Saturday, May 13, 2017

தமிழ்நாட்டின் அடுத்த சிஎம் கவுதமி/தமிழிசை?

1  அதிமுகவை வழிநடத்த குழு அமைக்கப்படும் - டி.ஜெயகுமார்
இப்போ4குழுவா தானே இருக்கு? சசி அணி,OPS அணி,ஜெ தீபா அணி,மாதவன் அணி

================


2 செல்போனில் தேர்வு முடிவுகள் வெளியானது இந்தியாவுக்கே ஒரு வழிகாட்டி - செங்கோட்டையன். விஷயங்கள் ல கோட்டை விட்டுட்டீங்க.
=================3 கல்வித்துறையில் என்னென்ன மாற்றங்கள் கொண்டுவரலாம் என MLAக்கள் கருத்து தெரிவிக்கலாம் - செங்கோட்டையன் # அதுக்கு ஓரளவாவது படிச்சிருக்கனுமே
================4 வைர விழாவை வைத்து தமிழிசை விளம்பரம் தேட நான் உடந்தையாக இருக்க மாட்டேன் - .# அதானே.செலவு நம்முது இல்ல?=================
5 கணவரை அடிப்பதில் இந்தியபெண்களுக்கு3வது இடம்-news # பாதி ஆம்பளைங்க வாங்குன அடியை வெளில சொல்றதில்ல.சொன்னா முதலிடம் நமக்குத்தான்==============6 ஹரியானாவில் அரசு பள்ளி மாணவிகளுக்கு வழங்கப்பட்ட மதிய உணவில் பாம்புக்குட்டி

# எங்கே பாத்தாலும் நடராஜன் /நாகராஜன் ஆதிக்கமாவே இருக்கே?

===============

7 30 லட்சம் ரூபாய் லஞ்சப் புகார்குறித்து வாய்திறக்காத அமைச்சர் சரோஜா! சமாதி ல போய் உக்காந்து மவுன விரதம்னு அடிச்சு.விடப்போறாரு


================

8 சேவைகட்டணம் ரூ25 தவறான செய்தி என SBI மறுப்பு# முதல்ல புரளி டீசரை விட்டு இவங்களே மக்கள் ரியாக்சனை ஆழம் பார்த்திருப்பாங்க


=================


9 வாக்குப்பதிவில் பழைய முறையை கடைபிடிக்க இயலாது: தேர்தல் ஆணையம் உறுதி # குட்.கள்ள ஓட்டுக்கு ஆள்பிடிக்க இயலாது.

==============


10 தமிழ்நாடு மின்சார

வாரியத்திற்கு
80000கோடி
கடன் வழங்க ஒப்புதல்
# இதுக்கு எப்டி வட்டி கட்டுவீங்க?
சிம்ப்பிள்.கரண்ட் பில் ஏத்திடுவோம்


================
11  இந்தியனாக இருந்தால்
என் பொருட்களை வாங்கவேண்டும் -பாபாராம்தேவ் # மார்க்கெட்டிங்க்காக,சுயநலனுக்காக தேசபக்தியை பயன்படுத்தறது கமலோ ,தேவோ தப்பு

=================

12 தமிழகத்தில், பா.ஜ.,வின் ஓட்டத்தை யாராலும் தடுக்க முடியாது.-இல.கணேசன் # தமிழகத்தை விட்டு ஓட்டம்?யார் தடுக்கப்போறாங்க?


======================

13 ஜெ ஆட்சியை வழிநடத்திய வழியில் தான், இப்போது ஆட்சி நடந்து வருகிறது.-ஜெயகுமார் # நம்ப முடியல, உதயநிதி படத்துக்கு வரிவிலக்கு கிடைச்சிருக்கே?


=====================

14  ஓட்டளித்த மக்களை வஞ்சிக்கும் இப்படியொரு ஆட்சியை, இதுவரை தமிழகம் கண்டதில்லை.-ஸ்டாலின் # இல்லையே ,50 வருசமா கண்டுட்டுதானே இருக்காங்க

====================

15 குஷ்பு, காங்கிரசின் செய்தி தொடர்பாளர். அதனால், அவரின் பணி சற்று குறைவு -

நக்மா # நமக்கு எப்படி? தினமும் ஏகப்பட்ட பணிகள் இருக்கோ?


====================

16  ஜெ மறைவை தொடர்ந்து, பல  பதவிகள்  விற்பனைக்கு வந்துள்ளன.-தமிழிசை # முதல்வர் பதவியை விலை இல்லா திட்டத்தில் கைப்பற்ற கற்பனையில் இருக்கீங்களாமே?

==================

17  அ.தி.மு.க., ஒன்றுபட்ட இயக்கம் தான் -தம்பிதுரை # OPS,சசிகலா,ஜெ தீபா, மாதவன்னு 4 பட்ட இயக்கம்னு 4 பேர் 4 விதமா பேசிக்கறாங்களே?


====================

18 ADMKவில் யாரை CM ஆக்க வேண்டும் என, மோடி நினைக்கிறாரோ, அவரை CM ஆக்க BJPவினர் துடித்துக் கொண்டிருக்கின்றனர்-திருநாவுக்கரசர் # அப்போ தமிழ்நாட்டின் அடுத்த சிஎம் கவுதமி/தமிழிசை?


==================

19  இந்த நாட்டை ஆளப்போகும் கேப்டனை திருமணம் செய்து கொண்டதால், என்  IPS கனவு பலிக்கவில்லை- பிரேமலதா # OPS, EPS, IPS  எதுவுமே எடுபடலையே?

=================


20  .ரூ.1,000 கோடி ஊழல்: லாலு மீது பா.ஜ., புகார் # பணம் சம்பாதிக்க கல்வித்தகுதி ஒரு த்டை இல்லைனு நிரூபிச்சிருக்காரு


===================

0 comments: