Tuesday, May 23, 2017

அமைச்சரே!.தெர்மோகோல் ஊழலில் எவ்ளோ லட்சம் அடிச்சீர்?

1

 தலைவரே! ஏழை மக்கள் வருமானம் பாதிக்கும்னு தெரிஞ்சும் கடை அடைப்புக்கு அழைப்பு விட்டீங்க?

ஆமா

ஆனா நம்ம குழும சன், கலைஞர் டிவி மட்டும் இயங்கிட்டே இருக்கே?

=================

சார். தெறி 50 நாள் தானே ஈரோட்ல ஓடுச்சு.150 வது நாள் போஸ்டர் எப்டி?யோவ்.சத்ரியன் 100 நாள் ஓடுச்சுல்ல?கணக்கே தெரியாதா?

==================

3 தலைவரே! உங்க கார்ல இருந்து சிவப்பு விளக்கை ஏன் எடுக்க சொல்லிட்டீங்க?நான் போறதும் ரெட் லைட் ஏரியா.கார்ல வேற எதுக்கு?

================

4 என் தங்கையை என்னோட அக்காவா?ன்னு என் தம்பி கிட்டே கேட்கறாங்க, அப்போ நான் யூத் தானே?

ஏம்மா , இதெல்லாம் ஆம்பளைங்க டெக்னிக்கு, இதான் உங்க டக்கு?


===============


5 டைரக்டர் சார், எனக்கும் ஒரு ஹெலிகாப்டர் ஷாட் வைங்க


சார், ஆபத்து. ராட்சச ஃபேன் இருக்கு, பறந்திடும் விக்
=============


6 சப்பாத்தி உப்புமா நல்லாருக்குமா?பூரி தான் உப்பும்.சப்பாத்தி எப்படி உப்பும்?=============


7 சார்.ஐஸ் போடாம ஒரு ஜூஸ் குடுங்கஇந்தாங்க


இப்போ இன்னொரு டம்ளரும் கொஞ்சம் ஐஸும் குடுங்க


============8 ஒரு ஆப்பிள் ஜூஸ் எவ்ளோ?80 ரூபா


ஒரு கிலோ ஆப்பிள் 65 ரூபா.கிலோ வுக்கு 8 பழம்.ஒரு பழம் 8 ரூ.10 மடங்கு லாபமா?


===============9 சர்வர்.பிளைன் ரோஸ்ட்.1
சாரி சார்.எல்லா ரோஸ்ட் ல சின்ன சின்ன ஓட்டை/டாட் இருக்கும்.பிளைன் சிரமம்==============


10 DR, என்ன தான் வேகமா நடந்தாலும்

ஜென்ட்ஸ்க்கு equal லா நடக்க முடியல, ஏன்?
ஏன்னா ஜெண்ட்சுக்கு கால் நீளம் , பெண்ணுக்கு வாய் நீளம்


==================


11 மிஸ்! நீங்க எல்லாம் பெரிய நேரு பரம்பரையா? டிபி ல பூ இல்லாம இருக்க மாட்டீங்களோ?

பூவையர் நாங்க பூ வெச்சிருக்கோம், பூ வையர் நீங்க பூ வ திட்றீங்க

================


12 தலைவரே! உங்க வீட்ல தண்ணீர்ப்பஞ்சமா?

 இல்லையே? ஏன்?

 யாராவது காரி துப்பினா துடைச்ட்டு போய்ட்டே இருப்போம்னீங்களே? கழுவ மாட்டீங்களா?


=====================

13 
புதுக்கட்சிக்கு படை -ன்னு பேர் வைக்கலாமா?

பாடைன்னு பேர் வைங்க, சீக்கிரம் அடக்கம் பண்ணிடலாம்


=================


14  ஜட்ஜ் = 50 கோடி ரூபாய் லஞ்சம் தர்றதா தேர்தல் கமிஷன் கிட்டே  பேரம் பேசுனீங்களா?

கைதி = இந்த வழக்கை 1ம் இல்லாம ஆகிட்டா உங்களுக்கு 100 கோடி தர்றேன்


========================

15 தலைவரே! TAKE OF மலையாளப்படம் ஹிட், பார்க்கலையா?

 டேக் ஃபுல்னு டைட்டில் வெச்சிருந்தா பார்த்திருப்பேன், அதென்னய்யா டேக் ஆஃப்-னு ( TAKE HALF)


===================

16 உங்க கட்சி உயர் மட்டக்குழுவில் 7  பேர்  வெட்டியா  இருக்காங்க போல 

 எப்டி தெரியும்?

கோஷ்டிங்களை இணைக்க பேசறதா கேள்விப்பட்டோம்


====================

17 சார், பாகுபலியை கொலை செஞ்சது நீங்க தானே? அதுக்கும் மன்னிப்புக்கேட்கனும்

லூசாய்யா நீ? அது கதை

அதெல்லாம் தெரியாது, எங்களுக்கு மன்னிப்பு முக்கியம்

=====================

18 200,தெர்மாக்கோல் வாங்க10 லட்சம் ரூபாஎப்டி.செலவாச்சு?


பாரீன் பர்ச்சேஸ்.அப் &டவுன் போக்குவரத்து செலவே 9 லட்சம் ஆகிடுச்சு================

19 மன்னா! உங்க செங்கோல் ஆட்சியில் மக்கள்.நலம்


அமைச்சரே!அது இருக்கட்டும்.தெர்மோகோல் ஊழலில் எவ்ளோ லட்சம் அடிச்சீர்?===================

20 பெண்களிடம் கரண்டியை பிடுங்கி விட்டு புத்தகத்தை கொடுக்கனும்னு பெரியார் ஏன் சொன்னாரு?>

 முதல்ல சமையல் குறிப்பை ஒழுங்கா படிக்கட்டும், அப்பதான் சுமாராவது சமைப்பாக

=======================


0 comments: