கல?ஒரு நாள் வருமானம் ஒவ்வொரு TVக்கும் தலா 7 கோடி.நீ தருவியா?=================

12 தலைவரே!புதிய200ரூ நோட்டை ஏன் எதிர்க்கறீங்க?2000ரூ,1000 ரூ ,500 ரூ வரிசைப்படி அடுத்ததா 250 ரூ தானே வரனும்? ( 2000/2=1000,1000/2=500)


=================

13 இந்த வெயில்காலத்துலயும் காதல் கவிதைகளா போடுறாங்களே..

ஒருமாதிரி நசநசனு இருக்காதா? 😏
ம்ஹூம்.ஆத்துக்குள்ளே நீந்திக்கிட்டே கவிதை போடுவோம்==================

14 வாழ்த்தை கவிதையாய் தருகிறாய், கவிதையை என்னவாய் தருவாய்?நீ ஒரு வாய் நான் ஒரு வாய்


==================

15 டியர், எனக்கு அப்பப்ப பைத்தியம் பிடிக்கும், கொஞ்சம் பொறுத்துக்குங்க

உண்மையை ஒத்துக்குவதால் உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும்


===================


16 சார்.உங்க படத்தோட கதை கல்லூரி பாடமாக மாறி இருக்காமே?


 பெரும்பாலான என் படங்கள் புரொடியூசர்ஸ்,டிஸ்ட்ரிபியூட்டர்சுக்கு பாடம்தான்


==================17  யுவர் ஆனர்.எனக்கு ஜாமீன்வேணும்.எதுக்கும்மா?
 அட்சயதிரிதியைஅன்னைக்கு நகைக்கடைல நகை எடுத்தா.வருசம் பூரா தங்கம் சேருமாம்


===================

18 புதுசா ஒரு TVசேனல் ஆரம்பிக்கலாம்னு இருக்கேன்ஓஹோ.என்ன பேரு?
 பிரேக்கிங் நியூஸ் சேனல்.24 மணி நேரமும் ஏதோ ஒரு பிரேக்கிங்நியூஸ்===================

19   தலைவரே!,நம்ம கட்சி மத சார்பற்ற கட்சி னு எப்டி சொல்றீங்க?


ஓட்டு.வேணும்னா எந்த மதமா இருந்தாலும் தயங்க மாட்டோம்

===================

20 நான் வாங்குன.120 ரூ டிக்கெட் படத்தோட முதல் பாதிக்கே சரியாப்போச்சு


அப்போ 2,வது பாதிக்கு இன்னொரு 120ரூ தந்துட்டு.வரப்போறீங்களா?


====================

0 comments: