Sunday, May 07, 2017

உங்க குழந்தைக்கு முஸ்லீம்மதினு ஏன் பேர்.வெச்சிருக்கீங்க?

1

 சார். கைல கயல்-னு பச்சை குத்தி இருக்கீங்க, ஆனா பானு கிட்டே ஐலவ்யூ சொல்றீங்க?


பச்சை குத்தறவன் தப்பா குத்திட்டான்

 சும்மா காது குத்தாதீங்க

===================

தலைவரே! இனி எல்லா டாஸ்மாக் கடைகளும் மொட்டை மாடியில் தான் இயங்குமா? ஏன்?


குடி உயர கோன் உயரும்னா ங்க. எப்டி ஐடியா?


===============

3 சார். கைல கயல்-னு பச்சை குத்தி இருக்கீங்க, ஆனா பானு கிட்டே ஐலவ்யூ சொல்றீங்க?


பச்சை குத்தறவன் தப்பா குத்திட்டான்
சும்மா காது குத்தாதீங்க

===============

4 என் FB PW 5 பேருக்குத்தெரியும்


மிஸ்.ஒருத்தருக்கு மட்டும் தெரிஞ்சாதான் அது PWஊர்ல இருக்கறவனுக்கெல்லாம் தெரிஞ்சா பை பாஸ் ரோடு வோர்டு

==================

5

3 மாசம் முன் அந்த அணிக்கு ஆதரவு தெரிவிச்ட்டு இப்போ இந்த அணிக்கு ஆதரவு?
பிச்சை எடுக்கனும்னு முடிவு பண்ணிட்டா எல்லா வீட்டுப்படியும் ஏறணும்

===============

6 தலைவரே!இந்த இடைத்தேர்தல் உங்க கட்சிக்கு ஆசிட் டெஸ்ட்டாமே?
ஆமா.அதனாலதான் சந்திரலேகா மேல ஆசிட்.வீசுன வேட்பாளரை இன்ட்ரோ


================

7 தலைவரே! நீங்க ஆரம்பிச்ச கட்சியை அம்போன்னு விட்டுட்டு இப்டி அடுத்தவன் கட்சிக்கு பிரச்சாரம் பண்றீங்களே?


கட்சியை வளர்த்த காசு வேணும்ல?


================

8 உங்களுக்கு சொத்து எதுவும் இல்லைனு சொல்லிட்டாரே?


ஆமா.என் வீட்ல சொத்தும் இல்லை.சொத்தையா யாரையும் சேர்த்துக்கறதுமில்ல


================

9 ஜட்ஜ் =பேங்க் மேனேஜரை எதுக்கு கொலை செஞ்சே?


கைதி.= SB.A/C.க்ளோஸ் பண்ண.575 ரூபா அபராதம்னாரு.தக்காளி அவரையே க்ளோஸ்

============

10 இப்போ எல்லாம் முன்பு போல் எதுமே எழுத வரமாட்டீங்குது


ஓஹோ.இதுக்கு முன்னால என்ன எழுதி இருக்கீங்க?
சமையல் டிப்ஸ்,கோல டிப்ஸ்=============

11 DR,தினமும்

வாக்கிங் போறது
'நடக்காத' காரியம்.
இப்டியே உங்க காலம் "ஓடிடும்"போல


==============

12 சார்.உங்க நாவல்ல சம்பந்தமே இல்லாம சலவைக்கு போட10 உருப்படி பேண்ட்,6 உருப்படி சர்ட்னு டயலாக் வருதே ?
உருப்படியா எதுனா எழுதலாம்னு

==============

13 விஷால் OPS க்கு ஆதரவு தருவார்னு எப்டி சொல்றே?


சரத்குமார் தினகரனுக்கு ஆதரவு.வரலட்சுமி விஷாலுக்கு ஆதரவு.கேயாஸ் தியரிபடி..


=============

14 உங்க குழந்தைக்கு முஸ்லீம்மதினு ஏன் பேர்.வெச்சிருக்கீங்க?


முத 2 குழந்தைக்கு இந்துமதி,கிறிஸ்துமதி னு வெச்சுட்டேன்.மத நல்லிணக்கம்


===========

15 நல்ல மீனா, கெட்ட மீனான்னு எப்படி தெரிஞ்சுக்குறது?


எஜமான் ரிலீஸ் கால கட்ட மீனா நல்ல மீனா.த்ரிஷ்யம் கால கட்ட மீனா குண்டு மீனா


================

16 வெண்டைக்காய் வெட்டும்போது லைட்டா விரல வெட்டிகிட்டேன்..


லேடீஸ்பிங்கரை வெட்டும்போது லேடீஸ் பிங்கரை.வெட்டுவது சகஜம்=================

17 மெஹந்தி போட்டு விட என்ன சார்ஜ்?

மேரேஜ் க்கு 10,000 RS.FB ல DP வைக்க 250RS
அடேங்கப்பா.மருதாணிசெடி வளத்தனும்
================

18 தலைவரே! சின்னத்தை மிஸ்யூஸ் பண்ணீங்களாமே?

அபாண்டம்.வழக்கமா நான் மிசஸைத்தான் யூஸ் பண்ணுவேன்


================

19 ஜட்ஜ் = நீங்க திருடுனீங்களா?

கைதி = மத்திய அரசின் சதி தான் ரெய்டுக்கு காரணம்
பேச்சை மாத்தாதீங்க.திருடுனீங்களா?இல்லையா?
நீங்க பாஜக வா?

==============

20 விரைவில் நாங்கள் ஆட்சியைப்பிடிப்போம்

தலைவரே!தூக்கத்துல உளறக்கூடாது ன்னு டாக்டர் எத்தனை டைம் சொல்லி இருக்காரு?

=================

0 comments: